Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

nizhalae ennai thalli pogaathae

Nizhalae Ennai Thalli Pogaathae 9

தள்ளிபோகாதே – 9 மறுநாள் காலை (விவாகரத்து நாளன்று) சூரியா மற்றும் தேவிகாவின் அழகான வாழ்க்கை இவ்வளவு விரைவில் முடிவுக்கு வரும் என்று யாருமே நினைத்திருக்கமாட்டார்கள். அவர்கள் ஒன்று நினைக்கையில் அதையும் தாண்டி அவர்களின் விதி என்ன விளையாட்டை காட்டினது என்று பார்ப்போம். அன்றைய தினம் நீதிமன்றத்திற்கு சூரியா  பைக்கில் செல்லும் வழியில் எதிர்பாராத விதமாக அவனுடைய பைக் எதிரில் வந்த காரில் மோதி நிலை தடுமாறி கீழே விழுந்தான். அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தவனை ஆம்புலன்ஸில் ஏற்றி […]


Nizhalae Ennai Thalli Pogaathae 8

தள்ளிபோகாதே 8 தேவிகாவின் இல்லம் அன்று நீதிமன்றத்தில் இருந்து வீட்டின் நுழைவாயிலில் நுழையும் போது தேவிகா தன் கண்களில் வழிந்த கண்ணீரையும் தன் முகம் சோர்வுற்றிருப்பதையும் வெளிக்காட்டாது தண்ணீரில் முகத்தை அலசினாள். இது வழக்கமாக நடப்பது தான் இருந்த போதிலும் இன்று அவளால் துளி கூட தாங்கமுடியவில்லை. தேவிகா ஏன் இப்படி அழுகிறாள்? அவளுக்கு விவாகரத்தில் சூர்யாவின்  சம்மதம் தானே முக்கியம் அப்படியிருக்க இந்த அழுகையின் பின்னால் என்னதான் இருக்கிறது என்று பார்ப்போம்… அவள் அறையில் குழந்தை […]


Nizhalae Ennai Thalli Pogaathae 7

தள்ளிபோகாதே 7 அன்று போட்டி முடிந்த பின் ஆதிரா அவளுடைய ஆசிரியரோடு கிளம்பிவிட்டாள். அன்று இரவு, தேவிகாவின் முகம் வாடிபோயி கிடக்க, அவள் எதுவும் பேசவில்லை. சூர்யாவிற்கு அன்று இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை. சரி, எப்படியாவது நாளை காலை ஜீவிதாவை பற்றி தேவிகாவிடம் கூறிவிட வேண்டும் என்ற முடிவிற்கு வந்தான். இதற்கு மேல் மூடி மறைத்தால் இருவருக்கும் இடையில் பிரச்சனை உண்டாகும் என அவனை உள்மனம் திட்டியது. காலை எழுந்தவுடனே சூர்யாவிடம் தன் வீட்டுக்கு செல்வதாக […]


Nizhalae Ennai Thalli Pogaathae 6

தள்ளிபோகாதே – 6 மறுபடியும் பல முறை சூரியாவிடமிருந்து அழைப்பு வரவே தன் கண்களை துடைத்துக் கொண்டு, அழுகையினால் வறண்ட தொண்டையை சரிசெய்த பின் கைபேசியை எடுத்து காதில் வைத்தாள். “தேவி, எவ்வளவு நேரம் கால் பண்றேன் ஏன் போனை எடுக்கவில்லை?” என்று பதட்டத்தோடு வினவினான் சூரியா. என்ன சொல்ல என்று யோசித்தவள், “கொஞ்சம் களைப்பாக இருந்தது அதுனால தூங்கிட்டேன்,” என அவள் சமாளிக்கவே, “வேற ஒன்னும் இல்லையே!” என உறுதி படுத்திக்கொண்டான். “ஒன்றுமில்லை,” என்றாள் கண்களில் […]


3. நிழலே! என்னை தள்ளிபோகாதே

மறுநாள் காலை சூரிய உதயத்திற்கு முன்பே தேவிகா எழும்பிவிட, நல்ல தூங்கி கொண்டிருக்கும் தன் கணவனை சைட் அடித்தாள். பின் அவளை அறியாமலே அவன் மேலே பதித்த பார்வையை எடுக்க முடியாமல் தவிக்க, அவனும் தூக்கத்தில் புரண்டு படுக்க, சூரியா முளித்துவிட்டதாக எண்ணி தன் பார்வையை எடுக்கலானாள். அன்று காலை சமயலறை சென்று சௌந்தர்யாவுக்கு உதவினாள். ஆதிராவும் ஒருவழியாக பள்ளிக்கு கிளம்பிவிட்டாள். “அக்கா, ஸ்டோர் ரூம்ல நிறைய வரைந்த ஓவியங்கள் இருந்தது அதன் கீழே சூரியாவின் பெயர் […]


2.நிழலே! என்னை தள்ளிபோகாதே

மறுநாள் காலை நான்கு மணியளவில் அவன் நித்திரை கலைய, அவனுக்கு நேற்றைய தினம் திருமணம் முடிந்தது நினைவுக்கு வர, அந்த பெண்ணிடன் நேற்றிரவு அவன் கூறியதும் அதற்கு அவள் எதையுமே வெளிக்காட்டாது இருந்தது அவனுக்கு குழப்பத்தை சற்று அதிகரித்தது. எப்படியும் அவள் இன்று இந்த விஷயமாக பெரியவர்களிடம் சொல்லி பிரச்சினை பண்ணக்கூடும் என்று சிந்தித்தவன் கண்களை பட்டென்று திறந்து பார்த்தான். அவ்வளவு வெளிச்சம் இல்லாவிட்டாலும் ஜன்னல் கண்ணாடியின் வழியே நிலா வெளிச்சம் தன்னால் முடிந்தவரை ஓளியை ஊடுருவ […]