Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

pon maazhai pozhuthu

பொன் மாலை பொழுது – 28

பல மாதங்களுக்கு பின் “ஏன்பா? உன்னை நான் எப்போ ஸ்வீட்ஸ் எடுத்துட்டு வரச் சொன்னேன், நீ என்னப்பா இவ்ளோ லேட் ஆக்குற? சரி சரி, சீக்கிரம் வா” போனில் பேசிவிட்டு மதிவதனியை அழைத்தார் சூரியநாராயணன். “அம்மாடி, மதி! இந்த கேடரிங் ஆளுங்களுக்கு போன் பண்ணி பாத்தியா? டிபன் எப்பதான் வருமாம்? “மாமா! போன் பண்ணினேன். அவங்க எடுக்கல. நீங்க டென்ஷன் ஆகாதீங்க. அது பெரிய கம்பெனி தான். கண்டிப்பா கரெக்ட் டைம் வந்துடுவாங்க” மனோரஞ்சன் அவர்கள் அருகில் […]


பொன் மாலை பொழுது 27

கடிதம் இரண்டாம் பக்கம் இப்போ என் வாழ்க்கை பாதைல மறுபடியும் ஒரு மாற்றம்……வினோ….விநோதன்! சின்ன வயசிலிருந்தே எனக்கு அவனை தெரியும். நல்லா சிரிக்க சிரிக்க பேசுவான். அவ்ளோ தான்…..அவனை பத்தி வேற ஒரு அபிப்ராயமும் எனக்கு இருந்ததில்லை……ஆனால் அவன் என்னை காதலிச்சானாம்…..அதுவும் சின்ன வயசிலிருந்து….. மனோவுக்கும் எனக்கும் கல்யாணம் பேசுனப்போ, அவன் விலகிக்கலாம்னு நினைச்சானாம்! ஆனால் அப்புறம் மனோவும், நீயும் கல்யாணம் பண்ணினப்போ அவன் காதல் மறுபடியும் உயிர் பெற்றுடுச்சுனு அவனுக்கு தோணிச்சாம்….. மனோ என்னை பத்தின […]


பொன் மாலை பொழுது 26

மனோவின் மதுவுக்கு, ஒரு கடிதத்தை ஆரம்பிக்கறதுக்கு எழுதாத விதி, அன்புள்ள, நேசமுள்ளனு ஆரம்பிக்கணும்னு யாரோ சொல்லி நான் கேட்டுருக்கேன். ஆனால் வெறும் ஒரு கடிதத்துக்காக மட்டுமே என்னால அப்படி பொய் சொல்ல முடியாது! அதனால் தான் மனோவின் மதுனு ஆரம்பிச்சிருக்கேன். இது ரொம்ப பொருத்தமா இருக்கும்னு நினைக்கிறேன்……… வாழ்க்கையை சந்தோஷமா வாழ்றதுக்கு பணம் மட்டுமே தேவை இல்லை தானே! ஆனால் அது மட்டும் தான் தேவைனு, சொல்லி சொல்லியே வளர்க்கப்பட்டவ நானு…….. ஏன் அப்படின்னு எனக்கு புரியல?! […]


பொன் மாலை பொழுது – 25

மறுநாள் அதிகாலையிலேயே அவளை யாரோ எழுப்ப, கண்விழித்து பார்த்த மதிவதனி, அங்கு நிலா நிற்பதைக் கண்டாள். “அண்ணி, சீக்கிரம் ரெடி ஆகி வாங்க! எல்லாரும் ரெடி ஆயிட்டாங்க!” அவள் வேறு எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்று விட்டாள். ‘இவ ஏன் இப்படி முகத்தை உம்முன்னு வச்சிருக்கா? இப்போ எங்க போக போறோம்னு தெரியலையே?! இதுவும் சஸ்பென்ஸா?’ என்று நினைத்தவாறு எழுந்து தயாரானாள். நேராக தன் அத்தையிடம் சென்று.”அத்தை! இப்போ எங்க போறோம்?” என்று கேட்டாள். அவர் எதுவும் […]


பொன் மாலை பொழுது 24

வேன் திருநெல்வேலி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் செல்லவும் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளானாள் மதிவதனி. “ரஞ்சன் நாம அம்பாசமுத்திரத்துக்கா போறோம்?” “இவ்வளோ நேரம் என்னை எப்படி கூப்பிட்ட?! இப்போ மட்டும் என்ன ‘ரஞ்சன்’?” “ரஞ்சன்! ப்ளீஸ், விளையாடாதீங்க! சொல்லுங்க” “ஏய்! உங்க ஊருக்கு தான்டி போறோம். இப்போ என்ன? போகக் கூடாதா?” “இல்லை, இல்லை போகலாமே! ஆமா அங்கே போய் எங்க அத்தை வீட்டிலேயா தங்க போறோம்?” மனோரஞ்சன் திரும்பி அவளை முறைத்தான்,”இப்போ உனக்கு என்ன பிரச்சனை? உங்க […]


பொன் மாலை பொழுது 23

மனோரஞ்சன் கதவை தட்ட, கதவை திறந்த மனிதரை பார்த்து அனைவரும் அதிர்ந்தனர். ஏனெனில் அந்த மனிதருக்கு ஒரு கை இல்லை. அந்த மனிதரை பார்த்ததும் அவர் யாரென்பதை லக்ஷ்மணன் புரிந்துக் கொண்டார்.உடனே தாவிச் சென்று அவன் சட்டையை பிடித்தார். “டேய்! நீயா? உன்னை தான்டா இவ்வளோ வருஷம் தேடிட்டு இருந்தேன். நீ பண்ணின காரியத்தால என் தொழில்ல எனக்கு எவ்வளோ கெட்ட பேர் தெரியுமா? எல்லாரும் என்னை காப்பி அடிச்சவன் தானேனு எத்தனை தடவை கிண்டல் பண்ணியிருக்காங்க […]


பொன் மாலை பொழுது 22

யார் மீதோ மோத யாரென்று நிமிர்ந்து பார்த்த தாமரை, அங்கே கண்களில் கோபம் கொப்பளிக்க நின்றுக் கொண்டிருந்த தன் தந்தையை பார்த்து பயத்தில் விழி பிதுங்கி நின்றாள். அவள் பின்னாலே ஓடி வந்த ரிதுநந்தன், தன் மாமாவை அங்கே எதிர்பார்க்காததால், அதிர்ந்து போய் நின்றான். வேகமாக அவன் அருகில் வந்தவர், அவன் சட்டையை பிடித்து அவன் கன்னத்தை பதம் பார்த்தார்.அதோடு நில்லாமல் அவர் மேலும் அடிக்க ஆரம்பிக்கவே, தாமரை அவரை தடுக்க ஓடி வந்தாள், ஆனால் அடி […]


பொன் மாலை பொழுது 21

மறுநாள் காலை எழுந்து குளித்து தயாரகிவிட்டு மதிவதனி அறையை விட்டு வெளியே வரவும்,அதே சமயம் மனோரஞ்சனும் வரவும் இருவரும் மோதிக் கொண்டனர். “சாரி” இருவரும் ஒரே சமயத்தில் சொல்ல, ஒரு நிமிடம் மனோரஞ்சன் அவளை பார்த்தான், பின்பு விறுவிறுவென்று அங்கிருந்து நடக்க ஆரம்பித்தான். ‘இவருக்கு வேற வேலையே இல்லையா? ஆ ஊ னா இப்படி முறைச்சிக்கிட்டு திரும்பி முதுகை காமிச்சிகிட்டு நடக்க ஆரம்பிச்சிடுவார்’ சென்று கொண்டிருந்தவன் திடீரென்று நின்று திரும்பி அவளை பார்த்து,”இப்போ ஏதாவது சொன்னியா?” “ஆங்….இல்…இல்லையே…ஒன்னும் […]


பொன் மாலை பொழுது 20

மனோரஞ்சனின் போனில் தெரிந்த நித்யா என்ற பெயரை பார்த்ததும் கோபத்தில் முகம் சிவக்க அங்கிருந்து வேகமாக நகன்றாள் மதிவதனி. மனோரஞ்சன் அவள் பின்னாலேயே அழைத்துக் கொண்டே வந்தது, கேட்காதது போல விறுவிறுவென்று நடந்து வீட்டுக்குள் சென்று விட்டாள். உள்ளே ஹாலில் நிலாவும், தாமரையும் உட்கார்ந்து ஏதோ பேசிக்கொண்டிருக்க மதிவதனி வேகமாக உள்ளே போவதையும், பின் தொடர்ந்து மனோரஞ்சன் அவளை கூப்பிட்டுக் கொண்டே வருவதையும் பார்த்து குழம்பி போயினர். “என்னாச்சுணா. அண்ணி ஏதோ கோபமா போற மாதிரி இருக்கு! […]


பொன் மாலை பொழுது 19

மறுநாள் காலை எழும்போதே மனம் மிக சோர்வாக உணர்ந்தாள் மதிவதனி.அவள் பிறந்தநாளுக்கு அனைவரும் அவளுக்கு வாழ்த்து கூறினர்.ஊரிலிருந்து அவள் அத்தை கூட அவளுக்கு வாழ்த்து கூறினார்.ஆனால் அதிலெல்லாம் அவளுக்கு சந்தோஷம் இல்லை. தன் மனம் கவர்ந்தவன், தனக்கு எதுவும் பரிசு தரவில்லையே என்று மனம் அதையே நினைத்து வாடியது.’அவர் ஏன் எனக்கு, பரிசு தர போறார்?இதுவே நித்யா பிறந்தநாள்னா கண்டிப்பா ஏதாவது பரிசு குடுப்பார்.ச்சே!இவ்ளோ நடந்ததுக்கு அப்புறமும் அவரை பத்தி யோசிக்கவே கூடாதுனா இந்த புத்தி கெட்ட […]