அத்தியாயம் 36 “நீயா மதி? என்னால நம்பவே முடியல!” என அன்பரசன் சொல்ல, தலை குனிந்தே நின்றிருந்தாள் திகழ்மதி. திகழ் மதி அன்பரசனிடம் பேச நேரம் பார்த்து காத்திருக்க, கனகா தன் சித்திக்கு உடல் சுகமில்லை என்று பார்க்க சென்ற நேரத்தில் தன் மாமாவின் முன் வந்து நின்றாள் அவள். அரவிந்த், மகிழினி, இருவரும் திகழ்மதியுடன் பேச வர, அன்பரசன் அருகே அனன்யாவும் அமர்ந்திருந்தாள். அனன்யாவைப் பார்த்துவிட்டு அன்பரசனிடம் திரும்பினான் அரவிந்த். “என்ன அர்வி! எல்லாம் எடுத்து […]
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி – 49 (இறுதி பாகம்) கீழ்வானம் தீ பிழம்பாய் பற்றி எரிய முயன்று கொண்டிருக்க, காலை வெயிலைக் காண ஆவலோடு சேவல் கொக்கரிக்க, விடிந்தும் விடியாத அந்த காலைப் பொழுதில் சொந்த மண்ணில் மீண்டும் கால் பதித்தான், மூர்த்தி. மீண்டு வருவான் என்று எண்ணவில்லை. எண்ணுவதெல்லாம் நடப்பதில்லையே.. வந்துவிட்டான். ஆனால் இதற்கு மேல் அடி எடுத்து வைப்பதில் தான் எத்தனை போராட்டம்? யார் இருந்தாலும் இல்லாமல் போனாலும்.. பூமி […]
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி – 48_2 இரயில் புறப்படும் அறிவிப்பைத் தொடர்ந்து சிறிது நேரத்திற்கெல்லாம் பச்சைக் கொடி அசைக்கப்பட, பம்பாய் தாதரிலிருந்து மதராஸ்-சிற்கு செல்லும் இரயில் மெல்லப் புறப்படத் தயாரானது. இரயில் மெல்லக் கிளம்ப ஆரம்பிக்கவும், துளசி, அவன் சுவாசம்.. அவளைக் காணும் ஆவலில் இரயில் நிலையம் வந்து சேர்ந்தான். கிளம்பிய இரயிலோ… வழியை அடைத்து நின்றிருந்த கூட்டமோ மூர்த்தியை நிறுத்துவதாக தெரியவில்லை. கழுகைப் போல் இலக்கை மட்டுமே நோக்கி.. […]
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி – 48_1 வாழ்க்கைத் தடம் மாறி மாதம் ஒன்று ஓடியிருக்க.. மூர்த்தியின் முன் சந்திராசூர். ‘உன் பலத்தை.. உன் வீரத்தை என்னிடம் காட்டு’ என்று நெஞ்சை நிமிர்த்தி நின்றிருந்தான், மூர்த்தி. அவன் பலத்தை அவன் காட்ட.. அசையாமல் நின்றான், இவன். உன்னால் முடிந்த வரை அடி என்று நின்று கொடுத்தான். கையும் உடலும் களைத்துப் போகும் வரை அவனும் அடிக்க.. இவனும் நின்று வாங்கிக் கொண்டான். மனைவியைக் […]
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி – 47 இன்று பத்தாம் தேதி. வாக்கு கொடுத்திருந்தானே துளசியிடம்..! செல்வனிடம் பேசிவிட்டு, மூர்த்தி நேரே சென்றது, மகிழம் பூ மரத்தடியை நோக்கிதான். தோட்ட வீட்டை அடைந்தவன் அதையே வெறித்து நின்றான். 24 மணி நேரம் முன் உள்ளே கண்ட காட்சிகள் மறக்க முடியவில்லை. ஆயுசுக்கும் மறக்கத்தான் முடியுமா? அதன் பின் தானே துளசியை பார்ப்பதில்லை என்று தீர்க்கமான முடிவெடுத்தான். இருவாய்ச்சி பறவைக்கு இணையாய் தன்னை நினைத்தவளைக் […]
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி 46 “மூர்த்தி சார்” என்றாள். மாம்பழ கொட்டைக்குள் வண்டாய் மனதை குடைந்தது துளசியின் சத்தம். ‘துளசி மா..’ மரத்தடியில், அவன் மடியில் அவன் துளசி.. அவள் வாசம் அவன் மனதை நிறைத்துக் கொண்டிருந்தது. சிரித்தாள்.. மீசையை முறுக்கிவிட்டாள்.. “அழகு மூர்த்தி சார் நீங்க” என்றாள். கன்னக்குழியின் இதழ் புதைத்தாள்.. “அப்படியே என்னை உள்ள இழுத்துக்கோங்க மூர்த்தி சார்”.. “அண்ணா.. ண்ணா” அழைத்தது செல்வன். அழைத்தது மூர்த்தியை. […]
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி 45_2 வெளிச்சம் வந்த பின்னும் சூரியன் எட்டிப்பார்க்க நல்ல நேரம் தேடிக் கொண்டிருக்க, இருட்டையும் விடியலையும் பொருட்படுத்தாமல் இயங்கி வந்த தனியார் மருத்துவமனை முன் ஜீப் நின்றது. மூர்த்தியின் குடும்பத்தோடு மிக நெருக்கமான உறவுமுறையில் இருப்பவரின் மருத்துவமனை அது. ஜீப்பை பார்த்ததும், அங்கிருந்த காக்கி சட்டை ஒன்று எதிரே வர, வந்தவர் தன்னை அறிமுகப் படுத்தி, சத்யனோடு ஏதோ பேச.. மூர்த்தி கண் மருத்துவமனையை ஆராய்ந்தது, தெரிந்த முகம் ஏதேனும் […]
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி – 45_1 நேரம் நடு சாமத்தைத் தொட்டிருக்க, வேகமாக சென்று கொண்டிருந்த ரயில், வேகம் குறைய ஆரம்பித்தது. நடுக்காடு போன்று தோன்றிய இடத்தில், அந்த சின்ன ரயில் நிலையத்தில், சம்பந்தமே இல்லாமல் ரயில் நின்றது. ரயிலின் வேகம் குறையவுமே முழிப்பு தட்டினாலும், மூர்த்தி படுத்தே இருந்தான். பத்து நிமிடம் கரைந்தது. ரயில் அசையவில்லை. சிலர் தூங்கிக்கொண்டிருக்க, சிலரிடம் சலசலப்பு. கதவின் அருகில் போய் நின்றுகொண்டவன் கண்ணில் பட்டது காக்கி […]
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி – 44_3 ‘கட்டினவனை விட்டுவிட்டு என்னோடு வா’ என்று கூறியவன் கதவை தாழிட்டால், அதன் நோக்கம் என்னவாயிருக்கும் என்று யோசிக்க மூளை தேவை இல்லை என்பதால் துளசியும் யோசிக்கவில்லை. கைகள் இரண்டும் பின் சென்றது. போட்டிருந்த கண்ணாடி வளையல்கள் இரண்டை அவிழ்த்து, இரண்டாய் உடைத்து இறுகப் பிடித்துக் கொண்டாள். அருகில் அவன் வந்தால் அவளுக்கு நொடிப் பொழுது தான் கிடைக்கும் என்று தெரியும்.. அடுத்த நொடி அவள் மணிகட்டை […]
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி – 44_2 மூர்த்தி கிளம்பிய பின்னும் வெகு நேரம் மரத்தடியிலேயே அமர்ந்திருந்தாள். உள்ளுக்குள் ஏதோ பிசைந்தது. ஆனால் எப்பொழுதுமே அப்படி தானே. மூர்த்தி இல்லாமல் அணுவும் அசைய மறுத்தது, துளசிக்கு. “இப்படியே சிரிச்ச முகமா இரு. பத்தாந்தேதி காலையில வந்திடுவேன்..” என்று கன்னம் தட்டி சென்றிருந்தான். “ஏன் அழுதா பாக்க மாட்டீங்களா?” என்று வம்பு வளர்த்ததுக்கு “ம்ம்ஹூம்… நீ என்னைப் பார்த்து சிரிச்சா மட்டும் தான் பார்ப்பேன்.. […]