Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Short Stories

கண் பேசும் வார்த்தைகள்

பேருந்தின் முன் இருக்கையில் அவள். ஜன்னலோர பேருந்து பயணம் எவ்வளவு சுகமென்பதை அனுபவித்தவர்கள் மட்டுமே அறியக்கூடும். அதிலும் தேவதை தரிசனங்கள் அந்த இன்பத்தை மேலும் இனிதாக்கிடுமே… இளையராஜா பாடலும், மழையும், இந்த சூழலை இன்னும்  இனிமையாக்கும் என்று முகப்புத்தகத்தில் நீங்கள் எழுதியிருக்கக்கூடும். ஆனால் மன்னிக்கவும் எனக்கு அந்தக் கொடுப்பினைவாய்க்கவில்லை. ஏதோ தொண்ணூறுகளின் அதிரடிப் படமொன்று தொலைதூரமிருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் ஓடிக்கொண்டிருந்தது. என் கையிலிருந்த புத்தகம் எதற்காக என்னைவேறு திறந்துவைத்தும் அடிக்கடி புரட்டியும் இம்சிக்கிறாய் என்று காற்றடிக்கையில் படபடத்தது. […]


வேந்தனின் வேட்கை 

வேந்தனின் வேட்கை   ஆலமர மறைவிற்கு அந்த இருவர் வந்ததும் நீரிலிருந்து அம்புகள் சீறிப்பாய்ந்து வந்து தைத்தன. அவர்கள் அலறிதுடித்து வீழ்ந்தபோது, குளத்து நீருக்குள் பதுங்கியிருந்தவன் நீரை வாரியிறைத்தபடி வெளிவந்தான்.   சந்தியா வேளையில் நீராடிய சூரியனென அவன் பிம்பம் அந்நீர்நிலை முழுதும் பட்டு ஒளிர்ந்தது. கரையேறியவன் தேகத்தில் பாறைகளிலிருந்து விழும் அருவிகளாய் நீர்த்துளிகள் வழிந்தோடின. கண்ணிரண்டு போதவில்லையென காரிருள் காரிகை, கோடானுகோடி விண்மீன் கண்களைத் திறந்திடத் தொடங்கினாள்.   நிச்சயமாக விழிகளே எதிராளியை வீழ்த்திவிடும் கூர்மை […]


சிறுகதை: Krishna Priya’s இருள் சூழ்ந்த பௌர்ணமி

இருள் சூழ்ந்த பௌர்ணமி!   அன்று புத்தாண்டு, அலுவலகத்தில் ஆரவார கொண்டாட்டம். புத்தாடைகள், கனிகள், பலகாரம் என கோலாகலமாக இருந்தது அந்த காலைப்பொழுது.   பரிமாற்றங்களுக்கு இடையில் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொண்டனர் உங்களது இப்புதுவருட  குறிக்கோள் என்னவென்று. அப்போது பெரிதாக அல்லது உறுதியாக எதையும் கூறிய ஞாபகம் இல்லை அவர்களுக்கு.   மதிய உணவு இடைவெளிக்கு பின்பு அலுவலகம் அடைக்கப்பட்டது.   அந்த இளம்காதலர்கள், சிறு மோதலுக்கு பின் முடிவெடுத்தனர் இருசக்கரவாகனத்தில் ஒரு சிறு தூர பயணம் செல்ல. […]


செல்வி. திருமதீஸ் – 5.2

“நீ சொன்னியே என் மாமியாருக்கு என் மேலே அக்கறைனு… அது எங்க நான் ஹெல்மெட் போடாமல் சென்று டிராபிக் போலீசில் மாட்டி வெட்டியா சில ஆயிரங்களை பிணையா கட்டிடுவேனோனு வந்த அச்சம் அப்படினு வேணும்னா சொல்லலாம்… அதற்காக அவங்களுக்கு என் மேல பாசம் இல்லைனு இல்லை… அவங்களுக்குள்ள ஒரு வட்டம் போட்டுக்கிட்டு அதற்குள் மட்டுமே அவரின் அக்கறையை வெளிப்படுத்துவாங்க… ஆனால் அதைவிட அதிகமா வசை பேசுவாங்க… அவங்களுக்கே தெரியும் யார் மேல பிசகுனு ஆனாலும் தன் மாமியார் […]


செல்வி. திருமதீஸ் – 5.1

திருமதீஸ்: உ    அந்த புத்தம் புதிய நிசப்தமான காலை வேளையில் மனதை வருடும் மெல்லிய தென்றலில் வீட்டின் தோட்ட புல்வெளியில் வீட்டின் சுவரோரம் போடப்பட்டிருந்த நாற்காலியில் மடிக்கணினியுடன் அமர்ந்திருந்த மகனைத் தேடி வந்திருந்தார் ஈஸ்வரின் தாய், “டேய் இன்னும் சக்தியை சமாதானம் செய்யலையா… முகம் இன்னும் வாட்டமாவே இருக்கு…”    “ப்ச்… நீ விடுமா நான் பாத்துக்குறேன்.” அன்னையின் கேள்விக்கு தலையை நிமிர்த்தாமலே பதில் கூறினான் ஈஸ்வர்.   “என்ன பார்த்துக்குவ? தங்கமான பொண்ணை நல்லா […]


செல்வி. திருமதீஸ் – 4

திருமதீஸ்: ஈ    “இன்னும் கிளம்பாம என்ன பண்ணிட்டு இருக்க சக்தி?” தன் செவிகளில் திடுமென விழுந்த ஒலியில் ஒரு கணம் பதறி பின் நிமிர்ந்தாள் சக்தி. அங்கு பாகற்காயை மென்ற கணக்காய் நின்றிருந்தான் ஈஸ்வர். தோளில் மடிக்கணினி பை தொங்க, கழுத்தில் டை மற்றும் சட்டையில் இரு பொத்தான்கள் அவிழ்த்து விடப்பட்டு ஓய்ந்த நிலையில் இருப்பவனை கண்டதும் கையும், காலும் பரபரவென அவனுக்கு தேவையானதை செய்யத் துடித்தாலும் மனம் காலையில் நடந்த பிணக்கை நினைவுபடுத்த நங்கூரமிட்டது […]


செல்வி. திருமதீஸ் – 3

திருமதி: இ   மற்ற இரு வீடுகளுக்கு முற்றிலும் மாறாக அவ்வீடு மெளனத்தின் ஆட்சியால் சூழப்பட்டிருக்க, செங்கதிரோன் தன் புலன்களை விரிவாய் விரித்து தாராளமாய் அவ்வீட்டின் மீது வீசினும், அதனுள் இருந்த உறுப்பினர்கள் அதனை சற்றும் சட்டை செய்யாது நித்திராதேவியின் ஆசியில் திளைத்திருந்தனர். இருப்பினும் எவ்வளவு நேரம் தான் தன் அருளை ஒரே வீட்டிற்கு வாரி வழுங்குவார் தேவி? ஆசி வழங்கிய சோர்வில் துயில் கொள்ள சென்றுவிட, அந்த வீட்டின் ஓர் அறையில் பஞ்சு மெத்தையில் மென்மையாய் […]


செல்வி. திருமதீஸ் – 2

திருமதி: ஆ   ஆதவன் செவ்வென தன் வேலையை எவர் தூண்டலமின்றி செய்ய அவருக்கு உறுதுணையாய் தன் வேலையையும் வீறிட்ட குரலால் செய்தான் கிருஷ். ஆதவனின் கதிர்கள் திரைச்சீலையுடன் கண்ணாம்பூச்சு ஆட அந்த பட்டும்படாத வெளிச்சத்தில் தனக்கருகில் அழுது கொண்டிருந்த க்ருஷை தன் புறம் இழுத்து மார்போடு அணைத்துக்கொண்டாள் மங்கை. அன்னையின் சூட்டை உணர்ந்த க்ரிஷ் அவள் மார்பில் முட்டி மோதி தன் பசி தீர்க்க முயல, பட்டென விழிகளை திறந்தாள் மங்கை. விழித்ததும் வழக்கமாக செல்லும் […]


செல்வி. திருமதீஸ் – 1

திருமதி: அ   நாலாபுறமும் அடைக்கப்பட்டிருக்கும் அந்த நிசப்த அறையை இருள் சூழ்ந்திருக்க, பெயருக்கென்று இரவு விளக்கும் எரிந்துகொண்டிருக்க, அந்த நிசப்தத்தை கலைக்கவென அலறியது அந்த ஒலிக்கடிகை. வழக்கமான ஒன்றாயினும் முதல்முறை போலவே பதறியடித்து ஒலிக்கடிகையின் தலையில் ஒரு தட்டு தட்டி அமர்த்தினாள்.   கண் இமைகள் பிரியாமல் அடம்பிடிக்க, மனமோ இன்னும் ஒரு ஐந்து நிமிடம் மட்டும் உறங்கிக்கொள்கிறேனே என்று அவகாசம் கேட்டது. மூளையும் அலுப்பில் தன் கடினத்தை குறைத்துக்கொள்ள, போர்வையை இழுத்து தலை வரை […]


ரோஜாவனம்

அது ஒரு பெரிய மால் காலை பத்து மணி அளவில்