“இந்த மனுசென ஒன்னுஞ்சொல்லுததுக்கு இல்ல. பொம்பளைங்க சேந்து இவர கைய கால கட்டி போட்டாகதேன். ஆனா அதுக்கப்புறங்காட்டியும் கூட மவள தூர நின்னு பாக்குதேன்னு இன்னு தொலவுக்கு தள்ளி நிறுத்திப்போட்டாரு…” என முருகய்யனிடம் சொல்லியவன், “அந்த வீட்டுல அவ பேசுதது ஒங்கிட்ட மட்டுந்தேன் கெழவி. நீயிந்தேன் அவள விட்டுட்ட. யே நா கூடத்தேன். நமக்கெல்லா அந்த சாமி மன்னிப்பே தராது கெழவி….” என்று அழகுப்பாட்டியிடம் அவன் சொல்ல, “சாமி சோதி…” என அழகுப்பாட்டி அவனின் தோளில் சாய்ந்து […]
கடல் – 29 “மின்னு என்ன பேசுத? ஒன்னிய நாங்க கவனிக்கலங்குதியா?…” என ராஜாத்தி ஆரம்பிக்க, “எக்கா இப்ப என்னத்துக்கு ஊர கூட்டுத? கம்மின்னு இரேன். நீ எரயுததுல என்னவோன்னு எல்லாரு வந்துற போறாக. வீட்டு வெவகாரம் தெருவுக்கு போயிரும்…” என கடினமான குரலில் அருள் சத்தம் போட்டுவிட மடமடவென கண்ணீர் இறங்கிவிட்டது ராஜாத்திக்கு. “லே சோதி, நீயா பேசுத? பேசுலே பேசு. ஒம்பொஞ்சாதி அவள நாங்க கெவனிக்கலன்னு சொல்லுதா. அத்த கேட்டுக்குடுக்க ஒனக்கு ஒரைக்கல. என்னிய […]
மாதமாதம் வழக்கமாக செல்லும் பரிசோதனைக்கு செல்ல அங்கே மருத்துவமனையில் மின்னொளிக்கு அதிகளவு அழுத்தம் ஏற்பட்டிருப்பதாக சொல்லி அவளின் மனதை பாதிப்பதை போல நடக்க வேண்டாம் என்றும் அவளை பத்திரமாக பார்த்துக்கொள்ளுமாறும் சொல்லி அனுப்ப இன்னும் கவனமாக கவனிக்க ஆரம்பித்தார் காசியாத்தா. அருள் பார்த்து பார்த்து அவளை தாங்கினான். ஒன்பதாம் மாதமும் வந்துவிட அருளுக்காய் மனது கேட்காமல் அன்று மாலை வீட்டிற்கு வரும் நேரம் வளையல்கள் நிறைய வாங்கி வந்திருந்தான். “என்னய்யா இதெல்லா?…” என கேட்டாலும் மின்னொளியின் கண்கள் […]
கடல் – 28 மின்னொளி தாயான விஷயம் ஊர் மக்கள் அனைவருக்கும் தெரிய வர ஆளுக்கொரு பேச்சும் சில விமர்சனங்களும் வந்து கொண்டு தான் இருந்தன. சிலர் வந்து பார்த்துவிட்டு கூட சென்றனர். அது உண்மையான அக்கறையா? நம்ப முடியாத ஆச்சர்யமா? என்பது அவர்களுக்கே வெளிச்சம். ஆனால் அதை எதையும் அவள் கண்டுகொண்டால் தானே? குணசாலிக்கு மின்னொளியிடம் வந்து கேட்டு தெரிந்துகொள்ள உள்ளுக்குள் பரபரவென்று வந்தது. தெரியாவிட்டால் தலையே வெடித்துவிடும் போல இருந்தாலும் வந்து மின்னொளியிடம் கேட்டுவிட்டு […]
“என்னடி இது? மூஞ்சியே செரியில்ல. அக்காவு வாடி கெடக்குது? என்னத்தையாச்சு சொல்லுச்சா?…” என கேட்க அவனின் கேள்வியில் புன்னகைத்தாள் மின்னொளி. “இப்ப எதுக்குடி சிரிக்கித?…” என இளவரசனை தூக்கிக்கொண்டு கேட்க, “இப்ப இத்த கேக்கத்தேன் வந்தியலோ?…” என பதிலுக்கு கேட்க, “இப்பலா நா கேக்குததுக்கு பதிலா சொல்லாம திரும்ப கேக்க ஆரம்பிச்சுட்ட புள்ள…” என்றவனின் வாயை அடைத்தான் இளவரசன். “லே மருமவனே ஆத்தாவ திட்டலவே. ஒடனே மொறப்பியே?…” என மருமகனை ஒரு சுழற்று சுழற்றி மேலே தூக்கிப்போட்டு […]
கடல் – 27 விடியற்காலை கண்விழித்து பார்த்த அருள் அருகில் மின்னொளி இல்லாமல் இருக்க சோம்பலுடன் எழுந்தமர்ந்தான். என்ன செய்ய? என்ன செய்ய? அவளை சந்தோஷப்படுத்த என்ன செய்ய? என மனது கூப்பாடு போட்டது. முதல் நாள் அவள் சிதறவிட்ட வார்த்தைகளின் கனம் தாளாமல் அவன் மனது இன்னமும் சமநிலைக்கு வர முடியாமல் உள்ளுக்குள் கொந்தளித்துக்கொண்டே தான் இருந்தது. இருந்தும் அதனை காட்டிக்கொண்டால் மின்னொளியும் அதிலிருந்து வெளிவரமாட்டாள் என்று முயன்று தன்னை இலகுவாக்கிக்கொண்டான். அவள் இழந்தவற்றை எல்லாம் […]
“ஒரு வருசத்துக்கு மேல பேசாம இருந்து திடீருன்னு பேசுன்னு வந்து நின்னா? அதுவு எங்கம்மா செத்தன்னைக்கி என்னிய தொட்டு பாத்துருந்தா கூட காலுல பலியா விழுந்து கெடந்திருப்பே. அப்ப ஆரும் என்னிய பாக்கல. இதுதேன் நெரந்தரமின்னு நானு மனச தேத்திக்கிட்டே. போதுமா? போதுமாங்கறே…” “மன்னிச்சிக்கிடு ஒளி…” மீண்டும் அவனின் மன்னிப்பு மின்னொளிக்கு வேதனையான சிரிப்பை தான் வரவழைத்தது. இன்னும் அவனின் அணைப்பிற்குள் தான் இருந்தாள். உணர்வற்ற வெகு சாதாரண குரலில் அவள் சொல்லிக்கொண்டே வந்தாலும் அவளின் உடல்மொழி […]
கடல் – 26 “ஏன்டி இப்ப நா தொட்டா என்னவா? என்னவோ இன்னிக்கித்தான் ஒன்னிய கெட்டிக்கிட்டு வந்த மாரி சிலுத்துக்குற?…” என அருள் சீற அவனை பலம் கொண்ட மட்டும் விலக்கியவள் கீழே விரிப்பை போட அவளின் கையில் இருந்த போர்வையை பிடுங்கினான். “ப்ச், இன்னிக்கு வேண்டாங்கறேன்ல…” என அவனை விலகி சென்ற அவள் வெறும் தரையில் படுக்க அவனோ அவளை கீழே படுக்க விடாமல் கட்டிலில் தூக்கி போட்டவன், “எல்லாமே ஒ இஷ்டமாடி. அதெல்லாம் முடியாது…” […]
கடல் – 25 திடீரென உள்ளே வந்ததும் தன்னருகே அமர்ந்தவன் கேலியாய் பேச மின்னொளி சற்று ஆதரவாய் உணர்ந்தாள் மனதினுள். “சிரிக்கிதத பாரு. கேட்டா சொல்லமாட்டியோ? என்னிய மட்டு போட்டு ஆட்டு…” என அவளை கடிந்தவன், “ஏன்டி இங்கன ஒத்தையில ஒக்காந்துருக்க?…” என கேட்க அவனை அழுத்தமாய் பார்த்தவள், “எப்பவும் போலத்தேன்…” என்றதும் அவளை முறைத்தவன், “என்ன புள்ள அழுதுருக்க? இந்தா இதுவு எப்பவு போலத்தேனா?…” என கேட்டு தன் பக்கமாய் அவளை திருப்பி அமர்த்தியவன் அவளின் […]
பிரசவ நாளுக்கு பத்துநாட்கள் முன்பே காசியாத்தா முருகய்யன் வீட்டில் வந்து தங்கிக்கொள்ள அழகுப்பாட்டிக்கும் சற்று நிம்மதியாக இருந்தது. காசியாத்தா வந்து நான்கு நாட்களில் ஒருநாள் நடுநிசியில் ராஜாத்திக்கு வலி எடுக்க வீட்டிலேயே பிரசவம் பார்க்கப்பட்டது அவருக்கு. அக்கம்பக்கத்தினர் வேறு அந்நேரமே கூடிவிட்டிருக்க குழந்தையை முதலில் மின்னொளியிடம் தான் தரவேண்டும் என்றதற்கு ஆளாளுக்கு ஒவ்வொன்றாய் சொல்ல குழந்தையை வாங்க ஆசையுடன் இருந்த மின்னொளி இந்த பேச்சில் கோபம் வந்தாலும் அது சரியான நேரம் இல்லை என்பதால் அமைதியாகி வாங்க […]