Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thalaivanin Kaathali

அத்தியாயம் 18.1 : தலைவனின் காதலி!!!

அத்தியாயம் 18 பிரிவு என்பது ஒருவரை மறப்பதா? இல்லவே இல்லை, மீண்டும் மீண்டும் நினைப்பதே!!!   அவர்களை வரவேற்க சுமனும் மாயாவும் வந்தார்கள். அடுத்த இரண்டு நாளில் அங்கிருக்கும் கோயிலில் வைத்து எளிமையாக யுவன் மற்றும் சுசீலா திருமணம் நடந்தது.   தன்னுடைய கழுத்தில் கிடந்த தாலியை வியப்பாக பார்த்தாள் சுசீலா. ஆனந்தத்தில் அவள் கண்களில் கண்ணீர் வந்தது.   “உனக்கு கல்யாணத்தைப் பத்தி நிறைய கனவு இருக்கும். நம்ம ரெண்டு பேருக்குமே அம்மா அப்பா கிடையாது […]


அத்தியாயம் 18.2 : தலைவனின் காதலி!!!

மாயா மற்றும் சுமனின் நிலையும் அதுவே தான். “என்னை சுசீ பாத்துக்குவாங்க. நீங்க பையா கூட வேலைக்கு போங்க”, என்று சொல்லி சொல்லியே அவனை கஷ்டப் பட்டு தான் மாயா அனுப்பி விடுவாள். ஏனென்றால் யுவனின் பாசம் அந்த அளவுக்கு இருந்தது. அந்த அளவுக்கு அவளை தாங்கினான். பழைய கசப்பான நினைவுகள் இப்போது மாயா மனதில் எழுவதே இல்லை.   இருவரும் கிளம்பி சென்ற பிறகு மாயாவை சாப்பிட வைத்து அவளிடம் நல்ல விஷயத்தைச் சொன்னாள். அதைக் […]


அத்தியாயம் 17.2 : தலைவனின் காதலி!!!

இந்த வேலைகள் அனைத்தும் முடிந்து அனைத்தும் சீராக ஐந்து மாதங்களுக்கு மேல் ஆனது. சுசீலாவும் அந்த ஹோமில் இருக்கும் பெண்களை வீட்டுக்கே அழைத்து வந்து விட்டதால் அவர்களுடன் பிசியாகி விட்டாள். அஸ்வதியும் அங்கே இருக்க நாட்கள் யாருக்கும் போர் இல்லாமல் சென்றது.   சுமன் வேலைக்கு சென்ற பிறகு மாயாவுக்கு மட்டும் தான் பொழுது போகாமல் இருந்தது.     எல்லா வேலைகளையும் முடித்த பிறகு தான் நிதானமாக மூச்சு விட்டான் யுவன். அப்போது சுசீலாவின் பெற்றவர்கள் […]


அத்தியாயம் 17.1 : தலைவனின் காதலி!!!

அத்தியாயம் 17 நம் நினைவுகள் நமக்குள் இருக்கும் வரை பிரிவு என்பது இல்லவே இல்லை நம் காதலுக்கு!!! இரண்டு நாள்கள் பயணம் முடிந்து புது இடத்தில் கால் எடுத்து வைத்தார்கள் சுமனும் மாயாவும். புது நாடு, புது மொழி என்று ஆர்வமாக வேடிக்கை பார்த்த படியே யுவன் ஏற்பாடு செய்திருந்த இடத்துக்கு வந்தார்கள்.   உள்ளே சென்றதும் இருவருக்கும் நேரம் றெக்கை கட்டிக் கொண்டு பறந்தது. அன்றே அந்த ஊரைச் சுற்றிப் பார்க்க சென்றார்கள்.   மனதில் […]


அத்தியாயம் 16.2 : தலைவனின் காதலி!!!

வீட்டுக்கு திரும்பி வரும் போது “இன்னும் எத்தனை நாள் போகணும் மாயா?”, என்று கேட்டான் சுமன்.   “அவ்வளவு தான். முடிஞ்சிருச்சு”, என்று மாயா வெட்கத்துடன் சொல்ல அன்று இரவு என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பு உருவானது சுமனுக்கு. அதை அவன் கண்களில் கண்டவளுக்கும் வெட்கம் பீறீட்டது.   முகம் முழுவதும் சந்தோசத்துடன் உள்ளே நுழைந்தான் சுமன். அவனுக்கு குறையாத சந்தோஷமும், அதற்கும் அதிகமான வெட்கமும் கொண்ட முகத்துடன் அவன் பின்னே உள்ளே வந்தாள் மாயா.   […]


அத்தியாயம் 16.1 : தலைவனின் காதலி!!!

அத்தியாயம் 16 கண்களில் கனவாக இருப்பேன் என்றாய், இப்போதோ கானல் நீராக ஆனாய்!!! எங்கே செல்கிறார்கள் என்று மாயா சொல்வாள் என்று சுமன் எதிர் பார்க்க அவளோ அன்று முழுவதும் அவனிடம் சொல்லவே இல்லை. சுமனும் அதை அத்தோடு விட்டு விட்டான். ஆனால் அடுத்த நாளும் அதே நேரத்துக்கு அவர்கள் இருவரையும் யுவன் அழைத்துச் செல்ல சுமனுக்கு குழப்பம் தான் வந்தது. கேசவுக்கும் எங்கே என்று தெரிய வில்லை.   அன்று அவர்கள் மூவரும் திரும்பி வந்ததும் […]


அத்தியாயம் 15.1 : தலைவனின் காதலி!!!

அத்தியாயம் 15 எந்தன் முகத்தை நீ மறந்தாலும் எந்தன் நினைவுகள் உன்னை விட்டு எப்போதுமே செல்லாது!!!   அவனைப் பார்த்த படியே கட்டிலில் படுத்திருந்தாள் மாயா. அவள் கண்கள் அவனை விட்டு விலக வில்லை தான். ஆனால் மனம் எங்கெங்கோ பயணித்தது. சுமனை நினைத்தும் வருத்தப் பட்டாள். திருமணம் முடிந்த எந்த ஆண்மகனுக்கும் ஒரு வித எதிர்பார்ப்பு இருக்கத் தான் செய்யும்.   ஏனோ தன்னால் கடைசி வரை சுமனுக்கு நல்ல மனைவியாக இருக்க முடியாதோ என்ற […]


அத்தியாயம் 15.2 : தலைவனின் காதலி!!!

இரு ஆண்களும் அவளை ஆர்வமாக பார்க்க “முதல்ல மாயாவுக்கு இப்ப இருக்குற சூழ்நிலை மாறனும். பழைய விஷயங்களை நினைவு படுத்துற இந்த ஊர்ல அவங்க இருக்க கூடாது. நல்ல என்வீரான்மென்டும் கூடவே சுமனோட அதிக நேரம் செலவழிச்சா மாயா மனசுல சுமனைப் பற்றிய எண்ணங்கள் அதிகம் வர ஆரம்பிக்கும். அப்ப எல்லாம் சரியாகிரும். யுவன், முதல்ல ரெண்டு பேரையும் பாதுகாப்பா வேற ஊருக்கு அனுப்பி வைங்க. கொஞ்ச நாளானாலும் சரி. இல்லை ஒரெடியானாலும் சரி. அவங்க எங்கயாவது […]


அத்தியாயம் 14.2 : தலைவனின் காதலி!!!

யுவனை நினைத்து சுசீலாவின் கண்கள் கலங்கியது. அவனுக்கு நல்ல பெற்றோர்களும் நல்ல சூழ்நிலையும் அமைந்திருந்தால் அவன் வாழ்க்கை இப்படி திசை மாறியிருக்காது என்று புரிந்தது.   அவனை நினைத்து அவள் கண்களில் கண்ணீர் வடிந்தது. அவனுக்காக அவள் விடும் கண்ணீரைக் கண்டவன் மனம் ஆனந்தத்தில் துடித்தது. அந்த கண்ணீர் அவனுக்கு பொக்கிஷம் அல்லவா?   அவள் கண்ணீரைத் துடைத்த படி மேலும் சொல்ல ஆரம்பித்தான். “முதல்ல இவனை எப்படி நெருங்கன்னு யோசிச்சப்ப தான் இவன் போதை தொழில்ல […]


அத்தியாயம் 14.1 : தலைவனின் காதலி!!!

அத்தியாயம் 14 என்னைப் பிரிந்து சென்று காதல் வலியை எனக்கு புரிய வைத்தது ஏனோ?!!!   அவன் கை பற்றி வெளியே அழைத்து வந்தாள் சுசீலா. அவள் கை பிடியில் நடந்து வந்தவனுக்கு உடலும் மனமும் தளர்வாக இருந்தது. அங்கே நின்ற கேசவ் மற்றும் சுமனை பார்த்த சுசீலா “அந்த மிருகம் செத்துருச்சு. எப்பவும் போல புதைச்சி அது மேல செடியை நட்டுருங்க”, என்று சொல்லி விட்டு யுவனை அவனுடைய அறைக்கு அழைத்துச் சென்றாள்.   எப்போதும் […]