அத்தியாயம் 10 “என்ன டா போற?”, என்று கேட்ட பார்வதிக்கு பதில் சொல்லாமல் கனவுலகத்தில் போவது போல நடந்து போனான் பார்த்திபன். “என்ன அத்தை? இவன் இப்படி மந்திரிச்சு விட்ட மாதிரி போறான்” “நீ மந்திரிச்சு தான விட்ட? அதான் அப்படி போறான்” “என்ன சொல்றீங்க அத்தை?” “ஆமா பார்வதி. அவன் மனசுல மித்ரா, நந்தினிக்கு கல்யாணம் செஞ்சி வைக்க தான் அவனை கல்யாணம் செஞ்சிருக்காளோன்னு ஒரு சந்தேகம் இருக்கு. […]
“இவன் ஏன் ஒரு மார்க்கமா பேசுறான்?”, என்று நினைத்து கொண்டு “காலைலே உங்களுக்கு வாழ்த்து சொல்ல வந்தேன். ஆனா நீங்க என்னை பேச விடலை. இப்பவும் திட்டிறாதீங்க. பிறந்த நாள் வாழ்த்துக்கள்”, என்று சொன்னாள். “உன்னோட வாழ்த்தை இன்னும் ஒரு அஞ்சு மணி நேரம் கழிச்சு சொல்லு”, என்று சொல்லி விட்டு போய் விட்டான். “எதுக்கு இப்படி சொல்றான்?”, என்று நினைத்து கொண்டு தன் வேலையை பார்க்க ஆரம்பித்தாள். கீழே வந்தவுடன் அவளை பார்த்த பாட்டி, “என்ன மித்ரா சேலை […]
“எல்லாம் உன் பேரனை நினைச்சு தான் பாட்டி. என் பேச்சை கேக்கவே மாட்டுக்காங்க. எனக்கு என்ன செய்யன்னே தெரியலை. நாளைக்கு தான பாட்டி அத்தானோட பிறந்த நாள். இத்தனை நாள் லவ் பண்ணனும் அப்படிங்குற கனவும் போய், இப்ப எல்லா ஆசையும் போச்சு பாட்டி” “எனக்கு உன்னை பிடிச்சிருக்கு டா மாங்கா மடையான்னு சொல்லிற வேண்டி தான?” “அதை கூட சொல்ல விட மாட்டிக்கான் பாட்டி. கோபமா வருது” சுற்றி தலையை திருப்பி பார்த்த பாட்டி அவள் காதில் […]
“அடுத்த ஜென்மத்திலாவது அழகான பொண்ணா, அருமையான பொண்ணா, தேவதை மாதிரி இருக்குற பொண்ணா எனக்கு எங்க அம்மா கட்டி வைப்பாங்கன்னு கனவு கண்டுட்டு இருக்கேன். அதுல போய் இப்படி மண்ணை அள்ளி போடலாமா பாரு?”, என்று சிரித்து கொண்டே கேட்டார் மகேந்திரன். “அத்தை தயவு செஞ்சு என்னை மன்னிச்சிருங்க”, என்று சொன்னாள் பார்வதி. “எதுக்கு மா?” “இப்ப உங்க பிள்ளையை அடிக்க போறேன். இப்ப நடக்குறதை வச்சு நான் அவரை அடிச்சு கொடுமை படுத்துறேன்னு நீங்க தப்பா […]
அத்தியாயம் 9 “அப்பவும் இதெல்லாம் சும்மா”, என்று அவள் சொல்லுவாள் என்று அவன் மனம் எதிர் பார்க்க அவள் சரி என்று சொன்னது அடுத்த ஏமாற்றத்தை தந்து கோபத்தை அதிக படுத்தியது. அதை உணர்ந்தவள் “இங்கே இருந்தா இன்னொரு அடி வாங்கணும்”, என்று நினைத்து கொண்டு வேறு உடை எடுத்து கொண்டு குளிக்க சென்றாள். குளித்து முடித்து வந்த பின்னரும் அதே பொசிசனில் அமர்ந்திருந்தான் பார்த்திபன். “சொல்ல வரதை கேக்கணும். மூஞ்ச […]
அங்கு போய் வேலை எல்லாம் முடித்து விட்டு மாலை இருவரும் திரும்பி வந்தார்கள். அப்போது மற்ற எல்லாரும் ஹாலில் அமர்ந்து காபி குடித்து கொண்டிருந்தார்கள். “இருங்க உங்க ரெண்டு பேருக்கும் காபி கொண்டு வரேன்”, என்று எழுந்து போனாள் நந்தினி. “எங்க அக்கா உன் மருமகளை காணும்?”, என்று பார்வதியிடம் கேட்டார் மோகன். “அவ தூங்குறா. எழுப்பி பாத்தேன் எந்திக்கலை மோகன்” “இப்படி தான் அக்கா பண்ணுவா. இவளை வளக்குறதுக்குள்ள நான் […]
அத்தியாயம் 8 “எல்லாம் சரி தான் மா. ஆனா மேடம் நீங்க டாக்டருக்கு படிச்சிருக்கீங்களே. அதை படிச்சுட்டு நீ வீட்ல இருந்து சாப்பிட்டு தூங்க போறியா?”, என்று கேட்டாள் நந்தினி. “அப்படினு யார் சொன்னா? நம்ம ஊரு டவுன்லேயே ஒரு கிளினிக் போட்டு என் வேலையை செய்வேன்” “நல்ல யோசனை தான். இந்த வாரமே அதுக்கு முயற்சி செய்யலாம். ஆஸ்பத்திரி வைக்கிறதுக்கு நல்ல இடமா பாருங்க”, என்றாள் பார்வதி. “இல்லை அத்தை. நான் இதுவரைக்கும் பாத்து […]
“எனக்கு கூச்சமா இருக்கு மதினி. எதுக்கு இப்படி சின்ன பிள்ளை மாதிரி பண்றீங்க?”, என்று அழகாக வெட்க பட்டாள் நந்தினி “மோகன் உன் புருஷன் மா. இனி அவன் கூட தான் நீ இருக்கணும். இனியாவது சந்தோசமா இரு”, என்று சொல்லி நந்தினியை மோகன் அறைக்குள் அனுப்பி வைத்தாள் பார்வதி. கை கால் நடுக்கத்துடன், மனதில் எழுந்த தயக்கத்துடன் உள்ளே வந்தாள் நந்தினி. அவளை பார்த்த மோகன் “உக்காரு நந்தினி”, என்று சொன்னார். […]
அத்தியாயம் 7 நந்தினி கழுத்தில் தயக்கத்துடன் அதே நேரம் மனம் நிறைய சந்தோசத்துடன் தாலியை காட்டினார் மோகன். ஆனந்தத்துடன் அனைவரும் அர்ச்சனை தூவினார்கள். அவர்கள் கல்யாணம் முடிந்த பின் பார்த்திபனையும், மித்ராவையும் அமர வைத்தார்கள். “என் பொண்ணோட வாழ்க்கைல ஒளி ஏத்தி வச்சிட்டா. கொஞ்ச காலம் சேந்து வாழ்ந்தாலும் மனசுல நினைச்சவனோட வாழ்ந்துட்டோம் அப்படிங்குற நிறைவு என் பொண்ணுக்கு கிடைக்கும். ஆண்டவா. என் கவலைக்கு மித்ரா மூலமா முற்று புள்ளி வச்சிட்ட”, என்று […]
அத்தியாயம் 6 “முடியாது”, என்று சொல்லி கொண்டே அவன் முதுகில் கைகளை படர விட்டாள். “இது தப்பு மித்ரா விலகு. உனக்கு புரியலை. என்னையும் சோதிக்காத விலகு” “முடியாது”, என்று சொல்லி கொண்டே அவன் நெஞ்சில் அழுத்தமான முத்தத்தை பதித்தாள். சிலையாக நின்றான் பார்த்தி. அடுத்த நொடி அவன் புலன்கள் அனைத்தும் விழித்து கொண்டது. கீழே கிடந்த அவன் கைகள் அவள் இடுப்பில் பதிந்தது. சிறிது நேரம் மெய் […]