Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Un Sari Paathi

Un Sari Paathi 22

அத்தியாயம்       22 கனிக்கு இவனின் பேச்சு… நிம்மதியைதான் கொடுத்தது… கண்             மூடி அமர்ந்து கொண்டாள்… சதாவும் அவளின் நிலை பார்த்து           ஏதும் சொல்லலாமல் அமர்ந்து கொண்டான்… மெல்ல மெல்ல இயல்பாகினான் சதா… “போலாமா.. பெப்பி”         என்றவன், பிடித்திருந்த அவள் கைகளில் முத்தமிட்டு அவளையே    பார்க்க… கனி “ம்.. வீட்டுக்கு போலாம்ங்க..” என்றாள்.. சிரித்தபடியே… சதா “இல்ல, உனக்கு வளையல் வாங்கிட்டுதான் போறோம்…”        என்றவன் சொன்னபடி செய்தே… வீட்டிற்கு கூட்டி வந்தான். நாட்கள் நகர தொடங்கியது. வாளைகப்பு முடிந்து […]


Un Sari Paathi 21

அத்தியாயம்       21 சதா, எப்போதும் போல்… தன் அலுவல்கள் பார்க்க… கனிக்கு         ‘மோர்னிங்  சிக்… வாக்கிங்… வீடு’ என மாதங்கள் கடந்தது. கனிக்கு ஐந்தாம் மாதம் தொடக்கம்… சற்று அதிகபடியான மேடான      வயிறு… கூடவே பிள்ளைகளின் அசைவு தெரிய தொடங்கியது. கல்யாணி இங்கேயே கீழேயே உள்ளே அறையில், அவளை            இருக்க செய்தார். இரவு சதா, வந்து கூட்டி போகும் வரை,             இங்கே அவளுக்கென ஒரு அறை இருந்தது. அவ்வபோது               சற்று மூச்சு வாங்கியது, படி ஏறும்போது…. அதனால் […]


Un Sari Paathi 20 2

கனிக்கும், சதாக்கும் பேச்சே வரவில்லை… அமைதியாக கட்டிக்       கொண்டு அமர்ந்திருந்தனர்… இருவர்க்கும் தாங்கள் கடந்து வந்த    வருடங்கள் தோன்றியது கண்முன்னே… அதில் சதாதான் சுதாரித்து… “இன்னிக்கே செக்கப் போலாம்… ” என    தொடர்ந்து ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான்,. கனி அமைதியாக “ம்… “ என சொல்லியபடியே கேட்டுக்       கொண்டிருந்தாள் சதா “ஹேய் தூங்குறியா… வா, கீழ போலாம்” என அவளை    தன்னிடமிருந்து பிரித்தான். கனி நிமிர்ந்து அவனை பார்த்து, அப்படியே அவனிற்கு நெற்றியில்     முத்தம் வைத்து… “ஷிவாக்கு […]


Un Sari Paathi 20 1

அத்தியாயம்       20 கனி எழும் சத்தம் கேட்க்கிறது. ஆனாலும் கண்திறக்க         முடியவில்லை சதாவால், இன்று அவனிற்கு லீவ்… நேற்று              இரவு கண்விழித்தது… அதற்கு முதல் நாள் கண் விழித்தது                 என எல்லாம் சேர… சதா, விழிக்க நினைத்தாலும் கண்கள் சண்டித்தனம் செய்ய…        அப்படியும் “கனி… இன்னும் கொஞ்ச நேரம் தூ..ங்குடா..” என               வாய் தன் போல் சொல்லியது… கனி, அப்போதே வாஷ்ரூம் சென்றிருந்தாள். சதாவும்        உறங்கிவிட்டான். கனி, குளித்து முடித்து கீழே சென்று                     தன் வேலைகளை பார்க்க […]


Un Sari Paathi 19

அத்தியாயம்       19 அப்படி இப்படி என இரண்டு மாதம் சென்றிருந்தது. கன்யா        வேலையை விட்டு ஒரு மாதம் முதல், இதே வேலையாக              செய்து தன் கொழுந்தனுக்கு திருமணத்தை நிச்சயித்து              விட்டாள். ஷணமுகத்திற்கு கல்யாண யோகம் கூடி வந்தது. எப்படி…                யார் மூலம் என்றெல்லாம் கேள்வியே இல்லை. எல்லோரின்            ஒரே பதில் கன்யாதான். சதா, இதனையும் சத்தமில்லாமல் கவனித்து கொண்டு இருந்தான்.      எதிலும் கலைக்கவேயில்லை… தானுன்டு, தன் வேலையுண்டு         எனதான் இப்போதும். ஆனால், எல்லாம் அவன் காதில் விழும் […]


Un Sari Paathi 18

அத்தியாயம்       18 அடுத்த இரண்டு நாள் கன்யாவிற்கு மனதேயில்லை… சதா,          தெளிந்து கொண்டான்தான்… ஆனால், புது அனுபவமாக கன்யா, நடமாடினாள்… சற்று மெல்ல மெல்லத்தான் இயல்பாக முடிந்தது     அவளால். நாட்கள் நகர தொடங்கியது. இந்த வார இறுதியில், கன்யாவின் வீட்டு விருந்துக்கு சென்றனர்    தம்பதிகள். மைதிலிக்கு சந்தோஷமே, சொன்னபடி தன் மருமகன் வந்தது. சதா,      உணவு முடித்து கிளம்பிவிட்டான் தன் வேலையை பார்க்க, கீர்த்தி         கூட “ஏன் ண்ணா… இன்னிக்கு சண்டே தானே” என ஏதோ சொல்ல, […]


Un Sari Paathi 17 2

சதாவிற்கு இருந்த பசியில் உண்டு முடித்தே நிமிர்ந்தான், கன்யாவும்      அது புரிந்து போல, காபியை கபில் ஊற்றி கொடுக்க… அதனை        குடித்து முடித்தே இவளை பார்த்தான் “என்ன, வீட்டுக்கு போய்      பார்த்தியா” என்றான். கன்யாவிற்கு கோவமெல்லாம் போயி வெறியே வந்தது… “என்ன     பிரச்சனை இப்போ உங்களுக்கு…” என்றாள். சதா “வீடு பார்த்தியா, எப்படி இருக்கு, பிடிச்சிருக்கா…” என்றான்,       அவளின் மனமறிய எண்ணி. கன்யா எல்லா சாமான்களையும் எடுத்து வைத்துக் கொண்டே           “நான் தனியாவெல்லாம் அங்க போக மாட்டேன்… […]


Un Sari Paathi 17 1

அத்தியாயம்       17 மாலை கன்யாவின் வீட்டிலிருந்து எல்லோரும் வந்திருந்தனர்…         கன்யா எதையும் முகத்தில் காட்டாமல் “வாம்மா…” என்றே       அழைத்தாள். மைதிலிக்கு, தன் பெண்ணின் மாற்றம் நன்கு கண்ணுக்கு          தெரிந்தது… முகமெல்லாம் பூரித்து… சோபையாக இருக்க,               ஏதோ அழகுடன் கூடிய கர்வமாக வலம் வந்தாள் அந்த                வீட்டில் கன்யா… எல்லாமும் தானே செய்தாள் கன்யா, பெரிய ஒட்டுதல்             அவளிடம் ‘இதைத்தானே நான் வேண்டும் என்று நினைத்தேன்’           என மைதிலிக்கு ஒரு நிம்மது. மைதிலியால் இதை உணர முடிந்தது. முன்பும் […]


Un Sari Paathi 16

அத்தியாயம்       16 இருவரும் அமைதியாக அமர்ந்திருந்தனர்..  முதலில் யார்            பேசுவது என தெரியவில்லை. அதுவும் சதாவுக்கு என்ன              கேட்பது, ஏன் இப்படி இருக்கிறாள் எனத்தான் தோன்றியது. கன்யா, அவன் தன்னிடம் ஏதும் கேட்கவில்லையே என்ற        எண்ணம்தான் முதலில்… கூடவே இப்பொது எதற்கு என        யோசனைதான் எனவே அமைதியாகவே இருந்தாள். சதாதான் முதலில் தொடங்கினான் “என்னப்பா, ஏன்             முகமெல்லாம் ஒரு மாதிரியா இருக்கு..” என்று வாஞ்சையாக        அவளின் தலை கோத. கன்யாவிற்கு கண்கள் கரிக்க            தொடங்கியது.. இந்த அன்பு […]


Un Sari Paathi 15

அத்தியாயம்       15 சதா “கனி, இன்னிக்கு ஒரேநாள் தானே சொல்றேன்… லீவ் போடு…”    என்றான் தனது யோகா மேட்டை மடித்து வைத்தபடியே… கன்யா “இல்லைங்க.. இன்னிக்கு கேஷ்ஷியர் லீவ்… நானும் போட்டா    நல்லா இருக்காது… சாரி… சாரி….” என சொல்லியபடியே தனது      தலைமுடியை பின்னியவள்.. கண்ணாடியில் அழகு பார்த்து     கொண்டிருக்க.. பின்னாடியிலிருந்து வந்து அவளின் இடையை இரு கைகளாலும்     பிடித்தபடி கண்ணாடியில் அவளை பார்த்தவாறு நின்று கொண்டான்      சதா. அவனின் கண்களில்தான் எத்தனை ஏக்கம்…. அப்படியே அவளை […]