கண்ணீர் 19 “எல்லாரும் உங்க நோட்புக் எடுத்து வையுங்க.. நான் ஃப்ரீ டைம் கரெக்ஷன் பண்ணிட்டு மறுபடியும் உங்ககிட்ட கொண்டு வந்து தரேன்..” கிளாஸ் மிஸ்ஸின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப அனைத்து ஸ்டூடண்ட்ஸும் தத்தம் டெஸ்க்கில் தங்கள் நோட்டை எடுத்து வைக்க தனு மாத்திரம் விழித்துக் கொண்டிருந்தாள்.. எழுதாத நோட்டை எப்படி வைப்பதென.. அவள் அருகில் அமர்ந்திருந்த அவளின் கிளாஸ்மேட்டும் மதுரா தனிமை வெறுப்பேத்த உபயோகிக்கும் ஆயுதமுமான அன்பு, அவள் முழியைப் பார்த்து விட்டு, “என்ன ஆச்சு தனு? […]
அத்தியாயம் – 3 மெதுவாக அவள் கையில் இருந்த கத்தியை அப்புறப்படுத்தியவன், அவளை கையிலேந்தி அவர்கள் படுக்கையில் விட்டான். அப்பொழுதும் அவள் மயக்கத்தில் இருக்கிறாளா, உறங்குகிறாளா என ஒரு பயத்திலேயே இருந்தான். அவன் தூக்கி படுக்கையில் விட்டதில் எதோ வித்தியாசமாக தோன்ற அவள் புரண்டு படுத்தாள். அதற்குப்பின் தான் ஷ்யாமுக்கு நிம்மதியாக இருந்தது. அவள் மேல் போர்வையை விரித்து விட்டு ஏசியை ஆன் செய்து வெளியில் வந்தான். அனுவிற்கு எப்பொழுதும் தனியாக இருக்கவே […]
அத்தியாயம் – 2 திருச்சியில், தன் கையில் இருந்த அலைபேசியை பார்த்திருந்த ஷ்யாமின் முகம் யோசனையைத் தத்தெடுத்தது. அனுவின் வேலை பற்றி தெரிந்திருந்தாலும் கடந்த ஒரு வருடமாகவே அவளது செயல்கள் அவனை குழப்பியடிக்கிறது. அவனறிந்த அனு இவள் இல்லை. தன் மனைவியைத் தான் இன்னும் சரியாக புரிந்து கொள்ளவில்லையோ என்று கலங்கினான் அந்தக் காதல் கணவன். ஷ்யாமால் அவனது மனதின் அலைப்புறுதலை புறந்தள்ள முடியவில்லை. அனுவின் வேலை பற்றி அவன் நன்கறிவான். அவர்களது குடும்பங்களில் […]
அத்தியாயம் – 1 சென்னை மாநகரத்தின் அழகிய பெசன்ட் நகர் கடற்கரை. வானத்தில் முழு நிலவு எட்டிப் பார்க்கத் தொடங்கியிருந்தது. அப்பொழுது தான் எவ்வளவு நேரம் தனியாக அமர்ந்திருக்கிறோம் என்பதே அனாமிகாவிற்கு உறைத்தது. வீட்டில் இன்று யாரும் அவளைத் தேட போவதில்லை என்பது மட்டுமே அவளுக்கு இருக்கும் ஒரே ஆறுதல்.பள்ளி விடுமுறையை ஒட்டி கணவனும் குழந்தைகளும் இன்று காலை திருச்சி கிளம்பியிருக்க, அலுவலகத்திற்கு அழைத்து விடுமுறை சொல்லி மதிய உணவைக் கூட உண்ணாமல், சுட்டெரிக்கும் சூரியனை […]
விதியின் விசித்திரம் விஷ்ணுபிரியா -13 ரஞ்சனா சொல்லிச் சென்றதே பிரியாவின் மனதில் சுழன்று கொண்டிருந்தது. ‘வரதன் தத்தெடுத்து வளர்க்கப்பட்டவன்’என்று கூறும் போது அவளுக்கு பெரிய அதிர்வெல்லாம் இல்லை. இது போல ஏதாவது இருக்கும் என்று யோசித்து தான் இருந்தாள். ‘தத்தெடுத்து வளர்த்து இருந்தாலும் இவ்வளவு அவனை உழைக்க விட்டு இருக்க வேண்டாம்’ என்று தான் தோன்றியது அவளுக்கு. ‘எவ்வளவு ஆசையாக இங்கு வந்திருப்பானோ’ என்று எண்ணியவளுக்கு மனம் சங்கடமாக இருந்தது. ‘நாமளும் ரொம்ப பண்றோம் வேற.எல்லாரும் வேலைக்காரனைப் […]
21ம் நுற்றாண்டு, “ம்மா எவ்வளவு நேரமா கத்திட்டு இருக்கேன் சாப்பாடு எடுத்து வைக்க முடியுமா முடியாதா?” தளர்ந்த நடையோடு சமையலறையில் இருந்து வந்த ஆகாஷின் பாட்டி கையில் வைத்திருந்த தட்டை அவனிடம் நீட்ட அவர் முகத்தை கூட கவனியாமல் தட்டை வாங்கி என்ன சாப்பிடுகிறோம் என்றே தெரியாமல் நான்கு வாய் சாப்பிட்டு விட்டு தன் வண்டி சாவியை எடுத்துக் கொண்டு கல்லூரிக்கு கிளம்பிவிட்டான். வழக்கம்போல் தன் ஆற்றாமையை பெருருமூச்சாய் வெளிப்படுத்தியவர் அருகிலிருந்த அறைக்குள் நுழைய சாய்வு நாற்காலியில் […]
புது விஜயம் 25 அம்மாவிடம் தாரிணி பற்றி சொல்லிவிட்டான் என்று அறிந்ததும் “நீங்க அம்மா மேல கோவமா இருந்தீங்க நினைச்சேன்” என்று மின்மினி மெல்ல சொல்ல “கோவமா?” என்று ஆச்சரியமாகக் கேட்டான் பிரதாபன். “அவங்ககிட்ட பேசலன்னா கோவமா? அப்படி பார்த்தா நான் தாரிணியோட பேசி வருஷமாச்சே? அவ மேலயும் கோவமா? என்று கேட்ட ஏட்டனை அவனை விடவும் ஆச்சரியமாக நோக்கினாள் மின்மினிகுட்டி. தன் ஏட்டனின் இந்த புன்னகை, பேச்சு எல்லாமே மின்மினிக்குப் புதிது! ஆனால் புதிதாக […]
தன்னவனை அப்படி ஒரு நிலையில் கண்டவளுக்கு மனம் நொறுங்கிப் போனது.இருப்பினும் துரையின் முன் தன் கண்ணீரை காட்ட விரும்பாதவள் மார்படைத்த துக்கத்தை மென்று முழுங்கி தெம்பை வரவழைத்த குரலில் அவனை அழைத்தாள். “உடையவரே” சிறு அசைவு அவனிடத்தில்.மீண்டுமாய் கன்னம் வருடி அழைக்க சற்றே பார்வை தெளிவடைந்தது. “அலர்!!நீ எப்படி?” “ஒன்றுமில்லை உடையவரே தைரியமாய் இருங்கள்.” “நீ ஏன் இங்கு வந்தாய் கண்ணம்மா?என் மீதிருந்த நம்பிக்கை போய் விட்டதா?” “என்ன வார்த்தை கூறி விட்டீர்!!இவனின் முடிவை தங்கள் கைகளால் […]
நாட்கள் அப்படியே நகர்ந்து மாதங்களாகக் கடக்க, இப்பொழுதெல்லாம் அகத்தியனின் அன்றாட விடியலே, மனைவியின் வீட்டில் தான் துவங்கி இருக்க, தேன்கமலியின் பலகாரம் விற்கும் தொழிலும் ஓரளவு சூடுபிடிக்கத் தொடங்கியது. ஆரம்பத்தில் காலையும் மாலையும் என்று அடிக்கடி சந்திக்க நேரிடும் கணவனிடம் பெரிதாக பேச்சு வார்த்தை இல்லாது அவனை எட்ட நிறுத்தி இருந்தவள், நாள்கள் செல்லச் செல்ல, அவளுக்கே அவளுக்காக அவள் கணவன் மேற்கொண்டு இருக்கும் அந்த மெனக்கெடலில் அவளையும் அறியாமல், அவன் மீது இருந்த வருத்தங்களை சிறிது […]
தன்னவனின் மனைவியாய் அந்த தாலியை பார்க்க பார்க்க சொல்லில் அடங்கா ஆனந்தம் அலரினுள் பரவிக் கிடந்தது. அதை தன் கைகளில் ஏந்தி அதையே பார்த்த வண்ணமிருந்தாள்.சட்டென இருட்டியது நினைவிற்கு வர, “உடையவரே!வெகு தூரம் வந்துவிட்டோம் போலவே..இருட்டி வேறுவிட்டது இருப்பிடத்திற்கு திரும்பி விடலாம்.” “இந்த திருமாங்கல்யத்தை என்னிடம் கொடுத்து என்னை ஆச்சரியப்படுத்திய என் மனைவிக்கு நானும் ஆச்சரியம் அளிக்க வேண்டாமா! அதற்காகத் தான் அழைத்துச் செல்கிறேன் வா..”,என்றவன் சற்று தூரம் சென்று தன் நடையை நிறுத்தினான். சுற்றி கண்களை […]