“ஏய் மது,இதெல்லாம் எதுக்கு இப்போ..??பழசை எல்லாம் விடு..” “இல்ல,என் மனசுக்குள்ள பூட்டி பூட்டி வச்சு, பைத்தியம் ஆகிடுவனோன்னு பயமா இருக்கு.. சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லிடுறேன்..கேட்க வேண்டிய மன்னிப்பையும் கேட்டுடுறேன்.. வெளிய இருந்து பார்க்குறவங்களுக்கு, நான் லக்கி அஹ் தெரிவேன்.. பணக்கார வாழ்க்கை.. அப்பா, அம்மா அரவணைப்பு..இப்படி.. ஆனா, உண்மையிலேயே நீ தான் லக்கி..சிறந்த வளர்ப்பு..பிடிச்ச கணவன்..காதல் வாழ்க்கை.. இதுக்கு மேல, வைரம் மாதிரி குழந்தை.. உனக்கு ஒன்னு தெரியுமா??நம்ம அம்மா, பெண் குழந்தை பிறந்தா, மித்ரான்னு […]
அத்தியாயம்-36 ஆறு மாதங்கள் கடந்திருந்தது.. தன் குழந்தையை தூங்க வைத்து விட்டு, மாடியில் இருந்து இறங்கி வந்தாள் மதி.. கூடத்தில் அமர்ந்து, ஒரு புதியவனோடு பேசிக் கொண்டிருந்தான் ராஜா.. யார் என்ற கேள்வியோடு, ராஜாவின் அருகில் சென்றாள் மதி..அவளை நிமிர்ந்து பார்த்து புன்னகைத்த ராஜா,அந்த புதியவனுக்கு மனைவியை அறிமுகப்படுத்தும் நோக்கோடு, அவனை பார்த்தான்.. அதற்கு முன்னமே அந்த புதியவன், மதியை பார்த்து எழுந்து நின்று விட்டான்.. அவன் கண்களில் பரவசம்.. “மது நல்லா இருக்கியா??” […]
அத்தியாயம்-35 வெளிநாட்டில் இருந்த வரை, இவள் சொல்படி கேட்கிறேன் என்று அமித் கூறியதால், அப்பொழுது அமைதி ஆகி விட்டாள் மது.. அன்னையிடம் மட்டும், அவன் பெண்கள் தொடர்பு விஷயத்தை கூறினாள்.. ஆண்கள் எல்லாம் அப்படி தான்.உன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்.. என்று, அறிவுரை கூறினார் அவர்.. அதன் பிறகு இந்தியா வந்ததும், அவன் நடவடிக்கை முற்றிலும் மாறி போனது.. அங்கே, அவள் எந்த பிரச்சனையும் செய்யாமல் திரும்பி வர வேண்டும் என்று அமைதி காத்தவன்.. இங்கு வந்ததும், […]
அத்தியாயம்-34 ஓங்கிய கையை கட்டுப்படுத்தி, கீழே இறக்கினான்..அந்த அடி அவள் மேல் பட்டிருந்தால், பிரசவத்துக்கு முன்பே, அவள் சொன்னது போல ஆகி இருக்கும். அவ்வளவு வேகம் இருந்தது அவனிடம்.. அவளின் அதிர்வை பார்த்தவன்..அவளை இழுத்து, இறுக்கி அணைத்தான்..அவள் கன்னம் தாங்கி, இதழோடு இதழ் சேர்ந்தான்.. இதை எதிர்பார்க்காத மதி,இன்பமாய் அதிர்ந்தாள்.. நொடிகள் நிமிடங்களாக மாறிய பொழுது அவள் நடு முதுகில், சுரீர் என்று ஒரு வலி தாக்கியது.. அவன் தோள்களை பிடித்திருந்த அவள் கைகள், தன் வலியால் […]
அத்தியாயம்-33 அமித்தின் அத்தையும் பயந்து கொண்டு தான் இருந்தாள்.. “நேத்து நான் இங்க வரும் போது,இவ தான் மாடியில இருந்து இறங்கி வந்தா..” அந்த வேலைக்காரியை கை காட்டினாள்.. அவள் உள்ளுக்குள் நடுங்கினாலும், முன்னவே எதிர் பார்த்த விஷயம் என்பதால்,சற்று தைரியமாகவே இருந்தாள்.. “சார்,நான் சாப்பாடு கொடுக்க வந்தேன்..மேடம்க்கு.. கொடுத்துட்டு வரும் போது தான், இவங்க வந்தாங்க..உடனே என் கிட்ட இருந்து, சாவி வாங்கிட்டு போய்ட்டாங்க.இன்னிக்கு தான் மறுபடியும் சாவி வாங்கிட்டு, சாப்பாடு கொடுக்க போனேன்.மேடம் […]
அத்தியாயம்-32 அனைவர் முகங்களிலும் கவலை அப்பிக் கிடந்தது..படுக்கையில் நிர்சலனமாய் உறங்கிக் கொண்டிருந்தாள் மது..‘கொஞ்ச நேரத்துக்கு முன்ன, இவள் செய்த ரகளை என்ன??இப்பொழுது, ஒன்றும் அறியாத அப்பாவி போல, உறங்குகிறாள்..’ அவளுக்கு தேவையான போதை கிடைக்காத கோபத்தில், பொருட்களை எடுத்து உடைத்தவளை, யாராலும் அடக்க முடியவில்லை.. பிரமிளாவின் தலையில், பூ ஜாடியை தூக்கி போட்டு உடைத்தாள்.. நெற்றியில் ரத்தம் வழிய, வலியில் கதறியவரை கண்ட ராஜா,அவள் கன்னத்தில், ஓங்கி ஒரு அறை விட்டான்..அதில் மயங்கியவள் தான்.. மருத்துவருக்கு அழைத்து, […]
அத்தியாயம்-31 அமித்லால் வீட்டின் முன் வேன் நின்ற பிறகு, அமைச்சரின் ஆள்..“சார்,சிக்னல் கிடைச்சதும் போலாம்..அதுவரை இறங்காதிங்க..” பத்து நிமிட காத்திருப்புக்கு பின், அவர் அலைபேசிக்கு அழைப்பு வந்தது..எடுத்து பேசிய அவர், “சார், பாதி பேர் சாப்பிட போயிட்டானுங்களாம்.மீதி பேர், முன் பக்கம் நிக்குறாங்களாம்..இப்போ யாரும், பின்னாடி வர மாட்டாங்களாம்..இப்போ போனா சரியாய் இருக்கும்.. போய்ட்டு, சீக்கிரம் வந்துடுங்க சார்..” அவருக்கு தலை அசைத்து விட்டு, இருவரும் இறங்கி,அந்த புதரை விலக்கி விட்டுக் கொண்டு சென்றார்கள்.. ‘ஆத்தா மஹமாயி, […]
அத்தியாயம்-30 வளைகாப்பு முடிந்து ஒரு வாரம் கடந்திருந்தது..அன்று கிளம்பி போன சேகரிடம் இருந்து, அதன் பிறகு எந்த தகவலும் இல்லை.. தானே தொடர்பு கொண்டு கேட்கலாம், என்று யோசித்துக் கொண்டிருந்தான் ராஜா.. “என்ன வரு யோசனை??” “ஹ்ம்ம்..இல்ல..மாமா மும்பை போனும், நீயும் வான்னு கூப்பிட்டாங்க..ஒரு வாரம் ஆச்சு..எந்த தகவலும் இல்லை..” “ஓ…மது எப்படி இருக்காளோ?? தெரியல..” “ஹ்ம்ம்…” இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, இவர்கள் அறை கதவை தட்டினாள் பேச்சி.. கதவை திறந்த ராஜாவிடம், “சின்னையா, உங்கள […]
அத்தியாயம்-29 மதியின் கையை பிடித்து அருகில் அமர்த்திக் கொண்டார் சேகர்..அவர் தோளில் சாய்ந்தாள் பெண்.. “அப்பாவை மன்னிச்சுடு மா..” “எதுக்கு ப்பா பெரிய வார்த்தை எல்லாம் பேசிக்கிட்டு..எனக்கு உங்க மேல கோவம் எல்லாம் இல்ல ப்பா.. கொஞ்சம் வருத்தம் தான்..” அவள் தலையை வருடியவர் கண்ணில், அவள் தாலி சங்கிலி பட்டது.. அதை கையில் எடுத்துப் பார்த்தார்.. “அம்மாவோடது ப்பா..” தெரியும் என்பது போல தலையசைத்தார்.. “என் பாருவோடது எனக்கு தெரியாதா..?? இது மூலம் உனக்கு, உன் […]
அத்தியாயம்-28 அந்த ஊரில் அவர் கட்டி கொண்டிருந்த கட்டிடத்தின் கட்டுமான பணிகள் முடிவடைந்தது..இனி இங்கு வரும் வேலை இல்லை என்றானதும்,பாரிஜாதத்தையும் அவள் அத்தையையும் அழைத்துக் கொண்டு, அவர் கிராமத்தின் அருகில் இருந்த டவுனில் குடி வைத்தார்..அவளை மருத்துவரிடம் அடிக்கடி காட்ட வேண்டிய தேவை இருந்ததால்.. அதன் பிறகு, இங்கு மாதத்திற்கு ஒரு முறை வந்து, ஒரு வாரம் தங்கி செல்வார்.. ‘என்னையும் உங்களுடன் அழைத்து செல்லுங்கள்.ஏன், இங்கேயே இருக்க வேண்டும்??உங்கள் அம்மா அப்பாவிடம் நம் திருமண விஷயம் […]