Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vaan Maraiththa Nilavey

VMN FINAL 1

           வான் மறைத்த நிலவே              அத்தியாயம்.. 25           அடுத்த நாள் காலை ஊருக்கு செல்வதற்க்காக குளிக்க சென்றிருந்த காமாட்சி ஆறு மணிபோல் வெளிவர.. வழக்கம் போல் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்த மஞ்சுளா வாசல் பெருக்கி முடித்து உள்ளே வரவும்.. குளித்து முடித்து புத்தம் புதுமலராய் அஜய்யும் தனதறையிலிருந்து வெளியே வந்தான்.       ‘காபி போடவா பெரியவனே..” என காமாட்சி கேட்க.. வேணாம் என்பதாய் தலையசைத்தவன்.. ‘ஜூஸ் போட பழம் எதாவது இருக்கா.?  சமைக்க என்ன இருக்கு.? முட்டை இருக்கா.?” […]


VMN FINAL 2

அடுத்த நாள்.. ‘நீ வேலை செய்தது போதும்.. நான் பார்க்குறேன்..” என மஞ்சுளா சொல்ல.. அவர் சமைத்து தான் சாப்பிட வேண்டும் என நினைக்கும் அன்னையை புரிந்தவன்.. பிறகு வந்த நாட்களில் மஞ்சுளாவிற்க்கு சமைக்க தெரியாத சில ஐட்டங்கள் மட்டும் செய்தான்.        அடுத்த வாரம் வளைகாப்பு வைக்கிறேன் என்று சதாசிவம் சொன்னதுபோலவே நாள் குறிக்க.. ம்.. புகைப்படங்களில் அதிக ஆர்வம் கொண்ட தாரணியின் வளைகாப்பில் அவள் விருப்பம் போல் விதவிதமான போட்டோக்கள் எடுக்கப்பட்டது. அன்று மட்டும்  மாமனார் […]


VMN 24 2

‘என்னை அசிங்கப்படுத்துறதா நினைச்சி என்னோட சேர்த்து அவங்க மகன்களையும்தான் அசிங்கப்படுத்தியிருக்காங்க.. ஆனாலும் இப்போவும் அவங்க பக்கம் நியாயம் இருக்கமாதிரி எங்கப்பாகிட்ட பேசினாங்க.. எங்கப்பாக்கும் அது புரியாம இல்ல.. என் மனசு புரிஞ்சி எனக்காகத்தான் எங்கப்பா அமைதியா இருந்துட்டார்.. அதுக்காக அவங்க மேல நியாயம் இருக்கப்போய்தான் நான் இங்க வந்ததா நினைச்சிடப் போறாங்க..” என்றாள் கோபமாக.               ‘ச்ச.. ச்ச.. அப்படியில்ல தாரு.. இப்போ எல்லாத்தையும் உணர்ந்துட்டாங்க.. அவங்கமேல உள்ள கோபத்துல இனிமே நீ இங்க வராம இருந்திடுவியோன்ற பயத்துலதான் […]


VMN 24 1

வான் மறைத்த நிலவே                                 அத்தியாயம் .. 24         அனைவரும் சமாதனம் ஆனபின்னே.. ‘ஆறுமணிக்கு மேல ஆகியும் நாங்க வீட்ல இல்லன்னா குழந்தைகள் அவங்கம்மாவை படுத்தி எடுப்பானுங்க.. என் பொண்டாட்டி எனக்கு போன் செய்து என்கிட்ட கத்துவா.. அம்மா இருந்தாலாவது சமாளிப்பாங்க.. இல்ல நாலு பேரும் படுத்துவாங்க..        எல்லாருக்கும் கார்ல இடம் பத்தாது.. அதுனால நான் அத்தை மாமாவை கூட்டிட்டு நாங்க கிளம்பறோம்..” என ரமேஷ் எடுத்துரைக்க.. ‘சரி ரமேஷ்.. நீங்க கிளம்புங்க.. நாங்களும் ஒரு அரைமணி […]


VMN 23 2

தாரு தட்டியும் திறக்கலதான்.. ஆனா அதுக்கப்புறம் எதோ சொல்லி கூப்பிட்டதும் திறந்துட்டான்.. ரெண்டு பேரும் புரியாத பாஷையில ரொம்ப நேரம் பேசினாங்க.. தாரு அழுதாளோ என்னவோ.. பெரியவன் அவ கண்ணை துடைச்சிவிட்டான்.. அப்புறம் தாரு சிரிச்சிட்கிட்டே ஐ லவ் யுன்னு சொன்னா.. இவன் வெக்கப்பட்டான்.. இது மட்டும்தான் என் புத்திக்கு எட்டுச்சி.. அந்த நேரம் தப்பாவும் பட்டுச்சி.. நான் பேசினதும் நினைச்சதும் தப்புதான்..        பெரியவன் போனதும் என்கிட்ட அவனைப்பத்தி சொல்லியிருந்தா பிரச்சனையே வந்திருக்காது.. அதுபோகட்டும்.. இரண்டு நாள் […]


VMN 23 1

                                வான் மறைத்த நிலவே                 அத்தியாயம் .. 23                    ‘காலைல போனாங்க.. என்னாச்சி ஏதாச்சின்னு தவிச்சிட்டிருப்பாங்கன்னு ஒரு போன் செய்தானுங்களா.? ரமேஷ் திருமலைக்கு ஒரு போன் செய்டா..” என்றார் காமாட்சி.       திருமலைக்கும் அஜய்க்கும் போன் செய்த ரமேஷ்.. ‘ம்மா.. ரெண்டு பேர் பேரும் எடுக்க மாட்றாங்க..” என்றான் பதட்டமாக.       ‘தாரணியும் சம்பந்தியும் பசங்கள்ட்ட சண்டையேது போடுறாங்களா தெரியல.. நாம போலாமா காமாட்சி..?” என்றார் ரத்தினம்.       ‘ம் போலாம்ன்ணா..” என்று கிளம்ப தயாராகவும்.. ‘மஞ்சுளா கிளம்பு..” என்றார் ரத்தினம். […]


VMN 22 2

‘பின்னே இத்தனை அழகா பேசினா பார்க்காம என்ன செய்வாங்க.? டிரான்ஸ்ஜென்டர்கிட்ட பேசுறது அவங்களுக்கு புது அனுபவம்.. அதுலயும் நீங்க சும்மா ஸ்டைலா இங்லீசுல பேசியிருப்பிங்க.. ஃபர்ஸ்ட் டைம் நீங்க பேசுனதை பார்த்து நானே அசந்து போனேன்.. அப்போ அவங்க பார்க்காம என்ன செய்வாங்க.? இதெல்லாம் யோசிக்க கூடாது.. ஒரு ரெண்டு நாள் வித்யாசமா பார்ப்பாங்க.. அப்புறம் பழகிக்குவாங்க.. சாப்பிட வாங்க..” என உரிமையாய்  அறிவுருத்தி சாப்பிட அழைத்தாள்.       அஜய்..‘சாப்பாடு கம்மியா இருக்குன்னு மாமா வாங்க போயிருக்காரு.. நீ […]


VMN 22 1

            வான் மறைத்த நிலவே..            அத்தியாயம் .. 22                          இத்தனை நேரம் தாரணி அஜய்யின் ஊடலை ரசித்திருந்த திருமலை.. சுந்தரியிடம்.. ‘அத்த நான் போறேன்..” என மனைவியோடு இணைய.. ‘வேணாம்.. வேணாம்.. நீங்க ரத்துமாவோட இருங்க..” என்றாள் அவசரமாக.         ‘உள்ள வாங்க..” என்று செவிலிப்பெண் சொல்ல.. தாரணி தடுமாற.. ‘ப்ச்.. வா..” என கைப்பிடித்து உள்ளே அழைத்துப்போனான் திருமலை.      இவர் யார் என்பதுபோல் டாக்டர் பார்க்க.. ‘நான் தாரணி புருசன்..” என்றான்.       ‘ஓ.. பைனலி வந்திட்டிங்க போல.. […]


VMN 21 2

சரியென்பதாய் தலையசைக்க.. ‘வா.. வா..” என ஆர்பரித்து.. ‘மருமகன் கூட இருக்கிறவர்தான் உன் மச்சான்டாரா.?” என்றார் ஆவலாக.        ஆமாம் என தலையசைத்தவளுக்கு முன்னிருந்த வளைவை கடக்க முடியவில்லை.. ‘திருமலையின் உடல்மொழியே அவனின் வேதனையை விளக்க.. கணவன் மீதான கோபமெல்லாம் பஞ்சாய் பறந்தது கொண்டிருந்தது..       ஆனால் மஞ்சுளாவை நினைத்ததும்.. ரத்துமாவும் வந்திருக்காங்க.. அவாய்ட் பண்ணவும்  முடியாது.. பேசினாலும் பிரச்சனை அதிகமாகும் என வேதனையடைந்தவள்.. நான் இங்குதான் இருக்கிறேன் என எப்படி கண்டுபிடித்தார்கள்..? தான் கர்பமாய் இருப்பதை சுந்தரேது சொல்லியிருப்பானா.? […]


VMN 21 1

     வான் மறைத்த நிலவே..     அத்தியாயம் .. 21                      ‘பெரியவனே..” என ரத்தினம் பாசத்தோடு மகனருகே செல்ல..  ‘ம்ஹ்ம்..” என அவனின் இயல்பான நளினத்தோடு கோபமாய் முகம் வெட்டியவன்.. ‘திரு.. எனக்கு அப்பாம்மா உறவே வேணாம்.. வாடா நாம தாருவ பார்க்க போலாம்..” என்றான் அன்னையை வெறுப்பாய் பார்த்தவாறு.         ‘பெரியவனே..” என மஞ்சுளா பதற.. அன்னையை காணவும் பிடிக்காமல் அஜய் முகம் திருப்ப..  நாம பேசினது எல்லாம் கேட்டுட்டான் போலவே.. அச்சோ இவனை எப்படியாவது சமாளிக்கனுமே என […]