ஹால் சோபாவிலேயே மடிந்து அமர்ந்து அழுதுக்கொண்டிருந்தாள் மாதங்கவதனா. நேரே சென்றவன், “எங்க அம்மா இப்படிதான்! பலாப்பழம் மாதிரி! எதையும் ஸாஃப்ட்டா சொல்லவே வராது… எல்லார்க்கிட்டயுமே இப்படிதான் அதட்டி உருட்டி பேசுவாங்க! நீ அவங்க பேசுன விதத்தை எதுவும் பெருசா எடுத்துக்காத!” என்றவன், “பேசுன விதத்தை தான் சொன்னேன்… பேசுனதை இல்லை!” என்றுவிட, நிமிர்ந்து பார்த்தவள், “ஏன் இப்படி பொண்ணே கிடைக்காத மாதிரி என்னையே சுத்தி வரீங்க?” என்றாள். “பிகாஸ் ஐ லவ் யூ!” முதல்முறையாய் சொன்னான். அவனை […]
அன்றைய பொழுது பரபரப்பில் தான் விடிந்தது. ஒரே நாளில் மூன்று வீட்டிற்கும் புதுமனை புகுவிழா. ஒருவர் மற்றொருவர் விழாவில் பங்கேற்க வேண்டுமே என்று அதிகாலையில் இருந்தே விழா ஆரம்பித்து விட்டது. முதலில் சுவாதியின் வீட்டுக்கும், பிறகு விவேக்கின் வீட்டுக்கும் இறுதியாய் குரு, ரீனாவின் வீட்டுக்கும் கிரகப்ரவேசம் என்று நேரம் குறிக்கப்பட்டிருந்தது. சொன்னது போல அஜய் மூன்று வீட்டுக்கும் மாறி மாறி ஓடி வேலைகளை கவனித்துக்கொண்டிருந்தான். ஒரே ப்ரோஹிதர் தான் மூவருக்கும்! முதலில் பிரம்ம முகூர்த்ததில் சுவாதி, பிரபுவின் […]
பிரபுவின் அக்கா ஒரு மனநல மருத்துவர் என்பது அஜய்க்கு நன்றாக தெரியும். சில முறை சந்தித்தும் இருக்கிறான். மாதங்கவதனாவின் வீட்டை விட்டு வந்தவன், யோசிக்காமல் அவர் மருத்துவமனைக்கு சென்று அப்பாய்ன்ட்மென்ட் வாங்கிக்கொண்டு காத்திருக்க, அதிக நேரம் கடத்தாமல் உள்ளே அனுப்பப்பட்டான். இயல்பாய் பேசக்கூட வரவில்லை அவனுக்கு. சாதாரண நலவிசாரிப்பு கூட இல்லாமல், நேரிடையாய் விஷயத்தை சொன்னான். முழுவதுமாய் கேட்டு முடித்தவர், “சில பெண்கள் இப்படிதான் அஜய்… வெளில தைரியமானவங்க போல தெரிவாங்க! ஆனா, சின்ன சின்ன விஷயத்துக்கு […]
EPISODE 11 நாட்கள் ரதம் போல நகர ஆரம்பித்தது. அஜையிடம் இருந்த துள்ளல் படிப்படியாக குறைந்து, தேய்ந்து இப்போதெல்லாம் இல்லாமலே போய்விட்டது எனலாம்! எந்நேரமும் முகத்தில் ஒரு சோகம்… அவனை புதியதாய் பார்ப்பவர்களுக்கு ஒன்றும் தெரியாவிடினும், அவனை பார்த்து பழகியவர்களுக்கு ஒரே பார்வையில் அவன் வித்தியாசம் தெரியும்படி இருந்தது. இரண்டு மூன்று வயது கூடியதை போல் கூட இருந்தான். மனம் விட்டு பேசுவதும் இல்லை! வாய்விட்டு அழுவதும் இல்லை! எல்லாம் உள்ளுக்குள்ளே மட்டுமே! மாதங்கவதனாவும் அஜய்யும் பேசிக்கொள்வதில்லை […]
EPISODE 1O கண்ணாடி முன்னே நின்று தன் தோற்றத்தை தானே ரசித்துக்கொண்டிருந்தாள் மாதங்கவதனா. காட்டன் சுடிதார், கழுத்து வரை இருக்கும் முடியை ஒருபக்கமாய் ஜடையிட்டு, நெற்றியில் சின்னதாய் உடையின் நிறத்தையொத்த கல் பொட்டு! இவ்வளவு தான் அலங்காரம்! ஆனால், தான் மிக அழகாக இருப்பதாய் உணர்ந்தாள் அவள். ‘ஹாரன்’ சப்தம் கேட்டது. அஜய் தான் வந்திருக்கிறான் என்பது புரிய, லேசாக வெட்கம் கூட வரப்பார்த்தது. […]
“வாவ்! சூப்பரா சொல்லிட்டீங்க! கேட்குறவங்களுக்கு ‘சுயநலமா’ தெரியலாம்! ஆனா, உங்க வரையில உங்க பேச்சு சரிதான்!!!” என்றான் அஜய். மாது ஒன்றும் சொல்லவில்லை! “அம்மா அப்படி பேசுறாங்கன்னு வருத்தமோ?” என்றவன், “அம்மா’ன்னா அப்படிதான்! அவங்க வகைல எது நல்லதுன்னு படுதோ அதைதான் சொல்லுவாங்க! அவங்க பார்த்த வரைக்கும் புருஷன் இல்லாத பொண்ணுன்னா, ரொம்ப கஷ்டப்படுவாங்களா இருக்கும்! நம்ம பொண்ணுக்கு அப்படி கஷ்டம் வர வேண்டாம்ன்னு நினைச்சு பேசிருப்பாங்க!” என்றான் பெரியவர்கள் பக்கமும் […]
EPISODE 9 வெளிநாடு சென்று படப்பிடிப்பு நடத்தும் அளவு ஒரு பெரிய விளம்பர ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது. அதன் வேலைகளில் அஜய் மும்மரமாய் இருக்க, “இந்தா… அம்மா பேசுறாங்க!” என்று அலைபேசியை நீட்டினாள் சுவாதி. நிமிர்ந்து அவளை முறைத்தான். அதையெல்லாம் கணக்கில் கொள்ளாதவள், “பேசு, லைன்ல இருக்காங்க!” என்று சொல்ல, கைபேசியை வாங்கியவன் பட்டென அழைப்பை துண்டித்து தூக்கி போட்டான். அது சோபாவில் சென்று படுத்துக்கொண்டது. “அம்மா பேசனும்ன்னு சொன்னாங்க அஜய்!” சுவாதி சொல்ல, “என்ன ப்ளான் பண்றீங்க […]
EPISODE 8 அன்றைய சந்திப்புக்கு பிறகு அஜையிடம் மனதால் தான் இன்னும் நெருக்கமானதை போல உணர்ந்தாள் மாதங்கவதனா. உண்மையில் அவனை அவளுக்கு மிகவும் பிடித்துப்போனது. அந்த பிடித்தம் எந்த அளவுக்கு என்பதை மட்டும் அவள் யோசிக்க தயாராயில்லை. அஜய் அவளிடம் ஓரடி நெருங்கி வந்தாலும் அவள் இரண்டடி விலக நினைத்திருக்கலாம், வாய்ப்புண்டு! ஆனால், கள்ளன் தள்ளி நின்றே அவள் மனதில் இடம் பிடித்துவிட்டான். எப்போதும் போன்றதொரு நடைபாதை சந்திப்பு! ரயிலில் […]
EPISODE 7 அஜய்யின் பிளாட்பார காத்திருப்பு அடுத்து வந்த நாட்களில் ஜரூராய் நடந்தது. இருவருக்கும் பொதுவாய் பேசிக்கொள்ள நிறைய விஷயங்கள் இருந்தன. அஜய் மாதங்கவதனாவின் எதிரே இருக்கும் வரை அவள் அதரங்கள் ஓய்வின்றி சிரித்தவண்ணமே இருக்கும். அவள் சிரிப்பதை பார்க்க வேண்டுமென்றே நிறைய மெனக்கேட்டான். அவளுக்கும் அவனோடு கழிக்கும் அந்த முப்பது நிமிடங்கள் வெகு விருப்பமாய் மாறியிருந்தது. அவனிடம் பேச எந்த தயக்கமும் இருப்பதில்லை அவளுக்கு. பார்த்து ஒரு மாதமே ஆகிறது […]
EPISODE 6 ‘அவள் பறந்து போனாளே… என்னை மறந்து போனாளே… நான் கைகள் நீட்டி தீண்டிடும் போது, மறைந்து போனாளே…!’ பாடலை ‘பட்டென’ நிறுத்தினான் குரு. கண்மூடி சாய்வு நாற்காலியில் அமர்ந்து பாடலில் லயித்திருந்த அஜய், கண்திறந்து பார்க்க, எதிரே குரு முறைத்துக்கொண்டு நிற்ப்பது தெரிந்ததும், மீண்டும் பழைய நிலைக்கே போனான். “அஜய்… உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க நீ? பத்து பதினைஞ்சு வருஷ லவ்வே அசால்ட்டா புட்டுக்கிட்டு போகுது! […]