வரம் வாங்கி வந்தவள் நான் சிறப்பு அத்தியாயம் – 26 பத்து வருடங்கள் கழித்து மாசி களரி திருவிழா… ஊரே அந்த குலதெய்வ கோவிலில்தான் சுந்தரும் தன் குடும்பத்தோடும் தங்கைகள் குடும்பத்தோடும் வந்திருக்க வரிசையாக ஆடுகள் பலி கொடுப்பதற்காக கட்டப்பட்டிருந்தது.. சுந்தரின் மகனும் மகளும் அவர்கள் அத்தைகளின் பிள்ளைகளோடு நிற்க, தர்ஷினி பயந்து போய் கருப்பனை பார்த்தபடி நின்றிருந்தாள்.. தன் வாழ்க்கையில் மலை போல் வந்த துயரை எல்லாம் பனி போல விரட்டி தன்னை உயிருக்கு […]
சுந்தர் மனைவி பேரிலேயே சுகர் பேக்ட்ரியும் வாங்கியிருக்க இப்போது அவன் தொட்டதெல்லாம் பொன்தான்..மனைவி அங்கும் இங்கும் அலைவதை பார்த்தவன் “லட்டுமா ஒரு இடத்துல உட்காருடி.. நைட்ல கால் வீக்கம் வந்திரும்..” அவள் கையில் ஜூஸை திணிக்க .. “சின்ன அண்ணி வராதது நல்லாவே இல்ல மாமா..” நாயகிக்கு இது ஒன்பதாவது மாதம் தர்ஷினிக்கு ஏழு.. இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க வேண்டாம் என நினைத்து நாயகி குடும்பத்தினர் மட்டும் வந்திருக்க அடுத்த வாரம் தர்ஷினியை அவள் சின்ன மாமா […]
வரம் வாங்கி வந்தவள் நான் இறுதி அத்தியாயம் – 25 சுந்தரும் தர்ஷினியும் வண்டியில் ஹாஸ்பிட்டலுக்கு செல்ல நீண்ட நாளுக்கு பிறகு இவர்கள் மட்டும் தனியாய் இந்த பயணம்.. சற்று தள்ளி அமர்ந்திருந்த மனைவியின் கையை பிடித்து முன்னால் இழுத்தவன், “ஏய் கிட்ட வாடி பச்சைமொளகா..??” அவனை இன்னும் நெருங்கியவள் அவன் வயிற்றில் தன் கையை பதித்து “என்ன மாமா இவ்ளோ ஸ்லோவா போறிங்க.. இந்த ஸ்பீட்ல போனா நாம மதியம்தானே அங்க போக முடியும்..” […]
அவர் மகனோ தன் தாயை அதட்டி “ஆத்தா..அழாதிக சும்மாவே தர்ஷூ அழுதுட்டு இருக்கு நீங்க வேற ஏன் அவள இன்னும் அழ வைக்கிறிக ..இப்பவாச்சும் அந்த கொலைகாரன் யாருன்னு தெரிஞ்சுச்சே.. கடவுள் ஒருத்தன் இருக்கிறதாலதான் தங்கம் மாதிரி நம்ம சுந்தர் தர்ஷூக்கு மாப்பிள்ளையா அமைஞ்சாரு.. இனி எல்லாம் நல்லதா நடக்கும்.. அவ குடும்பம் அவளுக்கு துணையா நிக்கும்.. விடுங்கத்தா சும்மாவே உங்களுக்கு வீசிங் இருக்கு சாயங்காலத்தில இருந்துதான் அழுதுட்டு இருக்கிக.. அப்புறம் உங்களுக்கு ஏதாச்சும் வந்திரும்..பாவம் புள்ள […]
வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் – 24 கத்தி எடுக்க போன ஜெய் அந்த இடம் வெற்றிடமாக இருக்க மறுபையில் தேடினான்.. “என்னடா கத்திய தேடுறியா முதல்ல உன்னோட சண்டை போட்டேனே எதுக்குன்னு நினைச்ச..? அதெல்லாம் அப்பவே எடுத்து தூர வீசிட்டேன்..” அவன் மேல பாய வர அதற்குள் அவன் தலையில் ஒரு பெரிய அடி பின்னால் கந்தப்பன் நின்றிருந்தான்.. “என்னடா தம்பி யார் இவன்..?” திமிறியவனை பின்னால் வளைத்தபடி நிற்க , சண்டைக்கு […]
இந்த விசயம் வரதராஜன் குடும்பத்திற்கு தெரிந்து ஒரே பிரச்சனை.. காதலை விட்டுவிட்டு தாங்கள் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்துகொள்ள சொல்லி அவர்கள் மிரட்ட.. இவரோ தன் காதலில் உறுதியாக நின்று வேறு பெண்ணை திருமணம் செய்ய சொன்னால் செத்துப் போவதாக சொல்லி விசத்தையும் அருந்திவிட்டார்.. கடைசியில் வெகு போராட்டத்திற்கு பிறகுதான் அவரை காப்பாற்றினார்கள்.. மீண்டும் அவர் தனது உண்ணாவிரத போராட்டத்தை துவங்க ஒருவழியாக தங்களைவிட உயர்ந்த ஜாதி பெண்ணான லெட்சுமியை திருமணம் செய்ய சம்மதம் சொல்லி […]
வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் – 23 பாலாவும் வேலுவும் காயங்கள் எல்லாம் ஆறி நடக்க ஆரம்பித்ததில் இருந்து மீண்டும் மது, மாது என இருக்க கந்தப்பன் தோப்புவீட்டிற்கு சென்றதில் வேலுவுக்கு அவ்வளவு ஆத்திரம்.. தங்களின் ராஜ்ஜியமாக இருந்த வீட்டில் அவனா.. இருவரும் உல்லாசமாக இருக்க இடமில்லாமல் கந்தப்பன் மேல் கடுப்பில் திரிந்தவர்கள்..அடங்காமல் அன்று மதியமே மூச்சு முட்ட குடித்து தோப்புவீட்டிற்கு செல்ல கந்தப்பன் மில்லுக்கு சென்றிருந்தான்.. சுப்பையா வீட்டிலிருக்க கந்தப்பன் மனைவி […]
நமக்கிருக்கிற டென்ஷன்ல நான் அவள பார்க்கலையா.. ஆனா அவ பண்ணினதும் தப்புதானே.. எது உன் தங்கச்சி புருசன காப்பாத்த ஹாஸ்பிட்டலுக்கு பணம் கொடுத்ததா..!! போடா எருமை நேத்து பிறந்தவ முதக்கொண்டு உனக்கு அட்வைஸ் பண்றா.. அந்த அளவுக்கு இருக்கு நீ உன் பொண்டாட்டிய பார்த்துக்கற லெட்சனம்.. வேகவேகமாக அவளுக்கு நூடுல்ஸ் கிண்டியவன் பாலை காய்ச்சி அவர்கள் அறைக்கு கொண்டுச் செல்ல பார்த்திருந்த தங்கைகள் இருவருக்கும் சிரிப்பு தாங்கவில்லை.. “ஏய் என்னட்டி சிரிக்கிறிங்க.. என் பொண்டாட்டிக்கு […]
வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் – 22 இந்த முறை அந்த உருவம் பஞ்சாப் சிங் போல வேடமிட்டு தலையில் தலைப்பாகை, நீண்ட தாடி, முகத்தை பாதி மறைத்தபடி பெரிய கண்ணாடி முகத்தில் மூக்கும், சிறு நெற்றியும் மட்டும்தான் தெரிய வரப்போகும் வாய்ப்புக்காக காத்திருந்தது.. அங்கு வந்த அந்த கேன்டீன் ஊழியருக்கு கண்ணைக்காட்டி 2000 ரூபாய் தாள் ஒன்றை கையில் திணிக்க மற்றவர்கள் கேட்டதை எல்லாம் முதலில் கொடுத்தவன் அவர்கள் சாப்பிட ஆரம்பிக்கவும் கடைசியில்தான் […]
கந்தப்பன் அவன் மில்லுக்கு வந்தது சுந்தருக்கு நல்ல உதவியாகத்தான் இருந்தது.. லோடு ஏற்றும் வேலையை அவன் கவனித்துக் கொள்ள கணக்கு வழக்குக்கள் மட்டும்தான் அதை இவன் நேரம் கிடைக்கும்போது அவ்வப்போது பார்த்துக் கொள்கிறான்.. தான் இப்போது இருக்கும் வீடு தர்ஷினிக்கு அவ்வளவு பாதுகாப்பில்லை உணர்ந்தவன் வீட்டு வேலைகளை வேகமாக முடுக்கிவிட்டிருந்தான்.. வீட்டிலிருக்க சற்று அதிகநேரம் கிடைத்திருக்க கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாகவே இருந்தது.. அன்று காலை […]