Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vinmeengalin Sathiraattam

விண்மீன்களின் சதிராட்டம் – 40 – எபிலாக்

எபிலாக் ராகவன் மாலினி வீடு களை கட்டியிருந்தது. பிள்ளைகளின் விளையாட்டுச் சத்தம் ஓங்கியிருந்தது. அன்று வேதாவிற்கு ஏழாம் மாதம் பூச்சூட்டு விழா. போன முறை, விக்ரம் இல்லாததால் நேரே வளைகாப்பு மட்டும் போதும் என்று இதனைத் தவிர்த்திருந்தாள். அதனால் மாலினி, மாஞ்சரியின் ஏற்பாட்டில் வீட்டளவில் இப்போது செய்திருந்தார்கள்.  அரையாண்டு பரீட்சை விடுமுறை என்பதால், காயத்ரியும் பிள்ளைகளோடு ஒரு வாரம் வந்திருந்தாள். ஒரு வாராய் ரகுவின் மனதைக் கரைத்து வேலையை விட்டிருந்தாள். ஆனால் மாமியாருக்கு ரெஸ்ட் கொடுத்து, பொறுப்பாய் […]


விண்மீன்களின் சதிராட்டம் – 39

அத்தியாயம் – 39 வீட்டின் அமைதியை கலைத்தது கார் வந்து நிற்கும் சப்தம். ஜோசியரைப் பார்க்கச் சென்ற கோமதி, பர்வதம், சௌந்தர்ராஜனுடன், அழைத்துச் சென்ற ராஜேன்திரன் என நால்வரும் திரும்ப வந்தனர். ராகவன் சென்று அவர்களை வரவேற்க, விக்ரம் அமைதியாக நின்றிருந்தான். மாலினி அனைவருக்கும் பருக நீர் தர, அவர்கள் அருந்தும் வரை யாரும் எதுவும் பேசவில்லை. அவர்கள் முகம் பார்க்கையிலேயே ஏதோ சரியில்லை என்பது தெரிந்தது. ராகவனே “என்னாச்சு, என்ன சொன்னார் ஜோசியர் ?”, என்று […]


விண்மீன்களின் சதிராட்டம் – 38

அத்தியாயம் – 38 “உன்ன யார் கூடவும் ஷேர் பண்ணவேண்டாம்.”,  என்று ராஜன் கூரியதைக் கேட்டு வாய்விட்டு சிரித்தவள் ,“ சரி, நம்ம டைம் இது. என்ன பண்ணலாம் சொல்லுங்க.” “சாப்பிட்டு படுக்கலாம். நாள் பூரா அலச்சல்.” “கேடி, தூங்க விடுவீங்க ?”, இரண்டு நாட்களில் அவனை தெரிந்திருந்தாள். “ படுக்கலாம்னுதான் சொன்னேன். தூங்கற பேச்சு எங்க வந்தது. இன்னைக்கு ஸ்பெஷல் ஷோ இருக்கு. கிளம்பு.” என்று அவசரப்படுத்தினான். ஹோட்டலில்தான் ஏதோ ஸ்பெஷல் ஷோ, என்று நினைத்த […]


விண்மீன்களின் சதிராட்டம் – 37

அத்தியாயம் – 37 இப்போதெல்லாம் மஞ்சரியுடன் பேசுவது கூட குறைந்துவிட்டது. அவன் அலுவல்களை முடித்து வருவதே நேரமாகிவிடும். காலையில் எழுந்ததும் சற்று நேரம் பேசுவான்.அதன் பின் இருவருக்குமே வேலைகள் இழுத்துக்கொண்டன. மஞ்சரி வேலையை ராஜினாமா செய்திருந்தாள். ராஜேந்திரனின் அன்றாட அலுவலக மேர்பார்வையை அவள் எடுத்துக்கொண்டு, அவன் தொழிலை மேலும் முன்னெடுத்துச் செல்ல நேரம் அளிப்பதாய் ஏற்பாடு. கல்யாண மண்டபத்திற்கு இரு குடும்பத்தினரும் பின் மதியம் வந்து சேர்ந்தாலும், மஞ்சரி, சங்கீதாவுடன் பார்லர் சென்றுவிட்டாள். மாலை ஆறு மணி […]


விண்மீன்களின் சதிராட்டம் – 36

அத்தியாயம் – 36 வைர நெக்லஸ் போட வேண்டாம் என்று தடுக்கும் அன்னையை கூர்ந்து ஒரு முறை பார்த்தவன், “உங்களுக்கு புரியலைன்னா, வலிச்சாலும் பரவாயில்லைன்னு புரிய வைக்க வேண்டியதுதான்.” “என்ன புரியலை எனக்கு ?”, என்று கேட்டார் கோமதி. “நீ என்னை திட்டினயே , அதைவிட நிறைய பேச்சு மஞ்சரி இந்த நாலு மாசத்துல அவ அம்மாகிட்ட கேட்டிருக்கா. ‘அதான் அவங்க அம்மா வேண்டாம்னு சொன்னதும் போயிட்டானே,  நீ ஏன் கிடந்து உருகறன்னு’, திட்டிருக்காங்க. என்னை மாதிரி […]


விண்மீன்களின் சதிராட்டம் – 35

அத்தியாயம் – 35 முஹூர்த்த சேலை எடுத்த மறு நாள், ராஜன் காலையில் ஆபிஸில் அன்றைய வேலைகளைப் பிரித்துக் கொடுக்கையில், ஒரு அழகிய கூடையில் பலவிதமான சாக்லேட்டுகள்  வண்ண சரிகை பேப்பர்கள் சுற்றி, அழகாக அடுக்கப்பட்டு அவன் பெயருக்கு டெலிவரி வந்திருந்தது. “ என் இதயத்தை இனிக்கச் செய்தவருக்கு…இனிப்பான பரிசு”, என்று வந்த அட்டை, அவன் இதயத்தைக் கொள்ளை கொண்டது. ஆபிஸ் ஸ்டாப் எல்லோரும் கூடையைப் பார்த்ததும் ஹோவென கத்த… அப்போதுதான் அட்டையப் படித்தவனது முகத்தைப் பார்த்துக் […]


விண்மீன்களின் சதிராட்டம் – 34

அத்தியாயம் – 34 துரித கதியில் கல்யாண வேலைகள் நடக்க ஆரம்பித்தன.  இரவு நேரங்களில் தினமும் அழைத்து பேச ஆரம்பித்திருந்தான் ராஜேந்திரன். ஒன்றும் ரெண்டுமாய் கடந்த நாங்கு மாதங்களில் நடந்தவற்றை அவளிடமிருந்து வாங்கியிருந்தான். அவள் அம்மாவின் குத்தல் பேச்சுகள், பிறந்த நாளில் இவன் பேசுவான் என்று எதிர்பார்த்து ஏமாந்தது, இரவுகளில் போனை வைத்துக்கொண்டு அழுதது, அவள் மீதே வெறுப்பு கொண்டது என்று பொறுமையாய் வெளிக்கொணர்ந்தான். எவ்வளவுதான் இவன் இலகுவாகப் பேசினாலும்,மஞ்சரியிடம் முன்பிருந்த கலகலப்பும் குறும்புத்தனமும் தலைதூக்கவில்லை. வேதாவின் […]


விண்மீன்களின் சதிராட்டம் – 33

அத்தியாயம் – 33 பத்து மணியாக காத்திருந்தவர்கள், நெடு நாள் சென்று ஒன்றாய் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். சௌந்தர்ராஜன் தான் சென்று கைலாசத்தை சந்தித்ததையும், அவர் சம்மதம் சொன்னதையும் கூறினார். தங்களுக்காக பெற்றோர் எடுத்த முயற்சியை நினைத்து, ராஜேந்திரனுக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. இதற்காகத்தானே அவ்வளவு பாடு. இன்னும் ஜோசியரின் தடைக் கல்லைத் தாண்ட வேண்டும். ஆனாலும் நல்லதாய் நடக்கும் என்றே தோன்றியது. பத்து மணிக்கு போன் செய்து அம்மாவிடம் கொடுத்தான். ஜோசியர் மகள் சங்கரி போன் எடுத்ததும் சற்றி […]


விண்மீன்களின் சதிராட்டம் – 32

அத்தியாயம் – 32 சனிக்கிழமை இரவு, விக்ரமும், வேதாவும் பர்வதம்மா, மாலினியிடம் பேசி முடித்து, சிந்துவிடம் போனில் அரட்டை அடித்துக்கொண்டிருந்தார்கள். ராகவன் வந்து அமர்ந்து, “என்ன விக்ரம் இந்த வாரம் அவுடிங் போகலியா எங்கயும் ?”, என்று கேட்க, “இல்லைண்ணா, குட்டிக்கு கொஞ்சம் கோல்ட் பிடிச்சிருக்கு. அதனால எங்கயும் போகலை. எப்படியிருக்கீங்க ?” என்றான் விக்ரம். “நல்லாயிருக்கோம்டா. நானே உன்னை கூப்பிடணும்னு நினைச்சேன். கார் வாங்கலாம்னு இருக்கேன் விக்ரம்.” “சூப்பர்ண்ணா. எப்ப, என்ன கார் ?”, மகிழ்ச்சியாய்க் […]


விண்மீன்களின் சதிராட்டம் – 31

அத்தியாயம் – 31 ஆயிற்று, இன்றோடு ஒரு மாதம் முடியப்போகிறது இருவரும் பார்த்து, பேசி.  இது இப்படியே ஆகிவிடுமோ என்று ஒரு பயம் இப்போதெல்லாம் மஞ்சரியை ஆட்டுவித்தது. அதுவும், இரண்டு நாட்களுக்கு முன் அவள் பிறந்த நாள் அன்று கூட அவனிடமிருந்து ஒரு வகையிலும் வாழ்த்தோ, தகவலோ வராதது, அவளைக் கூறு போட்டது. ஓய்ந்து போய்க்கிடந்த மகளைப் பார்த்து காஞ்சனாவின் அடி வயிறு கனன்றது. “ஏண்டி இப்படி இருக்க ? அதான் நீ வேண்டாம்னு போயிட்டான் இல்லை […]