அவன் தொடுகை குறுகுறுப்பூட்ட “இப்படி கேட்டா என்ன சொல்றதாம்?”, என்று மனதுக்குள் சிணுங்கினாள்.
“பதில் சொல்லு டி, என்னைப் பிடிச்சிருக்கா பிடிக்கலையா?”, என்று கேட்கும் போது அவனது விரல்கள் அவளுடைய வெற்றிடையில் விளையாடியது.
“ஐயோ பிடிச்சிருக்கு போதுமா?”, என்று அவள் சொல்ல அடுத்த நொடி முதல் முறையாக அவளுடைய இதழ்களை சிறை செய்திருந்தான். நீண்ட முடிவிலா முத்தம், இருவரது உணர்வுகளையும் மீட்ட ஆரம்பிக்க அழகான சங்கமம் அங்கே அரங்கேறியது. (expertseoinfo.com)
கல்யாண கனவுகளுடன் படுத்திருந்தாள் ஸ்ருதி. இந்த சந்தோஷத்தை தனக்கு தந்த தன்னவனை எண்ணிக் கொண்டாள். அப்போது அவனே அவளை அழைக்க படபடப்புடன் போனை எடுத்தாள்.
“என்ன டி செய்ற?”, என்று கிறக்கத்துடன் கேட்டான் ராகவன். அவன் குரலில் வழிந்த காதலில் உதடு கடித்து தன்னுடைய உணர்வுகளை அடக்கினாள். இத்தனை நாள் பேசாததை எல்லாம் அவளிடம் பேசினான். தனக்காக அவள் செய்த கிறுக்குத் தனங்களை எல்லாம் அவள் வாயாலே சொல்ல வைத்தான். விடிய விடிய இருவரும் கதை பேசினார்கள்.
அனைவரும் ஆவலுடன் எதிர் பார்த்த ஸ்ருதி ராகவன் திருமணமும் வந்தது. மணமக்கள் இருவருக்கும் அலங்காரம் நடந்து கொண்டிருந்தது. கண்ணாடியில் தெரிந்த தன்னுடைய உருவத்தை வியப்பாக பார்த்தாள் ஸ்ருதி.
அவள் மணமேடைக்கு அழைக்கப் பட தேன்மொழியும் வைஷ்ணவியும் அவளை அழைத்துச் சென்றார்கள். ஸ்ருதியைக் கண்ட ராகவன் “இவ்வளவு அழகும் எனக்கே எனக்கா?”, என்று எண்ணிக் கொண்டான்.
மணமக்களை அருகருகே அமர வைக்க அனைவருமே அவர்களின் ஜோடிப் பொருத்தத்தை வியந்து பார்த்தார்கள். கல்யாணத்துக்கு கல்லூரி நண்பர்கள், ஸ்கூல் நண்பர்கள் அனைவரும் வந்திருந்தார்கள். அனைவரின் ஆசியோடு அவள் சங்கு கழுத்தில் தாலியைக் கட்டி அவளை தன்னுடைய சரி பாதியாக ஏற்றுக் கொண்டான் ராகவன்.
அனைவரும் மணமக்களை வாழ்த்த அந்த வாழ்த்து மழையில் சந்தோஷமாக நனைந்தார்கள்.
அன்று மாலை பெரிய அளவில் வரவேற்பு நடந்து கொண்டிருந்தது. அவன் இது வரை மியூசிக் செய்து கொடுத்த படங்களின் இயக்குனர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், சேகர், காலேஜ் நண்பர்கள். சிதம்பரம், பள்ளித் தோழர்கள் வாசு உள்ளிட்ட அனைவரும் வந்திருந்தார்கள்.
ஒரு வழியாக பங்ஷன் முடிந்ததும் ராகவன் வீட்டுக்குச் சென்றாள் ஸ்ருதி. அவர்களுக்கு அன்று முதலிரவுக்கு ஏற்பாடு செய்ய பட்டிருந்தது. அதற்காக தேன்மொழி அவளை அலங்கரித்துக் கொண்டிருந்தாள்.
கண்ணாடியில் தெரிந்த தன்னுடைய உருவத்தை விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் ஸ்ருதி. கழுத்தில் அவன் காட்டிய தாலி, நெற்றியில் மின்னும் குங்குமம் அனைத்தும் அவள் அழகை மேலும் கூட்டிக் காட்டியது.
“என்ன டி உன்னையே ரசிக்கிற?”, என்று கேட்டாள் தேன்மொழி.
“இதெல்லாம் கனவா நினைவான்னு சந்தேகமா இருக்கு டி
“ரூமுக்குள்ள ஒருத்தன் இருக்கான் பாரு. அவன் கிட்டயே கேளு, இது கனவா நினைவான்னு”, என்று சொல்லி தோழியை அண்ணன் அறைக்கு அனுப்பி வைத்தாள்.
தயக்கத்துடன் அவள் உள்ளே செல்ல தேன்மொழி தன்னுடைய அறைக்குச் சென்றாள். அவள் வந்ததும் அவளை இழுத்து அணைத்த நவீன் “ஏன் டி லேட்?”, என்று கேட்டான்.
அவன் தொடுகையில் கரைந்தவள் “ஸ்ருதியை அனுப்பிட்டு வந்தேன் நவீன்”, என்றாள்.
“தேனு, நம்ம பாரின் போகலாமா?”, என்று கேட்டவன் அவளையே கூர்மையாக பார்த்தான். அவன் பார்வையை உணராமல் “எப்ப போறோம்? எந்த நாட்டுக்கு போறோம்? என்னைக்குன்னு சொல்லுங்க? திரும்பி இங்க வருவோமா? இல்லை அங்கயே செட்டில் ஆகிருவோமா? அம்மா அப்பா கிட்ட சொல்லியாச்சா?”, என்று ஆரவாரத்துடன் கேட்க அவனோ அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் தன்னையே பார்க்கவும் தான் தன்னுடைய தவறு புரிந்தது. “அது வந்து…”, என்று அவள் தயங்க “பாரின் போகவே பிடிக்காதுன்னு சொன்ன?”, என்று கேட்டான் நவீன்.
“அது வந்து”, என்று அவள் திணற அவளைப் புரிந்து கொண்டவன் அவளை வெகு நேரம் திணற விடாமல் அவளை இழுத்து அணைத்த படி முத்தமிட்டான். அதற்கு பின்னர் அவனும் அந்த கேள்வியைக் கேட்க வில்லை. அவளும் அதற்கு பதில் சொல்ல வில்லை..
இங்கே தடுமாற்றத்துடன் உள்ள வந்த ஸ்ருதியை விழி எடுக்காமல் பார்த்தான் ராகவன். அவள் அவன் முகம் பார்க்கவே தயங்க “ஸ்ருதி இங்க வா”, என்று அழைத்தான்.
அவன் அருகே சென்று தயக்கத்துடன் நிற்க அவள் கையைப் பற்றி தன்னருகே அமர வைத்தவன் அவள் கையை அதற்கு பிறகு விடவே இல்லை. அவளுடைய கையை எடுத்து தன்னுடைய முகத்தருகே கொண்டு சென்றவன் அவளுடைய விரலில் இதழ் பதிக்க கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
“என்ன டி அமைதியா இருக்க?”
“ஒண்ணும் இல்லை”
“இல்லை, ஏதோ இருக்கே?”
“எனக்கு நடக்குறது எல்லாம் கனவு மாதிரியே இருக்குங்க. உங்களுக்கும் எனக்கும் கல்யாணம் நடக்குமான்னு எத்தனை நாள் ஏங்கிருக்கேன் தெரியுமா? இப்ப உங்க கையால தாலி வாங்கி உங்க ரூம்ல உங்க பக்கத்துல உங்க கையை பிடிச்சிட்டு இருக்குறது அதிசயமா இருக்கு”, என்று தன்னுடைய உண்மையான மனநிலையைச் சொன்னாள்.
அவளுடைய சந்தோஷம் ராகவனுக்கு தெளிவாக புரிந்தது. “சரி இன்னைக்கு எதுக்கு இந்த அலங்காரம்?”, என்று கேட்டு அவளுடைய மனநிலையை மாற்ற முயன்றான்.
அவன் கேள்வி புரியாமல் “இன்னைக்கு… ஏன்? நல்லா இல்லையா?“, என்று ராகம் இழுத்தாள்.
“யார் நல்லா இல்லைன்னு சொன்னா? ஆனா இதை எல்லாம் கழட்ட எவ்வளவு நேரம் ஆகும் தெரியுமா? அப்புறம் எப்படி ஆரம்பிக்கிறது?”, என்று கேட்டவன் அவளை இழுத்து அணைக்க செவ்வானமாக சிவந்து போனாள் ஸ்ருதி.
“ஸ்ருதி… என்னால இன்னும் கொஞ்ச நேரம் கூட வெயிட் பண்ண முடியாது. பிளீஸ் ஹெல்ப் பண்ணு”, என்று அவன் வெட்கத்தை விட்டுக் கெஞ்ச அவனுடைய கண்களில் வழிந்த தாபம் அவன் சொல்ல படி கேட்க வேண்டும் என்று அவளை முடிவு எடுக்க வைத்தது.
அவள் உதவியால் அவளுடைய நகைகளை கழட்டியவன் அவளை இறுக்கி அணைக்க அவன் கரங்களுக்குள் தஞ்சமானாள். அதற்கு பின்னர் நொடிகள் கூட தாமதிக்காமல் தன்னுடைய தேடலைத் தொடர்ந்தான் ராகவன்.
இத்தனை நாள் இருந்த பொறுமை எல்லாம் கரையுடைக்க அவனால் அவனையே கட்டுப் படுத்த முடியவில்லை.
அவன் வேகத்தில் முதலில் மிரண்டாலும் அவன் தேவை உணர்ந்து அவன் தேடலில் தன்னையும் சந்தோஷமாக இணைத்துக் கொண்டாள் ஸ்ருதி.
இருளில் ஆரம்பித்த அவர்களின் தேடல் காலையில் விடிந்த பின்னர் தான் முற்று பெற்றது. அனைவரும் எழும் போது இவர்கள் இருவரும் களைத்துப் போய் உறங்க ஆரம்பித்தனர்.
அவன் மீதான காதலை தன்னுடைய இதயத்திற்குள் பூட்டி வத்திருந்த ஸ்ருதி அது திருப்பிக் கிடைத்த சந்தோசத்தில் நிம்மதியாக உறங்கினாள்.
காலையில் முதலில் கண் விழித்தது ராகவன் தான். தன்னருகே படுத்திருந்த காதல் மனைவியை திரும்பிப் பார்த்தான். கலைந்த தோற்றத்திலும் அவளிடம் அழகு கொட்டி கிடந்தது. அவளையே ரசித்த வண்ணம் படுத்திருந்தான்.
அப்போது கண் விழித்துப் பார்த்தாள் ஸ்ருதி. அவன் தன்னையே பார்க்கவும் அவள் உதடுகள் சிரிப்பில் விரிந்தது. அதுவும் அவன் கண்களில் பொங்கி வழியும் காதலைக் கண்டவளுக்கு ஏதோ சாதித்த சந்தோஷம் வந்தது.
“குட் மார்னிங் ஸ்ருதி குட்டி”, என்று சொன்னவனின் கரங்கள் அவளை தன்னை நோக்கி இழுக்க அவன் மேல் வந்து விழுந்தாள். அவன் உதடுகள் அவள் முகத்தில் ஊர்வலம் போக அவளது கரங்கள் உயர்ந்து அவன் கழுத்தில் மாலையாக விழுந்தது.
விருப்பத்துடன் அவன் கரங்களுக்குள் சரண் அடைந்தாள். அவளது முகத்தோடு முகம் வைத்து தேய்த்தவனின் காதல் உணர்வுகள் மெதுவாக கிளர்ந்தது.
நேற்று இரவு சூடியிருந்த மல்லிகையின் வாசம் அவள் மேனியில் இன்னும் மிச்சம் இருக்க அவன் மனம் மயங்கியது. அதே போல அவள் முகத்திலும் மயக்கம் தெரிந்தது.
“என்னை மயக்கிட்ட டி”, என்று குற்றம் சுமத்தியவனின் உதடுகள் அவளுடைய மேனியில் ஊர்ந்தது.
“யாரு நான் மயக்குறேனா? நான் தானே உங்க கிட்ட மயங்கி கிடக்குறேன்”
“தெரியும் டி”, என்று சொன்னவனின் குரலில் அவளுடைய மயக்கத்தைப் பற்றி தெரிந்த கர்வம் வெளிப்பட்டது.
“ஆனா என் கிட்ட என்ன இருந்துச்சுன்னு நீ மயங்கின டி? உனக்கு எப்படி என்னை பாத்ததும் பிடிச்சது?”
“உங்களைப் முதல் தடவை பாத்ததும் எனக்குள்ள வந்த தாக்கம் அதுக்கு முன்னாடி யார் மேலயும் உருவானது இல்லை. ஏதோ எனக்கே சொல்ல முடியாத உணர்வு வந்துச்சு. உங்களை அவ்வளவு பிடிச்சது. ஆனா நீங்க தான் என்னைப் பாக்கலை”
“அது சும்மா பாவ்லா. நீ பாத்ததும் மிரண்டுட்டேன் நான். உன்னோட டிரஸ் வரைக்கும் என் மனசுல பதிஞ்சிட்டு தெரியுமா?”, என்று சொல்ல அவளாக அவனை முத்தமிட்டாள்.
அவளின் காதலின் அளவு எப்போதும் போல அவனுக்கு பிரம்மிப்பையே தந்தது. அவளின் அந்த காதல் அவன் மனதை தாலாட்டியது.
தன்னை போராடி கை பிடித்தவளின் வெற்றியில் அவளை வென்று விட்டோம் என்ற கர்வம் தெரிந்தது.
மழை நீருக்காக எப்படி சாதக பறவை காத்திருக்குமோ அது போல காத்திருந்து வெற்றி கண்டாள் ஸ்ருதி. அவர்களின் நேசம் எப்போதும் போல இப்படியே தொடரும் என நம்புவோம்.
அதற்கு அடுத்த வாரத்தில் இரண்டு ஜோடிகளும் தேனிலவு கொண்டாட பாரின் சென்றார்கள். அங்கு சென்று வந்த பின்னர் அனைவரின் வாழ்க்கையும் சாதாரணமாக சென்றது.
அமர் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு போலீஸ் வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தான். ராகவனும் ஸ்ருதியும் ஐ. டி கம்பெனியின் வேலையை விட்டுவிட்டு புதுப் படங்களுக்கு மியூசிக் போட்டார்கள். ராகவன் பாடும் பாடலில் ஸ்ருதியையும் இணைந்து பாட வைத்தான். ராகவன் ஸ்ருதி இருவரும் இணைந்து பாடும் பாடல்களும் சரி அவர்களும் சரி இன்னும் அதிகமாக புகழ் பெற்றார்கள்.
அதற்கு அடுத்த வருடத்தில் ராகவி என்ற மகளைப் பெற்றெடுத்தாள் ஸ்ருதி. அதே போல நவீன் தேன்மொழி தம்பதிக்கு அர்ஜூன் என்ற மகன் பிறந்தான். இதற்கிடையில் ராகவன் பல விருதுகளை வாங்கி விட்டான். மனைவியையும் வாங்க வைத்தான். அவள் தன் மீது வைத்திருந்த உண்மையான காதலுக்கு அவளை பெருமை அடையக் செய்து கைமாறு செய்தான்.
கணவன் மனைவி இருவரும் இணைந்து பாடிய பாடலும் ராகவன் மெட்டிசைக்கும் இதமான இசையும் அனைவரின் வீட்டிலும் ஒலித்துக் கொண்டே தான் இருந்தது.
…..முற்றும்…..
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.