” பண்ணலாம் பண்ணலாம் ஆனா மித்ரா ஓட வாழ்க்கை” என்று கேள்வி எழுப்பினாள் லதா.
“இனி என் கூட தான் “என்று சொல்லியபடி சிரித்தான் மதன்.
“நீ என்ன சொல்ற மதன் எங்களுக்கு ஒன்னும் புரியலையே புரியிற மாதிரி கொஞ்சம் சொல்லு என்றாள் லதா.
“இன்னுமா உங்களுக்கு புரியலை , அட நானும் மித்ராவும் முறைப்படி கல்யாணம் பண்ணிக்க போறோம். தமிழ் பாரம்பரிய முறைப்படி கல்யாணம் இங்க சென்னைல நடக்க போகுது அண்ட் மோர் ஓவர் இனி இங்க தான் இருக்க போறோம் ஒரு வீடு பார்த்துட்டு. எங்களுக்கு ஜாப் இங்க ஏற்பாடு பண்ணியாச்சு. கூடிய சீக்கிரம் இங்கேயே செட்டில் ஆயிடுவோம் ” என்றான் மெய் சிலிர்க்க.
“வாவ் என்ன ஒரு ஆச்சரியம். லிவிங்ல தான் சந்தோஷம்னு சொல்லிட்டு இருந்தீங்க இப்போ திடிர்னு என்ன மாற்றம் ” என்றான் கோபி.
“எல்லாம் பங்கஜம் அம்மாவோட முயற்சி தான். எங்களுக்கு கல்யாணம் ஆகனும்னு ரொம்ப பிடிவாதமா இருந்தாங்க. நாங்க சந்தோஷமா இருந்தாலும் முறைப்படி கல்யாணம் ஆனா தான் சமுதாய அந்தஸ்து கிடைக்கும்னு புரிய வச்சாங்க. சரி இந்த வாழ்க்கையும் எப்படி இருக்கும்னு பார்ப்போம் னு இரண்டு பேரும் முடிவு எடுத்தோம். அதுமட்டுமல்ல பங்கஜம் அம்மாவோட கணவர் போன வாரம் இறந்துட்டாரு சாரி உங்களுக்கு சொல்ல வேணாம்னு தான் அப்போவே சொல்லலை . நாங்க இங்க கல்யாணம் பண்ணிட்டு பங்கஜம் அம்மாவையும் எங்க கூடவே வச்சிக்கலாம்னு இருக்கோம். ” என்றான் மதன்.
ஒருபக்கம் கண்ணீர் வந்தாலும் இன்னொரு பக்கம் பங்கஜம் அம்மாவுக்கு மதன் வழியில் ஆதரவு இருக்கிறது என்று ஆறுதல் அடைந்தாள் லதா.
பேசிவிட்டு கிளம்பும் போது “லதா சிஸ்டர் எனக்கொரு ஆசை” என்று ஆரம்பித்தான்.
“என்ன மதன்” என்றாள் லதா.
“நம்ம எல்லாம் ஒரே இடத்தில் வீடு வாங்கி போனால் எவ்வளவு நல்லாருக்கும் . சிங்கப்பூரில் நம்ம இருந்த அந்த வசந்த காலத்தை இங்க மறுபடியும் வாழ்வோமே.” என்றான் மதன்.
“இதெல்லாம் உடனே எடுக்கிற முடிவு இல்லை மதன் இங்கே நாங்க எல்லார்கிட்டயும் கலந்து பேசி முடிவு எடுக்கனும். இப்போதைக்கு உன் மேரஜ்க்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ” என்றான் கோபி.
“ஓகே கோபி, ஓகே லதா நான் கிளம்புறேன் ” என்று விடைப்பெற்றான்.
நாட்கள் மெல்ல நகர்ந்தது ,மகனுக்கும் மித்ராவுக்கும் திருமணம் நடந்தது. தனது தாயாக நினைத்து பங்கஜத்தை இங்கேயே வைத்துக்கொண்டு மூவரும் ஒரே வீட்டில் இருந்தனர். இவ்வளவு வருடம் சிங்கப்பூரில் இருந்த பங்கஜத்திற்கு மீண்டும் தாய் நாட்டுக்கு வந்த சந்தோஷம். மதன் மித்ராவுக்கும் தாங்கள் வளர்ந்த ஊரிற்கு மீண்டும் வந்த சந்தோஷம். தற்போது இரண்டு நாட்டிலும் இவர்களுக்கு குடியுரிமை.
கோபியும் லதாவும் அந்த திருமணத்திற்கு போய்ட்டு வந்து அதை பற்றியே பேசிக்கொண்டு இருந்தனர்.
“அங்க இருந்தவங்களே இங்க வந்துட்டாங்க ஆனால் நாம என்ன முடிவு எடுக்க போறோம்” என்றாள் லதா.
“அவங்க ஏற்கனவே நல்லா சம்பாதிச்சிட்டு இங்க வந்துருக்காங்க ஆனா நாம அந்த அளவு சம்பாதிக்கலையே, நான் வேணும்னா அங்க போய் ஒரு வருஷமோ இரண்டு வருஷமோ சம்பாதிச்சிட்டு வரன் நீ இங்கே குடும்பத்தோட இரு. ” என்றான் கோபி. சொன்னது மட்டும் அல்ல அதன்படி அவன் சிங்கப்பூர் சென்றுவிட்டான்.சரி அவர் சென்றால் என்ன? குழந்தையை வைத்துக்கொண்டு குடும்பத்துடன் இங்கேயே இருக்கலாமே என்று முடிவெடுத்து இங்கேயே இருந்தாள். நாட்கள் செல்ல செல்ல வாழ்க்கை மிகவும் அழகானதாய் மாறியது . மதன் மித்ரா வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவாள். பங்கஜம் தன் பேரக்குழந்தையை நன்றாக பார்த்துக்கொள்வாள்.
“நான் இருக்கிற வரைக்கும் நீங்க யாரும் கவலை பட வேண்டாம். பிள்ளைங்க இல்லாத எனக்கு கடவுள் இத்தனை பிள்ளைகளை வளர்க்கிற பாக்கியத்தை கொடுத்திருக்காரு”என்று பங்கஜம் சொல்லும் போது அனைவருக்கும் உணர்வு வெளிப்பட்டது கண்ணீரால்.
“என்ன மித்ரா நீயும் சீக்கிரம் நல்ல செய்தி சொல்வ தானே”என்க..
மகனுக்கு லதாவின் நட்பு மிகவும் பிடித்திருந்தது . தோழிக்கு தோழியாக சகோதரிக்கு சகோதரியாக அவள் தெரிந்தாள் அவனுக்கு . கோபி தனித்து விடப்பட்ட நிலையை உணர்ந்தான் சிங்கப்பூரில். ஆறு மாதம் ஒருமுறை தவறாமல் வந்து குடும்பத்தை பார்த்துவிட்டு செல்வான். வீட்டில் இரண்டு மருமகள்கள் இருப்பதால் தற்போது பூங்கொடிக்கு சம்பளம் கொடுத்து வைத்துக்கொள்வது தற்போது தேவையற்றது என்று தோன்றியது.
“நீ இனி இங்க வேலை செய்ய வேண்டாம் உங்க ஊரோடு போய்டு” என்று மீனாட்சி சொன்னதற்கு.
“அம்மா நான் இங்கேயே இருக்கேனே ” என்று ஏக்கத்துடன் கூறினாள்.
“அதெல்லாம் வேணாம் இப்போ எங்களுக்கு குடும்பம் பெருசாயிடுச்சு ஆளுக்கு ஒரு வேலை செய்தா போதும் வேலை முடிஞ்சிடும்” என்றார் மீனாட்சி.
மனசு சங்கடத்துடன் தன் மூட்டை முடிச்சியை எடுத்துக்கொண்டு காட்டூர் வந்தாள். மன ஆறுதலை தேடிக்க வழக்கம் போல் சிவன் கோவிலுக்கு வந்தாள்.
‘உனக்கு கருணையே இல்லையோ ! என் கஷ்டத்தை தெரிஞ்சும் எனக்கு இவ்ளோ சங்கடத்தை தருகிறாயே ‘ என்று கண்களை மூடி பிராத்தனை செய்தாள் . சட்டென்று அவள் நெற்றியில் யாரோ விபூதி இட்டது போல் உணர்ந்தாள்.
‘யாரா இருக்கும் ‘ என்று யோசித்து அங்குமிங்கும் பார்த்தாள். கண்களுக்கு எட்டிய தூரம் வரை யாரும் தெரியவில்லை.
“கடவுளே இது என்ன விளையாட்டு” என்றபடி கோவில் பிரகாரத்தில் சுற்றி முற்றி பார்த்தாள். சரி எல்லாம் பிரம்மையாக இருக்கும் பார்த்துக்கலாம் என்றபடி நடக்க ஆரம்பித்தாள். அவள் பின்னே வந்து யாரோ கண்களை மூடியது போல் உணர்ந்தாள்.
“யார் இது ” என்றபடி கைகளை வருடி பார்த்தாள். ஒரு ஆடவனின் கை என்பதை உணர்ந்தவள்
“யா….யார் நீங்க” என்று குளரியபடி கேட்டாள்.
“என்ன பூங்கொடி பயத்துல பேச்சு தடுமாறுதா” என்றான்.
குரலை வைத்து கண்டு பிடித்து விட்டாள் இது தன்னுடைய என்னவன் பிரகாஷ் என்று.
“நீங்களா ” என்றாள் புன்னகையுடன்.
“ம்ம் தானே தான்”
“எப்படி நீங்க இந்த ஊருக்கு வந்தீங்க “என்றாள்.
“ஆமா இது என்ன அமெரிக்கா வா?”என்றான் கிண்டலாக.
“பிரகாஷ் என்ன சொல்றீங்க? எனக்காக தானே நீங்க இங்க வந்தீங்க ” என்றாள் ஆர்வமாக.
“ஹாஹா ஆமா உனக்காக தான் வந்தேன். இன்னொரு விஷயம் தெரியுமா நான் இங்க தான் க்ளீனிக் ஆரம்பிச்சிருக்கேன் இனி இங்க தான் இருக்க போறேன்” என்றான் அவளை அணைத்தப்படி…
அவளால் அந்த இன்ப அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை.
“என்னங்க நிஜமாவா சொல்றீங்க”
“ஆமா…”
அவன் சொன்னது போல் அவன் அவளுக்காக அங்கேயே இருக்க துவங்கினான். சில மாதங்களுக்கு பிறகு திருமண பத்திரிக்கையுடன் தன் பெரியம்மா வீட்டிற்கு சென்றவன்.
“பெரியம்மா இனி உங்க வீடு மட்டுமல்ல யார் வீட்டுக்கும் வேலைக்கு வர மாட்டா பூங்கொடி ஏன்னா இனி அவன் என் வீட்டு மகாராணி. இந்தாங்க இந்த பத்திரிகை பிரிச்சு பாருங்க ” என்று நீட்டினான். எல்லோருக்கும் அதிர்ச்சி தாங்க இயலாமல் திகைத்து நின்றனர்.
திருமணத்தன்று அனைவரும் வந்திருந்தனர். மணமக்களை வாழ்த்தினார். திருமணத்தில் கோபி லதாவை கிள்ளியபடி…
“ஆளு பல பலன்னு ஆயிட்ட டி நீ” என்றான் அவ்ளோ வெட்கத்தில் தலை குனிந்தாள்.
அருகில் இருந்த கார்த்திக் கனகாவிடம் “என்ன கனகா அடுத்து இன்னொரு பேபி ஷவர் பங்க்ஷன் வெயிட்டிங்கா “என்க..
“யாருக்கு” என்று புரியாமல் பார்த்தாள்.
“செகண்ட் பேபி நமக்கு” என்று கண்ணடித்தான்.
இப்படி கனவாக இருந்த ஒவ்வொருவரின் காதலும் வாழ்ந்தது. தான் இப்படி தான் வாழவேண்டும் என்ற காதல் கனவு அனைவர் மனதிலும் இருக்கும். அது என்று நிறைவேறுகிறதோ அன்று தான் அவர்கள் வாழ்க்கை வசந்தகாலமாய் மாறுகிறது.
‘காதல் என்பது கனவு அல்லவா…
ஆம்
லதா – கோபி
கனகா – கார்த்திக்
மதன்- மித்ரா
பூங்கொடி – பிரகாஷ்.
அனைவரின் காதலும் வெற்றியே.
சுபம்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.