அத்தியாயம் -6
‘ஐயோ இவ வேற கேள்வி கேட்டுட்டு தூங்கிட்டாளே கிராதகி,இப்ப நான் என்ன பண்ணுவேன் ‘ என்று யோசித்தவன்,சரி கொஞ்ச நேரம் டிவியை பார்ப்போம் என்று வால்யூம் கம்மியாக வைத்து நியூஸ் சேனலை பார்த்துக்கொண்டு இருந்தான்.
“வணக்கம். முக்கியச் செய்திகள் கோவாவில் தங்கியிருந்த இளம்பெண் ரித்விகா, மர்மமான முறையில் மரணம் அடைந்திருக்கிறார், இதன் தொடர்பாக விசாரணை நடந்துக்கொண்டு இருக்கிறது. போனவாரம் இவருடன் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது” என்று செய்தியை கேட்டவுடன் கோபியிற்கு தூக்கி வாரி போட்டது.
‘ரித்விகா….ரித்வி.. இவ இறந்துட்டாளா?எப்படி? என் கூட ரூம்ல கொஞ்ச நேரம் தானே இருந்தா!லதா குளிச்சிட்டு இருந்த அந்த முக்கால் மணி நேரம் தான் நான் ரித்விகா கூட இருந்தேன். அதுக்கப்புறம் நான் அவக்கூட தங்கவே இல்லையே, இது என்ன புது பிரச்சனை ‘ என்று மண்டையை பிய்த்துக்கொண்டு யோசித்தான்.
கோபியின் நண்பனிடமிருந்து போன் வந்தது.
“மச்சி நியூஸ் பார்த்தியா?, அந்த ரித்விகா செத்துட்டாளாமே? டேய் போனவாட்டி ப்ரண்ட்ஸ் கூட சேர்ந்து கோவா போனப்பவே அந்த ரித்விகா கூட நீ க்ளோஸா பழகிறதை நான் வார்ன் பண்ணேன் ஆனால் நீ கேட்கலை. ஏன் மச்சான் நீ ரித்விகாவை பாக்குறதுக்காக தானே கோவா ஹனிமூன் ப்ளான் பண்ண? சரியான கேடி டா நீ.” என்றான் நண்பன்.
“டேய் எனக்கே ஒன்னும் புரியலை டா. நான் ரித்விகா கூட ஜஸ்ட் முக்கால் மணி நேரம் ரூம்ல இருந்தேன். எங்களுக்குள்ள அப்படி இப்படி நடந்துச்சு. அதுகப்றம் நான் வெளியே வந்துட்டேன். ரித்விகா காக நான் கோவா போகலை டா, நான் கோவா லதா கூட ஹனிமூன் ப்ளான் பண்ணதை தெரிஞ்சு ரித்விகா தான் அங்க வந்தா. எனக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு தெரிஞ்சும் என்ன மீட் பண்ண அவ தான் டா துடியா துடிச்சா .போனவாட்டி கோவா போனப்பவே என்னை விட்டு போய்ட்டிங்க, இந்த வாட்டி நான் மிஸ் பண்ண மாட்டேன் வரேன்னு அவ தான்டா வந்தா.
” அவளோட ரூம் கதவை நான் தான் திறந்துவிட்டேன். இதான் வாஸ்கோடகாமா வா நல்லாருக்கனு என்கிட்ட சொன்னா நானும் சிரிச்சிட்டே கதவை திறந்துவிட்டு அதுகப்றம் லதா கூட வந்துட்டேன். லதா குளிக்க போனப்ப தான் மறுபடியும் இவளை பார்க்க வந்தேன். அதுகப்றம் நான் அவளை மீட் பண்ணலை…”என்றான் கோபி.
“டேய் கோபி அப்படினா அவளை வேற யாரோ கொன்னுருக்காங்க நினைக்கிறேன். ஒரு வேளை நீ கிளம்பி வந்ததுக்கப்றம் வேற யாரோ அவக்கூட தங்கியிருக்காங்க போலருக்கு. அவன் யாரு ? எதுக்கு இவளை கொல்லனும்” என்று நண்பன் கேட்கும் கேள்விகள் கோபியின் காதுகளுக்கு எட்டினாலும் பதில் தெரியவில்லை.
“மச்சி ஒருவேளை எனக்கு தெரியாம ரித்விகா வேற யாரையோ காதலிச்சிருக்கலாம்ல” என்று யூகம் வந்தது கோபிக்கு.
“ஆமாடா இருக்கலாம். அவனுக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சிருக்கும் ரித்விகா உன்கூட நெருக்கமா பழகுறது,அதனால் ரித்விகாவை கொன்னுருக்கலாம்.” என்றான் நண்பன்.
“இதை நான் இப்படியே விட்டுடுறேன் அதான் நல்லது. இல்லைனா பழி என் மேல் வந்திடும். என்னதான் நடக்குதுன்னு பார்ப்போம். எப்படியோ நானும் சிங்கப்பூர் போய்டுவேன். இந்த விஷயத்தில் என் தப்பு என்ன இருக்கு? ” என்று கோபி சொன்னதும் நண்பனும் அப்படியே ஆகட்டும் என்றபடி போனை வைத்தான்.
அச்சச்சோ சிங்கப்பூர் போறதை சொல்லலாம்னு பார்த்தா இது வேற புது ட்விஸ்டா இருக்கே இதை எப்படி நான் அவக்கிட்ட சொல்லப்போறேன் லதாவுக்கு தெரிஞ்சா சாமி ஆடிடுவா என்று பயந்துக்கொண்டே அந்த இரவை கழித்தான்.
வாசலில் கோலம் போட்டுக்கொண்டு இருந்த லதா.
“கார்த்திக் உங்க அண்ணன் இன்னும் எழுந்திருக்கலை கொஞ்சம் எழுப்பேன்” என்றதும்.
“அண்ணே அண்ணே” என்று எழுப்பும் போது கோபிக்கு காய்ச்சல் இருப்பதை உணர்ந்த கார்த்திக்..
“அண்ணி அண்ணனுக்கு காய்ச்சல் அடிக்குது கொஞ்சம் வாங்க” என்று குரல் தந்ததும். ஓடிச்சென்று பார்த்தாள். தூக்கத்தில் இருந்தவரை எழுப்பாமல் அப்படியே முதல் உதவி செய்தாள். அருகில் அமர்ந்தபடி ஈரத்துணியை பிழிந்து பிழிந்து நெற்றியில் வைத்தாள். காய்ச்சல் சுமாராக ஆனது சற்று நேரத்தில்.
உறக்கத்திலிருந்து எழுந்த கோபி “என்ன லதா பதறி போய் உக்காந்துருக்க ” என்று கேட்டதற்கு.
“உங்களுக்கு காய்ச்சல் அடிச்சதுங்க இப்பதான் சுமாரா இருக்கு ” என்றாள் லதா.
‘நேத்து நான் நியூஸ்ல பார்த்த சம்பவத்துக்கு காய்ச்சல் வராமல் இருந்தால் தான் அதிசயம் ‘ என்று நினைத்துக்கொண்டு குளியலறை சென்றான்.
‘இவர் ஏன் இப்படி இருக்காரு , நேத்து சாதாரணமா ஒரு கேள்வி கேட்டதுக்கு இப்படி பயந்துபோய் இருக்காரு. சரி சரி இவர்கிட்ட எதுவும் கேட்டுக்க வேண்டாம்’ என்று தன் வேலையை கவனிக்க சென்றாள். ஆபிஸில் நான்கு நாட்கள் விடுப்பு கேட்டு இந்த பிரச்சனை எந்த நிலவரத்தை தாண்டியுள்ளது என்பதை தெரிந்துக்கொள்ள நண்பனுடன் கோவா சென்றான் ப்ளைட்டில்.
“மச்சி , இந்த பிரச்சனையை இப்படியே விட்டுடுறேன்னு தானே சொன்ன இப்ப ஏன்டா இப்படி பண்ற ? இப்போ கோவா போய் நடந்ததை கிளர போறியா”என்றான் நண்பன்.
“இல்லை டா, இந்த பிரச்சனை என் மண்டையை போட்டு கொடைஞ்சிட்டே இருக்கும். பேசாமல் அங்க போய் நடந்ததை எல்லாம் போலிஸ் கிட்ட சொல்லி இதுல நான் எந்த விதத்திலும் சம்மதம் படலைன்னு சொல்லனும்,இல்லைனா என் வாழ்க்கைக்கு பிரச்சனை ஆகிடும்” என்றான் கோபி.
“இப்படியெல்லாம் பிரச்சனை ஆகும்னு முன்னாடியே யோசிச்சு இருக்கணும் ரித்விகா கூட பழகாத பழகாதன்னு நான் ரொம்ப நாளா சொல்லிட்டு இருக்கேன் ஆனா நீ எங்க கேட்ட நீ நினைக்கிற மாதிரி இல்ல கோபி வாழ்க்கை. அல்ப சுகத்துக்கு ஆசைப்பட்டு கடைசில வாழ்க்கையே நரகமாக்கி கிட்ட. ” என்று வருத்தமாக நண்பன் கூறியதும்.
“மச்சி நானே ஏற்கனவே நொந்து போயிருக்கேன் நீ வேற பேசிப் பேசி நோகடிக்காத” என்றான் கோபி.
“சிங்கப்பூர் போற பிளான் வேற வச்சிருக்க இந்த லட்சணத்துல இதெல்லாம் தேவையா உனக்கு உங்க வீட்ல தெரிஞ்சா என்ன ஆகும் அதை யோசிச்சுயா முதல்ல” என்றான் நண்பன்.
நண்பன் கூறியது எல்லாம் சரிதான் ஆனால் இப்போது புத்தி வந்து என்ன செய்வது. முதலில் அங்கு போய் என்ன நிலவரம் என்பதை பார்க்க வேண்டும் எந்த வகையிலும் இந்த கேசில் தன் பெயர் அடிப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், இதுதான் தற்போது கோபியின் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது.
“நான் ரொம்ப பேசி உன் மனச கஷ்டப்படுத்துறேனோ” என்றான் நண்பன்.
“நீ சொல்றது எல்லாம் சரி தான் இதுல நான் கோச்சிக்க என்ன இருக்கு”என்றான் கோபி.
“சரி கோபி ஃபீல் பண்ணாத விடு பார்த்துக்கலாம்”என்றான் நண்பன் சற்று ஆறுதலாய்.
கணவன் எதுக்கு திடீரென்று வெளியூர் சென்றான் என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள் லதா. தன்னிடம் ஏதோ வெளிநாடு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்று சொல்ல வந்தான் காலையில் எழுந்தால் காய்ச்சல், அதற்கு பின் நண்பனுடன் பயணம்,இது என்ன புதுசா இருக்கு. ஒன்னுமே புரியலை. அவர் ஏன் என்கிட்ட வெளிப்படையாக இருக்கவே மாட்டேங்குறார். என்று தனக்குள் போட்டு குழப்பிக்கொண்டாள் லதா. ஆனால் என்ன யோசித்தாலும் விடை தெரியாமல் தவித்தாள். ஏதோ ஒன்று போனக்காரியம் நிறைவேறினால் சரி தான். என்று நினைத்துவிட்டு படுக்கையறைக்குள் நுழைந்தாள்.
உறக்கம் வரவில்லை என்றாலும் ஓய்வு எடுத்தப்படி படுத்திருந்தாள் லதா. யுவராணி கால் செய்தது , அந்த நேரம் ஆறுதலாய் இருந்தது.
“ஹலோ யுவி சொல்லு”
“ஆங் லதா , நாளைக்கு உங்க வீட்டு பக்கத்துல ஒரு பார்க் இருக்கும்ல அந்த பார்க் வந்திடுங்க காலையில் ஒரு பத்து மணிக்கு,உங்களை மீட் பண்ணனும்” என்றாள் யுவி.
“யுவி என்ன திடிர்னு”
“இல்லை, நீங்க வாங்களேன் சொல்றேன்”என்றாள் யுவராணி.
“சரி வரேன்” என்று சொல்லி போனை வைத்துவிட்டு படுத்தவளுக்கோ உறக்கம் வருவேனா என்றது.
இரவு நேரம் மணி 11 ஆகி இருந்தது. கடிகாரம் முள் அங்கும் இங்கும் அசைத்தபடி இருந்தது. கோபி கோவாவில் தன் நண்பனுடன் அறையில் படுத்திருந்தான்.அவனுக்கும் உறக்கம் அறவே வரவில்லை. எதையோ சிந்தித்தபடி படுத்திருந்தான்.
“மச்சி தூக்கம் வரலையா”என்றான் நண்பன்.
“இல்லைடா ஒரே சிந்தனையா இருக்கு”என்றான் கோபி.
“நான் சொல்றதை கேளு, நாளைக்கு ரித்விகாவை கொலை பண்ண ஹோட்டல்ல என்ன ஏதுன்னு விசாரிப்போம். அவசரப்பட்டு ஸ்டேஷன் போய் எதுவும் பேச வேண்டாம். இங்க பாரு அவக்கூட நீ தங்கின நேரம் வெறும் முக்கால் மணி நேரம். அதுகப்றம் நீயும் லதாவும் கிளம்பி வந்ததுக்கப்றம் ஒருவாரம் கழித்து தான் கொலை நடந்துருக்கு. ஸோ இதுல உனக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நீயா வான்டடா போய் எதையும் சொல்லி சிக்கிக்க வேணாம் புரியுதா” என்றான் நண்பன்.
“சரி மச்சி நீ சொல்றது கரெக்ட் தான்” என்று கோபி ஒப்புக்கொண்டு கண்ணயர்ந்தான்.
திடிரென்று அவர்கள் தங்கியிருந்த அறைக்கு வெளியில் ஒரு கூச்சல் சத்தம். என்ன ஏது என்று தெரியாமல் திரை சீலையை விலக்கி கோபியும் நண்பனும் பார்த்தனர்.
“டேய் கீழப்போய் என்னன்னு பார்க்கலாமா” என்றான் கோபி.
“டேய் நமக்கு இருக்கிற பிரச்சனைக்கு இதெல்லாம் தேவையா” என்றான் நண்பன்.
“இல்லைடா ஒரே சத்தமா இருக்கு.வாயேன் போய் பார்க்கலாம்”என்றதும் சரியென்று இருவரும் அறையை விட்டு வெளியே வந்தனர்.
என்ன நடந்திருக்கும்? அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்.