அத்தியாயம்….25
தன் கணவர் தன்னிடம் கேட்ட கேள்வி…கேட்ட விதம் இரண்டும் தன் ஒழுக்கத்தையே பாதிக்கும் அளவுக்கு இருக்க…இனி மறைப்பதற்க்கு எதுவும் இல்லை சொல்லி விட வேண்டியது தான் நினைத்துக் கொண்டு இருந்த தெய்வநாயகி…
சங்கரலிங்கமே… “கமலக்கண்ணன் உன் வயிற்றில் பிறந்தவனா…?” என்ற கேள்விக்கு…
“இல்லை. அந்த ஊமையன் என் வயிற்றில் பிறக்கல…எங்க அண்ணன் வீட்டில் வேலைசெய்யும் கனிவிழிக்கு பிறந்தவன்.” என்று எந்த மேல் பூசும் இல்லாது சொன்ன தெய்வநாயகியை அனைவரும் ஆச்சரியத்தோடு பார்த்தனர் என்றால், கமலக்கண்ணன் அதிர்ச்சியோடு பார்த்தார்.
அதுவும் தெய்வநாயகி நிறுத்தி நிதனமாக சொன்ன அந்த கனிவிழி என்ற சொல் அவருக்கு நன்றாக புரிந்தது. அதுவும் இரண்டு மூன்று தடவை இந்த வீட்டுக்கு வரும் போது அவரே பார்த்து இருக்கிறார்.
‘அவங்க மகனா..?நான். அப்போ அவங்க ஏன் இவங்க கிட்ட கொடுத்தாங்க…?’ என்று அவர் மனது கேட்ட கேள்விக்கு பதிலாய் தெய்வநாயகி…
“கல்யாணம் ஆகி ஏழு வருடம் குழந்தை இல்லேன்னு உங்க ஆத்தா…உங்களுக்கு வேறு பொண்ணு பாக்க முனஞ்சாங்க. அது உங்களுக்கு தெரியுமா…?” என்று தெய்வநாயகி தன் கணவரிடம் கேட்டார்.
“தெரியும்.” என்று சொன்ன சங்கரலிங்கம் தொடர்ந்து… “அதுக்கு நான் மறுத்துட்டேன். அது உனக்கு தெரியும் தானே…” என்று பதில் கேள்வி தன் மனைவியை பார்த்து சங்கரலிங்கம் கேட்க..
“ஆ தெரியும் தெரியும்.” என்று ஏனோ தானோ என்று பதில் அளித்த தெய்வநாயகி தொடர்ந்து…
“நான் செஞ்ச புன்னியமோ என்னவோ…உங்க அம்மா வாயில் இருந்து தொடர்ந்து விழாது இருக்க…அந்த மாசமே என கருவறையில் கற்பம் தரிச்சது. அதன் பின் உங்க அம்மா என்னை நல்லா தான் பார்த்துக்கிடாங்க.
அந்த நல்லா பார்த்துக்கிறதுக்கு காரணம் என் குழந்தை அதுவும் எனக்கு நல்லாவே தெரியும். முதல் குழந்தை பிறக்க நான் என் தாய் வீடான என் அண்ணா வீட்டுக்கு போனது உங்களுக்கு நியாபகத்துல இருக்குமுன்னு நினைக்கிறேன்.
போன இரண்டு வாரம் எல்லாம் நல்லா தான் போயிட்டு இருந்தது. இரண்டு வாரம் சென்டு இரவு எனக்கு பிரசவ வலி எடுக்க…வீட்டுக்கே வைத்தியம் பார்க்கும் ஆயா தான் எனக்கு பிரசவம் பார்த்தாங்க.
பிரசவத்தில் எனக்கு குழந்தை இறந்தே பிறந்துடுச்சி…குழந்தை இறந்ததில் எனக்கு வருத்தம் தான். ஆனால் அதோட இதையே காரணம் காட்டி எங்கே உங்களுக்கு உங்க அம்மா வேறு பொண்னை காட்டி கல்யாணம் செய்துட போறாங்கன்னு பயம் தான் அப்போ எனக்கு அதிகமா இருந்தது.
அத என் அண்ணன் அண்ணி கிட்ட சொன்னேன். அப்போ தான் எங்க அண்ணி…உனக்கு முதல் குழந்தையே பிறக்க இவ்வளவு வருடம் ஆச்சி…அதுவும் இறந்து பிறந்துடுச்சி…
இதுக்கு அப்புறம் உனக்கு கரு உண்டாகுமா என்பது சந்தேகம் தான். அதனால நான் சொல்றதை கேளு…நம்ம வீட்டு வேலைகாரிக்கு இரண்டு நாள் முன் தான் பிரசவம் ஆச்சி…ஆறாவதாவும் ஆண் குழந்தை தான் பிறந்து இருக்கு…
நான் அவங்க கிட்ட கேட்டு உனக்கு கொடுக்கிறேன். அது தான் உனக்கு பிறந்த குழந்தைன்னு உன் வீட்டுக்கு சொல்லிடுன்னு சொன்னாங்க.
நான் அப்போ கூட வேலைக்கார குழந்தைய என் குழந்தைன்னு சொல்றதா…? என்று என் அண்ணி கிட்ட கேட்டேன்.
அப்போ அவங்க…. “சரி அப்படின்னா உன் புருஷனுக்கு நீயே ஒரு நல்ல பெண்ணா பார்த்து கட்டி வைய்..இதோ பார் நீ சொன்னது போல் உன் குழந்தை இறந்தது தெரிஞ்சதுன்னா உன் மாமியார் கண்டிப்பா உன் புருஷனுக்கு இன்னொரு பெண்ணை பாத்து கட்டி வைப்பது நிச்சயம்.” என்று சொன்னாங்க.
அப்போ கூட நான்… “இல்லே அண்ணி முதல்ல அவரு அவங்க அம்மா கேட்டதற்க்கு மறுத்துட்டாரு.” என்று அப்போவும் நான் உங்களுக்கு சாதகமா தான் பேசினேன்.
ஆனால் அடுத்து அண்ணி சொன்ன வார்த்தை எனக்கு பயம் தட்டிச்சி என்று தான் சொல்லனும்.
“அட கூறு கெட்டவள…நீயே சொன்ன முதல்ல மறுத்துடாரு…முதல்ல மறுத்தவரு திரும்ப திரும்ப கேட்டா…அதுவும் அவ்வளவு சொத்து இருக்கும் மனுஷன் ஆள வாரிசு இல்ல…எந்த தாய் தான் சும்மா இருப்பாங்க.
ஆம்பிளைங்க புத்தி பத்தி சொல்றதுக்கு இல்லடீ…அவருக்கு என்ன பாக்கா ராசா கணக்கா இருக்காரு..சொத்தும் எக்க சக்கம்…நல்ல இளசான பொண்ணு கூட அவரை கட்டிக்க ஆசை படும்.
அப்புறம் உன் நிலமை அந்த வீட்டில் சொல்றதுக்கு இல்ல.” என்ற அண்ணியின் பேச்சில்.. அவர் சொன்னது அனைத்தும் காட்சியை தெய்வநாயகி முன் தோன்ற..
“அண்ணி நீங்க சொன்னது போலவே…செய்யிறேன்.ஆனா நாள பின்ன அந்த கனிமொழி பிரச்சனை பண்ண மாட்டேங்க தானே…” தன் வருங்காலத்திற்க்கும் எந்த பாதிப்பும் வரக்கூடாது என்று கேட்டு தெளிவும் படுத்திக் கொண்டார்.
“கனி பிரச்சனை பண்ண மாட்டா. இருக்கும் குழந்தைக்கே சோறு போட முடியல…இதை என்ன செய்யிறதுன்னு நேத்து தான் சொன்னாங்க.நான் போய் பேசி குழந்தைய எடுத்துட்டு வர்றேன்.” என்று சொன்னதோடு இரவோடு இரவாக குழந்தை கை மாறியது.
ஆம் இறந்த குழந்தையை கனியிடம் கொடுத்து விட்டு, அவள் குழந்தை இறந்து விட்டது என்று ஊரில் கதை பரப்பி..அடுத்த நாள் உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கு…உங்க வீட்டுக்கு ஆள் சொல்லி அனுப்பினாங்க.. நாங்க நினச்ச படி எல்லாம் நல்ல படியா தான் நடந்தது.
ஆனா மூன்று வருடம் சென்று நான் கருவுற்றது. வேலைக்கார மகன் வாய் பேச முடியாதவன் என்று தெரியும் வரை. நமக்கான குழந்தை வரப்போகும் சமயம்..
அனைவரும் என் கிட்ட… “உன் முதல் குழந்தை ஊமையாமே…?” என்று எல்லோரும் கேட்கும் போது..
“ அது என் குழந்தை இல்ல. என் வயிற்றை சுட்டி காட்டி இது தான் என் குழந்தை.” என்று சத்தம் போட்டு சொல்லனுமுன்னு தோனும். ஆனா சொல்ல முடியல. சொன்னா நான் எதுக்கு பயந்து ஒரு வேலைக்கார குழந்தையை என் குழந்தைன்னு சொன்னேனோ..நான் உண்மைய சொன்னா அது தான் நடக்கும். கண்டிப்பா என் கூட நீங்க வாழ மாட்டிங்க.
என்னால உண்மையும் சொல்ல முடியல. இவனை பெருந்தன்மையோட என் குழந்தையாகவும் ஏத்துக்க முடியல… எனக்கு எல்லாம் இருந்தும்…ஏதோ ஒரு பயம் உள்ளுக்குள்ள இருந்துட்டே தான் இருந்தது.
இந்த உண்மை வெளியே வந்தா என்ன ஆவது என்று ஒரு பயம் இருக்க… எங்கு எங்க அண்ணி மூலமா தெரிஞ்சுடுமோ என்ற பயத்தில் தான் என் அண்ணன் மகள்களையே எனக்கு மருமகளாய் ஆக்கி கிட்டேன்.
அதோடு இவ்வளவு சொத்தை எங்கோ பிறந்த ஒரு வேலைக்காரனுக்கு போவதா…? அந்த எரிச்சல் வேற..அது தான் நீங்க பெரிய மவனை ஏதாவது தொழில் கத்து கொடுக்கலாமுன்னு சொன்னாலும், இல்ல ஏதாவது விவசாயமாவது பார்க்கட்டும் என்று கேட்டாலும்…
நான்… “நான் அவனை ஊமையன்னு சொல்லலாம்.ஆனா ஊருல ஒத்த பையன் அவனை அது போல பேசினா நான் தாங்க மாட்டேன்னு சொல்லிட்டு…அவனை எங்கும் போக விடாது எதுவும் கத்துக் கொள்ள விடாது. எதுவும் தெரியாது வளர்த்தேன்.
எப்போவும் அவன் என் பிள்ளைங்க கிட்ட தான் கை கட்டி நிக்கனும். அது தான் என் எண்னம். நான் அவனுக்கு அவன் ஊனத்தை வெச்சி திருமணம் செய்யும் எண்ணம் கூட இல்லாம தான் இருந்தேன்.
ஆனா நீங்க தான் பெரியவன் கல்யாணம் செய்யாம சின்னவங்களுக்கு செய்ய கூடாதுன்னு நியாயம் பேசுனிங்க.
அதான் சோத்துக்கே கெதி இல்லாம…அவன் தங்கச்சி வெளிநாட்டில் எவனையோ கட்டிக்கிட்டதால மத்த பெண்களுக்கு கிடச்ச இடத்துல முடிச்சி போட்டுட்டு இருந்த இவளை ஊமையனுக்கு கட்டி வெச்சேன்.
அப்போ இவ பேரு கனிவிழி..அந்த ஊமையோட அம்மா பேரு நியாபகப்படுத்துவது போல இருக்க..கல்யாண பத்திரிக்கையிலேயே இவ பெயரை வரலட்சுமின்னு மாத்தி ஊருக்கு பெரிய மருமகளாவும் வீட்டுக்கு ஒரு வேலைக்காரியாகவும் கொண்டு வந்தேன்.
இதுல இரண்டு நான் நினைக்காதது நடந்தது. அது நான் ஊமையன் அம்மா பிரச்சனை பண்ணுமான்னு நினைக்க..நான் நினச்ச பாக்காத எனக்கு பிரசவம் பார்த்த அந்த கிழவியோட மவன் என்னை வந்து மிரட்டுவான்னு நான் கனவுல கூட நினச்சி பார்க்காதது.
இரண்டு தடவை அவன் கிட்ட லட்சத்தில் கொடுத்து இருக்கேன். திரும்ப வந்தா என்ன பண்ணலாம் என்று பயந்துட்டு இருக்க..
அது என்னவோ பத்து வருடமா அவன் இந்த பக்கம் ஆளை காணும். அடுத்து நான் நினச்சி பாக்காதது..வீரேந்திரன்..வீரேந்திரன் அந்த புள்ள மேல ஆசை படுமுன்னு நான் நினைக்கல…
சின்ன போதுல தோ இரண்டு மருமகள்களும் மணிக்கும் என் பேரனுக்கு சேர்த்து வெச்சி முடிச்சி போட்டதையே என்னால தாங்க முடியல.அதான் என் பொண்ணு நான் தனியா போறேன்னு கேட்டதும் எதுவும் சொல்லாம உடனே ஒத்துக் கொண்டேன். ஒரே வீட்டில் பஞ்சும் நெருப்பையும் வைக்க கூடாதுன்னு.
அப்படி இருக்கும் போது வளர்ந்த பின் அன்னைக்கு, முதல் சம்மந்தம் மணிக்கு தேடி வரும் போது தான் வீராவுக்கு மணிமேல ஆசை இருக்குன்னு நான் கண்டு கிட்டேன்.
அதுவும் அவள் படிக்க வெளிநாட்டுக்கு அனுப்பும் அளவுக்கு. முதல்ல இதை பார்த்து அப்போ எனக்கு ஆத்திரமா தான் வந்தது. அப்புறம் யோசிச்சேன் ஊமையனை பத்தி என்னால உண்மை சொல்ல முடியாது.
மூத்த மகன் சொத்து அவனுக்கும் போய் சேரும். அவன் சொத்து அவ மகளுக்கு தானே…இன்னும் கேட்டா மணிய வெளிய கட்டி கொடுத்தா தான் எனக்கு ஆபத்து.
என் பேரன்னா எனக்கு பிரச்சனை இல்ல. ஏன் இன்னும் கேட்டா சொத்து பிரிக்கும் போது கமலக்கண்ணனுக்கு என்ன தெரியும். அதனால சொத்தை வீரா பேருக்கு எழுந்திடுங்க..அவன் மாமனாரையும், மாமியாரையும் கவனிச்சிக்க மாட்டானா…? சொல்லி சொத்தை என் பேரனுக்கு சேரும் படி தான் நினச்சேன்.” இத்தனை வருடத்தின் மனதில் இருந்த கழிசல்களை எல்லாம் மொத்தமாய் கொட்டினார் தெய்வநாயகி.
அனைவருக்கும் தெய்வநாயகியின் பேச்சை ஜீரணித்துக் கொள்ளவே பல நிமிடங்கள் கடந்தும் தன் தன்னிலைக்கு வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
அதுவும் தெய்வநாயகியின் பெத்த பிள்ளைகள் மூன்றுமே அய்யோ என்று தன் தந்தையை தான் பாவம் போல் பார்த்தனர்.
ஆனால் அங்கு இருந்தவர்களிலேயே வீரேந்திரனும், சங்கரலிங்கம் இருவருக்குமே தெய்வநாயகியின் பேச்சு பாதிப்பு ஏற்படுத்தவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
சங்கரி… “அப்பா.” என்று அழைத்து அவரின் கையை ஆறுதலாய் பற்றிக் கொள்ள…
“எனக்கு ஒன்னும் இல்லேம்மா…நான் இதை கடந்து வருடம் பத்து சென்று விட்டது.பாவம் முதலில் நீ உன் அண்ணியையும் அண்ணாவையும் பாரு.” என்றவர் தன் பேரனிடம்…
“மணிய கொஞ்சம் பாருடா.” என்று சொன்னார்.
தன் தாத்தா பேச ஆராம்பித்ததில் இருந்து அவன் அதை மட்டுமே தானே செய்துக் கொண்டு இருக்கிறான்.
முதலில் அவள் முகத்தில் அதிர்ச்சி பின் போக போக தெரிந்த அந்த அமைதி பார்த்தவனுக்கு ஒன்று மட்டும் தான் புரியவில்லை.
நியாயத்திற்க்கு இவள் கவலையும், அதிர்ச்சியும்,கோபமும் தான் பட வேண்டும். ஆனால் அவள் முகத்தில் தெரிந்த அந்த அமைதியை பார்த்து இப்போது வீரேந்திரனின் முகத்தில் தான் குழப்பம் ஏற்பட்டது.
ஆனால் சிறிது நேரத்துக்கு எல்லாம், அந்த குழப்பத்தை அவன் மனைவியாளே தீர்த்து வைத்து விட்டாள்.
“நான் கூட பெத்த பிள்ளைய இப்படி நடத்த முடியுமா…? இதே தான் என் மனதில் ஓடிக் கொண்டு இருக்கும். ஆனால் இப்போ எனக்கு கொஞ்சம் நிம்மதி தான். யாரு வேணா பொய்த்து போகலாம். ஆனால் ஒரு தாய்…பெத்த தாய் பொய்த்து போக மாட்டாள். அது நிஜம் தான்.” என்று சொன்ன மணிமேகலை…
தெய்வநாயகியின் பக்கம் திரும்பி…” அப்ப…” என்று ஆராம்பித்தவள்.
“அந்த உறவு முறை வெச்சி கூப்பிடலாமான்னு எனக்கு தெரியல. ஆனா இத்தனை வருட பழக்கத்தில் எனக்கு கண்டிப்பா அந்த உறவு முறை வெச்சி தான் கூப்பிட தோனும். உங்களுக்கு பிடிக்கலேன்னா அதை மாத்திக்க பாக்குறேன். போக போக மாத்திப்பேன் என்று தான் தோனுது.
ஆனா இத்தனை யோசிச்ச நீங்க…தாத்தா எப்படி பட்டவருன்னு கொஞ்சம் யோசிச்சி இருக்கலாம். அவங்க கிட்ட உண்மையா இருந்தா…அவங்களுக்கு அவர் என்ன வேணா செய்வாருன்னு..எனக்கு தெரிஞ்சது உங்களுக்கு தெரியாம போயிடுச்சே அப்பத்தா…” என்ற மணிமேகலையின் பேச்சில் அப்போது தான் தெய்வநாயகி ஒன்று உணர்ந்தார்.
கடந்த பத்து வருடமாய் தங்களோட தனிப்பட்ட வாழ்க்கையில் மாறிய மாற்றத்தை. தன்னை முழுவதுமாய் ஒதுக்கவில்லை என்றாலும், முன்பு இருந்த அந்த அந்நியோனியம் அவரிடம் இருந்து காணமல் போனது.
சொன்ன மணிமேகலையை தெய்வநாயகி பார்க்க…மணிமேகலையோ தன் தந்தையின் கையை ஆறுதலாய் பிடித்துக் கொண்டு அவருக்கு புரியும் படி…
“ஒன்னும் இல்ல அப்பா…ஒன்னும் இல்ல…” என்று சொல்ல..
மறுபக்கம்…வீரேந்திரன் வரலட்சுமியிடம் ஏதோ பேசிக் கொண்டு இருந்தார். சொத்தை ஒன்னுக்குள் ஒன்னுக்குள் சேர்க்கிறேன் என்று தன் சொந்த சொத்தை அதாவது தன் மகளின் உறவை தெய்வநாயகி மொத்தமாய் இழந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.