Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் நீயே 27 (final)

வரம் நீயே 27 (final) ஒரு வாரம் சொந்த ஊரிலேயே தங்கி விட்டு, மதுரை சென்று சேர்ந்தனர். வைசாலியும் அரசனும். அங்கிருந்து இராமநாதபுரம் கிளம்பிச் சென்றனர். அங்கு வைசாலியின் சொந்தபந்தங்களை சந்தித்து, நண்பர்களோடு அளாவளாவி நாட்களை கடத்தினர். அங்கிருந்து கிளம்பும் போது, வைசாலி வேலையை விட்டுவிட்டு கிளம்பினாள். மீண்டும் மதுரை வந்து கொண்டிருந்தனர். அரசன் காரை ஓட்ட, வைசாலி தூங்கிக் கொண்டிருந்தாள். அரசனின் கைபேசி மெல்ல அதிர்ந்தது. பெயரை பார்த்தவன், காரை ஓரமாக நிறுத்தி விட்டு எடுத்து […]

Readmore

வரம் நீயே 26 (pre final)

வரம் நீயே 26 (pre final) மாதவன் தந்தையை பார்த்தபடி அம‌ர்ந்து இருந்தான். மனம் எங்கெங்கோ சுற்றிக் கொண்டிருந்தது. நேற்று மாலை வைசாலியின் திருமணத்தை நிறுத்தவென சென்றவன், மனம் நொந்து வெளியே வந்திருந்தான். அவனால் வைசாலி அரசனை காதலிப்பதை ஏற்கவே முடியவில்லை. மனம் முழுவதும் கோபம், ஆற்றாமை. வைசாலி வேறு யாரையும் திருமணம் செய்திருந்தால் இவ்வளவு கோபப் பட்டிருப்பானா? தெரியவில்லை. ஆனால் அரசனை அவளோடு பார்க்க முடியவில்லை. வைசாலியிடம் மேலும் பேசி மனம் நோகாமல் வெளியே வந்து […]

Readmore

வரம் நீயே 25 (2)

அடுத்த நாள் அதிகாலையில் வைசாலி எழுந்து பார்க்க, அப்போதும் மண்டபம் பரபரப்பாக இருந்தது. நேற்று இரவு பாதிக்கும் மேல் தூங்கவே இல்லை. வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மணமக்கள் மட்டுமே நிம்மதியாக தூங்கி எழுந்திருந்தனர். திருமண வேலைகள் மளமளவென ஆரம்பிக்க, முகூர்த்தபுடவையை கட்டிக் கொண்டு வந்து நின்றவளை, அரசன் பார்த்துக் கொண்டே இருந்தான். “பார்த்து கழுத்து சுழுக்க போகுது” என்று பார்த்தசாரதி அரசனின் முகத்தை திருப்பி விட, “பழி வாங்குறீங்களா அத்தான்?” என்று கேட்டான். “பின்ன? எங்க […]

Readmore

வரம் நீயே 25 (1)

அந்த மண்டபம் மொத்தமும் ஆட்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. இன்னும் அரைமணி நேரத்தில் நிச்சயதார்த்தம். நாளை காலை திருமணம். மொத்தமும் மதுரையில் தான் ஏற்பாடாகி இருந்தது. சொந்தபந்தங்கள் நட்புக்கள் எல்லோரும் சேர்ந்து, ஆளுக்கொரு வேலையாக விழாவை கவனித்துக் கொண்டிருந்தனர். அந்த ஆர்பாட்டங்களை வெறுப்பாக பார்த்தபடி உள்ளே நுழைந்தான் மாதவன். திருமணத்தை நிறுத்தியே தீருவேன் என்று முடிவு செய்து சென்றவனை, எந்த வேலையும் செய்ய விடாமல் கட்டிப்போட்டது அவனுடைய தந்தையின் உடல் நிலை. ஆனால் இன்று நிச்சயதார்த்தம். நாளை […]

Readmore

வரம் நீயே 22 (2)

ஒரு பெரிய அடியை வாங்கியது அந்த குடும்பம். தான் உயிரோடு இருக்க, தன் மகனுக்கு பேரன் கொள்ளி வைப்பதை பார்த்து, தாத்தா மாரடைப்பில் விழுந்தார். அவரை கண்ணும் கருத்துமாக பார்த்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை. மகன் பிரிந்த துக்கத்தில், மூன்றே மாதங்களில் அவரது உயிர் பிரிந்து விட்டது. அடுத்த பெரிய அடியை தாங்க முடியாமல், அமுதவல்லி துவண்டு போனார். மாமியாரும் அவரும் மட்டுமே ஒருவருக்கொருவர் துணை என்றானது. அரசன் தன் படிப்பை முடித்து, கூடவே காவல்துறைக்கான தேர்விலும் […]

Readmore

வரம் நீயே 22 (1)

தோப்புக்குள் நுழைந்து இரண்டு நிமிடம் கடந்தும், வைசாலி வாயைத்திறப்பதாக இல்லை. “இன்னுமா மலையிறங்கல?” என்று அரசன் கேட்டதும் வைசாலி முறைக்க, “என்ன கோபம்?” என்று கேட்டான். “லூசா நீ? நேத்து ஒரு வார்த்தை பேசுனியா?” “பேசுனேனே?” “எங்க பேசுன? ஆளாளுக்கு கல்யாணத்த பத்தி பேசுறாங்க. நீ என் கிட்ட கேட்டியா?” “நீ ஏன் ஊருக்கே சொன்ன? முதல்ல என் கிட்ட தான சொல்லி இருக்கனும்?” “அது வேற கணக்கு. ஆனா விசயம் தெரிஞ்சதும் பேசுனியா? மாலைய கொடுக்குறாங்க […]

Readmore

வரம் நீயே 21

வரம் நீயே 21 அன்றைய பொழுது அந்த வீட்டில் எல்லோருக்குமே சோர்வாக தான் விடிந்தது. நேற்றைய பரபரப்பு இல்லாமல் தாமதமாக எழுந்து வந்தார் அமுதவல்லி. ஹாலில் அமர்ந்து தொலைகாட்சியில் கண்ணை பதித்து இருந்த வைசாலி, திரும்பிப் பார்த்தாள். “குட் மார்னிங் அத்த” “மார்னிங்டா.. சீக்கிரமே எழுந்துட்டியா?” என்று கேட்க, தலையை மட்டும் ஆட்டினாள். தூக்கம் எங்கே வந்தது? தூங்கவே இல்லை அவள். “உங்களுக்கு இன்னும் டயர்டா? தூங்க வேண்டியது தான?” “தூங்கலாம். ஆனா பசிக்குதே” “டீ போட்டு […]

Readmore

வரம் நீயே 20

வரம் நீயே 20 காய்கறியை கழுவி எடுத்து, கத்தியையும் காய்கறி இருந்த தட்டில் போட்டு கையில் தூக்கிக் கொண்டாள் மீனாட்சி. வெளியே வந்து கூடத்தில் அமர்ந்தவள், காய்கறிகளை நறுக்க ஆரம்பித்தாள். அவளுக்கு நேர் எதிராக இறுக்கமாக அமர்ந்து இருந்த தந்தையையும் அவள் கண்டுகொள்ளவில்லை. புலம்பிக் கொண்டிருந்த தாயையும் அவள் கண்டுகொள்ளவில்லை. அவள் போக்கில் வேலை செய்து கொண்டிருந்தாள். “என்ன தான் நினைச்சுட்டு இருக்காங்க? இவ்வளவு நாள் ஆசை காட்டிட்டு இன்னைக்கு வேற இடத்துல நிச்சயம் பண்ணுவாங்களா? இத […]

Readmore

வரம் நீயே 19

வரம் நீயே 19 விசேஷம் அப்போதிருந்தே களைகட்ட ஆரம்பித்து விட்டது. அக்கம் பக்கமிருந்தவர்கள் வந்து போக, நாளை நடக்க இருக்கும் விருந்துக்கான ஏற்பாடுகளும் நடந்தது. அரசன் அந்த பக்கம் சென்று விட, பார்த்தசாரதி பொறுப்பை எடுத்துக் கொண்டான். மகாலட்சுமியின் குடும்பமும் வந்திருக்க, அவரது கணவரும் மருமகனும் உதவிக்கு வந்தனர். ஆளுக்கொரு வேலையை செய்து கொண்டிருக்க, ஒரு வயதானவர் வந்தார். எல்லோரிடமும் பேசி விட்டு அங்கிருந்த வைசாலியை பார்த்தார். “இந்த பொண்ணு யாரு?” என்று அருகே நின்றிருந்த அமுதவல்லியிடம் […]

Readmore

வரம் நீயே 19

வரம் நீயே 18 அரசனும் பார்த்தசாரதியும் ஒன்றாக உள்ளே வர, வைசாலி தனியாக நின்றிருந்தாள். பார்த்தசாரதியை பார்த்ததும் அடையாளம் தெரிந்திருந்தது. அஞ்சனாவின் திருமண ஆல்பத்தில் எல்லோரையும் பார்த்து இருந்தாள். பார்த்தசாரதி தான் வைசாலியை நன்றாக பார்த்தான். அவனுக்கு வைசாலியின் பெயர் தெரிந்திருந்ததே தவிர, முகத்தை பார்த்ததில்லை. “இவங்க யாரு மாமா?” என்று மணிகர்ணிகா அரசனிடம் வைசாலி பக்கம் கை நீட்டி கேட்க, “இவங்க..” என்று இழுத்து விட்டு, “உனக்கு அத்தை” என்றான். வைசாலி அவனை முறைத்து விட்டு, […]

Readmore