Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரேக்க மணிமகுடம் (வரலாற்றுத் தொடர்) அத்தியாயம்-3

கிரேக்க மணிமகுடம் (வரலாற்று நெடும்தொடர்) 3. ஆலமரத்தில் அபாயசங்கு “சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும் அறத்துவழிப் படூஉம் தோற்றம் போல இருகுடை பின்பட வோங்கிய வொருகுடை“ என்னும் புறநானூற்றுப் பாடல் சோழர் குலத்தின் பெருமையை பறைசாற்றும்.அத்தகைய பெருமைக்குரிய சோழகுலத்தில்….. சூரியனின் கதிரொளி போல தகதகக்கும் நிறத்தோனாகவும், செந்தாமரை கன்னங்களில் சோழக்கொடி தாங்கிய, புலியின் வாலை மீசையாக கொண்டவனும், அகன்ற மார்பில் சிறிதும் போர் புரிந்து பெற்ற விழுப்புண் இன்றி வெறுமையாக இருப்பவனும்,…. தன் பாட்டன் இளஞ்சேட் சென்னியைப் […]

Readmore

கிரேக்க மணிமகுடம் ( வரலாற்றுத் தொடர்)

கிரேக்க மணிமகுடம் 2. பவளத் தீவில் பாய்விரித்த நாவாய் மத்திய தரைக்கடல் பகுதியில் விரிந்து பரந்திருந்த நீலக்கடல் பரப்பு…. மத்திய தரைக்கடலிலிருந்து வடக்கு நோக்கி விரிந்த ஏஜியன் கடலில் வாரியிறைத்த மரகத கற்களாக சிதறி ஜொலித்த தீவுக்கூட்டங்கள்…. எண்ணைதீவுகள் என்று கடலோடிகள் அழைத்த பேகான தீவுகள் கூட்டம் ஒவ்வொன்றும் ஒரு தனிரகம்…. அந்த தீவுக்கூட்டத்தின் நடுவே சிறிது பரப்பில் பெரியதும் மேடான மலைப்பகுதியில் அமைந்ததுமான பவளத்தீவு, தன்னை சுற்றிலும் ஏழு சிறு தீவுகளை அரணாக கொண்டு கம்பீரமாக […]

Readmore

கிரேக்க மணிமகுடம்

1. ஆடித் திங்கள் நள்ளிரவில் “உறந்தை குணாது நெடும் பெருங்குன்றம்” என்ற அகநானூற்று பாடலும், ” உறந்தை குணாது நெடுங்கை வேண்மான் அருங்கடிப் பிடவூர்” என்ற புறநானூற்றுப் பாடலும் குறிக்கும் உறையூர். முற்கால சோழர்களின் தலைநகரம். இளஞ்சேர்ச்சென்னி துவங்கி கரிகால் பெருவளத்தான் வரை சீரோடும் சிறப்போடும் விளங்கிய அற்புதமான பெருநகரம். உறையூரை அணைத்தபடி ஆர்ப்பரித்து பொங்கி பாயும் பொன்னி நதியும், பொன்னி நதி தன் மடிமீதில் தாலாட்டி மகிழும் உறையூரின் கரையாவும், கன்னிப்பெண் தன் காதலனை மடியில் […]

Readmore

Aruna Kathirs என் காதல் கனா 2

என் காதல் கனா 2 “அண்ணா, நேக்கு இந்த சொத்து அவசியம் இல்லை. ஆனா என் பொண்ணோட படிப்புக்கு இந்த வீடு தேவை. இன்னைக்கு இந்த வீட்டை வித்தா குறைஞ்சது எழுபது லட்சமாவது பெரும்” என்று தன் அண்ணாவின் முகத்தில் இருந்து கண்களை அகற்றாமல் பேசிய லக்ஷ்மியிடம் இந்த முறை ராமனாதன் அசட்டை காட்டவில்லை. “அப்படியே விக்கறதுன்னாலும், அதுல சரிபாதி எங்களுக்கு மட்டும் இல்லையா என்ன…விக்கணும்னா நாங்களும் சம்மதிக்கனுமில்லையா” என அமைதியாக நின்று விட்ட கணவரை ஒரு […]

Readmore

சாரலாய் தீண்டினாய் அன்பே – 27

ஏழு வருடங்களுக்குப் பிறகு… ஜே.கே.ஆர் ஃபேப்ரிக்ஸ் பிரைவேட் லிமிட்டெட் வழக்கமான பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. தணிக்கைக்கான வேலைகள் தொடங்கிவிட்டதால் ஊழியர்கள் தங்கள் கடமைகளைச் செவ்வனே செய்து கொண்டிருக்க ‘இண்டர்னல் ஆடிட்டர்’ என்ற பித்தளைத்தகடு பதிக்கப்பட்டக் கதவைத் திறந்து அதில் நாசூக்காகத் தட்டினாள் ஒரு இளம்பெண். “மே ஐ கம் இன் மேம்?” “எஸ்! கம் இன்” என்ற குரல் உள்ளிருந்து கேட்கவும் அறைக்குள் பிரவேசித்தாள் அப்பெண். “மேம் நீங்க கேட்ட ரிப்போர்ட்ஸ், டாக்குமெண்ட்ஸ் எல்லாமே இருக்கு… ஒரு […]

Readmore

சாரலாய் தீண்டினாய் அன்பே – 26

ஆரியாவுக்குப் போன் செய்த சுமித்ரா, தான் அவனுக்காக ரெஸ்ட்ராண்டில் காத்திருப்பதாகச் சொல்லி விட்டு போனை வைத்தாள். மாலைநேரம் என்பதால் விளக்குகள் மிதமான வெளிச்சத்தை தூவிக் கொண்டிருக்க இதோடு அவளது கைவிரல் நகத்தை முன்னூறாவது முறையாகக் கடித்து டென்சனாக இருப்பதாகக் காட்டிக் கொண்டிருந்தாள். தான் செய்வது சரியா தவறா என்று தவிப்புடன் இருந்தவள் இவ்வளவு தூரம் வந்து அவனுக்குப் போனும் செய்துவிட்டு இப்போது யோசிக்கிறோமோ என்று எண்ணியபடி மூச்சை இழுத்துவிட்டுத் தன்னைச் சமனப்படுத்திக் கொண்டாள். இவ்வளவு தூரம் வந்துவிட்டோம், […]

Readmore

சாரலாய் தீண்டினாய் அன்பே – சாரல் 25.2

ஆரியாவிடம் சுமித்ரா பேசிய சம்பவம் முடிந்து சரியாக ஒரு வாரத்தில் இருவரும் சந்தித்துக்கொண்டனர். அந்தச் சந்திப்பு நடந்த இடம் சாலையோரம். நேரமோ கிட்டத்தட்ட இரவு எட்டு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. ஆரியா அவனது அன்னை ஹேமாவின் தளிர் அலுவலகத்துக்கு மாலை நேரம் செல்வதை வாடிக்கையாக்கி விட்டதால் அன்றும் அவ்வாறு சென்றுவிட்டுத் திரும்பும் நேரத்தில் தான் சுமித்ராவைச் சாலையோரம் ஒரு வாலிபனுடன் காண நேர்ந்தது. காரை மெதுவாக ரிவர்ஸில் கொண்டு வந்து அவர்கள் நிற்குமிடத்திலிருந்து சற்று தொலைவில் நிறுத்தியவன் […]

Readmore

சாரலாய் தீண்டினாய் அன்பே – 25.1

சந்தியா ஹால் சோபாவில் சாய்ந்திருக்க அவள் எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தனர் சூரியாவும் ஆரியாவும். சுமித்ரா இவர்கள் அனைவருக்கும் காபி போட்டுக் கொண்டிருந்தாள் சமையலறையில். “நான் உனக்காக வெயிட் பண்ணுவேன் பிரவுனி… எவ்ளோ நாளானாலும் சரி… இதுல இனிமே நீ கவலைப்பட எதுவும் இல்லை… நான் ரேணு ஆன்ட்டி கிட்டப் பேசுறேன்… எல்லாருக்கும் புரிய வைக்கிறேன்… நீ பொறுமையா ஸ்டடீஸை கம்ப்ளீட் பண்ணு… பட் ஒன் கண்டிசன் அதுக்கு இடையில நானும் இருக்கேனு மறந்துடக் கூடாது” என்று பெரிதாக […]

Readmore

சாரலாய் தீண்டினாய் அன்பே – 24.1

காலையிலேயே தனது அலுவலக அறையில் நிலை கொள்ளாமல் தவித்தபடி அமர்ந்திருந்தான் ஆரியா. சந்தியாவின் ராஜினாமா கடிதம் ஏற்படுத்திய அதிர்ச்சியின் விளைவே இது. நன்றாக வேலை செய்து கொண்டிருந்த பெண் திடீரென்று ஏன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று மண்டையை உடைத்துக் கொண்டு யோசித்தாலும் அவன் அறிவுக்கு எட்டியவரை எந்தக் காரணமும் புலப்படவில்லை.   சந்தியாவுக்குப் போன் செய்தால் அவளோ போனை எடுக்கவே இல்லை. சரி சூரியாவிடம் விஷயத்தைத் தெரிவிக்கலாம் என்றால் அவனது நிலையும் அதுவே. என்ன செய்யவென்று […]

Readmore

சாரலாய் தீண்டினாய் அன்பே – 23.2

சூரியா சொன்னபடி அன்று மாலையே அமெரிக்காவுக்கு விமானம் ஏறிவிட ஆரியா மூலமாக இத்தகவல் சந்தியாவைச் சென்றடைந்தது. அவளுக்குமே இப்போதைக்கு இந்தப் பிரச்சனைகளை மறந்தே ஆக வேண்டிய சூழல். சூரியா கிளம்பிய அதே நேரத்தில் சந்தியாவின் குடும்பத்தினரும் இரயிலில் மேலகரத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்திருந்தனர்.   அனைவருக்குமே சந்தியாவின் மீது வருத்தம் தான் என்றாலும் கோமதியம்மாள் தான் அவர்களைச் சமாதானம் செய்து ஊருக்கு அழைத்துச் சென்றார். செல்வதற்கு முன்னர் சந்தியாவிடம் போனில் பேசியவர் “எங்க மேல உள்ள கோவத்துல […]

Readmore