இப்போது சதா, மீண்டும் அழைக்க தொடங்கினான்… விட்டேனா பார், என விடாமல் அழைப்பு நீண்டது. மேலும் நேற்றிலிருந்து கார்த்தியும் வேறு, இவளை போனில் அழைத்துக் கொண்டிருந்ததால்… இப்போது கன்யாவின் போனிற்கு போட்டி அதிகமாகியது.
வண்டியில் செல்ல, செல்ல போனின் சத்தம் வேறு… மெல்லி சையாக ஒலித்துக் கொண்டே இருந்தது. மையில்டான ரிங் டோனாக இருப்பதால் சற்று வெளியே கேட்கவில்லை…
ஆனால், கன்யாவால் உணர முடிந்தது அந்த சத்தத்தை. சதாவாகதான் இருக்கும் “தேடட்டும்… தேடட்டும் எத்தனை நாள் தேடியிருப்பேன்… “ என இதழ்கடையில் ஒரு சிரிப்புடன், லேசாக அக்சிலேட்டரை திருகியபடி அந்த ட்ரப்பிக்கில் வளைந்து வளைந்து சென்றாள் உற்சாகமாக. ஏதோ சதாவை பெரிதாக செய்துவிட்டதாக எண்ணம்.
சதாவின் வீடு இருப்பது… நங்கநல்லூர் எனவே வண்டியை, மெட்ரோ ஸ்டேஷன்னில் போட்டுவிட்டு, இவள் பயணம் மெட்ரோவில் தொடர்ந்தது.
அமைதியான பயணம் அது… காலை நேரம் என்பதால்… லேசான கூட்டம். அதுவும் ஜில்லேனவே இருந்தது… நெரிசல் இல்லாமல், நேரம் கடத்தாமல், சுண்டல், பழம் என விற்பனை இல்லாமல்… ஒருவரை ஒருவர் கண்டுகொள்ளாமல், அவரவர்பாடு அவரவர்க்கு என மெட்ரோ… இங்கு ஒரு புது வகை.
இவளும் ஒரு சீட்டில் அமர்ந்து ஹெட் செட்டை காதில் பொறுத்த… திரும்பவும்… சதாவின் அழைப்பு… கன்யாவின் முகம் அமைதியான சந்தோஷத்தை காட்ட… அந்த பெயரை ரசித்துக் கொண்டிருந்தாள்…. “டாக்டர் சதாசிவம்” என ஒளிர்ந்தது.
ம்கூம்…. கன்யா, இன்னும் அவன் எண்ணை சேவ் செய்யவில்லை… எனவே, ட்ரு காலரில் அப்படி காட்ட… “டாக்டர்” என தன் வாய்க்குள் முனகினாள். “ச்சு… “ என தானாக சலிப்பு வந்தது.
அவனின் கால் கட்டாகி, அவளின் ஹெட் செட் வழியே பாடல் வந்தது “ அவன் வட்ட வட்ட நிலவையும் வரைவான்…
அதன் மறுபக்கம் எனவுண்டு தெளிவான்…
வண்ண மலர்களின் வலிகளும் அறிவான்..
சில பறவைகளின் மொழிகளும் புரிவான்…
ஆனால் பேதை உள்ள புரியல… “ என பாட்டு நீண்டது…
கன்யாவின் கை அவளின் இடது கன்னத்தை அனிச்சையாய் தொட. சற்று கோவம் வந்தது… “உன்கிட்ட அடிவாங்கத்தான் காத்திருந்தேனா… ஸெல்ப்பிஷ்… இப்படி நீ உன்ன மட்டுமே யோசிக்கிற…
ஒரு வார்த்தை என்னோட பேசனும்னு தோனல… நான் என்ன பண்ணேன் இந்த்தனை வருடம தெரியல… என்ன ஏதுன்னே தெரியாம… வார்த்தைகள் மட்டும் ஈசியா வருது…
ஒருவேளை வேறு ஏதாவது… ஐயோ அதுக்குதானே அடிச்சான்.
அப்பா, அம்மா மேல கோவமோ… கேட்க்காமல் கல்யாணம் செய்து வைச்சிட்டாங்கன்னு….
அதுக்குன்னு இத்தனை வருடமாவா…
ம்.. இருக்கும், அவங்க அக்காகிட்டேயே இன்னும் பேசலையே… ஒருவேலை, அதான் என்னை பேசியே கொல்றானோ…
வேற யாரையாவது… லவ் பண்ணியிருப்பானோ…
பேசாமா நான், போயிடவா… எங்கையாவது போயிடவா…
ஐயோ! அம்மா, அண்ணன், அப்பா எல்லோரும் சேர்ந்து சிக்க வைச்சிட்டீங்க… என்னை.
ம்… இவன், என்னை பைத்தியம் ஆக்காமல் விடமாட்டான்..
முன்னாடி ஏன் வரலைன்னு கோவம், இப்போ ஏன் வந்தான்னு கோவம்…” என தலையில் கைவைத்து அமர்ந்திருந்தாள்..
ஏனோ மனம் ஒருநிலையில் இல்லை… எப்போதும் ‘சதா’ நிலையில்தான் இருந்தது… படுத்துகிறான்… முன்னர் அவனின் பெயரில் மட்டும் ஆட்டிவைத்தவன் இப்போது நேரிலும்.
ஒருவழியாக அவள் இறங்கவேண்டிய ஸ்டேஷன் அறிவிப்பு வரவும்… எப்போதும் விடை தெரியாத கேள்வியாக சதா, இப்போதும் அவளுள்… நிறையவே செய்தான்.
பெருமூச்சு விட்டபடி இறங்கினாள். கூடவே போனை சுவிச் ஆப் செய்து வைத்தவள்… தனது அலுவல் பார்க்க தொடங்கினாள். ‘அப்பாடா நிம்மதியா இருக்கு’ என வேலைகள் ஓட தொடங்கியது தான், ஆனால் போக போக மனம் “அவன் கால் செய்திருப்பானா… பார்ப்போமா..” என ஏங்கவும் தொடங்கியது.
அதனை போராடி தலையில் தட்டி அமரவைத்தவள்… வேலையை தொடர… அப்படி இப்படி என நேரம் பறந்தது. மதியம் லஞ்ச் டைம்…
இப்போது யெஸ்வந்த் அவளின் லஞ்ச் பாகை எடுத்து செல்ல… அதனை ஓரகண்ணால் பார்த்தவள் “சொல்லிட்டாவது எடுத்து போலாம்ல, இன்னிக்கு என் மாமியார் சாப்பாடு…. என்ன பண்ணுவானோ” என தனக்குள்ளே பேசியபடி… தனது போனை ஆன் செய்தாள்…
மொத்தம் 72 மிஸ்டு கால்ஸ்… அதில் சரிபாதி… கார்த்தியிடமிருந்து. மனம் குளிர்ந்தாலும்… ‘எப்படியோ போ’ன்னு தானே போனான்… இப்போ, என்ன போன்… என கண்களுக்குள் கண்ணீர் தளும்ப, மனதுள் சண்டையிட்டாலும்… மனம் என்னவோ தன் அண்ணனின் வார்த்தைக்காக ஏங்கியது.
எல்லாவற்றையும் அமைதியாக தள்ளி வைத்து… வாட்ஸ்அப் பார்க்க… கணவனிடமிருந்து எண்ணி நான்கே மெசேஜ், வந்திருந்தது, இறுதியாக இரு வாய் மெசேஜ்…
வேண்டாம்.. என்றாலும், விரல்கள் அதனைத்தானே முதலில் ஓபன் செய்தது.. முதல் மெசேஜ் “அட்டென் த்த கால்ஸ்” என்றிருந்தது.. கன்யா மனதுள் “அதன் எனக்கு வேலையே… போடா” என முனகினாள்.
பின் இரண்டாவது மெசேஜ்ஜில் “நான் ஓன் வீக் டெல்லி போறேன்…” என தொடங்கி அந்த வாய்ஸ்மெசேஜ்ஜில் இப்போதும் அவளை குற்றம் சொல்லி… “நான் டெல்லி போறேன்… மேக்ஸிமம் ஒன் வீக் ஆகும்… அதுக்குள்ளே… நீ எங்கையாவது பொட்டிய, எடுத்துத்துட்டு போயிடாத… வந்து பேசிக்கலாம்… வெயிட் பண்ணு” என்றான், இன்னும் கட்டளையான பேச்சுதான்.
கன்யாவிற்கு கேட்கவா வேண்டும்… “ஹலோ… எனக்கு அந்த பழக்கமே இல்ல… அத்தோட நீங்க அதபத்தி பேசவே கூடாது… இப்பவும் நீங்கதான் பெட்டிய எடுத்துட்டு கிளம்பிட்டீங்க… அதுவும் சொல்லாம கூட…” என கடு கடு குரலில் தானும், பேசி ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பிவைத்தாள். “எவ்வளவு பேசினாலும் அடங்கமாட்டேன் கிறான்” என திரும்பவும் முனகல்தான்…
லஞ்ச் ஹாலுக்கு செல்ல… யெஸ்வந்த், கன்யாவின் சாப்பாட்டை கண்ணீர் வழிய சாப்பிட்டுக் கொண்டிருந்தான்… லாவண்யா “ஹேய், நான் நேற்று கன்யாவின் ஹஸ்பண்டை பார்த்தேன்..” என இவள் வருவதை பார்த்து எல்லோரோரிடமும் சொல்ல தொடங்கினார்.
கன்யா “ம்…” என ஒரு அசட்டு சிரிப்பு சிரித்து வைக்க.. அது கூட அந்த கேங்கிற்கு, அழகாக தெரிந்தது போல, அங்கிருந்த இன்னொரு ஸ்டாப் “கன்யா இப்போதான் ரொம்ப அமைதியா மாறிட்டா… பொறுப்பு வந்திடுச்சு” என்றார். ஐயோ! என்றானது கன்யாவிற்கு.
இன்றும் அவளிற்கு யெஸ்வந்த் டேபிலேளில் பிரியாணி இருக்க, அதை உண்ணும் மூடே இல்லை அவளிற்கு… யெஸ்வந்த் “வா… வா… என்ன ஸ்பைசி ப்பா… செம்ம, என்ன டிஷ் இது” என புகழ்ந்தபடி கேட்டுக் கொண்டிருந்தான்.
கன்யா “அரிசியும்பருப்பும் சாப்பாடு” என்றாள், எதோ பதில் சொல்ல வேண்டும்மே என… யெஸ்வந்திற்கு அதெல்லாம் தெரியவில்லை உருளைகிழங்கு பொரியலுடன் வெளுத்துகட்டிக் கொண்டிருந்தான்.
கன்யா அதனை பார்த்து லேசாக சிரித்தபடி அமர்ந்து உண்ண தொடங்கினாள். இருவரிடமும் பேச்சு சென்றது யெஸ்வந்த் “என்ன சொல்றார் டாக்டர்” என்றான்.
கன்யா ஒன்றும் பேசவில்லை, எதையும் நண்பனே என்றாலும் அவனிடம் சொல்லும் மனம் இல்லை கன்யாவிற்கு… “ம்..” என்றபடி உண்ண தொடங்கினாள்.
யெஸ்வந்த்திற்கு இவளின் அமைதி எதோ செய்ய மேற்கொண்டு எதுவும் கேட்க்காமல்… “அப்புறம் மாமியார் வீட்டுக்கு போனதும் ஏதும் புதுசா… பெர்ப்யூம் போடல” என்றான்.
நண்பன், நண்பன் தானய்யா… இப்போது கன்யாவின் முகம் லேசாக மலர்ந்து “ம்… இருக்கு மறந்திடாம கேளு… டீ டைம்ல தரேன்…” என்றவள். “என்ன ஊருக்கு போறியா… மார்ச்சு முடிஞ்சி “ என அவனின் பேச்சில் இயல்பாய் கலந்தாள்.
சற்று நேரம் இப்படியே பேச்சு சென்றது… யெஸ்வந்த்… “இந்த சண்டே கார்த்தி பார்க்க போகணும்.. நீயும் வந்திடு, ஒரே இடத்தில் இரண்டு போரையும் பார்த்திடுறேன்… “ என்றான் பொறுப்பாய்
கூடவே “நேத்து டாக்டர், வந்திருக்கார் எனக்கு இன்ட்ரோ கொடுக்கல… ம்..” என்றான் குறைபட்டவனாக.
கன்யா “இல்ல ப்பா, நேத்து அவர் வரதே தெரியாதுப்பா, இன்னிக்கு, அவர் அவுட்ஆப் ஸ்டேஷன், அதனால, அப்புறமா ஒரு நாள்… நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா… ஒகே” என்றாள் மலர்ந்த முகம் வாடாமல்.
இருவரும் சப்பிடத்தை விட நிறைய பேசினார்… நண்பனாக அவளின் வேறுபாடு புரிந்தாலும், தான் கேட்பது சரிவராது என எண்ணினான் யெஸ்வந்த். எனவே, பேச்சின் மூலம் அவளை கொஞ்சம் தேற்றியிருந்தான்.
நேரம் சென்றது… கன்யா, இன்று விரைவாகவே வீடு வந்திருந்தாள். சதா கிளம்பிவிட்டதாற்கான சுவடு தெரிந்தது வீட்டில், சற்று யசோதா, உரக்க பேசிக் கொண்டிருந்தார்.
யார் சொல்வது அவளிடம் சதாவை, தவிர எல்லோருக்கும் குரல் ஜாஸ்திதான்… என. அவனிருக்கையில் இப்படிதான் வீடு.. அமைதியாகிவிடும்.
ஏதோ, அன்னை மகளுக்குள் விவாதம்… யசோதா ”இல்ல ம்மா… நான் கிளம்பறேன்… நீங்க பாருங்க, பிக்ஸ் ஆனவுடன், சொல்லுங்க வரேன்” என்றார்.
கல்யாணி “வேண்டாம் யசோ… நீ இன்னும் ஒருவாரம் இரு… சதா வரட்டம், ஏதோ ஒன்னு பேசி முடிச்சிட்டு நீ போ” என்றார்.
கன்யா இதை காதில் வாங்கியபடியேதான் சென்றாள், அவளிற்கு தெரியும் சண்முகத்திற்கு பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என, எனவே அதனை பற்றிய பேச்சுதான் என புரிந்தது… அப்படியே சென்று “அத்த காபி” என்றாள். கையில் பஜ்ஜி கொடுத்து.. “சாப்பிடு தரன்” என்றார் கல்யாணி.
அதன்பிறகு பேச்சு வேறு திசை நோக்கி சென்றது… சதா எப்போது சென்றான்.. என்ன சாப்பிடான்… எப்படி சென்றான், எப்போது வருவான், என்ன சொன்னான்… என எல்லாம், எல்லாம் படம்பிடிக்காத குறையாக சொன்னார் தன் மருமகளிடம், கல்யாணி.
கன்யாவும் ஏதும் சொல்லாமல் கேட்டுக் கொண்டாள், பேச்சு வெகு நேரம் சென்றது… சண்முகமும், வெங்கட்டும் சேர்ந்து கொள்ள, நேரம் போனதே தெரியவில்லை கன்யாவிற்கு… எல்லோரும் உண்டு கொண்டிருக்க, சதாவிடமிருந்து போன் வந்தது அவளிற்கு…
அவளின் போன் அங்கேயே டைனிங் டேபிள் மேலேயே இருக்க, எல்லோரும் இருக்கவும் அட்டென் செய்யாமல் இருக்க முடியாதே… சிரித்த படியே “ஹலோ “ என்றாள்.
“சரி மேல வந்திட்டு கூப்பிடு… ஒரு புக்ல ரெப்ரன்ஸ் எடுக்கணும்” என்றான்.
“ம்,….” என்றாள்.
எல்லோரும் அவள் முகத்தையே பார்க்க… அந்த பார்வை பொருக்க முடியாமல்… “ ஏதோ ரெப்ரன்ஸ் புக் வேணுமாம், மேல போயிட்டு கால் பண்ண சொன்னாங்க” என்றாள் மெல்லிய குரலில்.
அப்படியா எனும் விதமாக எல்லோரும் தங்கள் வேலையை பார்த்தனர். அப்பாடா என பெருமூச்சு விட்ட படி எவ்வளவு பொறுமையாக உண்ண முடியுமோ, அவ்வளவு பொறுமையாக உண்டாள்.
எல்லோரும் கை கழுவி முடித்து, ஹாலுக்கும் சென்றிருந்தனர், அப்போதும் கல்யாணியுடன் ஏதோ ஒரு பாடாவதி சீரியல் பற்றி பேசியபடியே… கையை கழுவாமல்… அமர்ந்திருந்தாள்.
கல்யாணி, டிபன் முடித்து… இரவு பால் கலக்க சென்றுவிட்டார், இன்னமும் இவள்… நெட்டிதள்ளிக் கொண்டிருந்தாள்…
சதா, இப்போது அழைக்க… கல்யாணி “போ கன்யா, அவனுக்கு பாரு… உனக்கு பால் அப்புறமா மேல வந்து தரேன் “ என்றார். கடைசியாக இப்படி விரட்டவும்தான் எழுந்து மேலே சென்றாள்.
சதா திரும்பவும் அழைக்க… எடுக்கவில்லை அவள். மீண்டும் இரண்டுதரம் வீடியோ கால் மாற்றி அழைத்தும் எடுக்கவில்லை.. திரும்பவும் பத்து நிமிடம் சென்று வீடியோ கால் அழைக்கவும்… பொருக்க முடியாமல் எடுத்தாள்…
கன்யா, அவனை பார்பது விடுத்து, ஒரு ஸ்டான்ட்டில் போனை வைத்துவிட்டாள், குரல் மட்டும் வந்தது “என்ன புக் வேணும்” என்று… என்ன காரம்டா சாமி குரலில்.
சதா அவளை தேடினான்… அவளை காணாமல், அவளின் குரலுக்கு, பதில் தராமல் அமைதியாக இருந்தான்… கன்யா “என்ன வேணும்ன்னு… சொன்னீங்கன்னா… பரவாயில்ல, எனக்கு தூக்கம் வருது…” என்றாள் அந்த போனின் முன் வந்து நின்றபடி… இடுப்பில் கைவைத்துக் கொண்டு..
கன்யா முறைக்க தொடங்க… “எவ்வளோ நேரமா சாப்பிட்ட… அப்படி என்னதான் சாப்பிட்ட..” என்றான்.
அங்கிருந்த சேரில் அமர்ந்து கொண்டாள் பதிலே சொல்லவில்லை… “உன் பதில் மெசேஜ் கேட்டேன். ப்பா, என்னா பேச்சு அதுக்குதானே நேத்து வாங்கின, மறந்து போச்சா, இப்படி கூட கூட பேசிதானே வாங்கின” என்றான்.
கன்யா “எனக்கு தூக்கம் வருது… பாய்” என போனை எடுக்க..
“வெயிட்… இப்போ என்ன அவசரம்” என்றவன் எதோ புக்கின் பெயர் சொன்னான் இத்தனையாவது பேச்ஜ் என்றான் அதனை பாக் கேமராவில் காட்ட செய்து எழுதிக் கொண்டான்.
அந்த வேலை முடிந்தது “கார்த்தி எனக்கு போன் பண்ணார்” என்றான்.
கன்யாவின் கண்ணில் நீர் வந்தது…. கரகரத்த குரலில் “என் அண்ணன் கிட்ட பேச யாரும் சொல்ல வேண்டாம்” என்றாள்.
சதா “ப்ரண்ட் கேமரா ஆன் பன்னு” என்றான்.
“எதுக்கு” என்றாள்.
“ச்சு… சும்மா கேள்வி கேட்காத, எனக்கு பதிலே தெரியல… போடுடி” என்றான்.
கன்யா ஆன் செய்ய “ப்பா… எப்ப பார்த்தாலும் அழுகை… உனக்கு, கண்ணீர் சுரப்பி அதிகமா இருக்கும்ன்னு நினைக்கிறேன்…” என்றான்.
கன்யா “என்னை பத்தி ஆராய்ச்சி பண்ண வேண்டாம்… எனக்கு மரியாதை கொடுக்கிறவங்க கிட்ட மட்டும்தான் என்னால பேசவே முடியும்… “ என்றவள் வீடியோ கால்ஸ்சை கட்டு செய்துவிட்டாள்.
திரும்பவும் சதா அழைக்க.. அழைக்க.. மீண்டும் மீண்டும் கட் செய்தாள்…
சதாவிற்கு மண்டை காய்ந்தது… “எப்பையோ கல்யாணம் செய்துட்டு… இன்னும் போன்ல பேசிக்கிட்டே இருக்கியேடா” என அவன் மனம் நக்கல் செய்ய… தலையில் கைவைத்து அமர்ந்து கொண்டான்…
ம்கூம்… யார் விட்டா அவனை, அவனின் ஸ்கைப் கால்.. அவனை அழைக்க தொடங்கியது… கன்யாவின் முகமும் அவளின் கோவமும் பின்னே சென்றது… அமைதியான டாக்டர் சதாசிவம்மாக அமர்ந்து கொண்டான். அந்த மலர்ந்த முகத்துடன் இரவு இரண்டு மணி வரை ஏதேதோ வேலை சென்றது….
அதன் பிறகு உறங்கத்தான் முயன்றான் சதா… அவனின் நினைவு முழுவதும்.. இறுதியான அவளின் கடுகடு முகமே வந்து, அவனை படுத்த தொடங்கியது…
எத்தனை தரம் திரும்பி திரும்பி படுத்தும்… மனம், அவள் நினைவிலிருந்து திரும்பவில்லை… சதாவின் உள்ளம் “படுத்தராய்யா… எத்தனை வருஷம் நிம்மதியா இருந்தேன், இப்போ பாரு நாளே நாள்ல்ல.. புலம்ப விட்டுட்டா” என திட்டி தீர்த்தான்… செல்லமாகதான்.