மாலை கன்யாவின் வீட்டிலிருந்து எல்லோரும் வந்திருந்தனர்… கன்யா எதையும் முகத்தில் காட்டாமல் “வாம்மா…” என்றே அழைத்தாள்.
மைதிலிக்கு, தன் பெண்ணின் மாற்றம் நன்கு கண்ணுக்கு தெரிந்தது… முகமெல்லாம் பூரித்து… சோபையாக இருக்க, ஏதோ அழகுடன் கூடிய கர்வமாக வலம் வந்தாள் அந்த வீட்டில் கன்யா…
எல்லாமும் தானே செய்தாள் கன்யா, பெரிய ஒட்டுதல் அவளிடம் ‘இதைத்தானே நான் வேண்டும் என்று நினைத்தேன்’ என மைதிலிக்கு ஒரு நிம்மது.
மைதிலியால் இதை உணர முடிந்தது. முன்பும் தன் வீட்டு மனிதர்களுடன் பேசுவாள்தான்… ஆனால் இப்போது உரிமை கூடி தெரிந்தது, மைதிலி அமைதியாக பார்த்தபடியே அமர்ந்திருந்தார்.
கீர்த்தி வருவதால், வெங்கட் தனது தம்பியையும் அழைத்திருந்தார். எனவே வீடு களைகட்டியது. கன்யா இங்கும் அங்கும் பரபரப்பாக வேலையை செய்யவும்… பேசவும்.. என கன்யா பிஸியோ பிசி… அதுவும் இப்போது தன் அண்ணனை பார்த்ததும் இன்னும் முகம் தெளிவாக இருந்தது.
கன்யா, கீர்த்தியிடம் “வாங்க அண்ணி” என சொல்லி அவளை போலவே பேச்சை நிறுத்திக் கொண்டாள்…
மாலை இவர்கள் ஐந்து மணிக்கே வந்துவிட்டனர்… லேசான டிபன்னுடம் காபியும் குடித்து, அந்த ஸ்னக்ஸ் டைமும் முடிந்தே போனது, வரவில்லை சதா…. எல்லோரும் அவனிற்காகவே காத்திருந்தனர்.
ஏதோ பேச்சு ஓடிக் கொண்டிருந்தது. இப்போதுதான் வந்து அமர்ந்தாள் கன்யா… அதனை பார்த்த கார்த்தி, தன் தங்கையின் அருகில் வந்து “ஏன் டா கனி, என்கிட்ட கூட சொல்லவேயில்ல வீடு வாங்கின விஷயத்தை நீ… உங்க அத்தைதான் சொன்னாங்க… அந்த அளவுக்காக தள்ளி வைச்சுட்ட என்னை” என்றான் வெறுமையான குரலில்.
“இல்ல ண்ணா.. எனக்கே நேற்றுதான் தெரியும் சாரி ண்ணா” என்றாள்.
ஏதோ இப்போதெல்லாம் தன் தங்கை தன்னிடம் எதையும் சொல்லவதில்லை எனத்தான் தோன்றியது அவனிற்கு. அவள் எப்படி இருக்கிறாள் இந்த வீட்டில்… என்ன நடக்கிறது அவளை சுற்றி என எந்த விவரமும் தெரியைல்லை அவனிற்கு.
இப்போது அவளின் முகம் பார்க்கும் போது எல்லாம் சரியாக நடப்பதாக தோன்றினாலும்… அவளின் வாய்மொழியாக கேட்டால் நன்றாக இருக்குமே எனதான் தோன்றியது.
முன்பே, போன் செய்யும் போதெல்லாம் ஜாடையாக கேட்டு பார்த்தான்… ஒன்றும் சொல்லவில்லை அவள். ஆனால் அவளின் குரல் சொல்லியது அவளின் குதுகலத்தை எனவே கார்த்திக்கு ஆசுவாசமே.
இப்போது இன்னும் மகிழ்ச்சி… “என்ன சொல்லு, என் மச்சான் வந்த உடனே, என் தங்கச்சி பெயரில் வீடு வாங்கிட்டார்… எதுவும் விட்டு போயிடாது” எனதான் தன் மனைவியிடம் பெருமையடித்துக் கொண்டான் கார்த்தி.
கீர்த்திக்கும் அப்படிதான்… எப்போதும் கன்யாவின் மேல் நல்ல எண்ணமே, தன் அத்தை சொல்லியே, அவளுடன் பேசுவதை தவிர்த்தாள் கீர்த்தி. எனவே தன் கணவனின் பேச்சில் ஒன்றும் பெரிதாக தோன்றவில்லை போல அவளுக்கு.
இப்போது கார்த்தியும், கன்யாவும் பேசிக் கொண்டிருக்க… அருகில் வந்து அமர்ந்தாள் கீர்த்தி “எப்படி இருக்கீங்க அண்ணி…” என தானே கேட்கவும், உரிமையாக முறைத்தாள் கன்யா.
கீர்த்தி தானே “இல்ல, கன்யா” என தன் அழைப்பை சரி செய்யவும், கன்யா இயல்பாய் பேசினாள் அவளுடன் “என்ன எப்படி பார்த்துக்கிறார் என் அண்ணன்… தோப்புகரனும் போடலன்னா… சொல்லு, லெப்ட் ரைட் வாங்கிடலாம்… அவனை” என்றாள் தன் அண்ணனுடன் பேசியது மறந்து.
கீர்த்திக்கு இப்போதுதான் தான் செய்தது தவறோ என எண்ணம் வந்தது. கீர்த்தி “அய்யோ… நீங்க எப்படி இருக்கீங்க “ என்றாள் அவர்களின் பேச்சில் இயல்பாய் கலந்து. இப்படியே நேரம் சென்றது.
சதா, இப்போதுதான் வந்தான்… கன்யா அவனின் அரவம் உணரவும், நிமிர்ந்து ஒருதரம் பார்த்துவிட்டு தன் அண்ணனுடம் பேச தொடங்கினாள்.
சதா உள்ளே வந்து எல்லோரையும் பார்த்து இன்முகமாகவே வரவேற்றான்… கூடவே என்ன விஷயமோ என மனம் எண்ண தொடங்கியிருந்தது.
அனைவரிடமும் முறையான வரவேற்புக்கு பிறகு… அப்படியே அமர்ந்து கொண்டான். மேலே சென்றுவிட்டு திரும்ப வந்து, பேசி… என எண்ணி அமர்ந்து கொண்டான்.
பொதுவாக டூட்டி முடிந்து வந்தால்… சத்தம் செய்யாமல் மேலே சென்று, ஒரு குளியல் போட்டுதான் கீழே வந்து அமர்வான்…
இன்று எல்லோரும் இருப்பதால்… வசதியாக அமர்ந்து கொண்டான். ஆனால், முகத்தில் அத்தனை களைப்பு… ஆனாலும், சதாவின் கண்கள் அத்தனை ஆர்வமாய்… தன் மனையாளை நோக்கியது.
அருகில் வருவாளா… இல்லை, ஏதாவது பாவம் அவள் முகத்தில் வருமா… நம்பிக்கை பாவம் வேண்டாம், கடைசி கடைசியாக… சந்தோஷ பாவமாவது மின்னுமா என பார்த்தே கிடந்தான் சதா..
எங்கே, இவ்வளவு நேரமும் தன் அண்ணனை தவிர அவளின் பார்வை மருந்துக்கும் தன் மணாளனை தீண்டவில்லை. கல்யாணி “கனிம்மா… சதாவ பாருடா…” என்றார்.
கன்யாவும் வேண்டும் என்றே… அப்போதுதான் அவனை பார்த்தது போல… அருகில் வந்தாள், சதாவிற்கு இது என்ன பாவம் என புரியவில்லை. கன்யா “சாப்பிட்டீங்களா… இல்ல எடுத்து வைக்கவா” என்றாள் மெல்லிய குரலில்.
சதாக்கு உள்ளுக்குள் பற்றியது… ‘பார்த்து முத்து உதிர்ந்திட போகுது…’ என மனதில் நினைத்தபடி, இப்போதும் அலட்டாமல் “இல்ல ம்மா.. சாப்பிட்டேன்… நான் போயி படுக்கிறேன்… நைட் கால்ஸ் இருக்கு…. “ என்றவன் எல்லோரையும் பொதுவாக ஒருதரம் பார்த்து, தலையசைத்து விடை பெற்று சென்றான்.
அப்போதும் அவனின் மனம் கேட்டகவில்லை, தன் மனையாளை ஓர கண்ணால் பார்க்க… அவள் கருமமே கண்ணாக தன் அண்ணனுடன் அமர்ந்து கொண்டாள்.
சதாவின் மனம் சோர்ந்து போனது “போடி..” என எண்ணியபடி மேலே சென்றான்… சின்னதாக குளியல் முடித்து… வெளியே வரவும்…
கன்யா, கையில் சின்ன பாக்சுடனும்… ப்ளஸ்க்குடனும் வந்தாள் அறையினுள்…
ஏக சந்தோசம் சதாவிற்கு… ஏதோ இருதய வால்வில் அடைத்ததெல்லாம்… ஆஞ்சியோ மூலம் சரி செய்தது போல… அப்படி ஒரு பெருமூச்சு அவனிடம்.. ஆணாக இல்லையென்றால்… கண்ணில் நீர் கசிந்திருக்கும்… உள்ளே வந்தவளை வாஞ்சையாக பார்த்தான்… ஏதும் பதில் பார்வை இல்லை… அவளிடம்.
கன்யா கையில் உள்ளதை டேபிளில் வைத்து விட்டு திரும்பவும், யோசிக்காமல் இறுக்கி அனைத்துக் கொண்டான் கனியை, சதா.
எங்கே விட்டால், தன்னை தனியே விட்டு சென்றுவிடுவாலோ என எண்ணினான் போல, அணைப்பை தளர்த்தவேயில்லை… இறுகிக் கொண்டே சென்றது.
கன்யா “எ… ஷி… ஷிவா…” என்றாள் திணறி.
அவளின் வார்த்தை புரிந்தவனாக… தன் பெயரை அவள் வாய் மொழியாக கேட்கும் எண்ணத்தில்… பட்டென விட்டான் அவளை… மூச்சு வாங்கியபடியே… அவள் நிற்க… சதா “என்ன சொன்ன.” என்றான்.
கன்யா, திரும்பிக் கொண்டு அவனிற்கு ஸ்னாக்ஸ் எடுத்தபடி “ஏன் காது கேட்காதா… அதெல்லாம் கோல்டன் வோர்ட்ஸ்… சும்மா சும்மா சொல்ல முடியாது… இன்னொரு தடவ, அதே மாதிரி கட்டி பிடிங்க சொல்றேன்…” என்றாள் அதிராமல்
சதா, பூரித்து போனான்… அவளின் ஆசை படியே இன்னொரு முறை இன்னும் இறுக்கி அனைத்து கொண்டே… அவளிடம் “ம்… இப்போ சொல்லு” என்றான் மெல்லிய குரலில்.
கன்யா “ஷிவான்னு சொன்னேன்… ஏன் காது கேட்கலையா” என்றாள் முறைத்தபடியே.
சதா, உச்சி முத்தம் வைத்து “சூப்பர்… அதை கொஞ்சம் சிரிச்சிகிட்டேதான் சொல்றது” என்றான். அணைப்பை இறுக்கியபடி..
கன்யாவின் முகம் அவனின் வார்த்தையில் இலக… அவனின் முகம் பார்த்து “என்ன… சொல்லணும் ஷிவா” என அழுத்தம் திருத்தமாக சொல்ல..
சதா மனதில் ‘எப்போதும்… அழுத்தம்தான்’ என நினைத்தவன் “இத கேட்டா, இன்னுரு வீடு வாங்கி தரலாம் போலயே..” என்றான். கன்யா சட்டென விலகினாள்…
அவனை தன்னால் முடிந்த மட்டும் முறைத்தபடியே… “ஓவரா சம்பாதித்தால் இப்படிதான் புத்தி போகும்… போடா” என்றாள் அவனை விட்டு விலகியபடியே…
சதா, அவள் கையிலிருந்த தட்டை வாங்கியபடியே அவளின் கையை பிடித்து கொண்டு அமர்ந்தான் அங்கிருந்த சேரில். “இரு டி” என்றவன் தட்டிலிருந்த குழி பணியாரத்தில் ஒன்றை எடுத்து அவளுக்கு கொடுக்க… பேசாமல் வாங்கி உண்ண தொடங்கினாள், அவன் அருகில் அமர்ந்து.