சதாவிற்கு இருந்த பசியில் உண்டு முடித்தே நிமிர்ந்தான், கன்யாவும் அது புரிந்து போல, காபியை கபில் ஊற்றி கொடுக்க… அதனை குடித்து முடித்தே இவளை பார்த்தான் “என்ன, வீட்டுக்கு போய் பார்த்தியா” என்றான்.
சதா “வீடு பார்த்தியா, எப்படி இருக்கு, பிடிச்சிருக்கா…” என்றான், அவளின் மனமறிய எண்ணி.
கன்யா எல்லா சாமான்களையும் எடுத்து வைத்துக் கொண்டே “நான் தனியாவெல்லாம் அங்க போக மாட்டேன்… நீங்க எப்போ வரீங்களோ சேர்ந்து போகலாம்… ப்ரீ ஆகிட்டு சொல்லுங்க ஷிவா” என அவள் சாதரனாமாக சொன்னாள்.
சதாக்கு அவளின் நிலை புரியத்தான் செய்கிறது… “போலாம்…” என்றவன் அவளின் அருகில் வந்து நின்றான். அவளை அனைக்கும் எண்ணத்துடன். அவளின் கைகளில் பாத்திரங்கள் பார்த்ததும்… “சரி நான் படுக்கிறேன்… வேலையிருக்கு” என்றான்.
கன்யா “எல்லோரும் கீழ இருக்காங்க… பத்து நிமிஷம் வந்துட்டு போங்க” என்றாள் அதிகாரமாக.
சதா முகம் சுருங்க, “ப்ளீஸ்” எனும் விதமாக பார்க்க… கன்யாவும் “சரி, வாங்க” என்றவள் கிளம்பிவிட்டாள்.
சதா அப்படியே படுத்தவன்தான் உறங்கிவிட்டான். சதாவுக்காக எல்லோரும் காத்திருக்க… கன்யா ஒருமணி நேரம் சென்று போனில் எழுப்பினாள் அவனை. அதன் பிறகுதான் எழுந்து கீழே வந்தான்.
கார்த்தியும், கீர்த்தியும் முறையாக மறுவீட்டு விருந்துக்கு அழைத்தனர்… சதா “அப்பாடி ஒரு வாரமா… ஒருநாள் வரோம், விருந்து போடுங்க… நைட் ஸ்டே பண்றதெல்லாம் முடியாத காரியம்… வேண்ணா… கனி இருந்துட்டு வரட்டும்… எனக்கு கால்ஸ் இருக்கு கார்த்தி… நோ பார்மால்டில் கார்த்தி.. .உங்களுக்கு புரியும்” என்றான் மெல்லிய குரலில் ஸ்திரமாக.
கார்த்தி, கன்யாவை பார்க்க, கன்யா தன் அத்தையை பார்க்க… கல்யாணியும் “அவன் வேலை அப்படி சம்மந்தி.. நீங்க ஒருநாள் கூட்டி போய் விருந்து வைச்சு அனுப்புங்க… அப்புறம் எப்போ தோதுபடுதோ அப்போ வரட்டமே… எல்லாம் உள்ளூர் தானே” என்றார் அவரும் மைதிலியிடம்.
மைதிலி என்ன செய்வார் பாவம், ஒன்றும் செய்ய முடியாத நிலையில் “சரி… மாப்பிள்ளை, இந்த வாரம் வந்திருங்க” என்றார் சமாதனாமாக
எல்லோரும் இரவு உணவு முடித்து… கார்த்திக்கும், சதாவும் பேச தொடங்கவும்… சற்று நேரம் அமர்ந்து கொண்டது கன்யாவின் வீடு.
எனவே இப்போதுதான் மைதிலி தன் பெண்ணை தனியே கிட்செனில்… பார்க்க, பேசினார் தன் பெண்ணிடம் “கனி, வீட்டுக்கு மாப்பிளையோட வாடாமா… நீ வந்து ஒரு வாரமாவது இருந்துட்டு போயேன்…” என்றார் வாஞ்சையாக.
கன்யா “எதுக்கு, நான் வந்தா துரத்தி அடிக்கவா… போ போ… நீ உன் பையனையே பாரு… வந்த புள்ளைய திட்டி அனுப்பிட்டு, இப்போ வந்து சமாதானம் பேசுரீயா… எங்கப்பா இருந்திருக்கணும்” என சொல்லியவளின் கண்ணில் நீர் வர…
மைதிலி “என்னடி… என்ன சொல்லிட்டேன்… இப்படி கலங்கற… அப்படியெல்லாம் இல்லடி, நான் ஏதோ.. எ… எனக்கு எதுவுமே சரியாகாதோன்னு தோனிடிச்சி… அதான். இப்போதான் எல்லாம் சரியா இருக்கே… அப்பா இருந்தாலும் அப்படிதான் நினைத்தி ருப்பார், நீ வா… இப்படி எல்லாம் யோசிக்காத” என்றார்.
கண்களை துடைந்த்து கொண்ட கன்யா… “போ… நான் வரல, நீ என்ன சொன்னாலும் நீ சென்சது தப்புதானே… போ” என தன் அன்னையை காய்த்து எடுத்து விட்டாள்.
எல்லோரும் பேசி முடித்தும் கார்த்தி “அம்மா… ம்மா” என அழைத்தும் காணவில்லை அவரை. சற்று நேரம் சென்றுதான் மைதிலி கண்ணை துடைத்தபடி வர, கன்யா அவரை மிரட்டிய படியே “என்ன சொன்னேன் இப்போ, வரேன் மா…“ என ஏதேதோ பேசியபடியே வந்தாள்.
இப்படியேதான் சமாதனம் செய்து அனுப்பினால் தன் அன்னையை. நேரம் கடக்க.. சதாவிற்கு கால்ஸ் வரவும், சதா எல்லோரிடமும் விடைபெற்று கிளம்பினான்.
அதன்பிறகு கார்த்தியின் வீட்டினர் கிளம்பினர்… நேரம் கடக்கத்தான் செய்தது. வெங்கட் கல்யாணியும் அவர்களை அணுப்பிவிட்டு அமர்ந்திருக்க, அவர்களுடன் சற்று நேரம் பேசிய பின்பே மேலே வந்தாள் கன்யா…
சிறிது நேரம் வெளியே உலவிக் கொண்டிருந்தாள். சதா வந்துவிடுவான் என எண்ணி இவள் இருக்க.. நேரம் சென்றது சதாவின் குரல் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. அவனை காணவில்லை.
மேலும் சதாவின் குரலில் அவ்வளவு மென்மை, அதனையும் தவிர… யாருக்கு எதையோ சொல்லும் வலி… கன்யா, மெதுவாக அங்கு அவனின் கால்ஸ் பேசும் இடத்திற்கு, ஸ்க்ரீன்னை விளக்கி உள்ளே செல்ல… சதா அங்கு ஒரு சின்ன பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தான்.
மானிட்டரில் தெரிந்த அந்த பெண்ணின் முகம்… ரோஜா பிங்க் நிறத்தில் இருக்க… அவளின் கைகளில் உள்ள டிஷ்யுவால், தனது கண்களை துடைத்தபடியே பேசிக் கொண்டிருந்தாள், அந்த பதின்ம வயது பெண்.
ஏதோ ஒரு ஹாஸ்பிட்டல் சீருடை.. கூடவே அதற்குன்டான உபகரணங்கள் என கொஞ்சம்.. படபடப்பாகவே இருந்தது கன்யாவிற்கு.
அந்த சின்ன பெண் பேசுவது காதில் விழவில்லை என்றாலும், சதா அவளை சமாதனம் செய்து கொண்டிருந்தான்… தாழ்ந்த குரலில் … ஏதேதோ வார்த்தைகள் இவள் காதில் விழவில்லை. ஆனால் சதாவும் சோர்ந்து தெரிய, அவனின் அருகில் சென்று அவனின் தோளில் கை வைக்க…
சதா “டேக் ஸ்லீப் கனி… போ.. ப்ளீஸ்” என இவளிடமும் இறைஞ்சினான்.
கனியும், அங்கிருந்து வந்துவிட்டாள்தான் ஆனால், தூக்கம் வரவில்லை. அமர்ந்தே இருந்தாள். இன்னும் ஒரு மணி நேரம் சென்று சதா வந்தான். அது வரை அந்த பெண்ணின் தாக்கம் இருந்தது அவளுள்.
கன்யா “என்னாச்சுங்க, ஏன் அழுகுறா அந்த பொண்ணு” என இவள் அடி வயிறு கலங்க கேட்டாள், ஏனோ அந்த பெண்ணின் முகம் அப்படி ஒரு பாதிப்பை தந்தது அவளுள்.
சதா ஏதும் சொல்லாமல் அமைதியாக அவளை பார்த்த படி இருந்தான்… கன்யா “ஏங்க என்னாச்சு… பிரச்சனையா” என்றாள்.
சதா “இல்ல, காலையில் சொல்றேன்… இப்போ அவ சிட்சுவேஷன கேட்டா உன்னால் தூங்க முடியாது” என்றான் தலை கோதி, எதையோ தன்னுள் அடக்குபவனாக.
கன்யா “பரவாயில்ல… எனக்கு தூக்கமே வரல, சொல்லுங்க” என்றாள்.
சதா, பெருமூச்சு விட்டபடி “அக்சிடென்ட்…. சும்மா இல்ல, ஒரு பெரிய கண்டைனர் வந்து மோதிடுச்சி… இவர்களின் கார் வந்த வேகத்துக்கு, எல்லோரும் மொத்தமா பறந்து போயிட்டாங்க… தூக்கி வீசிடுச்சு…
ஆனா, அவங்க அப்பா மட்டும் அந்த கண்டைனர் வீல்ல, சிக்கிட்டாறு… மேல ஏறிடுச்சி… இந்த பெண்ணுக்காகவே அவரின் இருதயம் துடித்தது போல…
ஹாஸ்பிட்டல் வரும்போதே எல்லாம் செயலிழந்து வந்தார். அப்படிதான் க்ரேசும்.. அந்த பெண்ணோட பேரு. கிட்ட தட்ட பயத்தில் இருதயம் அவளுக்கு துடிப்பை நிறுத்த, அவளின் தந்தையின் இருதயம்… நன்றாக துடிக்க, அடுத்த ஒருமணி நேரத்தில், ஹார்ட் டரன்பரேட் செய்தாகிவிட்டது.
அதன் பிறகு அவளின் உடல் நிலை எண்ணி, பதினைந்து நாட்கள், அவளிடம், அவளின் தந்தையின் மரணம் பற்றி மட்டும் சொன்னது. அப்போதே அவளின் அழுகையில் வீசிங் வந்து… மேலும் படுத்த தொடங்கியது…
இப்போதுதான் கொஞ்ச கொஞ்சமாக சரியாகி வருகிறாள்… தன் தந்தையின் பெற்றோரிடம் வளர்கிறாள்… யாரோ வீட்டுக் வந்தவர்கள் ஏதோ பேச்சு வாக்கில் சொல்லிவிட, நேற்று மீண்டும் அவளிற்கு உடல் நலம் சரியில்லை…
நான்தான் அவளின் எல்லாம் பார்த்து வந்தேன், வரும்போது அவளிற்கு அறுதல் சொல்லி வந்தேன்… அதனால் இப்போது உண்மையை சொல்லுங்கள் என என்னிடம் ஒரே போராட்டம் …
என்ன செய்யமுடியும் நடந்தது இல்லை என்று ஆகாதே… அதான் அவளிடம் சில பல சத்தியம் வாங்கிக் கொண்டு… எல்லாம் சொன்னேன்… என்ன சொன்னாலும் எனக்காக தான், என் அப்பாவை கொன்றீர்களா என புரியாமல் புலம்புகிறாள்… எதையும் புரிந்து கொள்ள முடியாத குழந்தை அவள்… விபத்தில் அவளின், அம்மாவும் தவறிவிட… பாவம் அந்த வயாதான தம்பதியை…. சிலசமயம் படுத்தி வைத்துவிடுவாள்…” என லேசான சிரிப்புடன் தான், சொன்னான் சதா.
கன்யாவின், கண்ணில் கரகரவென கண்ணீர்.. அந்த குழந்தையின், கண்ணும் அவளின், தையல் போட்ட பகுதியும், கண்ணகளை துடைத்து கொண்டு அவ்வளவு சோகமாக பேசிய அந்த குழந்தையின் முகம் அவளை படுத்த… சதாவின், தோளில் சாய்ந்து கொண்டு எதையோ வெறிக்க தொடங்கினாள்.
சதா “பாத்தியா, இதுக்குதான் சொல்ல மாட்டேன்னு சொன்னேன்… பாரு… எப்படி அழறேன்னு” என்றான் கண்டிக்கும் குரலில்
கன்யா “எப்படி இப்படி சாதரணமா பேசுறீங்க… என்னால, பேசவே முடியல” என அவனை குற்றம் சொல்லும் பார்வை பார்க்க..
சதா “நான் சோகமா இருந்தா எல்லாம் சரியாகிடுமா…. என்னால என்ன முடியுமோ செய்தாச்சு… இனி அவரவர் பயணம்… எனக்கு இதில் ஒரு சின்ன இடம் அவ்வளவுதான்… “ என்றான் யாரிடமோ சொல்லிவிட்ட பிறகு அவனிற்கும் சற்று மனம் தெளிந்தது போல… பழைய சதாவாக அலட்டாமல் சொன்னான்..
கன்யாதான் இதை நினைத்து இரவு முழுவதும் விழித்தே கிடந்தாள்.