அப்படி இப்படி என இரண்டு மாதம் சென்றிருந்தது. கன்யா வேலையை விட்டு ஒரு மாதம் முதல், இதே வேலையாக செய்து தன் கொழுந்தனுக்கு திருமணத்தை நிச்சயித்து விட்டாள்.
ஷணமுகத்திற்கு கல்யாண யோகம் கூடி வந்தது. எப்படி… யார் மூலம் என்றெல்லாம் கேள்வியே இல்லை. எல்லோரின் ஒரே பதில் கன்யாதான்.
சதா, இதனையும் சத்தமில்லாமல் கவனித்து கொண்டு இருந்தான். எதிலும் கலைக்கவேயில்லை… தானுன்டு, தன் வேலையுண்டு எனதான் இப்போதும்.
ஆனால், எல்லாம் அவன் காதில் விழும் தன் அன்னை மூலம், முன் போல் அல்லாமல் ‘அப்படியா’ எனும் விதமாக கேட்டுக் கொள்ள பழகியிருந்தான் சதா. அதுவே கல்யாணிக்கு பரம திருப்தி.
எல்லாவற்றிக்கும் சேர்த்து கன்யா சுற்றினாள் பம்பரமாய். பத்திரிகை வைக்க, புடவை எடுக்க, மண்டபம் பார்க்க என எல்லாம் தன் மாமனாருடன் கன்யாதான் அலைந்தாள்.
எதற்கும் சதாவை எதிர்பார்க்கவில்லை. அவன் இப்படிதான் என பழகி இருந்தாளா, இல்லை சதா பழக்கி விட்டிருந்தானா தெரியாது. கன்யாவுக்கு வேலைகள் நடந்தது.
பரபரப்பான கல்யாண மண்டபம்… எல்லோரும் வாயிலேயே பார்த்திருந்தனர். கல்யாணிக்கு மனதேயில்லை… தன் பெரிய பையனை விட்டு எதுவும் செய்ய… ஆனால், என்ன செய்வது சதா, இன்னும் வரவில்லை.
தன் பெரிய பையன் திருமணம்தான் அவசர அவசரமாக நடந்தது. இதுவாவது நன்றாக நடக்க வேண்டும் எனத்தான் கல்யாணிக்கு ஆசை. எங்கே புரிந்தது சதாக்கு, இன்னும் வரவில்லை.
சபை நிறைந்திருந்தது எல்லா சொந்தத்துடனும். யசோதா அவரின் கணவர் பிள்ளைகள் என எல்லோரும் வந்திருந்தனர். சண்முகம், எதையும் காட்டாமல் நின்றிருந்தான்.
அவர்களின் புதிய சம்பந்திக்கும் பதட்டம் ‘நல்ல நேரம் செல்கிறதே’ என, இருந்தும் வெங்கட் முகத்தையே பார்த்திருந்தார் ஏதும் பேசாதவராக.
தன் பெண் சிங்கப்பூரிலிருந்த வர வேண்டும் என்பதற்காகவே முதல் நாள் நிச்சையம் வைத்திருந்தார் கல்யாணி. அதிலும் இப்போது சதாவை காணம்.
எல்லோரின் நிலை புரிந்த கன்யா, எப்போதும் போல “மாமா அவர் எமர்ஜின்சின்னு போயிருக்கார் மாமா… நாம ஆரம்பிக்கலாம், வெயிட் பண்ண வேண்டாம்” என்றவள்.
புதிய சொந்ததிடம் திரும்பி “என்ன சித்தப்பா… மணியாச்சி நீங்க ஆரம்பிங்க… அவர் வந்திடுவார்” என தன் வெண்கல குரலில் சொல்ல…
சண்முகம் தன் அண்ணியை மெச்சுதளாக ஒரு பார்வை பார்த்து, தன் அக்கா வீட்டுகாரரை ஒரு பார்வை பார்த்தான்.
அவரும் ஷன்முகத்தின் பார்வை புரிந்தவராக “ஆம்… மச்சான் வர லேட் ஆகும், நாம் எல்லா முறையையும் முடிச்சிடலாம்… அவன் வேலை அப்படி… உங்களுக்கும் புரியும்தானே “ என சபையில் சொல்ல, கொஞ்சம் தெம்பு வந்தது வெங்கட்டிற்கு… பின் அவரே பேசி எல்லா முறைகளையும் செய்தார்.
நிச்சையம் முடிந்து, பந்தி முடிந்து… பெண் மாப்பிள்ளை இருவருக்குமான போட்டோ சூட் முடிந்து, ஷண்முகம் தன் வருங்கால மனைவியுடன் லேசாக பேசிக் கொண்டிருந்தான்…. நேரம் நடு நிசியை தொட இருந்தது.
கன்யா, உள்ளே எல்லாம் எடுத்து வைத்து வெளியே வர… இவர்கள் இருவர் கண்ணில் பட “ஷண்முகம் சர்…. நீங்க என்ன… தலைகீழ நின்னாலும், இன்னிக்கு உங்க கையில மீராவ தர மாட்டாங்க… போங்க சார், போயி தூங்குங்க….” என்றாள் நக்கலாக சிரித்தபடியே.
ஷண்முகம் “அண்ணி… அண்ணன் வர வரைக்குதான்….” என இழுக்க… தீயாக பார்த்தாள் கன்யா, சம்முவை. சதாவின் நேரம் தெரியாதா என கேட்டது அந்த பார்வை.
கன்யா “என்ன தம்பி இது… பொண்ணு வீட்டில் என்ன நினைப்பாங்க… நீ போ மீரா…” என இப்போது அதட்டலாக சொல்லி மீராவை கைபிடித்து எழுப்பினால் கன்யா.
மீராவும் “அக்கா, அம்மா அப்போவே கூப்பிட்டு போயிட்டாங்க… திட்ட போறாங்க… இவர்தான்” என சண்முகத்தை ஒர கண்ணால் பார்த்து, குற்றம் சொல்லிவிட்டு கன்யாவுடன் தன் அறை நோக்கி சென்றாள்.
ஷண்முகம் சிரித்தபடியே அமர்ந்திருந்தான். கன்யா திரும்ப வந்து “போங்க தம்பி, நீங்க போயி படுங்க… மணியாச்சு… காலையில் நேரத்தில் எழனும்” என விரட்ட…
“அண்ணி…. ம்மா, ப்பா… தூங்கிட்டாங்களா..” என்றான் கால்களை இன்னொரு சேரில் நீட்டியபடியே.
“அண்ணி அண்ணன் வந்திடுவான்… நான் பார்க்கிறேன்… நீங்க போயி கொஞ்சம் படுங்க… எங்க, உங்க ரூம்… எங்க, இந்த அக்கா, நீங்க போயி படுங்க அண்ணி… நாங்க பார்த்துக்கிறோம்” என்றான். கன்யாவின் தலை மட்டும் சம்மதமாக அசைய… கண்கள் வாசலை பார்த்தபடியே இருந்தது.
திரும்பவும் ஷண்முகம் “அண்ணி… போங்க” என்றான் இப்போது இவன் அதட்டவும். கன்யாவும் தங்களுக்கென இருந்த அறையில் சென்று முடங்கினாள்.
மறுநாள், காலையில் நேரமே எழுந்தாகிவிட்டது. கல்யாண மண்டபம் பரபரப்பாக தொடங்கியது அதிகாலை ஐந்து மணிக்கே…
சதா, இபோது குளித்து… பட்டுவேட்டி…கட்டி, டார்க் ரெட் கலர் லினன் புல் ஹன்ட் ஷைர்ட்டில்… நெற்றியில் லேசான சந்தன கீற்றுடன், பதட்டமே இல்லாமல்… வேட்டி தடுக்க, தடுக்க… எப்படி நடப்பது என தெரியாமல் ஏதோ நடை பழகும் கம்பீரமான குழந்தையாக வந்தான்.
கன்யா தன் மணாளனை தூரத்திலிருந்தே பார்த்துவிட்டாள்… கோவமாக நகரத்தான் நினைத்தாள்… ஆனால், எங்கே.. அவனின் நடையிலும், அழகிலும் இமைதட்டதான் மறந்தாள் பாவை.
அப்போதுதான் உறவுகள் எல்லாம் விழிக்க… ஒருசிலர் மட்டுமே இருந்தனர். கார்த்தியும் பிரகாஷும் இரவு வேலை இருந்ததால் இன்னும் எழவில்லை.
வெங்கட்தான் வெளியே நின்றார் தன் மகனின் வரை பார்த்தவர்… ‘அப்பாடா… வந்துட்டாண்டா…’ எனதான் நிம்மதி பெருமூச்சு விட்டார். முகத்தில் எதையும் காட்டாமல் “வாப்பா… “ என்றார்.
கனி தன் மாமனாரின் அழைப்பை பார்த்ததும் தானும் ஒரு பெருமூச்சு விட்டபடி மறைந்தாள்… அவன் கண்ணில் படாமல்.
தங்களுக்கான அறையில் சென்று அமர வைத்தவர்… வெங்கட் “இரு காபி எடுத்து வர சொல்றேன்…” என்றவர் வெளியே சென்றார்.
கல்யாணி “ஏன் சதா, இப்படி பண்ற… கனி நைட் எல்லாம் தூங்கவே இல்ல… பாவம் போ… போயி பாரு அவள..” என்றார்… ம்கூம் சதா அசையவில்லை… “ம்..” என்றபடி அமர்ந்திருந்தான்.
சதா, வந்த செய்தி தெரிந்து எல்லோரும் ஒருபாடு வந்து கமென்ட் செய்தும், கிண்டல் செய்தும் போக… கனி இன்னும் அருகில் கூட வரவில்லை.
ஷண்முகம் வந்து “போ போ இன்னிக்கு செம டோஸ் இருக்கு உனக்கு…” என தன் பங்குக்கு அவனும் கலாய்த்து செல்ல…
சதா, அதற்கெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை… கூலாக அமர்ந்திருந்தான். சதாக்கு ஒரு வேலையும் இருக்கவில்லை. எல்லாம் கார்த்தியும் பிரகாஷும் பார்த்திருந்தனர்.
அப்படியே இருந்தாலும் இவன் பெரிதாக எடுத்து போட்டு செய்யும் ரகம் இல்லையே, அதனால் யாரும் சாதவை எதிர்பார்க்கவில்லை.
சென்னையில்தான் திருமணம். மண்டபத்தில் இரண்டுநாள் நடந்தது, ‘பழைய முறைப்படி அழகாக செய்ய வேண்டும்’ என கன்யாவின் விருப்பம்தான் கணக்கில் கொண்டனர் வீட்டில்.
எனவே ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து சொந்தங்களே செய்தது. இதில் பெண் வீட்டிற்கும் விருப்பமே… எனவே எல்லாம் நன்றாக நடந்தது.
அடுத்த ஒருமணி நேரத்தில் மூகூர்த்தம்… ஷண்முகம் முறைகள் எல்லாம் செய்துக் கொண்டிருக்க… இன்னும் மீரா அருகில் வந்து, அமரவில்லை.. பொற்றோரின் பாதபூஜை என எல்லா சடங்குகளும் நடந்தது.
இவை எல்லாவற்றின் போதும் சதாவின் பார்வை தன் மனைவியை தவிர வேறு எங்கும் இல்லை. கனி நிமிர்ந்து கூட பார்க்கவில்லை தன் கண்ணாளனை. ஆனால் எப்போதும் போலதான் இருந்தாள்.
சதாவிற்கு லேசாக தடுமாற்றம் வந்தது. இப்போது தனியாக உணர தொடங்கினான். சண்முகத்தின் திருமணம் என்ற பேச்சு வந்த போது கனி, சதாவிடம் சொன்னது “நம்ம கல்யாணத்தில் மிஸ் பண்ணதெல்லாம் இதுல நாம செய்யனுங்க..” என்றதுதான்.
சதா, அதற்கு அப்போவே “ஹேய்.. இதென்ன.. இப்படி பேசுற… என்னால முடியாது… நீ பார்த்துக்க எல்லாத்தையும்” என்றான்.
அதன்படியே இப்போது வரை எதிலும் சதா ஒட்டவில்லை, அவன் பர்பஸ்ஸாக செய்யவில்லை, ஆனால் அவன் சொன்னபடியே நடந்தது. எதற்கும் அவனிற்கு நேரமில்லை. எல்லாம் எப்போதும் போல் கனிதான்.
பத்திரிக்க வைக்க கூட அவனால் வர முடியவில்லை. கனியின் வீட்டிற்கு மட்டுமே வந்தான், அதுவும் இரவு எட்டு மணிக்கு மேல்தான்… கன்யா வீட்டில் யாரும் எதுவும் சொல்லவில்லைதான். இருந்தும், கனிக்கு ஏதோ போல் ஆனது. அப்படி சத்தியமங்கலம் வரை கூட தன் மாமனாருடன் சென்று வந்தாள் கன்யா.
கல்யாணியால் முடியவில்லை இப்போது, கனி இருக்கும் தெம்பில் அலைச்சல் வேலையெல்லாம் அவளிடம் கொடுத்துவிட்டு, தான் ஒதுங்கி… வீட்டு, பொறுப்பை மட்டும் பார்த்துக் கொண்டார்.
எனவே கனிக்கு அதிக அலைச்சல்… சதாவின் ஒதுக்கம் எல்லாம் சேர்ந்து கொள்ள… இந்த ஒருவாரமாக இருவரும் பேசிக் கொள்வது கூட இல்லை…
எங்கே, அலைச்சலில் கனி நேரமே உறங்கி… அதிகாலை விழித்து என இருக்க.. சதா எப்போதும் போல் அலட்டாமல் இருந்தான், தன் வேளையில் மட்டும் கவனமாக… அதுவும் நேற்று நேரமே வரவேண்டும் என குடும்பமே சத்தியம் வாங்காத குறையாக சொல்லியும் சதா வரவில்லை.
எனவே எல்லாம் சேர்ந்து கொள்ள.. கனிக்கு எதையும் வெளிக்காட்ட முடியாத கவலை, மனதை அறிக்க தொடங்கியது. அதன் வெளிபாடே இவளின் பாராமுகம்.
பிரகாஷ் வந்து “சதா… மேல வாங்க… கூப்பிடுறாங்க” என அழைக்கவும்தான், சதா தன் மனைவி மீதிருந்து பார்வையை விளக்கினான்.
சுதாரித்து, மேலே வந்தான்… அவனின் கால்கள் தன் போல், தன் பத்னியின் அருகில் போய்தான் நின்றது. அவளும் ஏதும் காட்டாமல் தன் கையிலிருந்த அட்சதை பூக்களை அவனிடமும் கொடுத்து, லேசான ஊடலுடன் சிரிக்க… நீண்ட நாள் கழித்து தன்னை பார்த்து சிரிக்கும் மனையாள் மீதிருந்து.. கண்ணை எடுக்க முடியவில்லை சதாக்கு. அப்படியே அவனும் காதலாக பார்க்க.. அதனை அழகாக கேமிராவின் கண்கள் தன்னுள் வாங்கிக் கொண்டது.
இப்போது ஷண்முகம் மீராவின் கழுத்தில் மாங்கல்யம் பூட்டி அவளை தன் பொறுப்பாக ஏற்க… யோசோதா அழகாக நாத்தனார் முடிபோட்டு அதை உறுதி செய்ய, இனிதே திருமணம் நடந்தது.
சதாவும், அட்ச்சதை தூவி தன் தம்பியை வாழ்த்திவிட்டு நகர… சண்முகம் அவனை தடுத்து… “நில்லு இங்கே…” என்றான்…
சதா “கூட்டமா இருக்குடா… நான் அங்கதான் இருக்கேன்… “ என்றபடி கீழே இறங்கிவிட்டான். கனி, சண்முகத்தை முறைத்தாள்… “சாரி அண்ணி… “ என்றான் சிரித்தபடி.
யசோதா “விடுடா… அவன பத்தி தெரியாதா” என்றார்.
பின் கூட்டம் குறையவும்… போட்டோக்காக மட்டுமே வந்தான் சதா மேலே… கனி சற்று இடைவெளி விட்டு நிற்க… இப்போது கனியிடம் “கிட்டக்க வா டா” என்றான் மென்மையான குரலில்.
கனிக்கு கோவமே வந்தது ஆனால், சதாவின் முகம் பார்க்க, அவன் முகம் அமைதியை தவிர வேறு எதையும் காட்டவேயில்லை… சதா அவளின் கையை பிடித்து “சொன்னா கேட்கணும்” என்றான் மீண்டும்.
கனி பேசாமலே நிற்க… அதற்குள் போட்டோ கிராப்பர் “சார்.. ப்ளீஸ்“ என்க. சதா அவளை இழுத்து தன்னுடம் நிறுத்திக் கொண்டான். அழகான குடும்ப புகைப்படம் எடுத்துக் கொண்டனர் எல்லோரும்.
சதாக்கு இன்னும் அவளின் புன்னகை மனதில் நிற்க… ‘பொறுமையாக எல்லோருடனும் இணங்கி பேசி, அவ்வபோது தன் தந்தையையே விரட்டி, தன்னை இப்படி கண்டுக்காமா விட்டு, எப்படி எல்லாம் வேலை வாங்கராபாரு’ என நினைத்துக் கொண்டே சென்று அமர்ந்தான்.
மணமக்களுடன் சதாவும் கனியும் வீட்டிற்கு சென்றனர்.
இங்கு பிரகாஷும், யசோதாவும் பார்க்க… நேரம் சென்றது, மண்டபம் காலி செய்து வீடு வந்தனர் அனைவரும்.
புதிய வீட்டில்… அங்கு புதுப்பிக்கப்பட்ட வீட்டில்தான் ஷ்ணமுகத்திற்கு தனியாக ஒரு பிளாட் ஒதுக்கபட்டது. கல்யாணி தனியே வைத்துவிட்டார் அவர்களை. இரவு… எல்லா ஏற்பாடுகளும் செய்து, மணமக்களை தனியே விட்டு அனைவரும் இங்கே சதா, வீட்டிற்கு வந்துவிட்டனர்.
அங்கேயே உணவு முடித்து, வீடு வர மணி பனிரெண்டு…. சதா அப்போதே மேலே தனது ஆபிஸ் அறைக்கு சென்றுவிட்டான். கீழே அவனிற்கு என தனியாக ஒரு அறை ஒதுக்கப்பட்டது.
இங்கே கீழே உறவுகள் எல்லாம் இருந்ததால், தானும் அவர்களுடன் ஹாலில் உறங்க தொடங்கினாள் கனி. எல்லோரும் ஊரிலிருந்து வந்ததால், நிறைய சொந்தம் அத்தை, ஒன்றுவிட்ட மாமா… பெரியப்பா… என நிறைய சொந்தம்… எனவே ஹாலில் பெரிய விரிப்பு, விரித்து படுத்து கதை பேசியபடியே உறங்க… கனி, படுத்துடன் உறக்கம்தான்.
சதா, மூன்று மணி போல், தனது அறையிலிருந்து வெளியே வர… சற்று தடுமாறித்தான் போனான் நடக்கவே. சுதாரித்து மெல்ல ஒவ்வரு அடியாக எடுத்து வைக்க… நாலடியில் கனி… ஏதோ ஒரு மாற்று புடவையில்… சிறிதாக வாயை திறந்தபடி நன்றாக இழுத்து போர்த்தி படுத்திருக்க… சதாவின் கால்கள் அவளை தாண்ட மறுத்து, அங்கேயே தர்க்கம் செய்தது.
சுற்று முற்றும் பார்த்தான்.. திருடனாக, யாரும் விழித்திருப்பதாக தெரியவில்லை.. கனியின் அருகில் அவனின், ஒன்றுவிட்ட பெரியப்பா பேத்தி… சிறு பெண்தான் படுத்திருந்தாள்.
அப்பாடா.. என எண்ணி, தன் சரிபாதியை கையில் அள்ளிக் கொண்டான். கனிக்கு பழகிய கைகளோ அல்லது அசதியோ… ஒன்றும் தெரியவில்லை.
அப்படியே மேலே தனதறைக்கு கொண்டுவந்து கட்டிலில் கிடத்தி நெற்றி முத்தம் வைத்தான். குறும்பு செய்யும் குழந்தையை தூங்கும் போது ரசிக்கும் தாயாக.
ஏன்… டல்லா இருக்கா…. என காலை முதலே யோசனைதான் அவனிடம். பொறுமையாகவே இருந்தான். அவளின் இழுத்து போர்த்திய புடவையை எடுத்து விட்டு… ac போட்டு அமர்ந்து கொண்டான் அவளருகில்.
ஏதோ நீண்ட நாள் கழித்து சேர்ந்த சுகம் அவனிற்கு… எழவே மனதில்லை அவனிற்கு. எப்படி இருந்தேன் இவள் இல்லாமல் இத்தனை வருடம்… என சிரிப்பாக வந்தது அவனிற்கே.
மெருகேரியிருந்த கன்னத்தை லேசாக வருட… கனி அவன் புறம் திரும்பி படுத்துக் கொண்டாள். ம்…. என பெருமூச்சு விட்டு எழுந்தான்.
உடை மாற்றி, ஏதோ தோன்ற, அவளின் நாடி பிடித்து பார்த்தான். அவனின் கணிப்பு வீணாகவில்லை. ஆனால், ஏதோ சந்தேகம் அவனிற்கு… அதனை தள்ளி வைத்து, அவளுடன் சரிந்து தன்னுள் இறுக்கி அணைக்க… கனி தூக்கம் கலைந்த நிலையில் “வந்…. துட்டீ…ங்களா” என முனகியபடியே அவனின் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டாள் இயல்பாய்.
சதா “என் பெப்பி டி நீயி” என ஆசையாக தழுவிக் கொண்டான்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.