கனிக்கும், சதாக்கும் பேச்சே வரவில்லை… அமைதியாக கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தனர்… இருவர்க்கும் தாங்கள் கடந்து வந்த வருடங்கள் தோன்றியது கண்முன்னே…
அதில் சதாதான் சுதாரித்து… “இன்னிக்கே செக்கப் போலாம்… ” என தொடர்ந்து ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான்,.
கனி அமைதியாக “ம்… “ என சொல்லியபடியே கேட்டுக் கொண்டிருந்தாள்
சதா “ஹேய் தூங்குறியா… வா, கீழ போலாம்” என அவளை தன்னிடமிருந்து பிரித்தான்.
கனி நிமிர்ந்து அவனை பார்த்து, அப்படியே அவனிற்கு நெற்றியில் முத்தம் வைத்து… “ஷிவாக்கு என்ன பேபி வேனும் “ என்றாள்… கண்ணில் மின்னிய நிறைவுடன்…
சதா யோசிக்கவேயில்லை… “உன்ன மாதிரி பொறுப்பா… என் கூட மட்டும் கத்தி கத்தி சண்ட போன்ற மாதிரி ஒரு பொண்ணு குடு.. போதும்” என்றான்
கனி “ஆச தோச… உங்களுக்கு நேர் ஆப்போசிட்டா… அதிரடியா, அம்மா பின்னாலேயே சுத்தற மாதிரி… உங்களைவிட ஜீனியஸ்ஸா ஒரு பையனைத்தான் பெத்துக்க போறேன் பாருங்க…” என்றாள் குதுகலமாக.
சதா “அவஸ்த்தபடுவா டா, என்னையே உன்னால கண்ட்ரோல் பண்ண முடியலை, இதில் இப்படி இன்னொரு பையன் வேற… வேண்டா டா” என்றான் குழைவு மாறாத குரலில்.
கனி “பொறாமை, உங்களுக்கு… எப்போதும் உங்களையே பார்ப்பாங்களா… இனி என் பையன்தான்… போங்க… நீங்க அந்த ஹோச்பிடல்லையே கட்டிக்கிட்டு அழுங்க..” என்றாள் செல்ல கோவமாக.
சதா “பார்க்கலாம், வா” ஒருவழியாக அவளை சமாதனபடுத்தி கீழே கூட்டி வந்தான் சதா…
வந்தவர்களுக்கு… தன் ம்மா, அண்ணன் அண்ணி என அனைவரையும் பார்த்ததும் ‘இப்போது எங்கே இவர்கள்’ எனத்தான் முதலில் தோன்றியது. அதன் பின் தன் செய்தி எல்லோருக்கும் சொல்லியாகிவிட்டது என புரிந்து…
அவர்களை பார்த்ததும் சற்று சுறு சுறுப்பாக துள்ளி துள்ளி படியில் இறங்கியபடி “வாம்மா…” என்றபடியே வரவும், கல்யாணி “பாத்து வா கனி” என்றார்.
யசோதா “அம்மா” என தன் அம்மாவை அதட்டியவள்… “நீ வா கனி” என அவளின் கை பிடித்து தனியே அழைத்து சென்று… ஏதேதோ விவரம் கேட்க…
கனி “அக்கா… விடுங்க க்கா… உங்க தம்பிதான் கன்பாம் பண்ணாரு… அப்புறம் என்ன” என சொல்லி கண்ணடித்தாள்.
அதன் பின் கனிக்கு ராஜ உபசாரம்தான்… அம்மா, அத்தை, நாத்தனார் என எல்லாம் சூழ.. கனி தன்னை அரசியாக உணர்ந்தாள்.
உணவு முடிந்து மருத்துவமனைக்கு யார் செல்வது என ஒரு படையே கிளம்ப… சதா இப்போதுதான் பாவமாக தன் அக்காவை பார்த்தான்..
யசோ “அம்மா… விடு, அவங்க மட்டும் போயிட்டு வரட்டும்… இங்க இப்போ ஷண்முகம் வந்திடுவாங்க… நமக்கு வேலையிருக்கு..” என சொல்லி அமைதியாக்கினாள் எல்லோரையும்.
காரெடுத்துக் கிளபினர் இருவரும்… மருத்துவமனையில் சென்று நிறுத்தினான். மிகவும் பிரம்மாண்டமான மருத்துவமணை… துளி சத்தமில்லை… அப்படி ஒரு சுத்தம்… ஆனால் அத்தனை பரபரப்பு அந்த இடம்… எல்லோரும் ஏதோ வேலையாக நடந்தபடியே இருந்தனர்.
காரை செக்குரிட்டியிடம் கொடுத்துவிட்டு, “வா “ என சொல்லி முன்னால் நடந்தான். எல்லோரும் முகமன் கூறி மரியாதையாக பார்த்தனர் அவனை.
ஏதோ அறைக்கு சென்றான்… அங்கிருந்த பெண் மருத்துவர் “வாங்க சதா” என வரவேற்று “வாங்க மிர்ஸ்சஸ் சதா “ என இயல்பாய் சொல்லி இடம் காட்டினார்.
இவளை பரிசோதித்தார். “ஸ்கேன் பார்த்திடலாம் டாக்டர்” என்றார் அந்த பெண்மணி..
சதா “சுர்… “ என்றவன் அங்கிருந்த மற்றொரு அறைக்கு சென்றனர். அங்கிருந்த நர்ஸ்… கனிக்கு ஹெல்ப் செய்ய… அதற்கென இருந்த கட்டிலில் படுத்துக் கொண்டாள்.
ஸ்கேன் செய்ய செய்ய… சதாவின் முகம்… ஒளியை கூட்டியது… அவனையே பார்த்திருந்தவளுக்கு, ஏன் என கேள்விதான் எழுந்தது.
அந்த பெண் மருத்துவர்… நர்ஸ்சிடம் ஏதோ சைகை செய்ய… அங்கிருந்த விளக்கும் அணைக்கப்பட்டு… அந்த அறை இருளாக.. இப்போது குழந்தைகளின் ஹார்ட் பீட் ஒலிக்க… முதலில் என்ன நடக்கிறது என்றே கனிக்கு தெரியவில்லை.
நர்ஸிடம் கேட்க்கும் நேரம் அவளின் அருகில், அந்த கட்டிலின் அருகில் வந்து, கீழே மண்டியிட்டு அமர்ந்தான் சதா. அவளின் கைகளை மென்னையாக பற்றியபடியே “குழந்தைங்க.. ஹார்ட் பீட் சத்தம் டா கனி… “ என மெதுவாக சொல்ல…
கனிக்கு பயமே “ஏன் இவ்வளோ வேகமா கேட்க்குது “ என்றாள் பயத்தில் கண்ணில் நீர் வழிந்தது… அந்த இருட்டு அறையில் இந்த சத்தம் சந்தோஷத்திற்கு பதில் அவளிடம் பயத்தையே கொடுத்தது.
சதா “நமக்கு ட்வின்ஸ்… டா” என்றான்.
அப்பாடா… என அன்னையாக கனிக்கு இப்போதுதான் நிம்மதியாச்சு. தன் கணவனின் குரலின் மென்மை சந்தோசம் தர, ஏதோ என பயந்து போயிருந்தவள்… இந்த செய்தியில் அவனின் கைகளை இறுக்கி பற்றிக் கொண்டாள்.
பின் லைட் ஆன் செய்தார் அந்த நர்ஸ்… அந்த பெண் மருத்துவர் எல்லாம் பார்த்து விட்டு “எல்லாம் சரியா இருக்கு சதா… உங்களுக்கு ட்வின்ஸ்… பிப்டி சிக்ஸ் டேஸ் ஆகுது… ரொம்ப கேர் புல்லா இருங்க… அடுத்த ஸ்கேன்ல… எல்லாம், பார்த்துடலாம்” என சொல்லி தனதறைக்கு சென்றார் அவர்.
சதா, அவள் எழ கை கொடுத்து உதவிட்டு… “வா..” என தலையசைத்து முன்னறைக்கு சென்றான். அதன்பின்தான் கனி எழுந்து உடையை சரி செய்து வெளியே வந்தாள். மருத்துவரின் அறிவுரை பெற்று… இருவரும் கிளம்பினர்.
காரில் வர வர வாய் கொள்ளா சிரிப்பு அவனிற்கு… தான் நினைத்தது சரிதான் என எண்ணம் வந்தது… பரவச நிலை… அவளை தன்னுடம் இறுக்கி கொள்ள வேனும் போல இருந்தது…
அந்த சந்தோஷத்தில் சதா “பெப்பி… என்ன வேணும் சொல்லு வாங்கலாம்…” என்றான் தெரியாத்தனமாக…
கனி “கேட்டா, வாங்கி தருவீங்களா” என்றாள் தயக்கமாக..
சதா “கண்டிப்பா டா… ம்… ம்… அப்படி என்ன கேட்கறேன்னு பார்க்கறேன்” என்றவன் பண கணக்கெல்லாம் சொன்னான் ஏதேதோ…
கனி, எல்லாவற்றையும் கேட்டு விட்டு… “அங்க சத்தி ல, அதான் சத்தியமங்களத்துல… ஹைவே ல… மரவள்ளி கிழங்கு சிப்ஸ்… சுட சுட.. பொரிச்சு.. கார பொடி போட்டு தருவாங்க ஷிவா…
ப்பா… செம்மைய இருக்கும்… அப்படி இங்க எங்கையாவது இருந்த வாங்கி தாங்களேன்” என்றாள் ஆசையாக, கண்ணில் ஏக்கம் மட்டுமே..
சதா, பே பே நிலை… அதன் பின் அவளிடம் பேசவேயில்லை… வீட்டிற்கு வந்து இறுக்கி விட்டு காரை பார்க்கு செய்துவிட்டு வந்து, ஹாலில் அமர்ந்து கொண்டான்.
எல்லோரின் கேள்விகளுக்கும் கனி பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்… ட்வின்ஸ் என்றதும் இன்னும் கொண்டாட்டம்தான்.
ஷண்முகமும் மீராவும் வந்தனர்… அவர்களின் குடும்பத்தாரும் வர… சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தார் எல்லோரும்.
கல்யாணி சண்முகத்தை தனியே அழைத்து விஷயத்தை சொன்னார்…. சண்முகம் “அண்ணி…” என அழைத்தான். மீராவும் அங்குதான் இருந்தாள்.
வந்த தன் அண்ணியிடம் “கன்க்ராட்ஸ் அண்ணி…” என்றான் கூடவே “தேங்க்ஸ் அண்ணி… “ என்றவன்.
மீராவிடம் “நம்ம வீட்டு… குத்து விளக்கு… அவ்வளவு பொறுமை” என்றான் கரகரத்த குரலில். அவள் பட்ட துன்பங்களை அருகில் இருந்து பார்த்தவன்… விடலை பருவத்திலிருந்து பார்த்ததில் தன் அண்ணியின், பொறுமை அவனிற்கு பிடிக்கவே செய்யும்… அதில் இந்த வார்த்தை வந்து விட்டது. ஏதோ வார்த்தை வேண்டுமானால்… ஒட்டாமல் இருக்கலாம், ஆனால் அவனின் அன்பு நிஜம்…
கல்யாணிக்கு கண்ணில் நீர் வந்தது… சண்முகத்தை அனைத்துக் கொண்டார்… சற்று நேரத்தில் அப்படியே அமர்ந்து கொண்டான் ஷண்முகம். சதா இதையெல்லாம் பார்த்தபடியே தன் அன்னையை அனைத்து “ம்மா.. எல்லோரும் இருக்காங்க… அப்புறம் பேசலாம்” என்றான் அதட்டும் குரலில்.
இப்போது எழுந்த ஷன்முகம் “என்ன சொல்லு ண்ணா… அண்ணி கிரேட்… உன்னையே வேல வாங்கிட்டாங்களே…” என்றான் தன் அண்ணனை கட்டி அனைத்து வாழ்த்து சொல்லுவது போல…
முதலில் ஒன்றும் புரியவில்லை சதாக்கு… சொல்லிவிட்டு நகரும் நேரம், சட்டென புரிந்து விட… சண்முகத்தின் ஷர்ட் காலரை பிடித்து இழுத்து தன்னருகில் நிறுத்தி… தன்னோடு அனைத்துக் கொண்டு… “பாக்கதானே போறேன்… நீ எப்படி தீயா வேல செய்யறேன்னு” என்றான் பல்லை கடித்தப்படி. சதா.
சண்முகம் சிரித்த படியேதான் சமாளித்தான்.
நேரம் சென்றது. இரவு உணவு முடிந்து அனைவரும் கிளம்பினர். கனியின் வீடும் கிளம்பியது.
ஹாலில் வீட்டு மனிதர்கள் மட்டுமே அமர்ந்திருந்தார்… ஒருவரோடு ஒருவர்… சலசலத்தபடியே…
சதா, கனியின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டிருந் தான்… ஷண்முகம் எப்போதும் போல தன் அன்னை மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டிருந்தான் வெங்கட்டும்… சோபாவில் அமர்ந்திருந்தார். மீரா, கல்யாணி அருகே கீழே அமர்ந்திருந்தாள்..
சதா, கல்யாணியிடம் “ஏன் ம்மா… உன் மருமகளுக்கு அறிவே இல்லை… சிப்ஸ் வேணுமாம்… சிப்ஸ்… நான் டைமன்ட் ஜுவ்வல் ஏதாவது வாங்கலாம்ம்னு நினைச்சா… சிப்ஸ் வேண்டுமாம்…” என மாலையில் நடந்ததை சொல்ல… அந்த குடும்பமே அதிர்ந்து சிரித்தது…
கனி, சதாவின் முடியை இழுத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். தன் கணவன் சொன்னதற்கு. ஏதும் எதிர்த்து பேசவில்லை.
இப்போது அவளின் கையை எடுத்து தன் கைகளுடன் சேர்த்து கொண்டான் டாக்டர் சதா..
சம்மு “மீரா… இதெல்லாம் நீ அண்ணிகிட்டேந்து கத்துக்கோ” என்றான்.
கல்யாணி “அவள ஏண்டா சொல்ற வீட்டுக்கு ஒருத்தர் போதும்… நீ உன் அண்ணன் கிட்டேன்ர்ந்து கத்துக்கோ… சரிதானே மீரா…” என்றார் தன் இரண்டாவது மருமகளை பார்த்து..
மீரா “சரிதான் அத்த…” என்றாள்.
இப்படிதான் சிலபேர்க்கு தான் வாழும் பெருவாழ்வு தெரியவே தெரியாது… அதிலும் கனிக்கு தெரிய வாய்ப்பே இல்லை…அதுவும் ஒரு அழகுதானே… சத்தமில்லாமல் சதா அவளின் தேவைகளை பார்த்துக்கொள்ள… அவளின் சரிபாதியாய் இப்போது சதாசிவமே ஆக தொடங்கினான்.