சதா, எப்போதும் போல்… தன் அலுவல்கள் பார்க்க… கனிக்கு ‘மோர்னிங் சிக்… வாக்கிங்… வீடு’ என மாதங்கள் கடந்தது.
கனிக்கு ஐந்தாம் மாதம் தொடக்கம்… சற்று அதிகபடியான மேடான வயிறு… கூடவே பிள்ளைகளின் அசைவு தெரிய தொடங்கியது.
கல்யாணி இங்கேயே கீழேயே உள்ளே அறையில், அவளை இருக்க செய்தார். இரவு சதா, வந்து கூட்டி போகும் வரை, இங்கே அவளுக்கென ஒரு அறை இருந்தது. அவ்வபோது சற்று மூச்சு வாங்கியது, படி ஏறும்போது…. அதனால் இந்த ஏற்பாடு.
சதாவின் ஆர்டர்… காலையிலும் மாலையிலும் வாங்கிங் செல்ல வேண்டும்…. ஒருதரம் வீட்டை அவளே குனிந்து பெருக்க வேண்டும். எப்போதும் மெல்லிய இசை… அதன்பிறகு டயட் என சதா ஒருபாடு அவளை படுத்திக் கொண்டிருந்தான். அப்படிதான் சொல்லவேண்டுமோ… கொஞ்சம் கெடுபிடி அதிகம் தான் கனிக்கு.
ஷண்முகமும் சில நேரம் மீராவை கொண்டு வந்து விட்டு செல்வான். வாரத்தில் இரண்டுநாள் இங்கே தங்கி செல்வர். அவர்கள், வந்தால் கொஞ்சம் கலகலப்பாக பொழுது செல்லும் இவர்களுக்கு.
சதா எப்போதும் போல்… தன் வேளையிலேயே அவனிற்கு நேரம் சென்றது. எனவே, இப்படி எல்லா விதத்திலும் கனி கவனிக்கபட்டாள்.
நடுவில் கீர்த்திக்கு வளைகாப்பு என அழைத்து சென்றனர்… கார்த்தியும் மைதிலியும்.
இப்படி இருவரும் கருவுற்றிருந்தாள் பார்த்து கொள்ள கூடாதம், பெண்கள் இருவரும். அதனால், சில மாதங்களாக எங்கும் பார்த்துக் கொள்வதில்லை இருவரும்… கனியை பார்க்க வரும்போது கூட மைதிலியும், கார்த்தியும்தான் வந்தனர்.
கீர்த்தி, தன் அம்மா வீடு சென்ற போதுதான், கனியும் தன் அம்மா வீடு சென்றாள்… இப்படி இது இருவர்க்குள்ளும் ஒரு விளையாட்டு போல் இருந்தது. ஆனால் போனில் மணி கணக்காக பேசினர் கனியும், கீர்த்தியும்.
இப்போது கீர்த்தியின் வளைகாப்புக்கும் அப்படியே, கனியை மட்டும் விட்டு, மற்ற எல்லோரும் சென்றனர். குறிப்பாக கனியின் சார்பாக… கனியின் தொல்லை தாங்க முடியாமல் சதா சென்று வந்தான்.
இப்போதெல்லாம் காலையில் அவளுடன் வாங்கிங்கு எழுந்து கொள்வான்.. சதா. அவன் கூட வருவாதாலேயே அந்த நேரம் கனிக்கு இனிமையாக இருந்தது.
சதாக்கு, அப்போதுதான் பேச்சே வரும் போல, மெல்லிய குரலில் ஏதோ பேசியபடிய வருவான்… அங்கே எப்படி படித்தேன் என சொலுல்வான்..
தனது தொழில் பற்றி சொல்லுவான்… படிக்கும் போது என்ன சாப்பிடுவேன்.. எப்படி இருந்தேன் என எல்லாம் சொலுவான்… இப்படி தனது சின்ன சின்ன… செயல்களை சொல்லுவான்…
பலசமயம் அதிராமல் பேசும் அவனின் உடல்மொழியும், எந்த பாவனையும் இல்லாமல், அவன் விவரிக்கும் அழகும், கனிக்கு மிகவும் பிடிக்கும்.. . தானே சென்று அவன் கைகளை கோர்த்து கொள்ளுவாள்…
சதாக்கு அப்படி ஒரு நிம்மதி… ஏதோ அப்போதெல்லாம் தன்னுடனே வந்தவள் போல், அவள் செய்கை தோன்றி அவன் மனதை நிறைக்கும்.
ஆனால், அவளை குறித்த எந்த விளக்கமும் அதில் இருக்காது… இதற்காக நான் உன்னை விட்டு சென்றேன்… என, தான், செய்ததை நியாம் செய்யவும் இல்லை… மறந்துதான் இருந்தேன் என உண்மையை சொல்லவும் ஒரு மனம் வேண்டுமே… சதா அப்படியே…
நாட்கள் செல்ல, நாளை.. சதா கனியின் திருமண நாள்… முழுதாக ஆறாவது வருட தொடக்க நாள். கல்யாணி இன்று மதியம் “சதா…. நாளைக்கு உங்க கல்யாண நாள்டா… எங்கையாவது போயிட்டு வாங்க நாளைக்கு லீவ் எடுத்துக்கோ… அந்த பிள்ளை கூட நீ இருக்கறதே இல்ல” என்றார் தன் மருமகளுக்காக.
சதா “எங்க ம்மா… போக சொல்ற….” என்றான் அமைதியான குரலில். தொடர்ந்து “இப்போ ட்ரவல் பண்ண முடியாது…. எங்கயாவது கோவிலுக்குதான் போகணும்” என்றான் யோசனையுடன்.
மறுநாள் காலை, காலையிலேயே சதா அவளின் அருகில் கை போட்ட படி… “கனி கோவிலுக்கு போலாமா…” என்றான்.
கனிக்கு மகிழ்ச்சியே அவனின் வார்த்தைகளில். கடந்த ஒரு வாரமாக இதே பேச்சுதான் வீட்டில்… சதா கனியின் வெட்டிங் டே… புடவை வாங்க, கல்யாணி ஏதோ உணவு செய்ய, ஷண்முகம்.. என்ன அண்ணி ஸ்பெஷல் என கேட்டே சலித்தான்.
இப்படி ஏதோ ஒரு கொண்டாட்டமாக இருக்க… தன் கணவன் அதை குறித்து பேசவே இல்லை என வருத்தம்தான் கனிக்கு.. எனவே இப்போது கேட்கவும் அவனின் பெப்பிக்கு… கிக்கேரியது..
கனி அரை தூக்கத்திலும் “ம்…” என்றாள் கூடவே “ஹாப்பி வெட்டிங் டே ஷிவா” என்றபடி.. அவனின் புறம் திரும்பி படுத்தபடியே… மெல்லிய இதழ் ஒற்றலுடன். சதா அதை கண் மூடி வாங்கிக் கொண்டான்.
சதாக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை திருப்பி வாழ்த்தவும் வரவில்லை… என் மீது பையித்தியமாக இருக்கும் அவளுக்கு என்ன செய்ய போறேன்…. இதுதான் அவனினுள் ஓடிக்கொண்டிருக்கும்…. அவளையே கண் இமைக்காமல் பார்த்தபடி இருந்தான்.
கனி “என்ன” என்பதாக புருவம் உயர்த்த… சதா அவளை அனைத்துக் கொண்டான்.. இப்போதுதான் வெளியே தெரிய தொடங்கியிருந்த வயிறு, இடிக்க… சதா “திரும்பு “ என சொல்லி அவளை பின்புறமாக இறுக்கிக் கொண்டு படுத்திருந்தான்.
சதா “என்ன சொல்ல… உன்ன மாதிரி, எனக்கு விஷ் பண்ண வரல…
ம்ச்சு… விடு…
உனக்கு என்ன வேண்டும் சொல்லு.. அன்னிக்கு கேட்ட மாதிரி.. சிப்ஸ்ஸு, உறுகா…ன்னு கேட்க்காம.. ஏதாவது கேளு, என் சக்திக்கு தகுந்த மாதிரி கேளு” என்றான் முதலில் திக்கிய குரல்.. முடியும் போது, கணவனாக கர்வம் கொண்டதோ..
கனி “அதையே வாங்கி தரல, நீங்க” என்றாள் குறையான குரலில்.
சதா “ம்… நான் வாங்கி தர மாட்டேன்னு தெரியும்… அப்படியும் கேட்டா, அதுக்காக நீ சாப்பிடவே இல்லையா… உங்க அண்ணனும், சம்முவும்… போட்டி போட்டு வாங்கி தந்தாங்களே… இன்னும் கூட ஸ்டாக் வைச்சிருக்க தானே…” என்றான் இவனும் குறைபட்ட குரலில்.
கனி “பொறாமைய பாரேன்… இப்படி பீல் பண்றவரு… வாங்கி தர வேண்டியது தானே… “ என்றாள்.
சதா “நான் டைமென்ட் வாங்கி தந்தேனே… அத சொல்ல மாட்டேங்கிற” என்றான் இன்னும் குறைபட்டவனாக.
பெண்ணிற்கு இங்கே உருகியே போனது “ஷிவா… இதென்ன பேச்சு… உங்களால மட்டும்தான் எனக்கு இதெல்லாம் வாங்கி தர முடியும்… அதுவும் எனக்கு அது ரொம்ப பிடிச்சுது… அன்னிக்கே சொன்னேன்ல்ல…
எப்படி இவ்வளோ அழகா பார்த்து செலக்ட் பண்ணீங்க… இன்னிக்கு அதான் போட்டுட்டு கோவிலுக்கு போறோம்…” என்றாள் அவனை மெச்சி..
சதா, மனதில் அவ்வபோது வரும் குற்ற உணர்ச்சி… ‘நான் இவளை நினைக்கவில்லையோ கடந்த வருடங்களில்’ என… ஆனால் அதை அவன் வார்த்தையால் சொல்லவில்லை. இப்படி விலை உயர்ந்ததாக… பார்த்தது பார்த்து வாங்கி… என்னுடைய அன்பும் உயர்ந்தது என காட்டுகிறானோ… அன்பின் பரிமாணங்கள் வேறுதானே…
சுறு சுறுப்பாக கிளம்பினர் இருவரும்… கல்யாணி வாங்கி தந்த அழகான நீல வண்ண… காஞ்சி பாட்டில்… தன் கணவன் வாங்கி தந்த வைர மாலையுடன்… தாய்மையின் பூரிப்புடன், மெல்ல… கீழே வந்தனர் சதாவும் கனியும்…
சதாவின் முகத்தில் தெரியும் பொறுமைக்கும்.. கனி முகத்தில் தெரியும் துறுதுறுப்புக்கும்…. ஏழாம் பொருத்தம்தான்… அதேபோல், காரியத்தில் இருவரும் வேறுவேறாய்… அவன் பரபரப்பு… இவள் பொறுமை என கான்ட்ராஸ்ட்… கப்லஸ்…. அப்படிதான் தோன்றியது ஷண்முகத்திற்கு.
ஷண்முகமும் மீராவும் நேற்றே வந்துவிட்டனர்… இந்த கொண்டாட்டத்துக்காக… எனவே ஷண்முகம் ஹாலில் பேப்பரில் முழ்கி இருக்க…அப்போது அவர்களை பார்த்தவுடன், நடுவில் இந்த மைன்ட் வாய்ஸ்…
கல்யாணியும், மீராவும் கிட்சனில் இருந்தனர்.
கனியும், சதாவும் பூஜை அறை சென்று வணங்கிவிட்டு வந்து ஹாலில் அமர்ந்தான் சதா. கனி உள்ளே சென்றாள்.
ஷண்முகம்… “ஹாப்பி ஆன்வஸரி ஓல்ட் கப்ல்ஸ்…” என்றான். கனி திரும்பி பார்த்து சிரித்தபடியே “தேங்க்ஸ் ஷண்முகம்” என்றாள். அவன் வம்பிழுப்பது புரிந்து… சதா வாயே திறக்கவில்லை. அவனிற்கு இன்னும் கனியை பற்றிய சிந்தனையே ஓடிக் கொண்டிருந்தது.
உள்ளே மீராவும் விஷ் செய்தாள். கல்யாணி “அழகா இருக்குடா உனக்கு இந்த கலர்..” என்றார். கனிக்கு கண்களில் நீர் நின்றது.
இத்தனை வருடங்கள்… இரு வீட்டுக்கும் இது ஒரு கடக்க முடியாத நாளாகவே இருந்திருந்தது. போனும் செய்ய முடியாது கல்யாணியால், அதே சமயம் அப்படியே விடவும் முடியாது அவரால், அவர் தானே பொறுப்பு பையன் வரும் வரை… எனவே இத்தனை வருடங்கள் இந்த நாள்… திக் திக் நாள்.
இன்று, முற்றிலும் வேறாய்… ஒன்றுக்கு இரண்டாய் பிள்ளைகளை சுமந்து கொண்டு… தன் எதிரே… பூரித்த முகத்துடன் நின்ற மருமகளை பார்த்த போது கல்யாணிக்கும் கண்ணீர் வர.. “விடு…. எல்லாம் கடந்தாச்சு… இனி நீங்க சந்தோஷமா இருக்கணும்…” என்றார். தன் மருமகளின் மனம் தெரிந்தவராக.
கனி தலையை மட்டும் அசைத்தாள் பேச்சு வரவில்லை. மீரா இதையெல்லாம் பார்த்திருந்தால்… அவளிற்கு தன் கணவன் மூலமாக எல்லாம் தெரியும் என்றாலும்… கேட்க்கும் போது தெரியாத கனியின் நிலை, இன்று இப்படி… பேச்சுடன் பார்க்கும் போது… இன்னும் ஒரு மரியாதை வந்தது கனி மேல்…
கல்யாணி, காபியுடன் வெளியே வர.. சதா அமர்ந்திருந்தான் அவனிடம் கொடுத்தவர்.. “கோவிலுக்கு போயிட்டு வாங்க ப்பா” என்றார்.
தன் அன்னை தந்தையிடம் ஆசீர்வாதம் வாங்கி சதா கனி, இருவரும் கோவிலுக்கு கிளம்பினர்.
மெல்ல மெல்ல… அந்த வண்டி செல்ல… சதாவுக்கு கடந்த காலம்தான் நினைவில் வந்தது, கனிக்கும் அப்படியே… எனவே பேச்சு வரவில்லை… மௌனமாகவே கோவில் வந்தனர்.
தரிசனமெல்லாம் முடிந்து அமர்ந்தனர்… காலை நேரம் என்பதால் சற்று கூட்டம் இல்லை போலும்…. கனி “என்னாச்சு… ஏன் அமைதி” என்றாள் கேள்வியாய்.
அவனிற்கு இன்னும் தன் மனதை திறக்க… மனம் வரவில்லை… தான் செய்தது குறித்து இன்னமும் குற்ற உணர்ச்சிதான் அவனிற்கு. அது இன்று அதிகமாக தெரிந்தது அவனிடம்…. அதில் அவன் சிக்கியும் தவிக்க… இதில் இப்போது இவளின் கேள்வி… அவனுக்கு ஆதரவாக இருந்ததோ…
சதா, ஒரு பெருமூச்சு விட்டு… “உனக்கு என்ன வாங்கலாம்னு” என மெல்லிய குரலில் சொல்லி, அவளின் கைகளை பற்றிக் கொண்டான், பொது இடத்தில். கனிக்குதான் இவனின் செய்கை மாற்றத்தை தர…
கனி “போலங்க” என்றாள்.
மீண்டும் அதே தடுமாற்றம் அவனிடம், அத்துடனேயே.. சதா, காரெடுக்க சென்றான். பார்க்கிங்கில் இருந்து காரெடுத்து, கோவில் முன் நிறுத்த, ஏறிக் கொண்டவள்… “என்ன, சார் ஒரு மாதிரி இருக்கீங்க…” என்றாள் மீண்டும்.
சதா, கண்டுபிடித்துவிட்டால் என மெச்சுதல் பார்வை பார்க்க… “ஒன்றுமில்லையே” என்றான்.
கனி “இல்ல… என்ன யோசனை… சொல்லுங்க” என்றாள்.
காரை சாலையில் உள்ள கிளை சாலையில் ஓரமாக நிறுத்தி… சதா மெதுவாக “எ… என்னோட… உ..உனக்கு… நான்.. என் கூட வாழ… ஐ மீன்… ஆர் யு ஹாப்பி வித் மீ” என்றான் மிகவும் தயக்கமான குரலில்… அப்படியொரு அவஸ்த்தை அவன் முகத்தில்….
கனிக்கு, அவனின் கண்ணும் முகமும் என்ன சொல்லியதோ… அவனை முழுவதுமாக உணர்ந்தவளாக…. சட்டென பதில் சொன்னாள்… “ரொம்ப சந்தோஷமாக இருக்கேன், ரொம்ப…
நீங்க பீல் பண்ணாதீங்க…
நீங்க என்னை பிடிக்காம போகலையே… உங்க படிப்புக்காக போனீங்க… உங்க எதிர் காலத்துக்காக போனீங்க… அவ்வளவுதான்… எனக்கு புரியுது…
உங்க உயரம் என்ன, எத்தனை உழைப்பு உங்களை இப்படி வைச்சிருக்குனு… சோ, நான் ஹாப்பி வித் யு…. உங்களுக்கு இன்னும் திருப்தியாகலைனா… இன்னொரு வீடு வாங்கி கொடுங்க… ஆனா இப்படியெல்லாம் இன்னொருதரம் கேட்காதீங்க…” என்றாள் முதலில் அவனின் நிலையுணர்ந்து சொல்லிவள் குரல் போக போக குறும்பை காட்டியதோ…
சதாக்கு அதெல்லாம் தெரியவில்லை… அவள் சொன்னதையே உள்வாங்கிக் கொண்டிருந்தான்…
மீண்டும் கனியே.. “உங்களுக்கும்.. உங்களுக்கு என்னை… பிடிக்கும்தானே…” என்றாள் அவளும் தயங்கி தயங்கி…
சதாவும் சட்டென… உணர்ச்சி வசப்பட்டவனாக… கொஞ்சம் பெரிதான குரலில்.. “ரொம்ப… ரொம்ப… எப்படி சொல்றதுன்னு தெரியலை…
எனக்கு இரண்டாவது இருதையம் மாதிரி… . நீ,
எனக்காகவே, நான் தூங்கும் போதும் துடிக்குமில்ல, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அ…அப்படி.
ப்ளீஸ்… உன்னால, அண்டர்ஸ்டன்ட்” என்றவன் நிறுத்தினான்… சற்று தன்னை நிலை படுத்திக் கொண்டான்…
கனி, அவனின் கைகளில் தன் கைகளால் அழுத்தம் தர… இப்போதும் அவளின் கைகளை பற்றியவன், தொடந்து “என்னால சாரி சொல்ல முடியாது… ஏன்னா, அப்போ… இப்படி எனக்காகவே, இப்படி ஒருத்தி இருப்பான்னு தெரியாது… தெரியவே இல்ல… எனக்கு தெரிஞ்சி, விட்டுட்டு போயிருந்தா சாரி…
ஆனா, இப்போ தேங்க்ஸ்… லாட்ஸ் ஆப் தேங்க்ஸ்… எனக்காக வெயிட் பண்ணதுக்கு” என்றான். கனிக்கு எப்படி பதில் தருவது என தெரியவில்லை…
நன்றியெல்லாம் துச்சம்… அவனின் அந்த நெகிழ்வுதானே.. அவள் கேட்டது… இனி அவள் ஆயுளுக்கும், சலிக்காமல் ஓடுவாளே… கனியின் கண்ணும் முகமும் பூரிப்பில் மலர்ந்து நின்றது.