நீண்ட நெடிய தூரம்… அவன் வந்துவிடுவான் என்றே கடந்தேன்.. ம், வந்ததும்தான் விட்டான்… ஆனால், இப்போதுதான் தடுமாறுகிறான்..
நான் தவறா… இல்லை அவன் தவறா… இல்லை, இருவருமே தவறா… புரியவில்லை. இப்போது மிச்சம் என்னவோ காயம்தான்…
என் கையை அவன் கெட்டியாக பிடித்துக் கொண்டு கரை சேர்ப்பான் என உறவுகள் விட்டு சென்றதா… இல்லை, எப்படியோ கடந்தே விடு என விட்டு சென்றதோ தெரியவில்லை… ஆனால் விட்டு சென்றது.
இப்போதும் புரியவில்லை என் பொறுமைக்கு… மதிப்பு இருக்காதா, இல்லை நான் காத்திருந்ததுதான் மிச்சம்மாகுமா… தலைவலிக்க தொடங்கியது கன்யாவிற்கு.
என்ன நிலை, எப்படி அவனை நெருங்குவது… இல்லை விலகுவதா.. புரியவில்லை. கொஞ்சமும் பிடிபடாத உறவாக இப்போது சதா. இப்போதுதான் வந்து நான்கு நாட்கள்தான் ஆகிறதா… ஏதோ ஐந்து வருடமாக அவன் படுத்தியதாக தோன்ற தொடங்கியது அவளிற்கு…
சொந்தம் எப்போதும் கூடவே இருக்குமே… இருக்கும், நீ நன்றாக வாழ்ந்தால், இல்லையேல்… விலகி நின்று கைகட்டி வேடிக்கை பார்க்கும்… நீ எப்படி வாழ்கியாய் பார்க்கிறேன் என வேடிக்கை மட்டுமே பார்க்குமோ…’ என கண்களில் தளும்பியது கண்ணீர்… இன்னும் இது வருகிறதே எனதான் தோன்றியது கன்யாவிற்கு…
காலை, வேலைக்கு வந்தது முதல் அவளை வேலை இழுக்க… கூடவே அவன் நினைவும் இழுக்க… திணறிவிட்டாள் கன்யா… கொஞ்சம் வேளையில் தடுமாற தொடங்கவும்…
மேனேஜரிடம் சென்று ஒருமணி நேரம் விடுப்பு எடுத்து… வந்து அமர்ந்து கொண்டாள் அந்த டைனிங் ஹாலில் வந்து அமர்ந்து கொண்டாள்…
இன்னும் மனம் ஒரு நிலையில் நிற்கவில்லை… தேடிக் கொண்டே இருந்தது காலையில் நடந்ததை… தன்னையே குற்றவாளியாக்கி… அவனை நல்லவனாக்கி, பின் தன்னை நல்லவளாக்கி, அவனை குற்றவாளிக்கி… வகை வகையாக பிரித்து மேய்ந்தும் விடைதான் கிடைக்க வில்லை, போ… இழுத்து செல்லும் வரை செல்லுவோம் என எண்ணி எண்ணி சோர்ந்து போனாள் கன்யா…
நேரம் கடக்க, அனைவரும் மதியம் லஞ்ச் டைம்க்கு வந்தனர். லாவண்யா “என்ன கன்யா என்னாச்சு… ஏன், ரொம்ப டைய்டா இருக்க” என்றார்.
“ஒண்ணுமில்ல க்கா… கொஞ்சம் கண்ணெரிச்சல், தலை வலி வேற ஒண்ணுமில்ல” என்றாள் திக்கி திக்கி…
ஒருவாறு எல்லோரும் பேசியபடியே உண்டனர்… ஐந்து பெண் ஸ்டாப், மீதம் ஆண் ஸ்டாப் எனவே இவர்கள் தனியே அமர்ந்து உண்ண தொடங்கினர்…
சின்ன சின்னதாக எதை எதையோ பற்றி பேச்சு சென்றது. கொஞ்சம் இயல்பானாள் கன்யா… பேச்சு வரவில்லை என்றாலும், அவர்களின் பேச்சை கவனிக்க தொடங்கினாள்…
பின் ஒரு வழியாக உண்டு எழுந்தாள். முகத்திற்கு நன்றாக தண்ணீர் அடித்து அலம்பிக் கொண்டு வெளியே வந்தாள்.. சற்று பரவாயில்லையாக உணர்ந்தாள்… மதியம் மெதுவாக பேசியப்படியே வேலை சென்றது…
சதா, எப்படி வந்தேன் என தெரியாமேலே வந்தான் அவளின் பேங்க்கிற்கு… ஒரு ஜீன் ஷர்ட்டில், அதுவும் இருவது நிமிடம் முன்பே வந்துவிட்டான்… சும்மாவே அமர்ந்திருந்தான் காரில்… என்ன செய்வது என தெரியவில்லை.
பாட்டு கேட்கவும் தெரியாது… ஆனால் காரின் அந்த ஸ்பீக்கர்ரும் தன் கடமையை செய்தது… இப்படி எல்லாம் வந்ததே கிடையாது… அதுவும் இன்னொருவர்காக காத்திருந்தது என்பது அவனின் அகராதியிலேயே இல்லா செய்கை…
எப்போதும் யாருக்கும் உதவவேல்லாம் அவனிற்கு நேரமேது… தானும் மற்றவரிடம் உதவி என கேட்ட்கமாட்டான். தன் கையே, தனக்குதவி…
பாங்கின் பார்க்கிங் ஏரியாவில் வண்டியை நிறுத்தி போவோர், வருவோரை வேடிக்கை பார்த்தான்… ஆனால் சிந்தனை.. வாழ்க்கையிலேயே… ஒரு பெரிய இருவது நிமிஷத்த இழந்துட்ட.. என அவன் உள்மனம் சொல்லிக் கொண்டே இருந்தது.
எப்போதும் அவனுடன் இருப்பவர்கள்… ஜீனியஸ்கள்தான். அத்தனையும் இன்னொரு உயிர் குறித்த பேச்சுக்கள்தான். எப்போவேனும் வெளியே செல்வான் சதா… மற்றபடி அவனின் ரீலிப் எல்லாம் யோகாதான்.
ஒரு ஷாப்பிங், தம், சின்ன சைட் வீவ், ஸ்மால் கட்டிங் இதெல்லாம அவனிற்கு பிடிக்காத செய்கைகள்… பொழுதுகள் அனைத்தையும் உபயோகமாகவே செய்பவன். எனவே இப்போது காத்திருப்பதை மிக மோசமாக உணர்ந்தான்…
ஆனால் அவனை அறியாமே… உள்ளம் காலையில் நடந்த நிகழ்வை எண்ண தொடங்கியது.. நான் எப்படி அத்தனை பேர் எதிரில், கன்யாவை பற்றி பேசினேன்… என சிந்தனை சென்றது.
என்னோட குணங்களில் இல்லவே இல்லாத செய்கையாக ஒரு பெண்ணை பற்றி, அதுவும் நான்தான் வேண்டும் என காத்திருந்தவளை பற்றி எப்படி பேசினேன்..
ஒருவேளை அன்று அவள் காரெடுத்து சென்றாதாக இருக்குமோ, அதான் எனக்கு கோவம் என ஒருமனம்…
இன்னொரு மனம்… ஐந்து வருடம் சென்று வந்த, என்னை பார்த்து சிரிக்க கூட கஷ்ட்டம் அவளுக்கு… என எல்லாம் இவனிற்கு சாதகமாகவே எண்ண தொடங்கியது மனம்.
ஆனால், அவனின் புத்தி சொல்லியது அவள் எப்படியிருந்தாலும்… உன் மனைவி.. அவளை அத்தனை பேர் எதிரில் பேசியது தவறு… உனக்கு அவள்… செயினை கழட்டியது பிடிக்கவில்லை என்றால்… அவள் உன் டேபிள் மேல் வைக்கும் போதே சொல்லியிருக்க வேண்டும்’ என அவனின் மேதாவிபுத்தி.. எடுத்து சொல்ல…
தடுமாற தொடங்கினான் இருதைய மருத்துவன்… எல்லோரும் எல்லா இடங்களிலும் சரியானவர்கள் இல்லைதானே… எனவே, சற்று நிதானிக்க தொடங்கினான்.
நான் தவறுகிறேனா… காயபடுத்தி விட்டேனா, ஆனால் அவளும் தானே, நான் வந்தவுடன் எங்கோ சென்றாள், என மனம் சொல்ல… குழப்பம் மட்டும்தான்… அவனிற்கு.
இப்போது போன் ஒலிக்க தொடங்கியது. எதிலிருந்தோ தப்பித்தவன் போல போனை எடுத்து பேசினான். நேரம் சென்றது ஆறேகால்… இன்னும் வரவில்லை கன்யா…
கொஞ்சம் பொறுமை தப்பியது எப்போதும் போல் கன்யாவின் விஷயத்தில், முதல் முதலாக அன்று வாங்கிய நம்பருக்கு போன் செய்தான்… ஒலிக்க தொடங்கியது, முதல் அழைப்பை எடுக்கவில்லை அவள்.
அதற்குள் சலித்துபோனான் சதா, சீட்டில் சாய்ந்து அமர்ந்து கொண்டான். என்ன செய்வது என அவனின் விரல்கள் ஸ்டியரிங்கில் தாளமிட தொடங்கின…
இரண்டாம் முறை அழைக்க அவனின் ஈகோ இடம் தரவில்லை… பொறுமை பறந்தது…. “போடி… உன்னையெல்லாம் மதிச்சு கூப்பிட வந்தா இப்படிதான்” என மனம் குற்ற பத்திரிகை வாசிக்க…
அப்போது எதிரே கன்யா தரிசனம் தந்தாள்… உணமையாகவே தரிசனம்தான் தந்தாள்… லாவண்யாவுடன் பேசியபடி… மெல்லிய சிரித்த முகமாக… லேசாக கலைந்த தலையுமாக வந்தாள்…
ஆனால் அவளின் கண்ணில் ஏதோ சோர்ந்த தோற்றம். ஆனால் முகம் நன்றாகத்தான் இருந்தது.
இன்று காலை அவளின் முகம் எப்படி ஒளியிழந்து இருந்தது… இப்போது இப்படி ஜொலிகிறது… ம்… நிறைய அழகிதான், கூடவே கொஞ்சம் திமிர் போல… என அவனின் கண்கள் அவளை அங்குல அங்குலமாக எடை போட்டபடி இருந்தது.
காரின் ஹாரனை அடித்து அவளின் கவனத்தை ஈர்க்க நினைத்த சதா, ஒருமுறை ஹாரனை ஒலிக்கவிட… ம்கூம்… திரும்பவில்லை கன்யா. கோவத்திற்கு பதில், சிரிப்பு வந்தது அவனிடம்.. சுவாரசியம் கூடியதோ… போன்னெடுத்து அவளின் எண்ணிற்கு அழைத்தான்.
போனை பார்த்தவள்… சைலண்டில் போட்டு, உள்ளே வைப்பது தெரிந்தது… இப்போது “உடம்பு மொத்தமும் திமிர்தான்….” என பட்டயம் கொடுத்தபடி காரிலிருந்து இறங்கி, கன்யாவை நோக்கி சென்றான்.
அங்கு இருவரும் பேசியபடி நிற்க… “ஹாய் “ என்றான் கன்யாவை பார்த்து. கூடவே நின்ற லாவண்யாவையும் பார்த்து “ஹலோ” என்றான்.
கன்யா பே பேவென நிற்க,,, கன்யாவிற்கு படபடப்பானது… என்ன செய்வானோ என…
லாவண்யாக்கு மூக்கு வேர்த்தது… கன்யாவை உனக்கு தெரிந்தவரா என்ற பார்வை பார்க்க..
அதற்குள் சதா “ஹலோ, நான் கன்யா ஹஸ்பன்ட்… டாக்டர் சதாசிவம்” என்றான்.
லாவன்யா குஷியாகி கன்யாவிடம் “வந்துட்டாங்களா… “ என்றவள். சதாவிடம் “ஹலோ டாக்டர்.. எப்போ வந்தீங்க… எப்படி இருக்கீங்க… சரி சரி கிளம்புங்க” என்றார் அவசரமாக எல்லாம் தானே பேசி, பதிலே சொல்லவிடாமல்..
கன்யாவிடம் மெல்லிய குரலில் “அதான் டையர்டா… ஓகே ஓகே… என்ஜாய்” என்றார் சிரித்தபடியே… கன்யாவிற்கு சிரிப்புதான் வந்தது. நீயும் என்னை மாதிரியே தப்பு தப்பா.. கனவு கணாரையே என நினைத்தபடி சதாவுடன் சென்றாள்.
காரில் செல்ல செல்ல அமைதிதான் சாத… எப்போதும் பேச்சை விரும்ப மாட்டான் இன்று ஏனோ கன்யா அருகில் இருக்க, தான் கலையில் செய்தது வேறு அவன் நினைவில் வர “எங்கையாவது… வெளியே போலாமா” என்றான்.
கன்யா “ப்ளீஸ்… நான் ரொம்ப டையர்டா இருக்கேன்… நான் வேண்ணா பஸ்ல போயிக்கிறேன், நீங்க போயிட்டு வாங்க…” என்றாள். உள்ள கோவத்தில்.
சதா திமிர் திமிர் எல்லாம் திமிர்.. என நினைத்தபடி “தனியா போக எங்களுக்கு தெரியும்… உன்ன போய் கூப்பிட்டேன் பார் என்ன.. சொல்லணும்” என்றான் கடு கடுவென.
கன்யா பிடித்துக் கொண்டாள் “என்ன சொன்னேன் இப்போ, இப்படி பல்ல கடிக்கிறீங்க… உங்கள வர வேண்டாம்ன்னுதானே சொன்னேன்… எதுக்கு இப்படி வந்து நிக்றீங்க… பிடிக்காம ஏன் வரீங்க…” என்றாள்.
சதா “என்ன பண்றது தாலி கட்டிட்டேனே.. அதான், எங்களுக்கெல்லாம் கல்யாணம்னா ஒருதரம்தான்…” என்றான் அவளை திரும்பி பார்த்தபடி..
மீண்டும் தானே “இப்போதான் வந்தேன்… இன்னும் தொடங்கவேயில்ல அதுக்குள்ளே… ஏண்டா வந்தும்னு இருக்கு… “
“ப்பா… எப்படிதான் எல்லோரும் வழறாங்களோ…
தனியா போக எங்களுக்கு தெரியாமதான் வந்து கேட்கரோமா… பேச்ச பாரு” என்றான்… குரலில் அத்தனை வேகம்…
கன்யா “நாங்க மட்டும் நாலஞ்ச்சு முறை கல்யாணம் செய்தவங்க பாருங்க… வெளியே போகணும்னா… முன்னாடியே சொல்லணும், உடனேல்லாம் என்னால வர முடியாது, இயர் என்டிங்க… வொர்க் லோட் ஜாஸ்தி” என்றாள் இன்னும் கடுப்பான குரலில். நீ கூப்பிட்ட உடனே நான் வரணுமா… என்ற எண்ணம் அவளிற்கு.
சதா “சை..” என ஸ்டியரிங்கில் குத்தினான். கன்யா கண்டுகொள்ள வில்லை… அமைதியானாள்.
அதன்பிறகு, யாருக்கு நல்ல நேரமோ இருவரும் வாய் திறக்கவில்லை… அமைதியாக வீடு வநதனர்… கன்யா, இறங்கி உள்ளே செல்ல… சதா காரை பார்க் செய்துவிட்டு வந்தான்.
எல்லோர் முகங்களும் இவர்களையே பார்க்க… இந்த பார்வை வீச்சை தாங்க முடியாத கன்யா “அத்த… காபி” என்றபடி சென்று கிட்சனில் அமர்ந்து கொண்டாள்.
யசோதா அவளுக்கு காபி போட… கல்யாணி “அம்மா கிட்ட பேசுனியா கன்யா… பாவம் அவங்களுக்கு மனசே இல்லாமதான் கிளம்பி போனாங்க.. நீ பேசுனியா” என்றார் தங்கள் சம்பந்தியை நினைத்து கவலையாக.
நேரம் சென்றது… எங்கே மேலே சென்றாள் சண்டை வருமோ என பயந்து கன்யா, உடை கூட மாற்றாமல், அங்கேயே முகம் கழுவி… தன் அத்தை நாத்தனாருடன் பேசியபடி இயல்பாக இருக்க தொடங்கினாள்.
சதா அங்கேதான் அமர்ந்திருந்தான். அவ்வபோது… கிட்சனிலிருந்து வரும் சிரிப்பொலியை கேட்டபடி…
எதையோ இழந்தது போல் உணர்ந்தான்… சிரிப்பினுடே அவளின் குரல் தேனாய் இவன் காதில் பாய தொடங்கியது. பின் ஹாலில் வந்து அமர்ந்தனர் மூவரும். மீண்டும் டிவி பார்த்தபடியே ஏதேதோ கேலி செய்து கொண்டு அமர்ந்திருந்தனர்.
சதா இன்னும் நொறுங்கினான்… ‘போடி பெரிய இவ..’ என்றபடி எழுந்து மேலே சென்றுவிட்டான். தான் என்ன நினைக்கிறோம் என முழுதாக அவனிற்கே தெரியவில்லை. தடுமாறிக் கொண்டிருந்தான்.
அப்படியே புத்தகங்கள் பக்கம் சென்று… புரட்ட தொடங்கினான்… கன்யா பின் சென்று புத்தகங்கள் முன் வந்தன… சதாவிடம்.
நேரம் சென்றது…. உணவு உண்ண அழைக்க… வரவேயில்ல சதா… ”வரேன் ம்மா” என்றபடியே அமர்ந்திருந்தான்… எழவே மனமில்லாதவனாக.
கல்யாணி “நீ சாப்பிட்டு அவனுக்கு எடுத்து போய் கொடுத்திடு, இல்ல சாப்பாட்டையும் மறந்திடுவான்” என்றார் தன் மகனை பற்றி பெருமை பேசியபடி.
கன்யாவும் அப்படியே எடுத்து மேலே சென்றாள்… அங்கே சதா… ஹெட் செட்டை காதில் வைத்தபடி… மானிட்டரில் யாருடைய விளக்க உரையோ ஓடிக் கொண்டிருக்க… இவன் புக்கை கையில் வைத்த படியே… மானிட்டரை பார்ப்பது… புக்கில்… தேடுவது என இருந்தான்.
காதில் ஹிட் செட் இருந்ததால் இவள் மேலே வந்தது தெரியவில்லை… இவள், உணவை எங்கே வைப்பது என தெரியாமல் அவன் டேபிளை பார்க்க.. சதாதான் அப்படியே கண்ணும் கருத்துமாக எதையோ பார்த்து படித்துக் கொண்டிருந்தானே…
கன்யா இபோதுதான் அவனை முழுதாக பார்க்கவே தொடங்கினாள்… நல்ல கரு கரு கேசம்… அங்கிங்கு காற்றில் அதன் போக்கில் ஆடாதபடி… அவன் சொல் பேச்சு கேட்டு நின்றது.
கூடவே அவனின் கண்களில் அப்படியொரு ஈர்ப்பு… நல்ல தெளிவான ஒளி… தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான், அந்த மானிட்டரை. நீண்ட நெடிய மெல்லிய சிவந்த உருவம்… எப்படி என்னிடம் மட்டும் எப்போதும் நெற்றி கண் திறக்கிரானோ… ப்பா..
ஏனோ அவன் கண்களில் வந்து நின்றது பார்வை… சமர்த்தன்தான் செல்லம் கொஞ்சினாள்… கன்யா. கொஞ்சமாக முகம் சிவந்தது. ஒரே ஒரு சாரி சொல்லு உன் கூட பழம் விடுறேன்… பேரம் பேச தொடங்கியது அவள் மனம்….
இப்படியே நேரம் போக… கன்யா இருக்கும் நிலை உணர்ந்து பார்க்க… இன்னும் அவன் திரும்பாமல் இருக்க… அவன் அருகில் சென்று… அவனிற்கும் மானிட்டருக்கும் இடையில் கையை ஆட்ட… அசால்ட்டாக திரும்பி பார்த்தவன்… “வெயிட்” எனும் விதமாக கையை மட்டும் அசைத்தான்.
இப்போதுதான் கவனித்தால் கன்யா, அந்த அறையின் மாற்றத்தை… எனவே கையில் தட்டை அங்கிருந்த டிரெஸ்ஸிங் டேபிளில் வைத்தபடியே பார்த்துக் கொண்டிருந்தாள்…
இப்போது தன் கணவனை மெச்ச தொடங்கியது மனம்… “ம்.. பரவாயில்லேயே…” என.
தனது பெட்டியை எடுத்து வந்து, புதிய கபோர்டில் துணிகளை அடுக்குவதர்காக எல்லாவைற்றையும் பிரிக்க தொடங்கினாள்.. முகமெல்லாம் கணவனை நினைத்து பெருமிதத்தில் மிளிர்ந்தது.
இப்போது சதா “காலையில செய்த மாதிரி செய்யாம… இங்கேயே இருக்கற மாதிரி இருந்தா… எல்லாத்தையும் எடுத்து வை” என்றான் அமர்த்தலான குரலில்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.