Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அழகிய தீயே அன்புள்ள திமிரே

அழகிய தீயே அன்புள்ள திமிரே 2

திமிர் 2:

தாய்மை வாழ்கென்னா தூய செந்தமிழ் ஆரிராரோ ஆராரோ     

தங்க கை வலை வைர கை வலை ஆரிராரோ ஆராரோ     



Advertisement

இந்த நாளிலே வந்த ஞாபகம் எந்த நாளும் மாறாதோ     

கண்கள் பேசிடும் மௌன பாசையில் என்னவென்று கூறாதோ     

தாய்மை வாழ்கென்ன தூய செந்தமிழ் பாடல் பாட மாட்டாயோ     

Advertisement

திருநாள் இந்த ஒரு நாளில் பலநாள் கண்ட சுகமே     

Advertisement

தினமும் ஒரு கனமும் இதை மறவா எந்த மனமே மறவா என்று மனமே மறவா மனமே மறவா என் மனமே மறவா என்று மனமே மறவா     

. பேசிடும் மொழி தான் இந்த உலகின் பொது மொழியே     

பல ஆயிரம் கதை பேசிட உதவும் விழி வழியே 

Advertisement

அக்ஷி , தேஜா இருவரையும் மனையில் அமர்த்தி வளைகாப்பு பாடலை பாட ஆரம்பித்தனர்.

அக்ஷிதாவிற்கு முதலில் வளையல் அடுக்க ஆரம்பிக்க மூத்தவர்கள் போட்ட பின் அனல் தனது மனைவிக்கு அழகான தங்க வளையல்களை இரு கைகளிலும் போட்டு விட்டான். மெலிசான தங்க வளையல்கள் அவளது அழகான வெண்ணிற கைகளை நிறைத்தது ஒன்றல்ல இரண்டல்ல ஒவ்வொரு கைகளிலும் ஒன்பது ஒன்பது போட்டு விட்டான்.

அவன் அண்ணி நித்யா சும்மா இல்லாமல் ” இது என்ன அனல் உன் பொண்டாட்டிக்கு ஸ்பெஷலா வாங்கி கொடுக்குற போலிருக்கு… ” என்றவள் குரலில் ஏகத்திற்கும் புகைச்சல் கலந்திருந்தது. அப்போது தான் அதனை கவனித்த கண்ணாயிரம் கண்கள் கோபத்தை காட்ட பெண்களின் கண்களில் சிறு பொறாமை தீ எரிந்தது.

‘ மாமா அவங்க பொண்டாட்டிக்கு வாங்கி கொடுக்காம உங்களுக்கா வாங்கி கொடுக்க முடியும் ‘ என்று தேஜா மனதிற்குள் நினைத்தாலும் வெளியில் ஒன்றும் பேசாமல் முகத்தை கடுகடுவென வைத்திருந்தாள்.

அவள் மனதில் நினைப்பதை பேசி விட முடியும் ஆனால் அதன் பிறகு நித்யா போடும் ட்ராமவை பார்க்க தேஜாவிற்கு சக்தியில்லை. 

இதுபோல் பல முறை நடந்து கண்ணாயிரத்திடம் பஞ்சாயத்துக்கு செல்லும். அதிலும் கண்ணாயிரம் சொல்லும் ஒரு தலை பட்சமான தீர்ப்பும் தேஜா வெறுக்கும் பல விஷயங்களில் குறிப்பிட தக்க ஒன்று.

விஷ்ணு மனைவியின் முகத்தை பார்த்தே அவளுடைய மனநிலையை உணர்ந்தது போல் அவள் அருகில் சென்று நின்றான்.

அனல் நித்யாவின் கேள்வியில் கடுப்பானாலும் அனைவரும் இருப்பதை கருத்தில் கொண்டு ” என்னோட பேபி இந்த சத்தத்தை எப்போதும் கேட்டுகிட்டே இருக்கணும்னு வாங்கி கொடுத்துருக்கேன் நித்தி ” என்று குழந்தையை இழுத்து அவள் மேலும் எதுவும் பேச முடியாதபடி செய்தான். குழந்தையை காரணமாக சொன்னதினால் யாருமே மாற்று கருத்து சொல்ல முடியாமல் போனது.

ஆனால் நித்யாவோ அப்போதும் சும்மா இருக்காமல் “குழந்தை வெளில வந்தோன ஒரு கிலுகிலுபை வாங்கி கொடுத்தா போச்சு அதுக்கு எதுக்கு தேவையில்லாம இந்த ஆடம்பர செலவு ” என்று சொல்ல ” அதானே ” என்று பத்மாவதியும் சொல்ல கண்ணாயிரம் மகனை கண்டனத்துடன் பார்த்தார்.

அனலோ அவள் கேள்வியில் தோன்றிய எரிச்சலை மறைக்காமல் முகத்தில் கொண்டு வந்து ” குழந்தைக்கு இப்போவே நல்லா காது கேட்கணும்னு வளையல் மாட்டி வளைகாப்பு பங்க்ஷன் வைக்கிறது… பிறந்ததுக்கு அப்புறம் எதுக்கு ” என்று சூடாக கேட்க அவனின் தமையன் செழியன் ” டேய் அவ தெரியாம கேட்டா அதை எதுக்கு சீரியஸா எடுக்குற ” என்று தம்பியை சமாதானம் செய்தான்.

நித்யா வாயை கொணட்டி விட்டு திரும்பி கொள்ள பத்மாவதி ” ம்க்கும் இந்த மாதிரி ரெண்டு பேர புள்ளைக்கும் நடக்கல இங்க என்னமோ புதுசு புதுசா பண்றீங்க போல அண்ணே ” என்று கண்ணாயிரத்தை இழுக்க பார்க்க அனல் இதை இத்தோடு முடிக்க எண்ணி தனது அத்தை தேவகியை பார்க்க ” என்ன அக்கா இது நம்ம வீட்டு விசேஷம் எல்லாம் அண்ணேனொட தகுதிக்கு நிகரா இருக்கணும்னு நாங்க பார்த்து பார்த்து செஞ்சிருக்கோம் அவரோட வாரிசு தம்பி, வெறும் கைய வீசிட்டு சும்மாவா வருவாரு அவரு பொண்டாட்டி பிள்ளைக்கு போட்டாலும் அவரை சார்ந்தது தானே என்ன அண்ணே நா சொல்றது ” என்று நெக்கு போக்காக பேசி கண்ணயிரத்தையும் இழுக்க,

கண்ணாயிரம் அவர் வைத்த ஐஸில் குளிர்ந்து போய் ” விடுமா பத்மாவதி தங்கச்சி சொல்றதும் சரிதான்… ” என்று முடித்துவிட்டார்.

அனலிற்கு எப்போதும் போல் தன் அத்தையின் மேல் மதிப்பு கூடியது. அக்ஷிதாவின் தந்தை சூதுவாது அறியாதவர் அவ்வளவாக பேச தெரியாதவர் அவருக்கும் சேர்த்து அனைத்தையும் சமாளிப்பதில் தேவகி வல்லவர்.

அனல் ” குழந்தையோட வளர்ச்சி நல்லா இருக்கணும்னு தான் இதெல்லாம் அதனால் யாரும் எதுவும் பேசாம அடுத்து நடக்க வேண்டியதை பாருங்க ” என்றான்.

அக்ஷியும் கணவனின் வார்த்தைகள் உண்மையென்று நம்பி ‘ இது எல்லாமே அவரோட குழந்தைக்காக தான் போல ‘ மனதில் ஏமாற்றத்துடன் நினைத்துக் கொண்டாள்.

அக்ஷியை பொருத்தவரை இந்த திருமணம் அனல் கண்ணாயிரத்தின் வற்புறுத்தலின் பெயரில் பண்ணிக் கொண்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறாள் அதற்கு காரணகர்த்தா நித்யா தான்.

அந்த வீட்டை எப்போதும் தனது ஆளுமையின் கீழ் வைத்துக் கொள்ள விரும்பி வீட்டில் இருப்போரின் நிம்மதியை கேள்விக்குறியாக்கி கொண்டிருக்கிறாள்.

இதனை வந்த புதிதிலே உணர்ந்திருந்த தேஜா வாய் துடுக்குடன் உண்மையை போட்டு அடிக்கடி உடைத்துவிட நித்யாவின் நேரடி எதிரியாகி போனாள்.

இதனாலே தேஜாவிற்கும் நித்யாவிற்கும் அடிக்கடி முட்டிக் கொள்ளும். அது வீட்டு பிரச்சனையாகி பின் விஷ்ணு தேஜா இருவர் கிடையிலும் பெரும் சண்டையாக வந்து முற்றுப்பெறும்.

அக்ஷிதாவிற்கான சடங்குகள் முடிய அடுத்து மனையில் அமர வைத்து தேஜாவிற்கு செய்தனர்.

விஷ்ணு கை நிறைய மஞ்சள் கலந்த சந்தனத்தை எடுத்து தேஜவுடைய கன்னத்தில் பூச விஷ்ணுவின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தேஜா வெட்கத்துடன் தலை குனிய சந்தனத்தின் குளிர்ச்சியிலும் வெட்கத்திலும் அவள் கன்னங்கள் இரண்டும் ரோஜா பூவாய் சிவந்தது.

கை நிறைய கண்ணாடி வளையல்களை எடுத்து தேஜாவிற்கு இரண்டு கைகளிலும் கொஞ்சம் கொஞ்சமாய் மாட்ட அவள் முகம் புன்னகை பூசிக்கொண்டது.

நித்யாவிற்கு தேஜாவின் புன்னகை ஒரு வித எரிச்சலை தர அவள் மனநிலை கெடுக்க விரும்பி ” என்ன விஷ்ணு அனல் அவன் ஒய்ஃப்க்கும் குழந்தைக்கும் பார்த்து பார்த்து அழகான தங்க வளையல் பரிசு கொடுத்து இருக்கான் நீ எதுவும் உன் பொண்டாட்டி பிள்ளைக்கு கொடுக்கலையா ” என்று கேட்க அதுவரை இருந்த இதமான மனநிலை மாறி தேஜா இப்போது விஷ்ணுவை முறைத்தாள்.

விஷ்ணு நித்யா இது போல ஏதாவது வம்பு வளர்ப்பால் என்று தெரிந்து சடங்க ஆரம்பிப்பதற்கு சற்றுமுன் நேரம் தான் அழகான ரூபிகள் பதித்த ஆரத்தையும் அதற்கு மேட்ச்சான வளையல்களையும் பரிசாக கொடுத்தான். சபையில் கொடுத்தால் இவ்வாறு பிரச்சனை வரும் என்று நினைத்து அதை தவிர்க்க முன் எச்சரிக்கையாக நடந்திருக்க அப்படியும் நித்யா விட்டேனா பார் என்று வம்பு வளர்க்க நின்றாள்.

விஷ்ணு மனதிற்குள் ‘ இவளுக்கு வேற வேலையே இல்லையா நம்மள போட்டு நோண்டிக்கிட்டே இருக்கா ஐயோ என் பொண்டாட்டி வேற கடுப்பாயி உண்மைய போட்டு உடைக்க போறாளே என் தகப்பன் வேற கடுப்பாகி என்னை உண்டு இல்லனு பண்ண போராரே இவங்களே சமாளிக்கிறதே நமக்கு முழு நேர பொழப்பா இருக்கு ‘ என்று மனதிற்குள் அலற அதே நேரம் தேஜாவும் ” விஷ்ணு கொடுக்கலைன்னு உங்களுக்கு தெரியுமா ” என்று நித்யாவை கேட்க விஷ்ணு தேஜாவை பேசிவிடாமல் இருப்பதற்காக அவள் காலை சுரண்ட அந்த காலை ஓங்கி மிதித்து வைத்தாள் தேஜா கணவனின் சுரண்டல் எதற்கென்று தெரிந்து.

வலியில் விஷ்ணு நகர்ந்து நின்று கொள்ள தேஜா நித்யாவை பார்த்து “நான் போட்டு இருக்க இந்த ரூபி செட் விஷ்ணு வாங்கி தந்தது தான் ” என்று சொல்ல அங்கிருந்த அனைவரும் விஷ்ணுவை ஆஹா ஓஹோ என்று பேச விசாலாட்சிக்கு மகன் தன்னிடம் சொல்ல வில்லை என்று கடுகடுப்பு இருந்தாலும் அதனை காட்டிக் கொள்ளாமல் நின்றார்.

ஆனால் கண்ணாயிரமோ முகத்தில் முல்லை கட்டியது போல் கடுகடுவென்று நின்றவர் மனதில் ‘ எம்புட்டு செலவு பண்ணிட்டு வாங்கிட்டு வந்திருக்கான் கிறுக்கு பய பணம் காசு சேர்க்க தெரிதா ஒதவாக்கரை ஒதவாக்கரை ‘ என்று மகனுக்கு மனதிற்குள் அர்ச்சனை செய்தார்.

விஷ்ணுவோ ‘ பத்த வசுட்டியே பரட்ட ‘ என்று மனதிற்குள் கவுண்டர் கொடுத்தவன் அங்கு உள்ளவர்களை பார்க்க யார் முகமும் சரியாக இல்லை.

‘ ம்ம் சமாளிப்போம் ‘ என்று நினைத்தவன் ” ஹிஹி அங்க இருந்து வரும் போதே போட்டு வந்தா தானே நல்லா இருக்கும் அதான் போட்டு விட்டேன் “, என்று சமாளிக்க முயற்சி செய்ய நித்யா ” வளைகாப்புக்கு கண்ணாடி வளையல் தான் போடுவாங்க இங்க என்னமோ புதுசு புதுசா நடக்குது… எனக்கு எல்லாம் இப்படி நடக்கலை ” என்று புகைச்சலை மறையாமல் காட்ட அதுவரை சபை நாகரீகம் கருதி தன்னை கட்டுப்படுத்திக் கொண்டிருந்த தேஜ நித்யாவின் இந்த வார்த்தைகளில் பொங்கிவிட்டாள்.

” எனக்கு ஏன் இப்படி பண்ணலன்னு உங்களை பெத்தவங்க கிட்டயும் உங்களை கட்டுனவர் கிட்டயும் தான் அக்கா நீங்க கேக்கணும் ” என்று தேஜஸ்ரீ சொல்ல ” தேஜா ” என்று விஷ்ணு கோபமாக குரல் கொடுக்க ” ஸ்ரீ ” என்று அவளை பெற்றோர்கள் கண்டிப்புடன் குரல் கொடுத்தார்கள்.

” ம்கூம் நல்லதுக்கு காலமே இல்ல ” என்று குணட்டிவிட்டு நித்யா திரும்பி கொள்ள அங்கிருந்த அனைவரும் ஏதோ தேஜா மீது தான் தவறு என்பது போல் முணுமுணுத்தனர்.

தேஜாவின் கோபம் மட்டுமே அங்கே பிரதானமாக தெரிய ஒரு பெரியவர் ” என்ன விஷ்ணு பொண்டாட்டிக்கு இப்படி கோபம் வருது ” என்றவர் ” விசாலாட்சி இனி நீயெல்லாம் மருமகளுக்கு அடங்கி தான் நடக்கணும் போல ” என்றார்.

” அப்படியெல்லாம் இல்ல பெரியம்மா என் மருமகங்க மூணு பேரு தங்கம் என்ன தேஜா கொஞ்சம் துறுதுருன்னு இருப்பா அவ்ளோ தான் ” என்று விசாலாட்சி சமாளித்தார். ஆயிரம் இருந்தாலும் தன் செல்ல மகனின் மனைவியை எவர் முன்னும் விட்டுக்கொடுக்க அவருக்கு விருப்பமில்லை. அத்தோடு தேஜாவை அவருக்கு மிகவும் பிடிக்கும் தன்னை எப்போதும் அரட்டி கொண்டிருக்கும் நித்யாவை விட, அமைதியாக தன்னோடு ஒட்டாமல் இருக்கும் அக்ஷிதாவை விட எப்போதும் கலகலத்துக் கொண்டே இருக்கும் தேஜு மீது அவருக்கு பாசம் அதிகம் எனலாம்.

அப்போதைக்கு அனைவரும் அதனை கடந்து விட உள்ளுக்குள் ஒரு வித எரிச்சலில் இருந்தது தேஜா மட்டும் தான். கர்ப்பமாக இருக்கும் காரணத்தினால் அவளுக்கு சிறு விஷயத்திற்கு எல்லாம் அதிக எரிச்சலும் கோபமுமாக மூட் ஸ்விங் இருந்து கொண்டே இருந்தது. அவளும் முடிந்தளவு தன்னை காட்டுக்குள் வைத்துக்கொள்ளவே முயற்சி செய்துகொண்டிருக்க அதனை தகற்பதே முழுநேர வேலையாக வைத்திருந்தாள் நித்யா.

பின் ஆயுள்ஹோமம் செய்து நல்லநேரம் பார்த்து மருமகள்களை அனுப்ப தயார் செய்துகொண்டிருந்தார்கள்.

அனல் அக்ஷிதாவுடனே இருக்க விரும்ப உறவினர் அனைவரும் இருக்கும் காரணத்தினால் மனைவியை நெருங்காமல் அமைதிகாத்து அமர்ந்திருந்தான்.

அவன் தனியே அமர்ந்திருக்க அவன் அருகில் வந்து அமர்ந்த செழியன் ” என்னடா பொண்டாட்டி ஊருக்கு போற சோகம் இப்பவே உன் மூஞ்சுல தாண்டவம் ஆடுது ” என்று சொல்ல ” அப்படியா ” ஒன்று அறியாதவன் போல் கேட்க ” கல்லூலிமங்கன் டா நீ உன் கிட்ட இருந்து ஒரு விஷயம் வாங்க முடியுமா சரி நீ சொல்லாட்டி போற பீல் பண்ணாத ரெண்டு மாசம் தானே ஓடுறதே தெரியாது ” என்று தம்பிக்கு ஆறுதல் சொன்னான்.

” ஒரு மாசம் தான் எங்க ரெண்டு மாசம் இருக்கு குழந்தை பிறந்து பதினாராவது நாள் நான் நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருவேன் ” என்று சொன்னவன் கண்கள் தன் மனைவியையே வட்டம் அடித்தது.

“அடப்பாவி ” என்று செழியன் சொல்ல அதை கண்டும் காணாமல் இருந்தவன் அக்ஷிதா முகம் வாடி இருப்பது போல் தெரிய ” ஜான்வி ” என்று அண்ணன் மகளை அழைக்க அந்த குட்டி வாண்டு தன் பட்டு பாவாடையை தூக்கி பிடித்து அவனிடம் ஓடி வந்து ” என்ன சித்தப்பா ” என்று கேட்க ” சித்திக்கு குடிக்க எதுவும் வேணுமான்னு கேட்டுட்டு வா போ ” என்று சொல்லி அனுப்பி வைத்தான்.

அந்த குட்டி வாண்டும் அவன் சொன்னபடியே சென்று சித்தியிடம் ” சித்தி உங்களுக்கு குடிக்க என்ன வேணும்னு சித்தப்பா கேட்டாரு ” என்று சொல்ல நொடி பொழுதில் அவள் முகம் மலர்ந்து போனது.

” எனக்கு எதுவும் வேணாம் குட்டி கொஞ்சம் தண்ணி மட்டும் வேணும்னு உங்க சித்தப்பா கிட்ட சொல்லு ” என்று சொல்ல அதை அப்படியே தன் சித்தப்பாவிடம் ஒப்பீத்தது.

செழியன் ” இரு டா நா நித்யா கிட்ட கொடுக்க சொல்றேன் ” என்று சொல்ல ” வேணாம் டா நானே கொண்டு குடுத்துட்டு அவளுக்கு எதுவும் அசௌக்காரியாமாக இருக்கானு கேட்டுட்டு வரேன் அவ முகமே சரியில்ல ” என்று சொல்லி சென்றான்.

ஒரு சிறிய தண்ணீர் பொத்தலை அவளிடம் நீட்டியவன் ” ஏன் ஒரு மாதிரி டல்லா இருக்க எதுவும் பண்ணுதா ” என்று கேட்க இல்ல என்று தலையாட்டினாள். ஒரு நிமிடம் அவளை கூர்ந்து கவனித்துவிட்டு ” எதுவும் வேணும்னா கேளு ” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர போக அவன் முழுக்கை சட்டையின் மணிகட்டில் இருக்கும் பட்டனை பிடித்தவள் தவிப்புடன் அவனை பார்த்தாள்.

அந்த ஒற்றை பட்டனை பிடித்திருக்கும் அவளின் பிடி அவனை நிறுத்தி வைக்க போவதில்லை சொல்ல போனால் அவள் பிடித்துருப்பது அவனுக்கும் அவளுக்கும் மட்டும் தான் தெரியும். அவள் கண்களின் தவிப்பு அவனை  அங்கிருந்து நகர விடவில்லை.

அவளுடைய இரு விரலின் பிடிக்கு தன்னுடைய கையை அசைக்க மறந்து அவன் நிற்க அவன் நிழல் தீண்டுவது போல் நிற்பதே பெண்ணின் மனதை கொள்ளை கொண்டது.

” என்னாச்சு என்ன வேணும் அக்ஷி ” என்று அனலன் கேட்க ” அத்தான் பயமா இருக்கு ” என்று அக்ஷிதா பயத்தை கண்ணில் தேக்கி கூறினாள்.

கணவன் மனைவியின் உரிமையை கட்டி அணைத்தோ தோள் உரச நின்றோ கைகள் கோர்த்துதோ சொல்ல வேண்டும் என்பதில்லை அத்தான் என்று உரிமையுடன் அழைக்கும் ஒற்றை அழைப்பு முடிவு செய்யும் அவர்களுக்குள் இருக்கும் எல்லையில்லா உரிமையை.

அவளுடைய அத்தான் என்ற அழைப்பே அவளுடைய பயத்தை தந்திரனுக்கு புரிய வைத்தது, ஏனெனில் அக்ஷிதா வெளியிடங்களிலோ அவர்கள் அறைக்கு வெளியவோ அவனை எப்போதும் என்னங்க என்று மட்டும் தான் அழைத்து பேசுவாள். அத்தான் என்று அழைப்பது அவர்கள் அறைக்குள்ளும் அவர்களுடைய தனிமையான பொழுதில் மட்டுமே வெளிப்படும்.

அதுவரை மற்றவர்களுக்காக பார்த்தவன் இப்போது அவளின் பயத்தை போக்குவதே முக்கியமாக தோன்ற அவள் அருகில் சேரை இழுத்து போட்டு அமர்ந்தவன் ” இங்க பார் அக்ஷி இட்ஸ் ஜஸ்ட் நார்மல் நீ ஒரு ப்ரோபஸ்ஸரா இருந்துட்டு இப்படி பயப்படாலாமா கண்டிப்பா டெலிவரி டைம் உன் கூட நானும் இருப்பேன் எஸ் ஐ க்நொவ் இது பைனிங் தான் இருக்கும் ஆனா இதுனால உனக்கு கிடைக்கிற சந்தோஷத்துக்கு அளவே இல்ல டெலிவரி பத்தி யோசிக்காத உன் வயித்துக்குள்ள இருக்க நம்ம குழந்தையை பத்தி மட்டும் யோசி ” என்று சொல்ல,

அவள் முகம் யோசனைக்கு மாறியது அவள் இரு கைகளையும் தன் கைக்குள் பொத்தி வைத்து ” எதுக்கும் பயப்படாத ” என்று அனல் சொல்ல ஏதோ மந்திரத்துக்கு கட்டுப்பட்டவள் போல் தலையை ஆட்டினாள்.

” பேபியை பத்திரமா பார்த்துக்கோ இப்படி நீ பயந்து வயித்துக்குள்ள இருக்க பேபியையும் டென்ஷன் பண்ணாதே ” என்று சொல்ல அதுவரை ஒரு இதமான மனநிலையில் இருந்தவளின் மனம் ‘ குழந்தைக்காக தான் இந்த ஆறுதல் கூடவோ ‘ என்று என்ன துவங்கும் போதே ஏதோ ஒரு நெருடலை உணர்ந்தாள்.

அவள் புருவங்கள் யோசனையில் நேரிவதை பார்த்தவன் ” எதையும் யோசிக்காத நா வந்து ரொம்ப நேரமாச்சு யாராச்சும் தேவையில்லாம வம்பிலுப்பாங்க சோ நா போறேன் பை ” என்று அவன் நகர்ந்து விட ‘ உன் உடம்பை கவனித்து கொள் ‘ என சொல்லவில்லையே என்று அவள் மனம் கவலை கொண்டது.

அழகிய தீயே அன்புள்ள திமிரே….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!