Skip to content
Post Views: 79
வடபழனி முருகன் கோயிலின் சன்னிதியை நோக்கி மக்கள் கூட்டம் அலைமோதி கொண்டிருக்க, அங்கே வந்து நின்ற இருச்சக்கர வாகனத்திலிருந்து இறங்கினர் ஆழினியும் விஜய சிவமாறனும். கோயிலுக்கு வெளியில் அமைக்கப்பட்டிருக்கும் பூக்கடையில் அர்ச்சனை தட்டினை வாங்கிய விஜய சிவமாறன் இருச்சக்கர வாகனத்திற்கு அருகில் நின்றிருந்த ஆழினியை நோக்கி சென்றிருந்தான்.
விஜய சிவமாறனிடம் அர்ச்சனை தட்டினை பெற்று கொண்டவள் கோயிலுக்குள் நுழைய எத்தனிக்க அச்சமயத்தில்
Advertisement
“ஆழினி….” என்று அழைத்தவனின் குரலை கேட்டு நின்றவள் தன்னெதிரிலிருப்பவனை என்ன என்பதை போல் பார்க்க, தன் கைகளில் இத்தனை நேரம் வைத்திருந்த மல்லிகை சரத்தினை எடுத்து தன்னவள் முன்பு நீட்டியிருந்தான் அவளவன்.
விஜய சிவமாறன் கைகளிலிருந்த மல்லிகை சரத்தினை ஒருநொடி பார்த்துவிட்டு தன் கைகளிலிருக்கும் அர்ச்சனை தட்டினை அவனிடம் அளித்தவாறு மல்லிகை சரத்தினை பெற்றவள் அதனை தன் தலையில் சூடிக்கொண்டாள். அந்நிமிடம் விஜய சிவமாறனின் மனமானது இறக்கை இல்லாமல் வானத்தில் பறக்க, அவன் நிலையை அறியாதவள் தன்னவனுடன் கோயிலை நோக்கி சென்றிருந்தாள்.
Advertisement
Advertisement
விஜய சிவமாறன் மற்றும் ஆழினி இருவரது கால்களும் ஒன்றாக கோவிலுக்குள் நுழைந்த அந்நொடி, வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தை நோக்கி அவர்களின் மனங்களும் மெதுவாக நகர தொடங்கியிருந்தது.
தன்னை தேடி வரும் பக்தர்களின் குறைகளை தீர்த்து அருள்பாலிக்கும் முருகனை நோக்கி சென்ற இருவரும் தன்முன் வீற்றிருப்பவரை கண்கள் மூடி மனமுருகி வேண்டி கொண்டிருந்தனர்.
Advertisement
“என் வாழ்க்கை முடிஞ்சிடுச்சுன்னு நினைச்ச நேரத்துல எனக்காக என் ஆழினியை மறுபடியும் அனுப்பினத்துக்கு ரொம்ப நன்றி முருகா…. அவளையும் என் பையனையும் கண்டிப்பா நான் நல்லா பார்த்துப்பேன்…. குறிப்பா என் ஆழினியை என் உயிருள்ளவரை ஒருநொடி கூட பிரியமாட்டேன்….” என்று விஜய சிவமாறன் தன் மனதில் முருகனிடம் வேண்டி கொண்டிருக்க, அவனருகில் நின்றிருந்தவள்
“நான் எதுக்காகவும் இதுவரை ஆசைப்பட்டது இல்ல, எல்லாம் கடவுள் விட்ட வழின்னு தான் இருந்திருக்கேன்…. ‘என் பையன் மட்டும் என் வாழ்க்கைக்கு போதும், கல்யாணமே வேண்டாம்னு’ இருந்தேன் ஆனா இப்போ என் வாழ்க்கையில இவரை கொடுத்திருக்க…. இந்த வாழ்க்கையை நான் ஏத்துக்குறதா? இல்ல வேண்டாமா? நீயே சொல்லு….” என்று ஆழினி தன் மனதில் நினைத்து முருகனை காண கண்களை திறந்த அந்நொடியில் தன் வலது கரங்களால் அவளின் நெற்றியிலும், நெற்றி வகுட்டிலும் குங்குமமிட்டு அழகாக குறுநகை புரிந்தான் விஜய சிவமாறன்.
தன்னவனின் செயலை எதிர்பாராதவளின் உடலும் மனமும் அவளறியாமல் ஒருநொடி சிலிர்த்து அடங்கியது. தன்னெதிரில் நின்றிருப்பவனை விழியகலாமல் பார்த்தவளிடம்
“நீ கண்ணை மூடி வேண்டிட்டு இருக்கும்போது குங்குமும் திருநீறும் கொடுத்துட்டு ஐயர் போயிட்டாரு…. அதான் நான் உனக்கு குங்குமம் வச்சிவிட்டேன்….” என்று தயங்கிவாறு கூறியவனை தீர்க்கமாக பார்த்தவள் எதுவும் கூறாது அவன் கைகளில் வைத்திருந்த அர்ச்சனை தட்டினை வாங்கி கொண்டு முன்னே சென்ற ஆழினியை பின்தொடர்ந்து சென்றான் விஜய சிவமாறன்.
கோயிலிலுள்ள அனைத்து கடவுள்களையும் வணங்கிவிட்டு பிராகாரத்தை மூன்று முறை சுற்றி சிறிது நேரம் கோயிலின் மண்டபத்தில் அமர்ந்த இருவரும் தங்களின் மௌன பயணத்தை மீண்டும் தொடங்கிவிட்டனர்.
இருச்சக்கர வாகனத்தில் முன்னால் அமர்ந்திருந்த விஜய சிவமாறனின் மனமானது ஆழினியிடம் உரையாடும் நேரத்தை எதிர்பார்க்க, அவன் பின்னால் அமர்ந்திருந்தவளோ வரும் வழியை வேடிக்கை பார்த்தபடி அமைதியாக அமர்ந்திருந்தாள். நேரங்கள் நமக்காக காத்திருக்காது நாம் தான் அதை உருவாக்கவேண்டும் என்று வெகுநேரத்திற்கு பிறகே உணர்ந்தவன் அடுத்து என்ன செய்ய வேண்டுமென்று தெளிவாக முடிவெடுத்துவிட்டான்.
இல்லத்திற்கு செல்லும் வழியில் செல்லாமல் வேறொரு வழியில் இருச்சக்கர வாகனத்தை செலுத்தும் விஜய சிவமாறனின் செயலில் குழம்பியவள்
“வீடு இந்த பக்கம் இருக்கு….” என்று கூறிய ஆழினியின் குரலை கேட்டவன் கண்ணாடியில் தெரியும் தன்னவளது பிம்பத்தை இரசித்தவாறு
“தெரியும்….” என்று அழகான குறுநகையுடன் கூறியவன் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ஓர் கடையின் முன்னால் இருச்சக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தான்.
இருச்சக்கர வாகனத்திலிருந்து இறங்கியவள் ‘விஜயாஸ் கஃபே’ என்ற பலகையை தாங்கியிருந்த குளம்பியகத்தை (காஃபி ஷாப்) பார்த்துவிட்டு
“இங்க எதுக்கு கூட்டிட்டு வந்தீங்க?” என்று வினவிய ஆழினியை கண்டு மெலிதாக சிரித்தவன்
“டீயா? காபியா?” என்று வினவியவனை தீயாய் முறைத்தவளிடம்
“இது நம்ம கடை தான் ஆழினி உள்ள வா…. ஏதாவது சாப்பிட்டு போகலாம்….”
“எனக்கு பசிக்கல….”
“எனக்கு பசிக்குதே….”
“அதுக்கு நான் என்ன பண்றது?”
“என் கூட வா போதும்….”
“முடியாது….”
“ரெண்டு நாளா உன் கிட்ட எதுவும் பேச முடியல, தனியா பேசுறதுக்கு சந்தர்ப்பமும் கிடைக்கல…. உன் கூட மனசுவிட்டு பேசணும் போல இருக்கு ஆழினி…. பிளீஸ் உள்ள வா….” என்று விஜய சிவமாறன் கூறியதை கேட்டு சற்று மனமிறங்கியவள் அவனுடன் உள்ளே சென்றிருந்தாள்.
விஜய சிவமாறன் உள்ளே நுழைந்ததும் அங்கிருந்த அனைவரும் மரியாதை நிமித்தமாக அவனுக்கு வணக்கம் தெரிவிக்க, அவர்களை இன்முகத்துடன் கடந்து சென்றவன் ஆழினியை தன் அலுவலக அறைக்குள் அழைத்து சென்றான்.
பெரிதும் அல்லாது சிறிதும் அல்லாது விசாலமாக காட்சியளித்த அவ்வறையில் சுழலும் நாற்காலி ஒன்று போடப்பட்டிருக்க, அதன் எதிரிலிருந்த மேசையின் மீது கணினியும் தொலைபேசியும் சில கோப்புக்களும் இடம்பெற்றிருந்தது. மேசையை ஒட்டியவாறு மூவர் அமரும் நாற்காலியும் அதனை அடுத்து சுவர் ஓரமாய் நீள்சாய்விருக்கையும் மரத்தால் செய்யப்ட்ட டீப்பாயும் அமைந்திருந்தது.
அலுவலக அறைக்குள் நுழைந்தவள் அங்கிருந்த நீள்சாய்விருக்கையில் ஆழினியை அமரவைத்துவிட்டு
“நீ இங்கேயே இரு, நான் இப்போ வந்துடுறேன்….” என்று கூறி வெளியில் சென்றவன் அடுத்த பத்தாவது நிமத்தில் தன் கரங்களில் ஃபில்டர் காபியும் பழங்கள் மற்றும் பனிக்கூழ் நிறைந்த ஃபலூடாவும் எடுத்து வந்திருந்தான்.
ஆழினியின் எதிரிலிருக்கும் மேசையில் இரண்டையும் வைத்துவிட்டு அறையிலிருந்த நாற்காலியில் தன்னவளை பார்த்தவாறு அவளெதிரில் அமர்ந்தவனை இமைக்காமல் பார்த்தவள்
“எனக்கு ஃபலூடா பிடிக்கும்னு இவருக்கு எப்படி தெரியும்? ஒருவேளை ஏதாவது கெஸிங்ல வாங்கிட்டு வந்திருப்பாரோ?” என்று தன் மனதில் ஆழினி நினைக்க, அவள் நினைப்பதை சரியாக கண்டறிந்தவன் போல்
“உனக்கு ஃபலூடா பிடிக்கும்னு எனக்கு தெரியும்….” என்று விஜய சிவமாறன் குறுநகையுடன் கூற, அவன் கூறியதை கேட்டவள் தன்னுள் எழ முயற்சித்த பரவசத்தை தனக்குள்ளேயே பூட்டி வைத்து கொண்டாள்.
தன்னெதிரில் அமர்ந்திருந்த விஜய சிவமாறனை தீர்க்கமாக நோக்கியவள்
“என் கிட்ட ஏதோ பேசணும் சொன்னீங்க?” என்று வினவிய ஆழினியை கண்டு மெலிதாக சிரித்தவன்
“எதுக்காக இங்க கூட்டிட்டு வந்தியோ அதை சீக்கிரம் பேசி முடின்னு சொல்லாம சொல்றியா?”
“அப்படியும் வச்சிக்கலாம்….”
“என்னை வெறுத்துட்டியா ஆழினி?” என்று விஜய சிவமாறன் வினவ, அவன் கூறியதை கேட்டு அதிர்ந்தவள் தன்னவனை இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தாள்.
அவளது அதிர்ச்சி நிறைந்த பார்வையை கண்டு வலிகளுடன் புன்னகைத்தவன்
“உன்னை கல்யாணம் பண்ணிக்கனும்னு நான் ஆசைப்பட்டேன், முக்கியமா உன் சம்மதத்தோட தான் நம்ம கல்யாணம் நடக்கனும்னு நினைச்சேன் ஆனா அதுக்குள்ள என்னென்னவோ நடந்துடுச்சு….” என்று கூறி ஒருநொடி அமைதிக்காத்தவனை இமைக்காமல் பார்த்தவளிடம்
“எனக்கு குற்றவுணர்வா இருக்கு அழினி….” என்று விஜய சிவமாறன் நாதழுதழுக்க கூற, அவன் கூறியதை கேட்டு அதிர்ந்தவளுக்கு அடுத்து என்ன கூறுவதென்று அறியாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
ஆழினியின் மனநிலையை அறியாதவன் தன்னை ஒருவாறு மீட்டெடுத்து
“நம்ம பையன உன் கிட்டயிருந்து பிரிக்கனும்னு நான் நினைக்கல ஆழினி…. நீ தான் வாடகை தாய்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் எனக்கும் ஆதவுக்கும் இருக்கிற உரிமையை சொன்னாலாவது உன்னை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கலாம்னு தான் நான் நினைச்சேன்…. கடைசியில இப்படியாகும்னு நான் நினைக்கல…. என்னை நீ பிடிக்காம தான் கல்யாணம் பண்ணேன்னு எனக்கு தெரியும் ஆனா நான் உன்னை….” என்று விஜய சிவமாறன் ஏதோ கூற வருவதற்குள்
“பழசை பத்தி பேச வேண்டாமே….” என்று கூறிய ஆழினியை இமைக்காமல் பார்த்தவன்
“இல்ல ஆழினி…. என் பாஸ்ட் பத்தி உன் கிட்ட சொல்லனும்….” என்று விஜய சிவமாறன் கூறியதை கேட்டவள் தன்முன் வைத்திருந்த ஃபலூடாவை ருசிக்க தொடங்கிவிட்டாள்.
தன்னையே இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தவனை முறைத்தவள்
“இப்படி பார்த்தா எப்படி சாப்பிடுறதாம்? எனக்கு வயிறு வலி வரனும்னு ஆசைப்படுறீங்களா?” என்று ஆழினி கோபமாக வினவ, அவளது கூற்றை கேட்டு இல்லை என்பதை போல் அன்னிச்சையாக தலையசைத்தவனின் இதழ்கள் புன்னகையில் அழகாய் விரிந்தது.
விஜய சிவமாறன் முன்னால் வைத்திருந்த காபியை கண்டுவிட்டு அதை பருகுமாறு கண்களால் ஆணையிட்ட தன் மனையாளின் பார்வைக்கு கட்டுப்பட்டு காபியை அருந்த தொடங்கியவன்
“ஃபலூடா நல்லாயிருக்கா?”
“ம்ம், நல்லாயிருக்கு…. எப்பயுமே ஃபலூடா சாப்பிடும்போது ஒரு எஸன்ஸ் ஃப்ளேவர் வரும் ஆனா இது அப்படியில்ல, நேச்சுரல் ஃப்ளேவரோட டேஸ்ட்ல இருக்கு…. ரொம்பவே நல்லா பண்ணியிருக்காங்க….”
“தாங்க்ஸ்….”
“தாங்க்ஸா? ஏதோ நீங்க பண்ண மாதிரி பெருமை பட்டுக்குறீங்க?
“நான் தான் பண்ணேன்….”
“நீங்களா?”
“ஆமா, நான் தான்….”
“உங்களுக்கு இதெல்லாம் கூட பண்ணதெரியுமா?”
“நான் என்ன படிச்சிருக்கேன்னு உனக்கு தெரியுமா? அட்லீஸ்ட், நான் என்ன வேலை பார்க்குறேனாவது தெரியுமா?”
“தெரியாது….”
“எம்.பி.ஏ ஹோட்டல் மேனேஜ்மென்ட் கூடவே டிப்ளோமா கேட்ரிங் முடிச்சிருக்கேன்…. இந்த கஃபே மாதிரி சென்னையில நமக்கு இருபது பிரான்ச் இருக்கு, அதேமாதிரி ஹோட்டல்ஸ் வித் பார்ட்டி ஹாலும் இருக்கு, லண்டன்ல நம்ம ரெஸ்டாரன்ட் ஒன்னு இருக்கு, பிரான்ஸ்லையும் ரெஸ்டாரன்ட் வைக்க ஏற்பாடு பண்ணிட்டு இருக்கோம்….”
“இதெல்லாம் எதுக்கு என் கிட்ட சொல்றீங்க?”
“நீயும் இதெல்லாம் தெரிஞ்சிக்கனும்னு தான்….”
“இதை தெரிஞ்சிக்கிட்டு நான் என்ன பண்ண போறேன்?”
“புருஷன பத்தி தெரிஞ்சிக்குறது நல்லது தான? நாளைக்கு யாராவது உன் கிட்ட வந்து ‘உன் புருஷன் என்ன வேலை பார்க்குறாருன்னு’ கேட்கும்போது நீ திருதிருன்னு முழிக்க கூடாதுல்ல அதான் என் டிடெய்ல்ஸ் சொல்லிட்டு இருக்கேன்….”
“நான் உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்….” என்று கூறிய ஆழினியை என்ன என்பதை போல் பார்த்து கொண்டிருந்தவனிடம்
“உங்களுக்கு தெரியாதது இல்ல, என் வாழ்க்கையில இதுவரை நான் கனவுல கூட நினைக்காதது எல்லாமே நடந்துடுச்சு…. என் அப்பாவும் அம்மாவும் என்னை விட்டுட்டு போனதுக்கு அப்புறம்….” என்று அடுத்த வார்த்தை கூற முடியாமல் அமைதிக்காத்தவளின் விழியோரம் கண்ணீர் துளிகள் பெருக ஆரம்பிக்க, அதை கண்டு பதறியவன்
“ஆழினி….” என்று பதற்றமாக அழைத்தவன் அவளருகில் சென்று அமர்வதற்குள் தன்னை சிரமப்பட்டு மீட்டெடுத்திருந்தாள் அவனவள்.
தன்னருகில் அமர்ந்திருப்பவனை கண்டு விரக்தியாக புன்னகைத்தவள்
“இதுவரை என் வாழ்க்கையில நடந்த எல்லாத்தையும் நான் அக்ஸப்ட் பண்ண கத்துக்கிட்டேன்…. எதுனால உங்களுக்கு என்னை பிடிச்சிருக்குன்னு எனக்கு தெரியல, உங்களை மாதிரி என்னால சட்டுன்னு எதையும் மாத்திக்க முடியல…. என் ஆதவோட அப்பாவா தான் உங்களை நான் பார்க்குறேன், மத்தபடி வேறெதுவும் எனக்கு தோணல…. முக்கியமா, உங்களை என் ஹஸ்பென்டா ஏத்துக்க எனக்கு கொஞ்சம் டைம் வேணும்….” என்று ஆழினி கூறியதை கேட்டவன்
“அப்போ ஃபிரண்ட்ஸா இருக்கலாமா?” என்று ஆர்வமாக வினவிய விஜய சிவமாறனை தன் கண்களிடுங்க முறைத்தவளின் இதழோரம் தன்னவனை நினைத்து மெல்லிய குறுநகையும் தோன்றி மறைந்தது.
ஆழினியின் மனமாற்றத்தை அறிந்திடாதவன் தன்னெதிரில் அமர்ந்திருப்பவளிடம்
“ஒரு ஹஸ்பென்ட் அண்ட் வொய்ஃப்க்கு நடுவுல லவ் வர்றதுக்கு முன்னாடி நல்ல ஃபிரெண்ட்ஷிப் இருக்கிறது ரொம்ப முக்கியம் ஆழினி…. என்னை பத்தி நீயும், உன்னை பத்தி நானும் புரிஞ்சிக்க இந்த ஃபிரெண்ட்ஷி பாண்டிங் நமக்கு ரொம்ப உதவியா இருக்கும்….. நமக்கு கல்யாணமாயிடுச்சுன்னு உடனே நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கணும்னு நான் நினைக்கல….. நம்ம வாழ்க்கையில எது நடந்தாலும் அது உனக்கும் எனக்கும் மனசார பிடிச்சு தான் நடக்கணும்….. முக்கியமா, உன்னோட விருப்பத்துக்கு மதிப்பு கொடுத்துதான் எல்லாமே நடக்கணும்னு நான் ஆசைப்படுறேன்….
உன் மனசு ஒத்துக்காம நான் எதையும் உன் மேல திணிக்க மாட்டேன்…. முதல்ல நல்ல நண்பர்களா ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சிக்கலாம், மத்த கதையை அப்புறம் பார்க்கலாம்….” என்று கூறி ஒருநொடி அமைதிக்காத்து
“ஃபிரெண்ட்ஸ்?” என்று அழகாக சிரித்தவாறு கூறிய விஜய சிவமாறன் தன் வலது கரத்தினை அவள் முன்பு நீட்ட, அவனை கண்டு மெலிதாக சிரித்தவள் தன் தலையை சரியென்பதை போல் அசைத்து
“ஃபிரெண்ட்ஸ்….” என்று கூறியவாறு அவளவனுடன் கைக்குலுக்கி கொண்டாள் அவனவள்.
கணவன் மனைவியாய் அலுவலக அறைக்குள் சென்றவர்கள் மனம்விட்டு பேசிய சிறிது நேரத்திலேயே நண்பர்களாக வெளியில் வந்திருந்தனர். தன் இருச்சக்கர வாகனத்தின் அருகில் சென்றவன் தன்னருகில் நடந்துவரும் ஆழினியிடம் வாகனத்தின் சாவியை நீட்ட, அவனை புரியாமல் பார்த்தவள்
“என்ன? எதுக்கு சாவியை என் கிட்ட கொடுக்குறீங்க?” என்று வினவிய ஆழினியை கண்டு சிரித்தவன்
“நீ வண்டி ஓட்டு….” என்று விஜய சிவமாறன் கூற, அவன் கூறியதை கேட்டு ஒருநொடி தன்னை மறந்தவளின் மனமோ உற்சாகத்தில் விண்ணில் பறந்தது.
“நானா? நிஜமாத்தான் சொல்றீங்களா?” என்று ஆழினி அதிர்ச்சி மாறாமல் அதே சமயம் உற்சாகத்துடன் வினவ, அவளை கேள்வியாய் நோக்கியவன்
“உனக்கு ராயல் என்ஃபில்ட் பிடிக்கும் தான? அப்போ ஓட்டு, ஏன் பயப்படுற?” என்று நக்கலாக விஜய சிவமாறன் வினவ
“எதே? பயமா? எனக்கா? நெவர்…. என்னை நீங்க ரொம்ப குறைச்சி இடைப்போட்டுட்டீங்க….” என்று உறுதியாக கூறியவாறு இருச்சக்கர வாகனத்தின் சாவியை பெற்று கொண்ட ஆழினி வண்டியில் அமர, அவளுக்கு பின்னால் அமர்ந்தவனின் இதயமானது எக்குத்தப்பாக துடிக்க ஆரம்பித்துவிட்டது.
தன்னவளை இத்தனை நெருக்கத்தில் கண்டதும் விஜய சிவமாறனின் மனதில் படப்படப்பு தொற்றி கொள்ள, அவனது மனநிலையை அறிந்திடாதவள்
“போகலாமா?” என்று வினவிய ஆழினியின் குரலை கேட்டவன் அவனவளின் முகத்தை தன்னருகில் அதுவும் நெருக்கத்தில் பார்த்ததும் வார்த்தை வராமல் தடுமாறினாலும் அவனது தலை சரியென்பதை போல் அன்னிச்சையாக அசைந்தது.
இருச்சக்கர வாகனத்தை இயக்கியவள் சற்று தடுமாற தொடங்க, அவளது நிலையை கண்டு தன்னிலை அடைந்தவன்
“அப்படியில்ல ஆழினி…. இதை இங்க பிடிச்சுக்கோ….” என்று கூறியவாறு தன் இரு கரங்களால் தன்னவளை உரசியவாறு அவளது முகத்திற்கு முன்னால் கொண்டு சென்றவனது அருகாமையில் இப்பொழுது தடுமாறும் நிலையானது ஆழினியின் முறையாக மாறியிருந்தது.
தன்னுள் எழுந்த மாற்றத்தை கண்டுக்கொண்டவள் அதை மறைப்பதற்கு தன் கோபத்தை முகத்தில் பூசியவாறு
“ஹலோ, என்ன பண்றீங்க?” என்று சிடுசிடுவென வினவிய ஆழினியின் குரலை கேட்டு சட்டென்று தன் கரத்தினை விடுவித்தவன்
“அது…. உனக்கு ஹெல்ப் பண்ணலாம்னு….” என்று பாவமாக கூறிய விஜய சிவமாறனை முறைத்தவள்
“ஒன்னும் தேவையில்ல நானே பார்த்துக்குறேன்…. நாம ஃபிரெண்ட்ஸ் மட்டும் தான் அதை மறந்துடாதீங்க….” என்று ஆழினி கோபமாக கூறியவாறு இருச்சக்கர வாகனத்தை இயக்க, அவள் கூறியதை கேட்டு சிரித்தவன்
“மறக்கமாட்டேன், ஆனா என்னிக்காவது ஒருநாள் இதுவும் மாறும்னு நம்புறேன்….” என்று உறுதியுடன் கூறியவனது விழிகளில் தெரிந்த காதலை மூளை உணர்ந்தாலும் அதை ஏற்க மறுத்த மனதின் பேச்சினை கேட்டவள் அவனின் கூற்றிற்கு பதில் கூறாது இருச்சக்கர வாகனத்தை இயக்க, அவளது மனதை படித்தவன் அதற்கு மேல் எதுவும் பேசாது தன்னவளுடனான பயணத்தை இரசிக்க தொடங்கிவிட்டான் ஆழினியின் விஜய சிவமாறன்.
உயிரே உயிரே, ஒருநாள் உணர்வாய் எனையே..
உறவே உறவே, நெடுநாள் கனவே..
அமைதியில் நீ வாழவே பூவே, இரைச்சலை நான் தாங்குவேன்..
எனக்கென நீ போதுமே மானே, அரசனை போல் வாழுவேன்….
ஒளி வீசும்….
error: Content is protected !!