Skip to content
Post Views: 1,523

அர்ஜுனன் சுபத்திரா இருவருக்கும் மீண்டும் திருமணம் முடிந்து இரண்டு நாள் ஆகி இருக்க ஆரவ் பள்ளிக்கு கேரளா செல்ல அவனுடன் சுபா அர்ஜுனன் மட்டும் சென்று விட்டு இருந்தனர்… அங்கு பள்ளியில் பேசி அவனை ஹாஸ்டலில் சேர்த்து விட்டு சுபத்திரா அவள் வேலை செய்த பரதநாட்டிய பள்ளிக்கு சென்று மாஸ்டரிடம் கூறி விட்டு ரேவதியை பார்க்க அங்கு சென்றனர்… அங்கு அவர்களிடம் பேசி விட்டு அங்கிருந்து விடைபெற்று அய்யனார்புரம் நோக்கி காரை செலுத்தினான் அர்ஜுனன்…
சுபா அவனின் தோளில் சாய்ந்து அவனிடம் பேச முடியாததை எல்லாம் தற்போது பேசி கொண்டு வந்தாள்… ரித்திகா மதுரையில் படிப்பதால் அந்த ஆண்டு மட்டும் அவள் மதுரையிலேயே படிக்கட்டும் என முடிவு செய்தனர்….. ஆனால் அவளுடன் அங்கு யார் இருப்பது என்ற கேள்வி தான் உருவாகியது…
அர்ஜுனன் இனிமேல் ஊரை விட்டு செல்ல முடியாது…. ஊர் மக்களும் விட மாட்டார்கள்… எனவே தேவியின் பெற்றோர் சேகரும் ராணியும் அவளுடன் மதுரையில் தங்குவதாக ஏற்பாடு செய்யப்பட்டது…… ஆனால் ரித்திகாவிற்கு தான் கஷ்டமாக இருந்தது… அவளுக்கு அர்ஜுனனை விட்டால் யாரும் தெரியாது…. தற்போது புதிதாக அவர்களுடன் தங்குவது அவளுக்கு பயமாக இருந்தது..
அதை அர்ஜுனனிடம் கூறவும் செய்தாள்… “அப்பா எனக்கு பயமா இருக்கு… நான் இங்கயே படிக்குறேனே… ப்ளீஸ் ப்பா… ” என்று கண் கலங்க கூறினாள்…..
“டேய் ரித்து… இங்க பாரு டா நான் அடிக்கடி வந்து பாக்குறேன்… உனக்கே போக போக புரியும் டா பாப்பா…. இங்க ஊரை விட்டு வர முடியாது… நீ கொஞ்சம் பெரிய பொண்ணு ஆனா நீயும் புரிஞ்சிப்ப பாப்பா… அதுவும் தாத்தா பாட்டி தான் டா பாப்பா… ஒரு நாலு மாசம் தான்… அதுக்கு அப்புறம் நீ இங்கயே படிக்கலாம் ஓகேவா…” என்று தன்மையாக கூறினான்…
அவளும் சரி என்று அரை மனதுடன் கூறினாள்… அடுத்த நாளே மூவரையும் அர்ஜுன் சென்று விட்டு வந்தான்… அன்று முழுவதும் அவளுடனே இருந்து விட்டு இரவு தான் அய்யனார்புரம் வந்து சேர்ந்தான்… காலை விடிந்ததும் அர்ஜுனன் மதுரை கிளம்பி இருக்க காலை எழுந்த நிரவி குட்டி அர்ஜுனனை காணாமல் அழுக ஆரம்பித்துவிட்டாள்… எங்கு அர்ஜுனன் தன்னை விட்டு மீண்டும் சென்று விட்டானோ என்று பயந்துவிட்டாள்… ரித்திகாவும் இல்லை எனவும் பயந்துவிட்டாள்…. சுபா தான் அப்பா இரவு வந்து விடுவார் என கூறி சமாதானம் செய்து தன்னுடனே வைத்து கொண்டாள்…
அன்று முழுவதும் சுபாவும் நிரவியும் தான் வீட்டில் தனியாக இருந்தனர்… சசியும் சரி கர்ணனும் சரி மீண்டும் அர்ஜுனன் வீட்டிற்கு வரவில்லை… இருவரிடமும் கேட்ட போது குடும்பம் எல்லாம் பெரியதாகி விட்டது கண்டிப்பாக மனக்கசப்பு எல்லாம் வரும்.. அதை தடுக்க நாங்கள் இங்கேயே இருந்து விடுகிறோம்… வண்டி எடுத்தால் இரண்டு நிமிடத்தில் வீட்டிற்கு வந்து விடலாம் என கூறிவிட்டனர்…
அர்ஜுனனும் கூப்பிட வேண்டிய இடத்தில் இருந்து கூப்பிட்டால் வர போகிறார்கள் அப்போது கண்டிப்பாக வருவார்கள் அப்போது அழைத்து கொள்ளலாம் என நினைத்து விட்டனர்…
வாணன் நந்தினியும் மட்டும் அவர்கள் வீட்டில் இருக்க வர்ணன் ஜனனியின் வீட்டில் தான் இருக்கிறான்… சிவனேஸ் வர்ணனிடம் “சித்தா நான் அப்பா கூட போய் இருக்கேன்… அப்பா இப்போ எல்லாம் கொஞ்சம் சோர்வா இருக்காங்க… வீட்டுலயும் அவங்க(நந்தினி) கூட பேசுறது இல்ல… இப்போ எல்லாம் அப்பா ரொம்ப அமைதி ஆகிட்டாரு.. நான் போய் அவர் கூட இருக்கேன்… இப்போ எல்லாம் கொஞ்சம் சரி ஆகிட்டு வருதுல சித்தா… நான் அவங்களுக்காக(நந்தினிக்காக) எல்லாம் போகல… அப்பக்காக மட்டும் போறேன்… நான் போகட்டா சித்தா” என்று கேட்டான்…
வர்ணன் அரை மனதாக ஒத்து கொண்டாலும் ஜனனி ஒத்துக்கொள்ளவில்லை… என்ன தான் நந்தினி இப்போது திருந்தி இருந்தாலும் முன்னர் அவள் நடந்து கொண்ட விதத்தில் சிவனேஸ் மிகவும் காயம்பட்டு போய் இருந்தான்.. அவனை மீட்டு வர ஜனனி மிகவும் போராடி இருந்தாள்…. அதனால் தான் அவனை அவள் அனுப்ப மறுக்கிறாள்.. எங்கே மீண்டும் அவன் காயம்பட்டு போய் விடுவானோ என… ஆனால் சிவனேஸ் அவளை சமாதானம் செய்து சம்மதிக்க வைத்து விட்டான்…
கார்த்திகா அருனேஷ் இருவரும் அவனை இரு பக்கமும் கட்டி கொண்டு “ண்ணா போகாதீங்க.. இங்கயே இருங்க.. இல்லனா நாங்களும் உங்க கூட அங்க வரோம்… எங்களையும் கூட்டிட்டு போங்க” என்று கூறி அழுதனர்…
அவர்களையும் சமாதானம் செய்து விட்டு ஜனனியின் அம்மா முன் போய் முட்டி போட்டு அமர்ந்தான்… “பாட்டி என்னை பாருங்க.. நான் தினமும் வந்து உங்களை பாத்துட்டு போறேன்… பேசாம மட்டும் இருக்காதீங்க” என்று சோகமாக கூறினான்…
அவரோ “போடா அது தான் இந்த வீட்டை விட்டு போறல… போ நான் பேச மாட்டேன்….” என்று கண் கலங்கி கொஞ்சம் கோவமாக கூறினார்.. அவருக்கு சிவனேஸ் என்றால் மிகவும் பிடிக்கும்.. கார்த்திகா அருனேஷ் இருவரையும் விட அவருக்கு சிவனேஸை தான் மிகவும் பிடிக்கும்.. அது தான் அவன் போக கூடாது என்று காலையில் இருந்து அவனிடம் பேசாமல் உள்ளார்…
சிவனேஸ் “பாட்டி நிஜமா ஸ்கூல் போயிட்டு உங்களை வந்து பாத்துட்டு தான் வீட்டுக்கு போவேன்… பேசாம மட்டும் இருக்காதீங்க… அப்பாவும் ரொம்ப பாவம்ல ரெண்டு வருஷமா தனியா இருந்துட்டாரு… இனிமே நான் அவர் கூட இருக்கேன்… நிஜமா தினமும் வந்து பாத்துட்டு போவேன்…” என்று கூறி அவரின் கன்னத்தில் முத்தமிட்டான்..
அவரோ “போடா போக்கிரி பையா..” என்று கூறி அவன் தலையை பாசமாக கோதி விட்டு “தினமும் எல்லாம் வர வேண்டாம்.. எனக்கு தெரியும் உனக்கு படிக்குற வேலை இருக்கும்னு சனி ஞாயிறு இங்க வந்துரு அது மட்டும் போதும்…” என்று கூறி அவனின் நெற்றியில் முத்தமிட்டு சம்மதம் கூறினார்…
அதன் பின் அவனும் தங்கள் வீட்டை நோக்கி சென்றான்.. அவன் வந்ததும் வாணன் அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை… இந்த இரண்டு வருடம் கிட்ட தட்ட வனவாசம் போல் தான் இருந்தான்… அனைவரிடமும் நன்றாக பேசுவது போல் இருந்தாலும் உள்ளுக்குள் மிகவும் பலவீனமாக இருந்தான்…
சிவனேஸ் வந்ததும் தான் அவன் கொஞ்சம் தெளிந்தான்… என்ன தான் அர்ஜுனன் சுபத்திரா இருவரும் நன்றாக பேசினாலும் அவனுக்கு அவர்கள் எதோ கடமைக்காக பேசுவது போல் தான் தோன்றியது…. இப்போது சிவனேஸ் வீட்டிற்கு வந்தது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது…..
நந்தினி அவனிடம் பேச முயற்சி செய்தாள்… ஆனால் அவனோ அங்கு ஒருத்தி இல்லாதது போல் சென்று விட்டான்… நந்தினி தான் அழுது கொண்டே அறைக்கு சென்று விட்டாள்…
முகுந்தன் வீடு…
ஆகாஷ் யாதவ் உறங்கி இருக்க மாரியப்பன் கோவமாக சோபாவில் அமர்ந்து இருந்தார்… அவர் கேரளாவில் முகுந்தன் தான் சுபத்திராவை அனுப்பி வைத்தான் என தெரிந்ததில் இருந்து அவனிடம் பேசுவதை நிறுத்தி இருந்தார்… இதை யாருக்கும் தெரியாமல் பார்த்து கொண்டார்… ஆனால் முகுந்தன் அதை உணர்ந்து இருந்தான்… வீட்டிற்கு சென்று பேசிக்கொள்ளலாம் என நினைத்து அமைதியாகி விட்டான்…. தற்போது வீட்டிற்கு வந்த பின்பும் அவனிடம் பேசாமல் இருந்தவரை சோபாவில் அமர வைத்து அவர் கால் அடியில் அமர்ந்து கொண்டு அவரை எழ விடாமல் பார்த்து கொண்டான்…
“மாமா ரெண்டு வருஷம் உங்க கிட்ட மறைச்சது தப்பு தான்… ஆனா அன்னிக்கு பாப்பா இருந்ததை இப்போ நினைச்சு பார்த்தா கூட மனசு எல்லாம் பதறுது… நடந்ததை உங்க கிட்ட கூட சொல்லாம இருந்தது தப்பு தான்… ஆனா சொல்ல வேண்டிய சூழ்நிலை வந்து இருந்தா நீங்க சொல்லி இருப்பிங்க.. அதனால தான் சொல்லல… கண்மணிக்கே அர்ஜுன் உயிரோட இருக்கான்னு தெரியுற அப்ப தான் சுபா எங்க இருக்கானு தெரியும்… மன்னிச்சிடுங்க மாமா…” என்று கூறி அவர் மடியில் தலை வைத்து கொண்டான்..
அவரோ அவன் தலையில் காய் வைத்து “என் மருமகன் என்கிட்ட எதுவும் மறைக்க மாட்டான்னு நம்புனேன்.. ஆனா அது உண்மை இல்லை அப்படினு தெரிஞ்சதும் ரொம்ப கஷ்டமா இருந்தது… அதுக்கு போய் கண் எல்லாம் கலங்கிட்டு போ போய் தூங்கு… அர்ஜுன் ஓட கம்பெனி பொறுப்பு எல்லாம் அவன் கிட்ட கொடுத்துட்டு நீ கொஞ்சம் நிம்மதியா இரு… இப்போ போய் தூங்கு… நானும் தூங்க போறேன்” என்று கூறி அறைக்கு உறங்க சென்று விட்டார்…
அங்கு அறையில் செண்பகம் அம்மவோ “என்ன மாமனும் மருமகனும் கொஞ்சி முடிச்சாச்சா…” என்று கேட்டார்…
“ஹே செம்பு என் மருமகன் நான் கொஞ்சுவேன் கோவப்படுவேன்.. இது எல்லாம் எங்களுக்குள்ள நடக்குறது… அதுல நீ தலையிடாத.. நேரம் ஆச்சு போய் தூங்கு..” என்று கூறி அவர் உறங்கிவிட்டார்… செண்பகம் அம்மாவும் சிரித்து கொண்டே உறங்கி விட்டார்…
முகுந்தன் அறையில் கண்மணியும் இதே கேள்வி கேட்க அவனும் இதே பதிலை தான் கூறினான்… “ரொம்ப தான் போய் தூங்குடா… எனக்கும் தூக்கம் வருது” என்று உறங்க சென்றாள்..
அதற்கு அவனோ “கண்ணம்மா கொஞ்ச நேரம் பேசிட்டு தூங்கலாம்… உன் கூட மனசு விட்டு பேசி ரொம்ப நாள் ஆகுது” என்று கூறி அவள் மடி சாய்ந்து பேச ஆரம்பித்தான்… அவளும் சிரித்து விட்டு அவன் தலை கோத ஆரம்பித்தாள்… இருவரும் எப்போது உறங்கினர் என தெரியாமல் பேசி கொண்டே இருவரும் உறங்கி இருந்தனர்…
மருதாயி பாட்டி மாத்திரை போட்டு அவரும் நிம்மதியாக உறங்கி இருந்தார்…
அதே போல் தான் சசி கர்ணன் அறையிலும் இரண்டு ஜோடிகளும் இன்று தான் நீண்ட நாட்கள் கழித்து மனதில் இருந்ததை எல்லாம் பேசி கொண்டு இருந்தனர்… இந்த இரண்டு வருடங்கள் சசி கர்ணன் இருவருக்கும் நிம்மதியாக எல்லாம் செல்லவில்லை.. அர்ஜுனன் சொல் கேட்டு நடப்பவர்கள் அவன் இல்லாமல் என்ன செய்வது என்றே தெரியாமல் நின்று இருந்தார்கள்… கொஞ்சம் கொஞ்சமாக அதில் இருந்து மீண்டு இருந்தனர்… அதனால் தான் இருவரும் தங்கள் மனைவியை கொஞ்சி கொண்டு இருந்தனர்….
பாலாவோ “நான் மட்டும் ரெண்டாவது கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லாம இருந்து இருந்தா என் பசங்க கஷ்டப்பட்ட இருந்து இருக்க மாட்டாங்க… எல்லாத்துக்கும் மூல காரணம் நான் தான்” என்று புலம்பி கொண்டே உறங்கி இருந்தார்…
அர்ஜுனன் வீடு
அர்ஜுனன் இரவு வீடு வந்ததும் நிரவி அப்பா என்று கத்தி கொண்டே வந்து அவனிடம் ஓடி வந்தாள்… அர்ஜுனனும் அவளை தன் ஒரு கையால் தூக்கி தன் தோள் மீது அமர வைத்தான்… மூவரும் இரவு உணவை உண்டு விட்டு உறங்க சென்றனர்… நிரவியை கதை சொல்லி உறங்க வைத்து விட்டு தங்கள் பொக்கிஷ அறைக்கு சென்ற இருவரும் பேசிக் கொண்டு இருந்தனர்… சுபா அமர்ந்து இருக்க அர்ஜுனன் அவள் மடியில் படுத்து கொண்டு பேசி கொண்டு இருந்தான்….
சுபா தான் “மாமா மூனு பிள்ளைங்களையும் கஷ்டப்படுத்தாம வள(ர்)க்கணும் மாமா… யாருக்காகவும் யாரையும் விட கூடாது… மூனு போரையும் ஒரே போல வள(ர்)க்கனும்…” என்று கூறினாள்…
அதற்கு அவனோ “கண்டிப்பா அம்மு நாம ஒழுங்கா வள(ர்)ப்போம்..” என்று கூறி விட்டு “நாம செய்ய வேண்டிய வேலை இங்க நிறைய இருக்கு அம்மு… கோவில் விஷயம் இருக்கு… தம்பிங்க ரெண்டு பேரையும் இங்க இந்த வீட்டுக்கு வர வைக்கனும்…. கம்பெனி என்ன ஆச்சு தெரியல… திருவிழா பத்தி ஊர்க்காரங்க கிட்ட கேட்கனும்… ரெண்டு வருஷத்துல முதல் வருஷம் மணி ஐயா இறந்ததுனால திருவிழா நடக்கல… போன வருஷம் திருவிழா நடந்தும் சாமி யார் மேலையும் வந்து இறங்கி குறி சொல்லல… எல்லாத்தையும் சரி பண்ணனும்… இதுக்கு மேல நமக்கு நிறைய வேலை இருக்கு” என்று கூறினான்…
அவன் மனதில் “இதோட அக்கா பிரச்னையை முடிக்கனும் அம்மு.. உன்கிட்ட சொன்னா நீ ஒதுக்க மாட்ட… ஆனா அதை நான் சரி செய்வேன்” என்று கூறிக்கொண்டான்…
அவளும் ஆமோதித்து “ஆமா மாமா.. கண்டிப்பா நீங்க இதை எல்லாம் சரி பண்ணுவீங்க.. எனக்கு நம்பிக்கை இருக்கு” என்று கூறிவிட்டு நிரவி சிணுங்கும் சத்தம் கேட்டதும் அவனை எழ கூறிவிட்டு அவளுக்கு அந்த பக்கம் படுத்து தட்டி கொடுத்தாள்… அர்ஜுனனும் எழுந்து வந்து நிரவிக்கு மறுபக்கம் படுத்தான்..
சுபாவின் கை நிரவியின் மேல் இருக்க அவள் கை மேல் அர்ஜுனன் கை இருந்தது… இருவரும் ஒருவரி ஒருவர் பார்த்து கொண்டே நிம்மதியாக உறங்கி இருந்தனர்….
error: Content is protected !!