Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதயத்தின் ஓசை கேட்குதோ ❤️ ( இரண்டாம் பாகம் )

ஓசை 57 ❤️ (இரண்டாம் பாகம் )

நிரவி வந்து மூன்று நாட்களாகி இருந்தது… அன்று மாலை டெல்லி புறப்படுகிறாள் எனவே காலை தன் தந்தையிடம் பேச அவர் இருக்கும் தோட்டத்து வீட்டிற்கு சென்றாள்.. அவருடன் சசியும் கர்ணனும் இருக்க தனியாக வரும் நிரவியை தான் மூவரும் பார்த்தனர்.. கொஞ்சம் பதட்டத்துடன் தான் வந்தாள்….



Advertisement

“சசி தான் என்ன குட்டிமா எதுக்கு இவளோ நெர்வஸ் உனக்கு” என தோளோடு அணைத்து கொண்டு கேட்டார்…

Advertisement

“அது அது சசிப்பா” என்று தயங்கி தயங்கி கூறியவள் “எனக்கு எனக்கு ரியாஸை பிடிச்சு இருக்கு… அவன்கிட்ட கூட இன்னும் சொல்லல.. உங்க கிட்ட சொல்லிட்டு தான் சொல்லனும்னு இருந்தேன்..” என்று கூறி சசியின் தோளிலேயே புதைத்து கொண்டாள்…

Advertisement

மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு அவளை தான் பார்த்தனர்.. அவளோ பயத்துடன் சசியின் தோளில் நன்றாக தன் முகத்தை புதைத்து கொண்டாள்…

அர்ஜுனன் சிரிப்புடன் அவள் அருகில் வந்து “குட்டிமா இங்க அப்பாவை பாரேன்…” என்று கூறி அவளை நிமிர்த்தியவர் “நிஜமாவே உனக்கு ரியாஸை பிடிச்சு இருக்கா.. இதுல நிறைய பிரச்சனை வர வாய்ப்பு இருக்கு… அங்க நீ கெஸ்ட்டா இருக்குறது வேற அங்க மருமகளா போறது வேற.. நாங்க மூனு பேர் இருக்கு நோ சொல்ல மாட்டோம்.. ஆனா வீட்டுல மத்தவங்க என்ன சொல்லுவாங்க தெரியாது.. அங்க அப்துல் ஆஷா என்ன சொல்லுவாங்க அவங்க பேமிலி என்ன சொல்லுவாங்க தெரியாது.. நீ ரொம்ப போராடனும்.. போராடுவியா” என்று அவளுக்கு புரியுமாறு கூறினார்..

Advertisement

அவள் ஆம் என்று தலையசைத்து அவர் தோளில் சாய்ந்து கொண்டாள்.. அன்று இரவே டெல்லி கிளம்பி இருந்தாள்… கிளம்பிய இரண்டு வாரத்திலேயே அழுது கொண்டே அய்யனார்புரம் கிளம்பி இருந்தாள் நிரவி..

இன்னும் ரியாஸ் வரவில்லை… எப்போதும் குறுஞ்செய்தி அனுப்புபவன் இரண்டு நாட்களாக அனுப்பவே இல்லை.. அவளுக்கு அதுவே கவலையாக இருந்தது.. அன்று ஏனோ காலை முதல் மனது சரியில்லாமல் இருந்தது…

அவள் வீட்டிற்கு வரும் போது கதவு திறந்து இருந்தது… அப்துலும் ஆஷாவும் வெளியில் செல்வதாக கூறி தான் சென்று இருந்தனர்… கதவு திறந்து இருந்ததை பார்த்து வெளியில் செல்லவில்லையா என எண்ணி உள்ளே சென்று பார்த்தாள்… அங்கு அப்துலோ ஆஷாவோ இல்லை.. அங்கு இருந்தது ரியாஸ்.. அவனை கண்டதும் தாவி அனைத்து இருந்தாள்.. ரியாஸே இதை எதிர்பார்க்கவில்லை…

“பாப்பு” என கூறி அவளை பிரிக்க பார்க்க அவள் இன்னும் அவனுடன் ஒன்றினாள்…

அவனை அணைத்து கொண்டே “மாமு ஐ லவ் யூ..” என்று கூறி இன்னும் இறுக்கமாக அணைத்து கொண்டாள்.. அவள் கூறியதை கேட்டு திகைத்த ரியாஸ் “பாப்பு” என்று சந்தோச கூச்சலுடன் அவளை தன்னிடம் இருந்து பிரித்து அவள் முகத்தை பார்த்தான்… அவள் முகமோ வெட்கத்தில் சிவந்து இருந்தது…

ஆனந்த அதிர்ச்சியுடன் அவளை பார்த்து “பாப்பு நிஜமாவா” என்று கேட்டு அவளை பார்க்க அவளோ வெட்கத்துடன் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்… சிறிது நேரம் அந்த நிமிடத்தை ஆழ்ந்து அனுபவித்தனர் இருவரும்…

“பாப்பு போய் ப்ரஷ் அப் ஆகிட்டு வா… நானும் ப்ரஷ் அப் ஆகிட்டு வரேன்..” என்று கூறி அறைக்கு சென்றான்.. அவன் வெளியில் வரும் போது அவள் சமையலறையில் அவனுக்காக அவன் விரும்பி குடிக்கும் மசாலா டீ தயார் செய்து கொண்டு இருந்தாள்…

“ஒரு டூ மினிட்ஸ்” என்று கூறி டீ தயார் செய்து கொண்டு இருந்தாள்… அவன் அமைதியாய் சமையல் மேடையில் ஏறி அமர்ந்து அவளை தான் பார்த்து கொண்டு இருந்தான்… அவன் பார்வை அவளுக்கு கூச்சத்தை கொடுத்தது… டீயை தயார் செய்து அவனை ஹாலில் அமர வைத்த பின் சமயலறை வந்த பின்னும் அவன் பார்வை அவளை துரத்தியது… டீ வைத்த பாத்திரம் மட்டுமே சிங்கில் இருக்க அதை கழுவி வைத்த பின் ஹாலுக்கு வந்தாள்…

அவள் வெளியில் வரும் போது அவனுக்கு அழைப்பு வர “பாப்பு டூ மினிட்ஸ்” என கூறி வெளியில் சென்றான்… அவன் வெளியில் செல்லும் போதே ஆயிரம் யோசனையில் தான் சென்றான்…

சசி தான் அழைத்து இருந்தார்… அதற்கு முன்பே “ரியாஸ் குட்டிமா பக்கத்துல இருந்தா கொஞ்சம் தனிய வந்து பேசு” என செய்தி அனுப்பி இருந்தார்… வெளியில் சென்றதும் சசிக்கு அழைக்க அவர் முதல் அழைப்பிலேயே ஏற்று இருந்தார்…

“சொல்லுஙக மாமா எதோ பிரச்சனையா…” என்று பதட்டமாக கேட்டான்..

சசி கலங்கிய குரலில் “அண்ணாவுக்கும் சுபாவுக்கும் அஃசிடென்ட் ஆகிடிச்சு ரியாஸ்.. அண்ணா ரொம்ப சீரியஸ் கண்டிஷன்ல இருக்காரு… சுபாவுக்கு பெருசா அடி இல்ல…. சுபா மயக்கத்துல இருக்கா… குட்டிமாவை பயப்பட வைக்காம சொல்லிடுறியா… எங்க யாருக்குமே அவ கிட்ட பேச தைரியம் இல்ல…” என்று கூறினார்…

“மாமா கவலைப்படாதீங்க அர்ஜுன் மாமாவுக்கு எதுவும் ஆகாது…. நான் எவளோ சீக்கிரம் வர முடியுமோ அவளோ சீக்கிரம் நிரவியை கூட்டிட்டு வரேன்…” என்று கூறி அழைப்பை வைத்தான்…

நிரவியிடம் எவ்வாறு சொல்வது என அவனுக்கு பெரும் தயக்கம் இருந்தது…. தன் அம்மா உடன் இருந்தால் அவளை சமாளிக்கலாம் என எண்ணி அப்துலுக்கு அழைக்க அங்கு ஏற்கனவே விஷயம் அறிந்து ஆஷாவை சமாதானப் படுத்த முடியாமல் தவித்து கொண்டு இருப்பதாக அப்துல் கூறினார்… பின் அவரே “ரியாஸ் இன்னும் டூ அவர்ஸ்ல கோவைக்கு ஒரு பிளைட் இருக்கு… நீ பாப்பா கிட்ட எப்படியோ விஷயம் சொல்லி கூட்டிட்டு வந்துரு… நான் அம்மாவை கூட்டிட்டு வந்துறேன்… எனக்கு ஏர்போர்ட் பக்கம் தான்.. நான் இப்போ ஆன்லைன்ல புக் பண்ணிடுறேன்..” என்று கூறி வைத்துவிட்டார்…

ரியாஸோ “அம்மா இருந்தா சமாதான படுத்தலாம்னு பார்த்தா முடியாது போலயே… சமாதனம் செய்யனும்.. இப்போ தான் ஹாப்பியா இருந்தா மாமாவுக்கு மட்டும் எதுவுமாக கூடாது…” என்று நினைத்து கொண்டு வீட்டுக்குள் சென்றான்…

அவன் முகம் கவலையாக இருப்பதை பார்த்து பதறிய நிரவி “மாமு என்ன ஆச்சு.. உங்க முகம் ஒரு மாதிரி இருக்கு…” என்று கேட்டாள்…

“பாப்பு பயப்படக் கூடாது அர்ஜுன் மாமாவுக்கும் அத்தைக்கும் அஃசிடென்ட் ஆகிடிச்சு… பெரிய இன்ஜுரி எல்லாம் இல்ல.. சசி மாமா இப்போ தான் கால் பண்ணாரு நாம கோவை கிளம்பலாம்…” என்று மென்மையாக கூறினான்…

அவளோ “மாமு அப்பாவுக்கு எதுவும் இல்லையே.. அம்மா நல்லா இருக்காங்களா… நான் அவங்களை பாக்கனும்…” என்று அழுதவாறே கூறினாள்…

“பாப்பு ஒண்ணுமில்ல..கிளம்பலாம்.. அப்பா கிட்ட பேசிட்டேன்.. அம்மாவை கூட்டிட்டு ஏர்போர்ட் கிளம்பிட்டாரு நாம கிளம்பலாம்” என்று கூறி கதவை பூட்டி விட்டு கிளம்பினான்…

அங்கு அஷாவிடம் அப்துல் “ஆஷா பாப்பா வந்ததும் அழுக கூடாது… சின்ன அஃசிடென்ட் சொல்லி தான் ரியாஸ் கூட்டிட்டு வருவான்.. நீ அழுவுறதை பார்த்தா பாப்பா ரொம்ப பயப்படுவா…சோ அவ முன்னாடி அழுகாத… அர்ஜுனுக்கு எதுவும் ஆகாது.. ” என்று தைரியம் கூறினார்… அவர் தைரியம் கூறினாலும் அவர் முகமும் கலங்கி தான் இருந்தது… சிறு வயது முதலே நண்பர்கள் தானே… இப்போது அவருக்கு பெரும் விபத்து என அறிந்து மனிதர் கொஞ்சம் பயந்துவிட்டார்… இருந்தும் தானும் பயந்துவிட்டால் மனைவியும் நிரவியும் பயப்படுவர் என எண்ணி பயத்தை மறைத்து கொண்டார்…

அய்யனார்புரம்…

காலையில் அர்ஜுனன் வீட்டில் யாருக்குமே மனது சரி இல்லை… அனைவருக்கும் எதோ உள்ளுக்குள் ஒரு பயம்… அர்ஜுனனும் சுபாவும் தெரிந்தவர் மகளுக்கு கல்யாணம் என கோவை செல்கின்றனர்…

முகுந்தன் கண்மணி அர்ஜுனன் சுபா நால்வரும் ஒரே காரில் செல்வதாக தான் இருந்தது… ஆனால் அர்ஜுனன் தான் சுபாவிடம் கொஞ்சம் பேச வேண்டும் என கூறி தனியாக கிளம்பினார்.. அங்கு திருமணத்தை முடித்தவுடன் அர்ஜுனன் சொல்லிவிட்டு கிளம்பி விட முகுந்தன் மட்டும் கண்மணியுடன் அங்கு இருந்தார்…

 கார் மண்டபத்தை விட்டு கிளம்பி ஐந்து நிமிடங்கள் ஆகியும் காரில் அமைதியே நிலவியது… அதை சுபாவே கலைத்தார்… “என்ன மாமா எதோ பேசனும் சொன்னிங்க.. என்ன விஷயம்…” என்று கேட்டார்…

“குட்டிமா பத்தி பேசனும் அம்மு.. “என்று கூறினார்..

“என்ன சொல்லனும் சொல்லனும் உங்க குட்டிமாவை பத்தி…” என்று சிரிப்புடன் கேட்டார்

“குட்டிமா ரியாஸை லவ் பண்றா அம்மு… எங்க கிட்ட இங்க வந்தப்பவே சொல்லிட்டா….” என்று காரை ஓட்டி கொண்டே கூறினார்…

சுபா அமைதியாக இருந்தார்… அர்ஜுனனும் அமைதியாக இருந்தார் அவர் யோசிக்கட்டும் என…

சுபா எதுவும் கூறாமல் யோசித்து கொண்டு இருக்க அர்ஜுனன் பதட்டமாக “அம்மு சீட் பெல்ட் ரீமூவ் பண்ணிட்டு டோர் ஓபன் பண்ணி ஜம்ப் பண்ணு” என்று கூறினார்… அவரின் பதட்டத்தில் நினைவு திரும்பிய சுபா என்னவென்று பார்த்தார்…

“அம்மு சீக்கிரம் ஜம்ப் பண்ணு” என்று கூற சுபா எதிரே பிரேக் பிடிக்காமல் வரும் லாரியை பார்த்தார்… அர்ஜுனன் அவரின் சீட் பெல்டை கழட்ட பார்க்க அது ஸ்ட்ரக் ஆகி இருந்தது…. சுபா அதை பார்த்து விட்டு தன்னுடையதை கழட்டிவிட்டு வேகமாக அர்ஜுனனுடையதை கழட்ட பார்த்தர்… ஆனால் அது வரவே இல்லை… லாரியும் அருகில் வந்துஇருக்க அம்மு என்னை விடு.. நீ கீழ இறங்கு அம்மு…. என்று பதட்டமாக கூறினார்..

ஆனால் சுபாவோ அழுத்தமாக அர்ஜுனனின் சீட் பெல்ட்டை கழட்ட முயற்சி செய்து கொண்டு இருந்தார்… அம்மு இறங்குனு சொல்றேன்ல என்று கொஞ்சம் கோவமாக அவர் கூற சுபாவோ நீ இல்லாம நான் இல்லை மாமா என்று ஒரே வரியில் கூறிவிட்டார்..

அது ஒன் வே… அந்த பக்கம் யாரும் உபயோகிக்க மாட்டார்கள்.. அனைவரும் ஹைவேஸில் தான் செல்வர்… அதனால் தான் அந்த லாரி டிரைவர் யாரும் வரமாட்டார்கள் என எண்ணி பிரேக் பிடிக்காத தன் லாரியை அந்த வழியில் விட்டார்… அவரும் அர்ஜுனன் காரை அங்கு எதிர்பார்க்கவில்லை… அந்த ரோட்டில் காரை எந்த பக்கமும் திருப்ப முடியாது… வயல்கள் தான் அந்த பக்கம் அதிகம் இருக்கும்… எனவே அர்ஜுனன் காரை நிறுத்திவிட்டு சுபாவை இறங்க கூறினார்… ஆனால் சுபா அர்ஜுனன் இல்லாமல் இறங்கவே இல்லை… அந்த லாரி டிரைவரும் கார் மேல் மோதமல் வேறு பக்கம் திருப்ப பார்க்க அதுவும் முடியவில்லை…

அந்த லாரி வேகமாக வந்து காரை இடித்து இருந்தது… லாரி இடித்ததில் கார் இரண்டு மூன்று முறை சுழன்று ஒரு பள்ளத்தில் விழுந்து இருக்க லாரியும் மரத்தில் மோதி நின்று இருந்தது…

லாரி அர்ஜுனன் பக்கம் மோதியதால் அவருக்கு தலை கை கால் என உடம்பு முழுக்க அடிபட்டு இருந்தது…. சுபாவுக்கு அர்ஜுனன் அளவுக்கு அடி இல்லை என்றாலும் அவருக்கும் அடிபட்டு இருந்தது… சுபா கொஞ்சம் தெளிவாக இருந்தார்… அர்ஜுனன் மயக்கதுக்கு செல்வதை பார்த்து “மாமா மாமா கண்ணை திற.. மயக்கத்துக்கு போகாத… நீ இல்லாம இங்க எதுவுமே இல்லை மாமா… பயமா இருக்கு மாமா… கண்ணை மூடாத மாமா….” என்று அவர் கூற கூறவே சுபாவை பார்த்தாவரே கண்ணை மூடி இருந்தார்…

சுபாவும் “மாமா” என்ற அலறலுடன் மயக்கதுக்கு சென்று இருந்தார்… அவரின் இதயதுடிப்பும் குறைந்து கொண்டே இருந்தது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!