சுபா அர்ஜுன் இருவரும் கலங்கி நிற்பதை பார்த்த முகுந்தன் “சசி அமைதியாகு.. பாரு ரெண்டு பேரும் எப்படி கலங்கி நிக்குறாங்கனு.. அப்புறம் பேசிக்கலாம்…” என்று கூறி அவனை அமைதிப்படுத்த முயன்றான்….
“ஓஹ் இவங்களால என் பொண்ணு அழுதுட்டே தூங்கி இருக்காளே… அவ பாவம் இல்லையா…. ஒரு நிமிஷம் கூடவா அவ ஞாபகம் ரெண்டு பேருக்கும் வரல… என் பொண்ணை எனக்கு பாத்துக்க தெரியும்…” என்று கூறி அவளை அர்ஜுனனிடம் இருந்து வாங்கி தன் தோளில் போட்டு கொண்டு ஓரமாக சென்று கீழே அமர்ந்து அவளை தன் மடியில் படுக்க வைத்து கொண்டான்…
அவர்களும் அதுக்கு மேல் அவனிடம் பேசவில்லை…. சிறியவர்கள் பெரியவர்கள் மட்டும் தான் உறங்கினர்… மற்றவர்கள் ஜோடி ஜோடியாக அமர்ந்து தூங்காமல் இரண்டு வருட கதையை பேசிக் கொண்டு இருந்தனர்…
சசி இதில் கலந்துகொள்ளாமல் ஓரமாக அமர்ந்துவிட்டான்… அவனுக்கு கலந்துகொள்ள ஆசை தான்…. ஆனால் போக முடியவில்லை அதுக்கு காரணம் நிரவி குட்டி தான்…. நடு இரவில் எழுந்து அப்பா என்று கத்தி அழுவாள்…. அவளுக்கு கனவில் அர்ஜுனன் மலையில் இருந்து கீழே விழுவது போன்று கனவு வரும்…. அதை பார்த்து தான் அழுவாள்…. இதுவும் சசி சிவனேஸ் கார்த்திகா மூவருக்கும் மட்டும் தான் தெரியும்…. தினமும் எல்லாம் கனவு வராது… ஆனால் மன அழுத்தத்துடன் அழுது கொண்டே உறங்கினால் கண்டிப்பாக அவள் கனவு கண்டு அழுவாள்….
இன்றும் அழுது கொண்டே உறங்கியதால் சசி பயந்து கொண்டே அவள் அருகில் அமர்ந்து இருந்தான்….நல்லவேளையாக அவள் கத்தவில்லை….. இரவு எவ்வளவு நேரம் கழித்து உறங்கினாலும் காலை ஆறு மணிக்கு எல்லாம் எழுந்துகொள்வாள்…
அதே போல் இன்றும் எழுந்துகொள்ள யாரும் இன்னும் எழுந்துகொள்ளவில்லை…. அவளுக்கு ரெஸ்ட் ரூம் செல்வேண்டியதாய் இருந்தது… சசியும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்…. சிவனேஸும் உறக்கத்தில் தான் இருந்தான்…
சமயலறையில் இருந்து சத்தம் கேட்டது…. உள்ளே சென்று பார்த்தாள்… சுபா தான் வேலை செய்து கொண்டு இருந்தாள்… நிரவி குட்டி பேசலாமா வேண்டாமா என்று யோசித்து கொண்டு இருந்தாள்…
யாரோ நிற்பதை போல் இருந்ததால் சுபா திரும்பி பார்த்தாள்… தன் மகள் நிற்பதை பார்த்து கண் கலங்கிவிட்டது அவளுக்கு…
நிரவி குட்டி அங்கேயே நிற்க சுபா அவள் முன் மண்டியிட்டு “அம்மா கிட்ட வர மாட்டிங்களா நிரு குட்டி” என்று கேட்டாள்…..
நிரவி குட்டி உதடு பிதுக்கி அழுக ஆரம்பிக்க சுபா அவளை நோக்கி கை நீட்டிக் கொண்டு “சாரி நிரு குட்டி… அம்மா பெரிய தப்பு பண்ணிட்டேன்….” என்று கூறி அழுதாள்…
நிரவி குட்டி அவள் அழுவதை பார்த்து “ம்மா” என்று அழைத்து கொண்டே அவளை அணைத்து கொண்டாள்…
சிறு குழந்தை தானே அவளுக்கு கோவத்தை இழுத்து வைக்க எல்லாம் தெரியவில்லை…. அம்மா அழைத்ததும் அணைத்து கொண்டாள்…. ஆனால் நேற்று நடந்தது மனதிற்குள் இருந்து கொண்டே தான் இருக்கும்….
அர்ஜுனன் கிட்சேன் அருகில் தான் படுத்து கொண்டு இருந்தான்… பேச்சு சத்தம் கேட்டு எழுந்தவன் அம்மாவும் மகளும் அணைத்து நிற்பதை பார்த்து மெதுவாக அவர்கள் அருகில் சென்று அவர்களுடன் அவனும் முட்டி போட்டு அமர்ந்தான்…
சுபாவிடம் இருந்து நிரவியை தன்பக்கம் திருப்பிய அர்ஜுனன் அவளின் நெற்றியில் முத்தமிட்டு அணைத்து கொண்டான்… அவளும் “அப்பா” என்று சந்தோசமாக கூறி அணைத்து கொண்டாள்….
சிறு குழந்தை நேற்று நடந்ததை மறந்து அப்பாவை கட்டிக் கொண்டது… சுபா இருவரையும் கண்களில் நீருடன் உதட்டில் சிரிப்புடன் பார்த்து கொண்டு இருந்தாள்….
இன்னும் அர்ஜுனனும் சுபாவும் தனியாக பேசிக்கொள்ளவில்லை…. அவனிடம் பேச மனது ஆர்ப்பரித்தது…. ஆனாலுக்கு அமைதியாக இருந்தாள்…
முதலில் அர்ஜுனன் அவளை பாத்ரூம் செல்ல சொல்லிவிட்டு அதன்பின் அர்ஜுனன் நிரவியை தூக்கி கொண்டு வெளியே சென்றான்… பிள்ளை இரண்டு வருட ஏக்கத்தை அவனிடம் பேசி தீர்த்து கொண்டது… அவனும் அவளிடம் அதிகம் பேசினான்….
இருவரும் ஒரு மணி நேரம் வெளியே சுற்றிவிட்டு அதன் பின் தான் வீட்டிற்கு சென்றனர்…. குழந்தைகள் எல்லாம் இன்னும் தூங்கி கொண்டு இருக்க மற்றவர்கள் அனைவரும் எழுந்து இருந்தனர்….
ரித்திகா எழுந்து இருந்தாள்…. ஆனால் கண்களை திறக்கவில்லை…. அர்ஜுனன் குரல் கேட்டபின் தான் கண் திறந்தாள்….
அவள் எழுந்ததை பார்த்த அர்ஜுனன் “ரித்தும்மா போய் பேஸ் வாஷ் பண்ணிட்டு வா…” என்று கூறி பாத்ரூம் காட்டினான்…
அவளும் பாத்ரூம் சென்று முகம் கழுவிவிட்டு வந்தவள் அர்ஜுனன் கை பிடித்து அமர்ந்துவிட்டாள்…
சுபா அவளுக்கு பால் கொண்டு வந்து கொடுத்தாள்… நிரவி குட்டி பால் எல்லாம் குடிக்க மாட்டாள்…. எனவே அவளுக்கு தரவில்லை… மற்றவர்கள் அனைவருக்கும் டீ மற்றும் காபி குடுத்து இருக்க சசி மட்டும் வேண்டாம் என கூறி விட்டான்…
அர்ஜுனன் வந்ததும் அவனுக்கான கஞ்சியை எடுத்து வந்து அவனிடம் கொடுத்தாள்….
அவன் எதுவும் பேசாமல் உதட்டில் புன்னகையுடன் எடுத்து குடிக்க ஆரம்பித்தான்…
வீட்டில் உள்ள அனைவரும் இருவரும் இன்னும் பேசாததை கவனித்து கொண்டு தான் இருந்தனர்…. எனவே குழந்தைகளையும் அழைத்து கொண்டு வெளியே செல்லலாம் என நினைத்து ரெடியாக சென்றுவிட்டனர்…
ரித்திகா யாருடனும் பேசாமல் அமைதியாகவே இருந்தாள்…. எனவே பெண்கள் அனைவரும் அவளிடம் பேசி அவளை நார்மலாக்கி இருந்தனர்…
குழந்தைகளையும் எழுப்பி குளிக்க அனுப்பிவிட்டு காலை உணவை முடித்துவிட்டு இருவரிடமும் விடைபெற்று வெளியில் சென்றுவிட்டனர்…
தற்போது வீட்டில் இருவர் மட்டும்… இருவருக்குமே என்ன பேசுவது என்று தெரியவில்லை… புதிதாக திருமணம் ஆன மணமக்களை போல் ஆளுக்கு ஒரு பக்கம் இருந்தனர்…
அர்ஜுனனே தயக்கத்தை உடைத்து சுபா அருகில் சென்றான்… அவன் வருகையை உணர்ந்து அவள் மனம் அவளையே அறியாமல் பரவசம் அடைந்தது…
மெதுவாக அவளுக்கு பின்புறம் நின்றவன் அவளை தொடாமல் சமையல் திட்டை பிடித்தவாரு நின்றான்… சுபா கொஞ்சம் அசைந்தாலும் அர்ஜுனனை அணைத்து விடுவது போல் இருந்தது…. இருவரும் இருவரின் அருகாமையை நீண்ட நாள் கழித்து அனுபவித்து கொண்டு இருந்தனர்….
அர்ஜுனன் “அம்மு…” என்று ஆழமான குரலில் அழைத்தான்…. அவன் அழைத்தது தான் தாமதம் அவன் புறம் திரும்பி “மாமா” என்று அழைத்து கொண்டே அணைத்து கொண்டாள்…. இரண்டு வருடம் அவனை பிரிந்து இருந்த வலியை அவனிடம் காட்டினாள்…. அவனும் அழுகட்டும் என விட்டுவிட்டான்… அவன் கண்ணும் கலங்கி கண்ணீரை சுரந்து கொண்டு இருந்தது…
இருவரும் நீண்ட நேரம் தங்கள் பிரிவை அழுது தீர்த்தனர்…. அர்ஜுன் தான் கொஞ்சம் சமாதானம் ஆகி சுபாவையும் சமாதானப்படுத்தினான்…. அவளும் கொஞ்சம் கொஞ்சமாக தன் அழுகையை நிறுத்தினாள்….
அதன் பின் சிறிது நேரம் இருவருக்கும் இடையில் எந்த பேச்சும் இல்லை…. அமைதியாகவே இருவரும் இருவரின் அருகாமையில் கட்டுண்டு கிடந்தனர்…
பின் அர்ஜுனே தன்னிடம் இருந்து அவளை பிரித்து “இந்த ரெண்டு வருஷத்துல ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கல அம்மு…. சாரி அது என்னோட கவன குறைவு தான்… அன்னிக்கு மட்டும் நான் ஒழுங்கா இருந்து இருந்தா இந்த பிரச்சனையே இருந்து இருக்காது… நீயும் இந்த ரெண்டு வருஷம் யாருமில்லாம கஷ்டப்பட்டு இருக்க மாட்ட…” என்று கண் கலங்க கூறினாள்….
சுபாவோ “வேண்டாம் மாமா… அதை பத்தி பேசாதீங்க…. இனிமே அதை பத்தி நினைக்க கூட வேண்டாம்… அது எப்பயும் கஷ்டத்த மட்டும் தான் தரும்… இனிமே அதை பத்தி பேசாதீங்க…” என்று கூறி மீண்டும் அவன் தோள் சாய்ந்து கொண்டாள்…
அவனுக்கும் அதே எண்ணம் தான்… ஆனால் ரித்திகாவை பற்றி சொல்லியாக வேண்டுமே… எனவே அவளிடம் அவளை பற்றி அனைத்தும் சொல்லிவிட்டான்….
“பிறந்ததுல இருந்து தாய் பாசத்தை அவ அனுபவிச்சதே இல்ல அம்மு… ஒரு அம்மாவா நீ நல்லா பாத்துப்பனு எனக்கு நல்லா தெரியும்…. ஆனாலும் இதுனால ஆரவ் நிரவி ரெண்டு பேரையும் நாம பாக்காம இருக்க கூடாது….” என்று கூறினான்….
“கண்டிப்பா மாமா…. இனிமே நமக்கு மூனு குழந்தைங்க… ரித்திகா தான் மூத்த பொண்ணு நமக்கு… மூனு பேரையும் நல்லா பாத்துப்போம்…” என்று கூறினாள்..
சிறிது நேரம் அமைதியே நீடிக்க அர்ஜுனன் ஞாபாகம் வந்தவனாய் “அம்மு ஒரு நிமிஷம்” என்று கூறி வெளியே சென்று எதோ பரிசு பொருளை எடுத்து வந்து அவள் முன் முட்டி போட்டு அமர்ந்து அதை அவளிடம் நீட்டி “ஹாப்பி பர்த்டே அம்மு….” என்று கூறி நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான்….
அவளுக்கு சுத்தமாக ஞாபகம் இல்லை… கண்ணில் நீருடன் அவனை அணைத்து கொண்டாள்… அவளை தன்னிடம் இருந்து விலக்கி “அம்மு பிரிச்சு பாரு” என்று கூறினான்…
பரிசை பிரித்து பார்த்தவள் சத்தமாக அழுதுவிட்டாள்… அவன் கண்ணும் கலங்கி தான் இருத்தது…
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.