Skip to content
Post Views: 2,054
கருப்பன் ஆட்டம் 33
மலர்விழி தன் அண்ணன் அழைத்ததற்கு தான் இங்கு தான் இருப்பேன் என்று உறுதியாக கூறினால் அதனை கேட்ட கருப்பன்
Advertisement
“என்னடி ட்ராமா பண்ணிட்டு இருக்கியா…? உன் நடிப்புக்கெல்லாம் மயங்கி உன் முந்தில விழுந்த அந்த கருப்பன் எப்பவோ காணாம போயிட்டான்….!
இனியும் நீ இப்படி எல்லாம் நடிச்சு என்னை மயக்கி உன் வலையில் மறுபடியும் விழ வைக்கலாம்னு கனவுல கூட எண்ணி பார்த்துறாத…!” என்றான் கருப்பன்.
Advertisement
Advertisement
“ஐயோ..மாமா…, என் மேல சத்தியமா நான் இப்பவும் சரி அப்பவும் சரி எப்பவுமே உங்க மேல அவ்வளவு உசுரா இருந்தேன் இருப்பேன் மாமா…!
இந்த நாய எனக்கு ஆரம்பத்துல இருந்தே புடிக்கலைன்னு நான் சொன்னதுக்கு ஒரே காரணம் நீங்க மட்டுந்தேன் மாமா….! நீங்க மட்டும் தான் மாமா என் மனசு முழுசும் நெறஞ்சு இருக்கீங்க….!
Advertisement
அதனாலதான் இவன வேணா வேணான்னு எங்க வீட்ல தல பாடா அடிச்சு சொன்னே…! ஆனா யாருமே என் பேச்சை காதுல வாங்கல மாமா….!
அன்னைக்கு நான் சுருக்கு வச்சுக்க போனப்போ மயில் மட்டும் வந்து என்ன காப்பாத்தி இங்க கூட்டிட்டு வரலன்னா…, இப்போ எனக்கு கெடச்ச இந்த வாழ்க்கைய நான் தொலைச்சிருப்பேன் மாமா…..! என்னைக்குமே என் உசுரு மாமா நீங்க…! எங்க அண்ணன் கிட்ட சும்மா நடிப்புக்கு சொல்லல மாமா…! நெசமாலுமே நீங்க என்னைய கொன்னே போட்டாலும் நான் சந்தோசமா சாவேன் மாமா….!” என்று கூறினால் மலர்.
அதனை கேட்ட கருப்பன் ஆத்திரம் சற்று மட்டுபட்டாலும் கூட, அவன் முன்பு இருக்கும் அவனின் தந்தை இறப்பிற்கு காரணமான மீனா மற்றும் தேவியை பார்த்தவனால் ஆத்திரத்தை ஒரு கட்டத்திற்கு மேல் கட்டுப்படுத்த முடியவில்லை.
அவன் தர்மன் புறம் திரும்பி “டேய் தர்மா இன்னும் பத்து நிமிஷம் என் குடும்ப விஷயத்தை வேடிக்கை பார்த்துட்டு இருக்குற ஒரு பயலும் இங்க நிக்க கூடாது…. அதுக்கு மீறியும் எவனாவது எவளாவது நிண்டாய்ங்கன்னா அப்புறம் நல்லா இருக்காதுன்னு இருக்கிற எல்லாருக்கும் தெளிவா சொல்லிடு…!” என்று கூறிய கருப்பன் அங்கிருந்து ஒரு அடி எடுத்து வைத்தான்.
“சரி வா தங்கச்சிம்மா நீ வீட்டுக்குள்ள போ. இவய்ங்க எல்லாத்தையும் நான் பத்தி விடுறேன்….!” என்றான் தர்மன்.
அதனைக் கேட்ட கருப்பனோ “நான் இங்கே இருக்கிற எல்லாரையும் அனுப்புன்னு சொன்னது இவளையும் சேர்த்து தான்….!” என்று தீர்க்கமான குரலில் கூறினான் கருப்பன்.
“என்ன மச்சான்… தங்கச்சிய போக சொன்னா அந்த புள்ள பாவம் எங்க போகும்…!” என்றான் தர்மன்.
“ஏன் போக இடம் இல்லாமையா இருக்கு….! அதான் வந்திருக்காங்களே அவளோட பாசக்கார அண்ணே, அப்பன், ஆத்தா, கல்யாணம் பண்ணிக்க இருந்த மாப்ள, அப்பறம் அவளோட ஆசை மதனின்னு எல்லாரும் சொந்தம் கொண்டாடிட்டு….!
முதல்ல எல்லாத்தையும் தொறத்தி விடு. அவ அண்ணன் காரன் தான் சொல்றானே இந்த கருமத்துல எல்லாம் எதுக்கு வந்து இருக்கன்னு…! இந்த கருமத்துல இருந்து அவன் தங்கச்சி காரி ஒன்னும் குடும்பம் நடத்த வேண்டிய அவசியமில்லை.
அவனுக்கு இனிமே என் வாழ்க்கையிலையும் இடம் கிடையாது. அவ கழுத்துல நான் அவசரப்பட்டு கட்டுன தாலி அவளுக்கு இடைஞ்சலா இருந்தா சொல்ல சொல்லு கட்டுன நானே அறுத்து எறிஞ்சிட்றேன்…!” என்று கூறினான் கருப்பன்.
அதனை கேட்டு பதறிய மலரோ, “ஐயோ…! என்ன சொல்றீங்க மாமா…! உங்களுக்கு இப்ப என் மேல தீரா கோவம் இருக்குன்னு எனக்கு தெரியும். அதுக்காக இப்படி எல்லாம் பேசாதீங்க மாமா….! என்னால அதெல்லாம் தாங்க முடியாது…! உங்க ஆத்திரம் தீர என்ன அடிக்க கூட செய்ங்க மாமா இங்க யாரும் கேக்க மாட்டாங்க. யாரும் கேக்குறதுக்கும் உரிமையும் கிடையாது. நான் உங்க பொண்டாட்டி மாமா….!” என்றாள்.
“ஏய்.. யாருக்கு யாருடி பொண்டாட்டி…!” என்று கூறிய கருப்பன் அவளை அடிக்க கை ஓங்கினான்.
அதனைப் பார்த்து அவனின் கையை பிடித்து தடுத்த தர்மனோ “டேய் மச்சான்…, ஆத்தரத்துல என்ன பண்றேன்னு புரியாம பண்ணாதடா….! அது பொட்ட புள்ளடா உன் அடி எல்லாம் அந்த புள்ளையால தாங்க முடியுமாடா….!” என்றான்.
“முடியாதுல்ல,என்னோட அடிய தாங்க முடியாதுல்ல.., அதேபோல தான் என் மனசுக்குள்ள எரிஞ்சுகிட்டு இருக்க எரிமலையோட தாக்கத்தையும் அவளால் தாங்க முடியாது. உசுர பிச்சையா குடுக்குறேன்… இடத்தை காலி பண்ணிட்டு அவள ஓடிப் போக சொல்லிடு..!” என்ற கருப்பன்,
நொடியும் அங்கு நிற்காமல் மலர்விழியின் முகத்தை திரும்பியும் பார்க்காமல் அங்கே மலர்விழி செய்து வைத்திருந்த உணவு பதார்த்தங்களை வெறிகொண்டு முறைத்து விட்டு வீட்டிற்குள் சென்று கதவை தாழிட்டு கொண்டான்.
இத்தனை நேரம் கருப்பன் ஆடிய ருத்ர தாண்டவம் அனைத்தையும் வாயில் கை வைத்து பார்த்துக் கொண்டிருந்த ஊர் மக்கள் அனைவரும் அவன் வீட்டிற்குள் சென்றவுடன் மேலும் தங்களுக்குள் கிசுகிசுத்தவர்கள் மீனாவையும் தேவியையும் வசைபாட ஆரம்பித்தனர்.
அதனைப் பார்த்த தருமனோ “ஒரு வீட்ல சத்தம் கேட்ற கூடாது உடனே வந்துருவாய்ங்க… என்னமோ அவயவன் வீட்ல நடக்காத மாதிரி…. அவயவன் குடும்பத்துக்குள்ள என்ன நாரி கெடக்குன்னு உள்ள வந்து பார்த்தா தானே தெரியும்… மூடிக்கிட்டு கிளம்புங்கடா…. உள்ள போய் இருக்க கதிரு வெளியே அருவாளோட வந்தாலும் சொல்றதுக்கு ஒன்னும் இல்ல…!” என்று தர்மன் ஒரு அதட்டல் போட்டான்.
அதனை கேட்ட அனைவரும் “ஆமாண்டி இந்த கருப்பன் செஞ்சாலும் செய்வான். நம்மளுக்கு எதுக்கு வம்பு வாங்க போலாம்” என்று ஊர் மக்கள் அனைவரும் அங்கிருந்து கலைய தொடங்கினர். அவர்களுடன் சேர்ந்து செல்வமும் சென்று இருந்தான்.
இப்பொழுது அங்கு நின்றிருப்பது மலர்விழி, பொண்ணுத்தாயி, மயில், தர்மன், அமுதா, மீனா, தேவி, ராகுல், நடேசன், மாதேஷ் இவர்கள் மட்டுமே…!
ராகுல் மலர்விழியிடம் வந்தவன் “மலர் நம்ம போலாம் டா” என்று அழைத்து மலர்விழியின் கையைப் பிடித்தான். அப்பொழுது ராகுலின் கையைப் பிடித்து உதறித் தள்ளினார் பொண்ணுத்தாயி…
தன் கையை தன் அண்ணனின் கையில் இருந்து உதறித் தள்ளிய தன் அத்தையை புரியாமல் நிமிர்ந்து பார்த்தால் மலர்விழி….!
பொண்ணுத்தாயோ ராகுலின் புறம் திரும்பியவர் “இந்தாப்பு யாரு வூட்டுப் புள்ளய யார் வந்து கூட்டிட்டு போறது….! இவ என் வீட்டு மருமக, மகாலட்சுமி…!
ஊருக்கு வந்தோமா… தங்கச்சிய பார்த்தோமா… நியாயம் கேட்டோமான்னு… கிளம்பி போயிட்டே இருக்கணும்….! என் வூட்டு புள்ளைய கூட்டிட்டு போவணும்னு நெனச்ச மறுவாத கெட்டுப் போயிரும்….!” என்று கூறினார் பொண்ணுத்தாயி.
அதனைக் கேட்ட மலர்விழிக்கு உள்ளம் நெகிழ்ந்து கண்களில் கண்ணீர் பெருகியது. “அத்தை….!” என்று கூறி கதறிய மலர்விழி பொண்ணுத்தாயின் காலில் விழுந்தாள்.
“அத்தை என்ன மன்னிச்சிடுங்கத்தை நான் வேணும்னு எதுவும் பண்ணல எனக்கு உங்க மவன ரொம்ப பிடிக்கும்த்த…! அவர்கிட்ட சொல்லி என்னைய ஏத்துக்க சொல்லுங்கத்த” என்று கூறினாள் மலர்விழி.
“அதை நீ சொல்லணும்னு இருக்காத்தா…, எனக்கு தெரியாதா…! கொஞ்ச நாளுன்னாளும் என் மவன் உன் மேல வச்சிருந்த அன்பு எந்த அளவுக்கு அதிகமா இருந்துச்சுன்னு….!
…ம்ம்ம்…என்ன… ஒரு பெத்தவளா என்னால அதை புரிஞ்சுக்க முடியாமத் தான் ஆரம்பத்துல உங்க ரெண்டு பேரோட காதல என்னால ஏத்துக்க முடியலையே….! நானுமே கதிர்கிட்ட உன்னை கல்யாணம் பண்ணிக்க வேணாம்னு சொன்னனே…!
அதுக்கப்பறம் தான் ரெண்டு பேரும் எந்த அளவுக்கு ஒருத்தர ஒருத்தர் மனசார நேசிக்கிறீங்கன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் கூட உங்கள பிரிக்கிறது எனக்கு சரின்னு பட்டுச்சே அப்போ என் பக்கமும் தப்பு இருக்குதே…!
ரெண்டு நாளைக்கு முன்னாடி கூட நானும் என் மவன் கிட்ட இந்த பொண்ணு வேணாம்னு சொன்னேன். ஆனா அது எவ்வளவு பெரிய தப்புன்னு பொறவு தான எனக்கே புரிஞ்சது.
இப்போ கதிரு கொஞ்சம் கோவமா இருக்கியான். கோவம் கொஞ்சம் தனியவும் எடுத்து சொல்லுவோம் அதுவரைக்கும் நீ நம்ம வீட்ல வந்து இருத்தா…!”என்று கூறினார் பொண்ணுத்தாயி.
அதனைக் கேட்டு செல்வதிற்கோ வேறு விதமாக மகிழ்ச்சியாக இருந்தது. தர்மனுக்கும், மீனா, தேவி, நடேசன், ராகுல் என அனைவருக்கும் மகிழ்ச்சி தான். ஆனால் இங்கே மாதேஷ் மட்டும் ஆத்திரத்தில் பொசுங்கிக் கொண்டிருந்தான்.
அதன் பின் அனைவரும் தோட்டத்திலிருந்து ஊருக்குள் வந்து சேர்ந்தனர்.
தர்மன் சென்று வீட்டின் கதவைத் தட்டியதும் கருப்பன் கதவு திறந்தான்.
உள்ளே சென்றவன் கருப்பன் அதே கோபத்தில் அமர்ந்திருப்பதை பார்த்த தர்மன் “என்ன மச்சான் அந்த புள்ளைய போய் வீட்டை விட்டு போக சொல்லிட்ட….?” என்று கேட்டான்.
அதனைக் கேட்ட கருப்பன் தர்மனை பார்த்து முறைத்தான்.
‘ஐயையோ…! போக்கஸ நம்ம மேல திருப்புறானே…!’ என்று நினைத்துக் கொண்டவன்,
“இப்ப எதுக்கு என்னை பார்த்து மொறைக்கிற நீயி…? அப்படி என்ன நான் தப்பா கேட்டுட்டேன்…!” என்றான்.
“நீ கேட்ட கேள்வியே தப்பு…, அவள கொன்னு போடாம.., ஏதோ இத்தன நாளா மனசுல நெனச்ச பாவத்துக்கு உசுரோட விட்டு வச்சிருக்கேனேன்னு நெனச்சு சந்தோஷப்பட்டுக்கிட்டு மூடிகிட்டு இருக்கறதா இருந்தா இங்க இரு… இல்லையா இந்த மாதிரி ஏதாவது கேள்வி கேட்டு என்கிட்ட குத்துபட்டு சாகாத…!” என்றான் கருப்பன்.
“சரி மச்சான் நான் எதுவும் கேட்கல.., வா போய் சோத்த திம்போம்..!” என்றான் தர்மன்.
அதற்கு கருப்பனின் பார்வை மீண்டும் அவனைத் துளைத்து எடுக்க, “நம்ம கோவத்துக்கு சோறு என்ன மச்சான் பண்ணுச்சு….! நம்ம தானே கஷ்டப்பட்டு வெளைய வைக்கிறோம். அதை வீணடிக்க சொல்றியா…?” என்று கேட்டான்.
“அந்த சோத்த நல்லா பெனஞ்சு ஊருக்குள்ள இருக்குற தெரு நாய்களுக்கு வச்சுபுட்டு வா…!” என்றான் கருப்பன்.
‘அய்யய்யோ…! குழம்பு மணமே அருமையா இருந்துச்சே ஒரு வாய் கூட வைக்க முடியாம இப்படி தெரு நாய்க்கு வைக்க சொல்றானே….!’ என்று புலம்பிக்கொண்டே கருப்பன் கூறியதை செய்தான் தர்மன்.
ஊருக்குள் வந்த மீனா, தேவி மற்றும் குடும்பத்தினர் அனைவரும் பொண்ணுத்தாயின் வீட்டிற்கு வந்தனர்.
பொண்ணுத்தாயி தன் மருமகளை உள்ளே அழைத்து சென்றார். தன் மருமகளாக முதன்முதலாக தன் வீட்டிற்குள் வரும் பொழுது தன் மகன் இல்லாமல் வருவது பொண்ணுத்தாய்க்குமே சற்று சங்கடமாக தான் இருந்தது.
ஆனாலும் தற்பொழுது இருக்கும் நிலையில் அதை எல்லாம் நினைக்க முடியாது என்ற எண்ணிக்கொண்டு மலர்விழியை இன்முகமாக உள்ளே அழைத்தார்.
மலர்விழியின் குடும்பத்தினர் வீட்டிற்குள் நுழைய காலடி எடுத்து வைத்த பொழுது, “எவளாவது வீட்டுக்குள்ள காலடி எடுத்து வச்சீங்க வச்ச கால வெட்டு கட்டையில வச்சு வெட்டிபுடுவேன்…!”என்றார் பொண்ணுத்தாயி.
அதனைக் கேட்ட மீனாவோ “அம்மா நான் உன் பொண்ணுமா…, என்ன உள்ள விட மாட்டியா….!” என்று கேட்டாள்.
அதற்கு பொண்ணு தாயோ “யாருக்கு யாருடி பொண்ணு…! அது கல்யாணதுக்கு ரெண்டு நாள் இருக்க, ஊர் பேரு தெரியாதவன் கூட ஓடி போறதுக்கு முன்னாடி… இப்போ இல்ல…!” என்று கூறியவர் அவர்களின் முகத்தில் அறைந்தார் போல் கதவை அடைத்து சாத்தி தாழிட்டார்.
கருப்பன் வேட்டை தொடரும்…
💝கருப்பனின் காரிகையவள்💝💝💝
error: Content is protected !!