Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

28. இதழ்யா இசை - கருப்பனின் காரிகையவள்

கருப்பனின் காரிகையவள் 💝 35

கருப்பன் ஆட்டம் 35



Advertisement

 செல்வம் மாதேஷ் கேட்கும் கேள்விக்கு பதில் கூறிக் கொண்டிருந்தான். அப்பொழுது மாதேஷ் ராகுலுக்கும் மீனாவிற்கும் எவ்வாறு பழக்கம் ஆனது என்று கேட்க கேட்டான்.

அதற்கு செல்வமோ “அதைப்பத்தி எனக்கு தெரியாது, அன்னைக்கு அவ என் கையில சிக்காம தப்பிச்சுட்டா…! ஆனா நான் அவகிட்ட தப்பா நடந்துக்க பாத்த அந்த கோவம் இன்னும் அவளுக்கு என் மேல இருக்கு, அதனால தான் அந்த மீனா அன்னைக்கு என்னை பார்த்து மொறைச்சா…!” என்று கூறினான் செல்வம்.

Advertisement

Advertisement

“இதுக்கு பின்னாடி இவ்வளவு பெரிய பிளாஷ் பேக் இருக்கா….!” என்றான் மாதேஷ்.

“ஆமாங்க” 

Advertisement

 “சரி பிரதர் இப்ப நீங்க எதுக்காக எனக்கு கால் பண்ணீங்க…?” என்று மாதேஷ் செல்வத்திடம் கேட்டான்.

 “ஆமால்ல சொல்ல வந்த விஷயத்தையும் மறந்துட்டு ஏதேதோ பேசிட்டு இருக்கேன்….! இன்னைக்கு அந்த கருப்பன்னோட ஆத்தா இருக்கே பொண்ணு தாயி ஒரு முக்கியமான விஷேசமா வேற ஊருக்கு போயிருக்கு…., கருப்பனும் அவ கிட்ட பேச மாட்டியான். இப்போ ஏதோ காரியமா டவுனுக்கு வேற போயிருக்கியான். 

இப்போ இதுதான் பிளான்…! நீங்க உங்களோட அடியாள ஊருக்கு வெளியே வந்து நிக்க சொல்லுங்க, நான் போயி அந்த மலரு புள்ளைய தூக்கிட்டு கொண்டுவந்து உங்ககிட்ட குடுத்துட்றேன்…!” என்றான் செல்வம்.

 அதனைக் கேட்ட மாதேஷோ “டபுள் ஓகே…! நான் என்னோட ஆள ஊருக்கு வெளியே யாருக்கும் தெரியாம நிக்க சொல்றேன்…! அப்புறம் ஒரு விஷயம்…! நீங்க எந்த ஒரு தப்பான நோக்கத்தோடயாவது மலர் மேல கை வச்சீங்க அடுத்த டெட்பாடி நீங்களா தான் இருப்பீங்க…!” என்று செல்வதை எச்சரித்தான் மாதேஷ்.

 அதனை கேட்டு செல்வமோ மனதிற்குள் ‘போடா டேய் உன்ன மாதிரி எத்தனை பேரை பாத்துருக்க மாட்டேன். அந்த மலர அனுபவிக்கனும்னு அந்த கருப்பன் கல்யாண பன்றதுக்கு முன்னாடி இருந்து நான்தான்டா ஸ்கெட்ச் போட்டுட்டு இருந்தேன்.

 அந்த மீனா தப்பிச்ச மாதிரியே இந்த மலரும் தப்பிச்சிடுவாளா….! இல்ல நான் தான் தப்பிக்க விட்றுவேனா…!’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட செல்வம் அமைதியாக இருக்க,

 அவன் அமைதியை கவனித்த மாதேஷ் “என்ன பதில் சொல்ல மாட்றீங்க…?” என்றான். 

“இல்ல.., எப்படி அவளை தூக்குறதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன்….!”

“சரி ஓகே நீங்க சொல்ற மாதிரி நான் என் ஆளுக்கு கால் பண்றேன்…!”என்ற மாதேஷ் அழைப்பை தூண்டித்தான்.

 செல்வம் மாதேஷிடம் பேசிய அனைத்து விஷயங்களையும் ஒரு நபர் மறைந்திருந்து கேட்டது மட்டுமல்லாமல் அதனை தனது அலைபேசியில் ரெக்கார்ட் செய்தும் கொண்டான். 

 அந்த ரெக்கார்டரை நொடியும் தாமதிக்காமல் தர்மனுக்கு அனுப்பினான் அவன் தர்மனின் நண்பன் ஜீவா. 

 தர்மன் லோடு ஏற்றும் வேளையில் பிஸியாக இருந்ததால் தற்சமயம் அவன் அனுப்பி இருந்த வாய்ஸ் ரெக்கார்டரை அவன் ஓபன் செய்து பார்க்கவில்லை.

 தன் நண்பனுக்கு அனுப்பி விட்ட திருப்தியில் ஜீவாவும் அதற்கு மேல் அவனுக்கு நினைவூட்டும் வேளையோ அல்லது அவன் பார்த்து விட்டானா என்றோ செக் செய்யாமல் விட்டு விட்டான். 

 செல்வம் மாதேஷிடம் கூறியது போல் பொண்ணுத்தாயின் வீட்டிற்கு வந்திருந்தான்.

 வீட்டில் வாசல் கதவு திறந்திருந்தது. வீட்டின் கூடத்தில் கருப்பன் விசிறி சென்றிருந்த உணவு பருக்கை அனைத்தும் சிதறி கிடந்தது.

மலர்விழியோ அறையினுள் அமர்ந்து சேலையை அரைகுறையாக சுற்றிக்கொண்டு காலை குத்துக்காலிட்டு அதில் முகத்தை புதைத்து அழுது கொண்டிருந்தாள்.

வீட்டிற்கு நுழைந்து கதவை சாத்தி சத்தம் வராமல் தாழிட்ட செல்வம் கூடத்தில் இருந்து மெல்ல அறைக்குள் நுழைந்தான்.

 வேதனையின் பிடியில் இருந்த மலர்விழியோ செல்வம் நுழைந்ததை உணரும் நிலை இல்லாமல் அமர்ந்திருந்தாள். 

 வீட்டிற்குள் நுழைந்த மிருகம் அறைக்குள்ளும் நுழைந்திருந்தது. திடீரென்று தன் அறைக்குள் நுழைய இருந்த செல்வத்தை பார்த்து பயந்து விழித்த மலர்விழியோ…! 

“நீங்க யாரு….? நீங்க எதுக்கு வீட்டுக்குள்ள… அதுவும் ரூமுக்குள்ள வரீங்க…?” என்று கேட்டாள்.

அதற்கு செல்வமோ “நான் வேற யாரும் இல்ல.., நான் உனக்கு நல்லது செய்ய தான் வந்து இருக்கேன். நீ கொஞ்சம் அமைதியா இரும்மா…!” என்றான்.

“என்ன எனக்கு நல்லது செய்றீங்களா…? நீங்க யாரு எனக்கு நல்லது செய்றதுக்கு…! நீங்க முதல் வீட்டை விட்டு வெளிய போங்க…!” என்று கூறினால் மலர்.

 அதற்கு செவி கொடுக்காத செல்வமோ “இங்க பாரு.., நான் ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லிட்டு கொஞ்சமே கொஞ்சமா உன் கூட சந்தோஷமா இருந்துட்டு போயிட்டே இருப்பேன். அதுக்கு நீ ஒத்துழைச்சின்னா உனக்கும் சந்தோஷம்.., எனக்கும் சந்தோஷம்.., 

இதுவே நீ கத்தி ஊர கூப்டன்னா புருஷனை பிரிஞ்சிருக்க முடியாம நீ தான் என்னை கூப்பிட்டேன்னு நான் ஊருக்குள்ள சொல்லி உன் அசிங்கப்படுத்துவேன் பரவாயில்லையா…?” என்று கூறி மிரட்டினான். 

 அதனைக் கேட்ட மலர்வழியோ “அடச்சீ பொம்பள பொறுக்கி நாயே என்னடா பேச்சு பேசுற…! நீயா வீட்டுக்குள்ள வந்துட்டு என் மேல பலிய போட்டா அதை என் புருஷனும் மாமியாரும் ஊர் காரய்ங்களும் நம்பிடுவாங்களாக்கும்…!

 அப்படியே நம்புனாலும் எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல. நீ ஒழுங்கு மரியாதையா வீட்டை விட்டு வெளியே போ…!” என்றால் மலர்விழி.

 “அட என்ன நீயி நான் எவ்வளவு ஆசையா வந்து இருக்கேன் என்ன போயி துரத்தி விட பாக்குறியே…!” என்றவன் மலரிடம் மல்லுக்கட்டிக்கொண்டே அவளை நெருங்க நினைத்தான்.

மலர்விழி முடிந்த மற்றும் அந்த மனித மிருகத்திடம் போராடிக் கொண்டிருந்தது.

ஒரு வழியாக ஒரு லாரி லோடை ஒரே ஆளாக இறக்கி வைத்த தர்மன் அப்பொழுதே தனது அலைபேசியில் ஜீவா அனுப்பி இருந்த அந்த வாய்ஸ் ரெக்கார்டரை கேட்டான்.

அவன் பக்கத்து ஊரில் தான் வேலை செய்ததால் நொடியும் தாமதியாமல் அந்த மெசேஜை தன் நண்பன் மற்றும் மயில் இருவருக்கும் அனுப்பி வைத்துவிட்டு அங்கிருந்தவரிடம் பைக்கை பெற்றுக் கொண்டு பொண்ணுத்தாயின் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். 

 வீடு வந்து சேர்ந்த தர்மன் கதவை திறக்க போக கதவு உள் தாழிட்டு இருப்பதை கவனித்தவன் ‘இந்த நாய் அதுக்குள்ள வீட்டுக்குள்ள வந்துட்டான் போலயே…!’ என்று நினைத்தவன் அந்த கதவினை உடைத்து திறந்தான்.

 அறைக்குள் இருந்த மலர்விழி அந்த கொடிய மிருகத்திடம் போராடிக் கொண்டிருந்தவளுக்கு அறை கதவு திறக்கும் சத்தம் கேட்டு நிம்மதி பெருமூச்சு விட்டவள், தன் முழு பலம் கொண்டு அந்த மனித மிருகத்தை தள்ளி விட்டாள்.

 அறைக்குள் நுழைந்த தர்மன் அங்கு மேல் சட்டை இல்லாமல் நின்றிருந்த செல்வத்தை பார்த்தவன் அவனின் மீது பாய்ந்து அவனை கீழே தள்ளி அவன் மேல் அமர்ந்து தனது ஆத்திரத்தை இறக்கும் மட்டும் அவனின் மோவாயில் மாறி மாறி குத்தி கொண்டே இருந்தான். 

செல்வத்தின் முகத்தில் இருந்து ரத்தங்கள் வழிந்து ஓடியது. இருப்பினும் கட்டுப்படுத்த முடியாது ஆத்திரத்தில் தன் நண்பனின் வாழ்க்கையில் இத்தனை நாட்கள் நிம்மதியை கெடுத்தது…, அவன் தந்தை இறந்தது.., அதுமட்டுமல்லாமல் அவனின் மனைவியை தன் தங்கையாக நினைக்கும் ஒருத்தியின் மீது கை வைக்க நினைக்க துணிந்த அவனை கொன்றுவிடும் ஆத்திரத்தில் அடித்துக் கொண்டிருந்தான் தர்மன். 

 ஒரு கட்டத்தில் அவனின் அடியை தாங்க முடியாத செல்வம் அந்த நேரத்திலும் தந்திரமாக யோசித்தவன் தான் இடுப்பில் சொருகி வைத்திருந்த கத்தியை எடுத்து தர்மனின் வயிற்றில் குத்தினான். 

 செல்வத்தை வெறிகொண்டு அடித்ததனால் அவன் முதலில் குத்தியது தர்மனுக்கு உரைக்கவில்லை. 

 அவன் மீண்டும் மீண்டும் இரண்டு மூன்று முறைக்கு மேல் குத்திய பின் தான் அதன் வலியும் வேதனையும் அவனுக்கு உரைக்கவே, இரத்தம் பீறிட்டு வந்த தனது வயிற்றில் கையை வைத்துக்கொண்டு அவன் மேலிருந்து பொறுமையாக எழுந்தான்.

 அதனைப் பார்த்து பதறிய மலர்விழியோ “ஐயோ அண்ணே என்னண்ணே ஆச்சு…? ஐயய்யோ கத்தியால குத்திட்டானே…! இந்த படுபாவி பய…!” என்று அலறியவள் தர்மனின் அருகில் வந்து அவனின் வயிற்றில் இருந்த காயத்தை பார்த்தவளுக்கு தாங்க முடியாமல் கண்களில் கண்ணீர் பெறுகியது.

 “ஐயோ அண்ணன் எனக்காக வந்து இப்படி உங்களுக்கு காயமா ஆயிடுச்சே அண்ணே…!” என்று கேட்டவளுக்கு அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கும் திறன் செயல்படவில்லை.

அந்த நேரம் புயல் என வீட்டிற்குள் நுழைந்து இருந்தான் அய்யனார். 

 மயிலுக்கு தர்மன் தகவல் தெரிவித்ததும் அந்த செய்தியை வேலைக்கு செல்லாமல் ஆத்திரத்தில் வீட்டில் இருந்த தனது அண்ணனிடம் அதனை ப்ளே செய்து காட்டினால் மயில்.

அதனை கேட்ட அய்யனாருக்கு செல்வத்திற்கு இத்தனை நாட்கள் தான் உண்மையாக இருந்ததற்கு அவன் தன்னை நினைத்த விதத்தையும், அவன் தன் குடும்பத்திற்காக செய்த துரோகங்களையும் நினைத்தவனுக்கு கட்டுக்கடங்காத ஆத்திரம் வந்தது.

அவன் கடைசியாக கூறிய நான் இப்போ அந்த பொண்ணுத்தாயி வீட்டுக்கு போயி அங்கு இருக்கிற மலர கடத்தி வந்து உங்க கிட்ட குடுத்துடுறேன்…!” என்று கூறிய வார்த்தையை கேட்டவன்…

இப்பொழுது அவன் அங்கு தான் இருப்பான் என்று எண்ணியே பொண்ணுத்தாயின் வீட்டிற்கு வந்திருந்தான் அய்யனார். 

 முழு ஆத்திரத்தையும் ஒன்று திரட்டி உள்ளே வந்திருந்த அய்யனார் கண்ணில் பட்டது அழுது கொண்டிருந்த மலர்விழியும், வேதனையில் துடித்துக் கொண்டிருந்த தர்மனும் கையில் கத்தியுடன் முகம் முழுவதும் ரத்தத்துடன் திமிராக அமர்ந்திருந்த செல்வமும் தான். 

 மலர்விழியோ அய்யனாரை பார்த்ததும் “அண்ணே….! அண்ணே…! காப்பாத்துங்க அண்ணே…! தர்மன் அண்ணன இந்த படுபாவி கத்தியால குத்திட்டாண்ணே….!’என்று தன் முன்பு இருந்த அய்யனாரிடம் கைகூப்பி உதவி வேண்டினால் மலர்விழி. 

 என்னதான் அய்யனாருக்கும் கருப்பன், தருமன் மூவருக்கும் இடையில் பனிப்போர் நிகழ்ந்து கொண்டே இருந்தாலும் கூட, மயில் தருமனை விரும்புகிறேன் என்று கூறியதிலிருந்து தர்மனின் மீது சிறு பரிவு தோன்றவே செய்தது.

தர்மன் இப்பொழுது குத்துப்பட்டு கிடப்பதை பார்த்தவன் என்ன செய்வது என்று தெரியாமல் ஏற்கனவே செல்வத்தின் மீது இருந்த ஆத்திரமும், துரோகத்தின் உச்சமும், அதனால் தன் அத்தை மகனுக்கு தான் செய்த பாவச்செயலும் என பல விஷயங்கள் அய்யனாரின் கண் முன்னே வந்து செல்ல நொடியும் தாமதிக்காது அந்த அறைக்குள் விரைந்தவன் செல்வத்தின் கையில் இருந்த கத்தியை கேட்டான். 

 அதனைப் பார்த்து செல்வமோ…

“நீ தான் சரியான ஆளு அய்யனாரு… வா வந்து அரையும் கொறையுமா இழுத்துட்டு இருக்க அந்த உசுர மொத்தமா முடிச்சு விட்டுரு…!” என்று கூறினான்.

 செல்வம் கூறி முடித்த உடனே “கண்டிப்பா முடிச்சு விடுறேன்…! அதுக்கு தான் நான் வந்து இருக்கேன்…!” என்ற அய்யனார் 

“செல்வம் கையில் இருந்த கத்தியை குடு…!” என்று கேட்டான்.

செல்வமும் பாவம் அவன் தர்மனைத் தான் முடிச்சு விடப்போகிறான் என்று எண்ணியவன் முகம் கொள்ளா புன்னகையோடு மனம் நிறைவான ஆனந்தத்தோடும் கத்தியை அய்யனாரின் கையில் கொடுத்தான்.

கருப்பன் வேட்டை தொடரும்…

💝கருப்பனின் காரிகையவள்💝💝💝

ப்ளீஸ் கமெண்ட் 🙏🏻

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!