Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

28. இதழ்யா இசை - கருப்பனின் காரிகையவள்

கருப்பனின் காரிகையவள் 💝 37

கருப்பன் ஆட்டம் 37

 மருத்துவமனையில் அனைவரும் தர்மன் அனுமதிக்கப்பட்டிருந்த அறையை பலவித வேண்டுதல்களோடு அழுகையும் கண்ணீருமாக வெறித்து பார்த்துக் கொண்டிருந்தனர். 



Advertisement

 அந்த அறையில் இருந்து வெளியில் வந்த மருத்துவர் “இப்போ அவரு அபாய கடத்த தாண்டிட்டாரு…, ஆனா மயக்கத்துல இருக்காரு…!”என்றார்.

Advertisement

அவர் கூறிய அந்த வார்த்தை அங்கு இருந்த அனைவரின் வயிற்றிலும் பாலை வார்த்தது போல் இருந்தது. 

Advertisement

 கருப்பனின் நிலையை சொல்லவே வேண்டாம்…, இத்தனை நேரம் ஆடியோவில் கேட்ட விஷயத்தை நினைத்து பார்த்தவன் தன் தங்கை மீது எந்த ஒரு தவறும் இல்லை என்றும், நடந்த அனைத்து விஷயத்துக்கும் காரணம் செல்வம் தான் என்றும், தன் தந்தையின் இறப்பிற்கு காரணம் கூட அவன் தான் என்றும், மலர் தன் மீது வைத்த காதல் உண்மை என்றும், நாம் தான் கோபத்தில் அவசரப்பட்டு மலரை திட்டி வீட்டை விட்டு போக சொல்லி விட்டோம் என்றும்…! 

Advertisement

இதுவே மலர் தன் அம்மாவின் வீட்டில் இல்லாமல் தோட்டத்து வீட்டில் தன்னுடன் இருந்திருந்தால் அந்த செல்வம் இவளை நெருங்க தான் நினைத்து இருப்பானா…? இல்லை இவளை காப்பதற்கு சென்ற தர்மனுக்கு தான் இந்த நிலை வந்திருக்குமா…? இல்லை அய்யனார் தான் ஜெயிலுக்கு சென்றிருப்பானா…? இப்பொழுது தர்மனின் அம்மாவிடம் இத்தனை பேச்சும் வாங்கியிருப்பாளா…? அனைத்திற்கும் காரணம் செல்வம் என்று அவனை மட்டும் குறை கூறி விட முடியாதே…! தன் பாதுகாப்பில் இருக்க வேண்டியவளுக்கு நான் நல்ல கணவனாக நடக்காதிருப்பதே முதல் முக்கியம் காரணம்…!” என்று நினைத்து ஒரு இடத்தை வெறித்து பார்த்துக் கொண்டிருந்த கருப்பன் அந்த மருத்துவர் கூறிய செய்தி கேட்டவனுக்கு கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கன்னத்தை தொட்டது. 

 அடுத்தடுத்து ஒரு மணி நேரம் கடந்து இருந்த நிலையில் அறையில் இருந்து வெளியில் வந்த மருத்துவர் “இப்போ தர்மன் கண்ணுமுழுச்சிட்டாரு.., யாராவது பாக்கணுமா போய் பாருங்க…!” என்று கூறினார்.

 தர்மனின் அம்மா முத்துலட்சுமியும் மயிலும் அறைக்குள் நுழைந்து தர்மனிடம் பேசிவிட்டு வந்தனர். அதன் பின் அமுதா, மலர், பொண்ணுத்தாயி மற்றும் அங்கிருந்த சில பெண்களும் சென்று தர்மனிடம் பேசினர்.

மலர்விழி தன்னை காப்பாற்றியதற்கு கை கூப்பி தர்மனுக்கு நன்றி தெரிவித்தவள் கண்ணீரால் அவனின் கையை நனைத்து இருந்தாள்.

அறைக்குள் இருந்த அனைத்து பெண்களும் வெளியே வந்து விட்டனர். கருப்பன் மட்டும் தான் நின்ற இடத்தில் இருந்து நகரவே இல்லை.

அவனின் அந்த நிலையை பார்த்த மலர்விழியோ அவனின் அருகில் சென்றவள் “மாமா…! ஏன் மாமா அப்படியே நிக்கிறீங்க…? உங்களுக்கு அண்ணன போய் பாக்கணும் தோணலையா ? என் மானத்தை தகுந்த நேரத்துல காப்பாத்தி குடுத்தவரு மாமா அவரு…,” என்று மேலும் அவள் பேச வர தீர்க்கமான ஒரு பார்வையினால் அவளை அடக்கினான் கருப்பன். அதற்குமேல் மலர்விழி எதுவும் பேசவில்லை. 

 அனைத்து பெண்களும் கடமை முடிந்ததும் மருத்துவமனையில் இருந்து கிளம்பினர். கருப்பன் பொறுமையாக தர்மனின் அறைக்குள் நுழைந்தான். 

அங்கே உடலில் பலவித மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டிருக்க, தனது இமைகளை மூடி படுத்திருந்தான் தர்மன்.

 அவனின் அருகில் சென்ற கருப்பன் அவனின் பாதத்தை எடுத்து தனது மார்பிற்குள் வைத்து அணைத்துக் கொண்டான். 

 தன் நண்பனின் அந்த திடீர் செயலில் அதிர்ந்த தர்மன் வெளிவராத குரலில் “ஏய் கதிரு என்ன வேலை பாக்குற…! முதல்ல கால விடுடா…!” என்றான். 

“நீ எனக்காக பண்ணுன விஷயத்துக்கு உன் காலடியிலயே வருஷம் பூராவும் விழுந்து கிடந்தாலும் பத்தாதுடா மச்சான்…!” என்றான் கருப்பன்.

“எந்திரிச்சு வந்தேன்னு வையி கன்னங்கண்ணம்மா அப்பி, எனக்கு பதிலா உன்ன இங்க படுக்க வச்சுப்புடுவேன்…! என்னடா பேச்சு பேசுற…!” என்றான் தர்மன். 

“இருந்தாலும்டா அந்த நிலைமையில நீ அங்க அப்பிடி …அய்யனாரு உன்ன…” என்று கருப்பன் தடுமாறினான்.

“டேய் மச்சான் எனக்கு ஒன்னும் இல்லடா.., நான் சீக்கிரம் சரியாகி வந்துடுவேன். நீ இந்த மாதிரி எல்லாம் பண்ணாத.., இது உனக்கு செட் ஆகல…!”என்றான் தர்மன்.

 அதனை கேட்ட கருப்பன் பாய்ந்து சென்று தர்மனை அணைத்து கொண்டான். 

கருப்பனின் அந்த இறுகிய அணைப்பே கூறியது தர்மனின் நிலைய எண்ணி கருப்பன் பட்ட வேதனை எந்த அளவு இருந்தது என்று….!

 “டேய் மச்சான் போதுண்டா…, இப்பதான் செத்துப் பொழச்சு வந்து இருக்கேன்…, உன் பாசத்தை காட்றேன்னு என்ன கட்டிப்புடிச்சு ஒரே அடியா என்ன கொன்றாதடா…! இத்தனை மாசத்துக்கு பொறவு மயிலு வேற இப்பதான் என்கிட்ட காதலை சொல்லி இருக்கா…,நானும் உன்ன மாதிரி ரொம்ப வருஷம் வாழணும்டா…!” என்றான் தர்மன்.

 அவனின் பேச்சில் அவனிடமிருந்து பிரிந்த கருப்பன் வேறு புறம் திரும்பி தன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டவன் புன்னகை முகமாக “இப்போ வலி எதுவும் இருக்கா…?” என்று கேட்டான். 

 “அந்த நாயி குத்துன இடத்தை விட, இந்த பேய் கட்டி புடிச்ச இடம் தாண்டா ரொம்ப வலிக்குது…! பாவம்டா என் தங்கச்சி…!”என்று தர்மன் கூறினான்.

அதற்கு கருப்பனோ “யாரு நானு பேயாடா…?” என்றான்.

“சின்ன திருத்தம், நீ பேய் இல்ல பேய்க்கும் மேலடா….! பின்ன கருப்பன்னா சும்மாவா…!” என்றான் தர்மன்.

 “உனக்கு வயித்துல குத்துனது மட்டும் இல்லாம, வாயிலயும் நாலு இறக்கு இறக்கி இருக்கணும்டா அப்பதான் உன் வாய் கொழுப்பு கொஞ்சம் அடங்கி இருக்கும்…!” என்றான் கருப்பன்.

“அடப்பாவிப் பயலே…!விட்டா நீயே அந்த நாய்க்கு எடுத்து குடுத்துருப்ப போலயே…! ஆமா… அய்யனாரு எங்கடா…?” என்றான்.

“அவன போலீஸ் புடிச்சிட்டு போயிருச்சு டா…!”என்றான் கருப்பன்.

“டேய் மச்சான் அய்யனாரு மட்டும் சரியான நேரத்துக்கு வரலைன்னா இந்நேரம் நான் உசுரு பொழச்சுருக்கவே மாட்டேன்டா…!”என்று கூறினான் தர்மன்.

 “எனக்கும் தெரியும் மச்சான் அவன் உன்னைய தோள்ல போட்டு தூக்கிட்டு வரும்போதே நான் பாத்துட்டேன். அப்புறம் அவன் அந்த நாய் கிட்ட பேசுனதையும் நான் கேட்டேன். உண்மையிலேயே அவன் தான் செஞ்சு தப்ப நினைச்சு வருந்திட்டாண்டா. ஆனால் அவனுக்கு இந்த ஜெயில் தண்டனை கெடச்சிருக்க கூடாதுடா….! என்று கூறினான் கருப்பன்.

 “ஆனா மச்சான்….! அவனே போயி உண்மையெல்லாம் சொல்லி போலீஸ் கிட்ட ஆஜர் ஆனதுனால நம்ம என்ன பண்ணாலும் அவன வெளிய கொண்டு வர முடியாதுல்லடா..?”

“ஆமா இப்போதைக்கு அவன வெளியே கொண்டு வர முடியாது. ஆனால் அவனுக்கு தண்டனை காலம் கொறஞ்சு கூடிய சீக்கிரம் வெளிய வந்துருவான்…!” 

 “நம்மளும் யெடயெடையில முயற்சி பண்ணனும் மச்சான்…!’ என்றான் தர்மன்.

 அதனை கேட்ட கருப்பனோ “ஆமாண்டா அமுதா அத்த தான் பாவம், பொட்ட புள்ளய வேற கையில வச்சிருக்கு ரொம்ப சிரமப்படும்” என்றான்.

 அதனை கேட்டு தர்மனோ “அதுக்கு ஏன் மச்சான் நீ கவலைப் படுற…! என் பொண்டாட்டிய நான் சீக்கிரமே கல்யாணம் பண்ணிட்டு கூட்டிட்டு வந்துருவேன். அப்புறம் உன் அத்தை என் மாமியாராயிடும். அப்புறம் நான் என் மயில கையில வச்சு தங்கம் மாதிரி பாத்துக்க போறேன். அப்புறம் என்ன மச்சான் உனக்கு கவலை…!”என்றான் தர்மன்.

 “இருந்தாலும் அய்யனாருக்கு வாழ வேண்டிய வயசு, இன்ன வரைக்கும் கல்யாணம் கூட பண்ணிக்கல., அதை நெனைச்சு அத்தை கவலை படுமில்ல…!”

“அதை விடு மச்சான் நம்ம ஊர்ல எவ்வளவோ புள்ளைக இருக்கு அதுல ஒரு புள்ளைய புடிச்சு அய்யனாருக்கு கல்யாணம் முடிச்சுருவோம்….!”என்றான் தர்மன்.

“கண்டிப்பா அவனுக்கு தகுந்த வாழ்க்கைய நம்ம தான் அமச்சு கொடுக்கணும்…! இத்தன வருஷம் நான் எல்லா பலியையும் தூக்கி மீனா மேல போட்டுட்டேன்.

ஆனா அது எவ்வளவு பெரிய தப்புன்னு நான் புரிஞ்சுட்டேன் மச்சான். அந்த செல்வம் நாய் பண்ண வேலையால என் குடும்பமே நிலை கொலஞ்சு போச்சு அந்த செல்வத்தை நானே என் கையால கொன்றுந்தா எனக்கு முழு திருப்தியா இருந்துருக்கும்.

ஆனால் என் மேல விழவேண்டிய பலிய அவன் ஏத்துக்கிட்டு ஜெயிலுக்கு போயிட்டான்டா…!” என்று மேலும் அய்யனாரை நினைத்தே வருந்தினான் கருப்பன்.

 நாட்கள் அதன் போக்கில் கழிந்தது. தர்மன் குணமாகி மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்து இன்றோடு இரண்டு வார காலம் கடந்து விட்டது. தர்மனின் காயமும் நன்றாக குணமாகி விட்டது 

 கருப்பனுக்கும் மலர்விழியின் மீது இருந்த கோபம் நன்றாகவே குறைந்து இருந்தது.

 அவள் தன் மாமியார் வீட்டில் இருந்தே தன் கணவனுக்கு வேண்டிய உணவினை தயார் செய்து தன் அத்தையிடம் குடுத்து விடுவாள்.

 அது தன் மனைவியின் கை பக்குவமான உணவு என்று தெரிந்தும் கூட அதனை தவிர்க்காமல் சாப்பிட்டுக்கொள்வான் கருப்பன்.

என்ன தான் அவள் மேலிருந்த கோபம் வடிந்து இருந்தாலும் தானாக சென்று பேசுவதற்கு கருப்பனுக்கு மனம் தடுத்தது.

 ஒரு நாள் முத்துலட்சுமி அமுதாவிடம் சென்று மயிலை தர்மனுக்கு பெண் கேட்டார். அமுதாவும் தன் மகளின் பிடிவாத குணம் தெரிந்ததால் தான் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால் அவளே தர்மனை திருமணம் செய்து கொண்டு வருவாள் என்பதை நன்கு அறிந்தவராக முத்துலட்சுமி கேட்டதும் சம்மதம் தெரிவித்து விட்டார். 

 இருவீட்டார் சம்மதத்துடன் தர்மன் மற்றும் மயிலின் திருமணம் நிச்சயக்கப்பட்டது. 

 அப்படிப்பட்ட ஒரு நாளில் தர்மன் மலர்விழியை அழைத்துக்கொண்டு தோட்டத்து வீட்டிற்கு வந்திருந்தான். 

 கருப்பன் தனது வீட்டில் அமர்ந்து கணக்கு வழக்குகளை பார்த்துக் கொண்டிருந்த நேரம், முன்னே தர்மன் வருவதையும் அவன் பின்னால் தன் மனைவி வருவதையும் பார்த்த கருப்பன் முறுக்கி கொண்டு எழுந்து வெளியில் செல்ல இருந்த நேரம் கருப்பனை அழைத்து தடுத்து நிறுத்தினான் தர்மன். 

“என்ன மச்சான் உன் கிட்ட பேசணும்னு நானும் என் தங்கச்சி வந்து இருக்கோம். இப்படி ஒன்னும் பேசாம நீ பாட்டுக்கு போயிட்டு இருக்குற…?” என்றான். 

 “என்ன பேசணும்…!” என்று தர்மன் மற்றும் மலரின் புறம் திரும்பியும் பார்க்காமல் கேள்வி கேட்டான் கருப்பன். 

 “அது ஒன்னும் இல்ல மச்சான்…, இன்னும் ஒரு வாரத்துல எனக்கும் உன் அத்தை மக மயிலுக்கும் கல்யாணம். அதுக்கு தான் உனக்கும் உன் சம்சாரத்துக்கும் சேத்தாப்புல பத்திரிக்கையவும் வச்சிட்டு உங்களுக்கு வேண்டிய துணி மணி எடுக்கறதுக்கு காசும் குடுத்துட்டு போலாம்னு வந்தேன்…!” என்றான் தர்மன்.

 அவன் பேச்சில் திரும்பி அவனை அழுத்தமாக பார்த்தான் கருப்பன்.

“என்ன பாக்காதடா உன் சட்டை அளவு எனக்கு சரியா தெரியாது…, அப்பறம் தங்கச்சிக்கும் புடிச்ச மாதிரி சேலை எடுக்கணும்னு ஆசைப்படும்ல.., அதான் அந்த புள்ளய நீயே டவுனுக்கு கூட்டிட்டு போய் வேணுங்கறத வாங்கி குடுத்து கூட்டிட்டு வா…!” என்றான் தர்மன். 

 “அவளுக்கு வேணும்னா அவ போய் வாங்கிட்டு போறா. அத ஏன் என்கிட்ட சொல்ற…?”

“அட அண்ணே நீங்க பத்திரிக்கை குடுங்க, இந்த ஆளு இப்படித்தான் எப்ப பாத்தாலும் முறுக்கிக்கிட்டே திரிவாரு…!” என்றவள் கருப்பனின் அருகில் சென்று நின்றாள். சிரித்த முகமாக இருவரின் கையிலும் பத்திரிகையை குடுத்தான் தர்மன். 

 அதனை மறுக்காமல் பெற்றுக் கொண்டான் கருப்பன். 

 “அப்புறம் அண்ணே…!டீ போட்டு தரவா…?” என்று மலர் கேட்க, 

“இல்லத்தா அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்….!”என்றான் தர்மன் 

“வந்த வேலை முடிஞ்சுதா..?”என்று மலர்விழி கேட்க,

“ஆங் முடிஞ்சிடுச்சுத்தா போலாமா…?” என்றான் தர்மன்.

“நீங்க கிளம்புறதுன்னா கிளம்புங்கண்ணே..,உங்களுக்கு கல்யாண சோலி ஆயிரம் இருக்கும். நான் என் வீட்டுக்கு வந்து இருக்கேன் நான் எதுக்கு கிளம்பனும்…?” என்றால் மலர்விழி. 

 அதனை கேட்ட தர்மனோ “சரித்தா நீ நடத்து.., நான் வந்த வேலை முடிஞ்சு போச்சு நான் கிளம்புறேன்…! அப்பறம் நீ சொன்ன மாதிரியே எனக்கும் ஆயிரம் சோலி இருக்கு…” என்ற தர்மன் ஓரக்கண்ணால் கருப்பனை பார்த்து விட்டு அங்கிருந்து கிளம்பினான்.

தர்மன் அங்கிருந்து செல்லும் வரையிலும் அமைதியாக நின்றிருந்த கருப்பன் அவன் செல்லவும் “ஏய் இந்தாடி… நீ அவன் கூட தான வந்த, பொறவு அவன் கூடவே போக வேண்டியது தான..! எதுக்கு இப்படி சட்டமா வீட்டுக்குள்ள நிக்கிறவ…!” என்றான் கருப்பன். 

“என் வீட்டுக்குள்ள நான் இருக்கேன், உனக்கு என்னையா வந்துச்சு…!” என்றால் மலர்.

“வாய் ரொம்ப நீளுது…, தாடைய புடுச்சு கிழிச்சு புடுவேன் பாத்துக்க…!” என்றான் கருப்பன்.

“ முடிஞ்சா பண்ணிக்கோ மாமா…!” என்ற மலர்விழி கருப்பனை நெருங்கி அவனை பின்னிருந்தவாறு அணைத்தாள்…..!

 கருப்பன் வேட்டை தொடரும்…

💝கருப்பனின் காரிகையவள்💝💝💝

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!