Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

28. இதழ்யா இசை - கருப்பனின் காரிகையவள்

கருப்பனின் காரிகையவள் 💝 40 (இறுதி அத்தியாயம் )

கருப்பன் ஆட்டம் 40(

இறுதி அத்தியாயம் )



Advertisement

வாசலில் வந்து நின்ற தன் அண்ணனை பார்த்த மயிலுக்கோ ஆச்சர்யம் தாளவில்லை, அவள் தனது இருக்கையில் இருந்து எழுந்து கொள்ள பார்த்தாள்.

அதற்கு அங்கிருந்தவர்களோ சடங்கு முடியும் வரை எழுந்து கொள்ள கூடாது என்று கூறி விடவும், அய்யனாரை கண்கள் நிறைந்த கண்ணீரோடு பார்த்து கொண்டே அமர்த்திருந்தால் தங்கமயில்.

Advertisement

Advertisement

அமுதா தன் மகனை உள்ளே அழைத்து மயிலுக்கு வளையல் போடக் கூறினார்.

 அய்யனாரும் மயிலுக்கு வளையல் பூட்டி விட்டான். தன் அண்ணனையே விழி அகலாது பார்த்திருந்தால் மயில்.

Advertisement

சடங்கு அனைத்தும் முடிந்ததும் அய்யனாரின் அருகில் வந்த மயில் “அண்ணே எப்பிடிண்ணே இருக்க…? உன்ன பாக்கணும்னு நெனச்சுட்டே இருந்தேன்…, நீயே வந்துட்டண்ணே….! 

ஆமா…! கரக்ட்டா இன்னைக்கு எப்பிடி வந்த…? அன்னைக்கு கல்யாணத்துக்கு வந்துட்டு போன மாதிரியே இன்னைக்கும் விசேஷம் முடியவும் கிளம்பிடுவியாண்ணே…!” என்று அவனின் முகத்தையே ஏக்கமாக பார்த்து கேட்டாள். 

அதற்கு அய்யனாரோ “இல்ல மயிலு இதுக்கு அப்பறம் நான் ஜெயிலுக்கு போக வேண்டிய அவசியமில்லை, என்னை அந்த கேஸ்ல இருந்து மொத்தமாவே விடுதலை பண்ணிட்டாங்க….!” என்று கூறினான்.

அதனை கேட்ட மயில் இன்பமாக அதிர்ந்தவள், “என்னண்ணே சொல்ற…? அது எப்புடி….! கொலை கேசுல அதுவும் நீயே செஞ்ச தப்ப ஒத்துக்கிட்டு உள்ள போன கேசுல, முழுசா மூணு வருஷம் தண்டனை இருக்குல்ல அப்பறம் எப்பிடி உனக்கு சீக்கிரம் விடுதல கெடச்சுச்சு….?” என்று கேட்டாள் மயில். 

அதற்கு அமுதாவோ “ஏண்டி என் புள்ளையே இத்தன மாசம் கழுச்சு இப்ப தான் வீட்டுக்கு வந்துருக்கான். இவ ஒருத்தி கேள்வி மேல கேள்வி கேட்டுகிட்டு போடி அங்குட்டு, நீ வாப்பு வந்து வாய்க்கு ருஷியா வயிராற சாப்புடுயா….!” என்று அழைத்தார்.

“இருத்தா அதான் மயிலு கேக்குதுல்ல பதில சொல்லிப்புட்டு வரேன்…, இல்லைன்னா இவ கூட சேந்து உள்ள இருக்குற என் மருமவ புள்ளையும்ல உண்மை தெரியாம தவிச்சு போயிடும்ல்ல….!” என்று நடந்தவற்றை பற்றி கூற ஆரம்பித்தான் அய்யனார்.

அது என்னவென்றால் கருப்பன் தான் ஒரு வக்கீலை பிடித்து அய்யனாரின் மீது குற்றம் இல்லை என்றும் முழு தவறும் கவுன்சிலர் செல்வத்தின் மீது தான் உள்ளது என்றும் நிரூப்பிக்க இத்தனை மாதங்களாக போராடினான்.

அவன் செல்வத்திற்கு எதிராக தன்னிடம் உள்ள, ஒருமுறை கருப்பனிடம் நிலத்தில் கஞ்சா விளைய வைத்து தர கேட்ட வீடியோ பதிவையும், மீனாவிடமும் மலரிடமும் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததையும், ஜல்லிக்கட்டில் வைத்து அய்யனாரின் மூலமாக தன்னை கொலை செய்ய முயற்சித்ததையும் மற்றும் ஊர் மக்களிடம் செல்வத்தை பற்றி தான் திரட்டிய அவனை பற்றிய கேடு கெட்ட தனத்தின் உண்மை கருத்துக்களையும் கோர்ட்டில் சமர்ப்பித்ததான்.

பல மாத விசாரணைக்கு பிறகு அய்யனார் செய்த கொலை செல்வம் ஒரு பெண்ணை பாலியல் சீண்டல் செய்த வேளையில் ஒரு பெண்ணின் மானம் காக்க செய்தது தான் எனவும், அவன் அவ்வாறு செய்தது குற்றமில்லை எனவும், அய்யனாரின் தண்டனை காலம் இதோடு முடிவடைந்ததாகவும் இனி அய்யனாரை விடுதலை செய்வதாக தீர்ப்பு வந்துவிட்டதாகவும் இது எல்லாத்துக்கும் காரணம் கருப்பன் என்றும் கூறினான் அய்யனார்.

அதனை கேட்ட அமுதாவோ “என்னைய்யா சொல்ற….!!! அப்போ இனிமே நீ ஜெயிலுக்கு போக வேண்டிய அவசியம் இல்லையா….! கேக்கும் போதே அவ்வளவு சந்தோசமா இருக்குயா….!

 எல்லாத்துக்கும் காரணம் நம்ம கருப்பன் தானா…! அந்த படுபாவி செல்வம் பண்ண வேலைக்கு நீ ஜெயில்ல இருக்கன்னு நெனச்சு நான் தவிச்சுட்டு இருந்தேன்யா…! 

கருப்பன் புண்ணியத்துல என்கிட்டோ நீ விடுதலையாகி வந்துட்ட இது போதும்யா எனக்கு, அந்த கருப்பன் ஆயிசுக்கும் புள்ள குட்டி குடும்பம்னு சந்தோமாயிருக்கனும்…!” என்று மனதார வாழ்த்தினார் அமுதா.

அடுத்தடுத்த நாட்களில் மலர்விழிக்கு ஒன்பதாவது மாத வளைகாப்பு நடத்தப்பட்டது. தேவியும் நடேசனும் ராகுலும் எவ்வளவு கூறியும் என் மருமகளை நான் எங்கயும் அனுப்ப மாட்டேன் என்றும் நானே உடன் இருந்து பேரு காலம் பார்த்து கொள்வதாகவும் கூறிவிட்டார் பொண்ணுத்தாயி.

கருப்பனை விட்டு பிரிய மனமில்லாமல் இருந்த மலர்விழிக்கும் அதுவே விருப்பமாக இருந்ததால் மலர்விழியின் குடும்பத்தினர் அவளை இங்கயே விட்டு விட்டு சென்றனர்.

இதற்கிடையில் கவுன்சிலராக இருந்த செல்வம் இறந்து விட்டதால் அந்த கிராமத்திற்கு அடுத்த கவுன்சிலர் யார் என்கிற இடை தேர்தலும் வந்தது.

அந்த தேர்தலில் ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து சுயேச்சையாக கருப்பனை வெற்றி பெற செய்தனர்.

அய்யனாருக்கு அந்த ஊரிலேயே மஹாலெஷ்மி என்கிற ஒரு பெண்ணை பார்த்து அடுத்த சில வாரங்களில் திருமணம் என்றும் பெரியோர்களால் நிச்சயிக்க பட்டிருந்தனர்.

அன்றொரு நாள் கருப்பன் ஒரு கவுன்சிலராக ஊர் மக்களின் நெல் விளைச்சலை பாதுகாப்பாக வைக்க வேண்டிய இருப்பிட வசதி போதவில்லையென்ற விவசாயிகளின் புகாரை எடுத்து கொண்டு அதற்குரிய அமைச்சரை பார்க்க சென்னைக்கு சென்றிருந்தான்.

தர்மனும் அய்யனாரும் கல்யாண வேலையாக மண்டபத்திற்கு சென்றிருக்க, அமுதா மயில் அனைவரும் திருமண பட்டு எடுக்கும் விஷயமாக சென்றிருந்தனர்.

மாட்டேன் என்று பொண்ணுத்தாயி எவ்வளவு மறுத்தும் அவரையும் அழைத்துக் கொண்டு சென்றனர்.

மலர்விழியும் கூட பிரசவத்திற்கு இன்னும் ஒரு வாரத்திற்கு மேல் இருப்பதால் தான் கவனமாக இருந்து கொள்வதாக கூறி தன் மாமியாரை அனுப்பி வைத்தாள்.

ஆனால் மருத்துவர் குறிக்கின்ற நேரத்தில் மட்டும் தான் அனைத்து பிரசவமும் நிகழ்கிறதா…? இல்லையே…! சில குழந்தைகள் பிரசவ தேதிக்கு முன்பாகவே பிறந்துவிடும் அல்லவா….! அதைப்போல கருப்பனின் பிள்ளையும் முந்திக் கொண்டு இவ்வுலகை பார்க்க நினைத்ததால், யாருமில்லாமல் தன் வீட்டில் உறங்கி கொண்டிருந்த மலர்விழிக்கு வயிற்று வலி எடுக்க ஆரம்பித்தது.

உறக்கம் விழித்து மலர்விழி தன் புடவை நனைந்து இருப்பதை பார்த்து அதிர்ந்தாள்.

ஆம்..! பனிக்குடம் உடைந்து இருந்தது.பின் தன்னை சுதாரித்து கொண்ட மலர்விழி பக்கத்து வீட்டில் இருந்த பெண்ணை துணைக்கு அழைத்து கொண்டு ஒரு ஆட்டோவை பிடித்து மதுரையில் உள்ள தான் மாதாமாதம் செக்கப் வரும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தாள்.

அவளை பிரசவ வார்ட்டில் சேர்த்த பிறகு அந்த பெண் பொண்ணுத்தாயிக்கு தகவல் தெரிவித்தார். அதனை கேட்டு பதறிய பொண்ணுத்தாயி உடனடியாக அந்த மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்.

அங்கிருந்த பெண்ணிடம் என்னவாயிற்று என்று விவரம் கேட்க,

நடந்தவற்றை கூறினார் அந்த பெண்.

அதனை கேட்ட பொண்ணுத்தாயோ “ஐயயோ பனிக்குடம் உடைஞ்சு இருக்கே…! இப்பிடி பட்ட நேரத்துல என் மருமகளை தனியா விட்டுபுட்டு போயிட்டேனே…! இந்த விஷயம் கதிருக்கு தெரிஞ்சா என்னைய கொண்டே புடுவானே…! நான் என்ன பண்ணுவேன்…! 

ஆத்தா தாயே முத்துமாரி மடபுரத்து காளி…, என் மருமகளுக்கும் என்னோட பேரன்பேத்திக்கும் எந்த ஒரு பாதகமும் இல்லாம ரெண்டு பேரும் ஆரோக்கியமா இருக்கணும்….!”என்று கடவுளை மனமுருக வேண்டினார்.

அதன்பின் கருப்பனுக்கும் தகவல் சென்று சேர்ந்திருந்தது. ஏற்கனவே கருப்பன் சென்னையில் இருந்து விமானத்தில் கிளம்பி இருந்ததால் அடுத்த ஒரு மணி நேரத்தில மருத்துவ மனைக்கு வந்து சேர்ந்திருந்தான்.

அறையினுள் மலர்விழி வலியில் துடித்து கொண்டிருந்தாள். அவளின் அந்த சத்தத்தை வெளியில் இருந்து கேட்ட கருப்பனுக்கு இப்பொழுதே உள்ளே சென்று அவளை பார்க்க வேண்டும் போல் இருக்கவே, அந்த அறையின் வாசலில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான்.

தர்மன் அவனுக்கு தைரியம் கூறி தேற்றினான். இருப்பினும் கருப்பனால் மலரின் கதறல் சத்தத்தை கேட்க முடியாமல் அவள் படும் வேதனையை உணர்ந்து கண்களில் கண்ணீர் கலங்க தவித்து கொண்டிருந்தான்.

அடுத்த சில நிமிடங்களில் மலரின் பலத்த கதறல் சத்ததோடு சேர்த்து ஒரு சின்ன மழலையின் அழுகை சத்தமும் அந்த இடத்தை நிறைத்தது.

அதனை கேட்டு பதட்டத்தில் உச்சத்தில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்த கருப்பனின் கால்கள் அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் தடை பட்டு நின்றது. கண்களில் திரண்டிருந்த கண்ணீர் அவனின் கன்னத்தை நனைத்தது.

அனைவரும் ஆவலுடன் அறைக்கதவை பார்த்திருக்க, வெள்ளை பூந்துவாலையில் சுற்றப்பட்ட கருப்பனின் ஆசை புதல்வனை கொண்டு வந்து கருப்பனின் முன்பு நீட்டினார் பெண் மருத்துவர்.

அந்த குழந்தையை, அழகிய மொட்டை, இளஞ்சிவப்பு நிறத்தில் அழகிய குட்டி குட்டி விரல்களுடன் உதட்டை குவித்து குட்டி இமைக்குள் உள்ள சின்ன கருவிழிகளை உருட்டி கருப்பனை பார்த்தான் கருப்பன் மலர்விழியின் காதலின் அடையாளமான கருப்பனின் புத்திரன்.

தன்னுடைய இரும்பு கைகள் நடுங்க தன் மகனை ஆசையோடு வாங்கி கொண்ட கருப்பன் அவனின் முகத்தை ஒரு வித நிறைவோடும் பூரிப்போடும் பார்த்தவன் நிமிர்ந்து மருத்துவரை பார்த்து “டாக்டர் மலர் எப்படி இருக்கா…?” என்று கேட்டான்.

“அவங்க கொஞ்சம் மயக்கத்துல இருக்காங்க…!” என்று மருத்துவர் கூறவும், 

“இப்போ நான் அவள பாக்கணும். அவ மயக்கத்துல இருந்தாலும் பரவால்ல, அவளை தொந்தரவு பண்ணாம பாத்துட்டு வந்துட்றேனே….!” என்று கருப்பன் கேட்டான்.

அதற்கு மருத்துவர் அனுமதிக்கவும், தன் மகனை தன் தாயிடம் குடுத்து விட்டு அறைக்குள் சென்று மயக்கத்தில் இருக்கும் மலரின் முகம் பார்த்தவன் அவளின் நெற்றியில் காதலோடு ஒற்றை இதழ் பதித்தான்.

அவனின் மூச்சு காற்றில் கண் விழித்த மலர்விழி “மாமா நமக்கு பையன் பொறந்துருக்கான் மாமா….! நான் பாத்தேன்.., அப்பிடியே உங்களை மாதிரியே அவ்ளோ அழகா இருந்தான் மாமா…, நீங்க பாத்திங்களா….!” என்று கேட்டாள்.

அதற்கு கருப்பனோ “பாத்தேன்டி…., நீ தான் ரொம்ப கஷ்ட்ட பட்டுட்டல்ல…!” என்று அவள் வலியில் துடித்த கதறல் சத்தத்தை வைத்தே உணர்ந்து கேட்டான்.

“கொஞ்சம் வலி இருந்துச்சு தான்.., ஆனா பரவாயில்லை….! எல்லாம் நம்ம பையனுக்காக தான…., அப்பறம் இதுக்கே ஃபீல் பண்ணா எப்பிடி…., உங்க கணக்கு படி இன்னும் ஒன்போது புள்ளங்க பாக்கி இருக்குல்ல….!”என்று கண்ணடித்து கூறினாள் மலர்விழி.

“உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லைன்னா 9 என்ன 19 புள்ளய கூட உனக்கு குடுக்க நான் ரெடி….!” என்று தன் மீசையை முறுக்கி கொண்டு கூறியவன் அவளின் இதழ் நோக்கி குனிந்தான் கருப்பன்.

அந்த நேரம் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த தர்மன்…, 

“டே…டேய்…உன் புள்ளைக்கு பசிக்குதாம்…, கத்தி ஆஸ்பத்திரியவே அலற உடுறான்…., இவனுக்கு முதல்ல பால குடுத்து பசியமத்திட்டு இவன் சத்தத்தை கொறைங்கடா….. புள்ள பெத்து ஒரு மணி நேரம் கூட ஆகல அதுக்குள்ள அடுத்த புள்ளய பெத்துக்க ப்ளான் போட ஆரம்பிச்சுட்டீங்க…! என்று கூறி குழந்தையை மலரிடம் குடுத்தான் தர்மன்.

மலர் தர்மன் கையில் இருந்து குட்டி கருப்பனை வாங்கும் முன் தர்மன் முகத்தில் தீர்த்தத்தை தெளித்திருந்தான் கருப்பன் மலர்விழியின் புதல்வன்.

அதனை பார்த்த மலர்விழி “ஐயோ அண்ணே…! உங்க மேல ஒன்னுக்கு ஊத்திட்டானே….!” என்று பதறி கூறினாள்.

அதற்கு கருப்பனோ “தேவயில்லாம அவன பத்தி கொறை சொன்னான்ல அதுக்கு தான் இந்த பதில், இது இவனுக்கு தேவை தான்….!” என்றான்.

கருப்பன் கூறியதை கேட்ட தர்மனோ “அடப்பாவி உன் புள்ள பசியில அழுவுறான்னு கொண்டு வந்து குடுத்தது ஒரு குத்தமாடா…!” என்று கேட்டான்.

“சும்மா உள்ளுலாய்க்கு…., வாடா….!” என்று கூறியவன் தர்மனின் தோளில் கை போட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

அதற்கு தர்மனோ “நீ சொன்னாலும் சொல்லாட்டியும் உன் புள்ளையோட மூத்தரம் என் மேல பட நான் புண்ணியம் தாண்டா பண்ணி இருக்கணும்….!” என்றான்.

நண்பர்களின் இந்த பேச்சை கேட்ட மலர்விழிக்கு உள்ளம் நெகிழ்ந்து போக தன் குழந்தைக்கு தாயமுதை புகட்டினாள்.

அடுத்த இரு வாரங்கள் அதன் போக்கில் கடக்க இன்று அய்யனாருக்கும் மஹாலெஷ்மிக்கும் திருமண வைப்போக நிகழ்வு.

ஊர் உறவுகளின் முன்பு மஹாலெஷ்மியின் கழுத்தில் மங்கள நாணை பூட்டி தன் மனைவியாக்கி கொண்டான் அய்யனார்.

அடுத்த மூன்றே மாதத்தில் தர்மன் மற்றும் தங்கமயிலுக்கும் அழகிய பெண் குழந்தை பிறந்தது.

குழந்தையை பார்க்க வந்த கருப்பன் தர்மனிடம் “ என் காதல ஒத்துக்க மாட்றா…, ஒத்துக்க மாட்றான்னு… சொல்லிக்கிட்டே கல்யாணம் முடுச்சு ஒரு புள்ளையவும் பெத்துட்ட….!”என்று கூறினான்.

அந்த நேரம் மலர்விழியின் கையில் உள்ள மூன்றே மாதமான கருப்பனின் புதல்வன் குழந்தையை வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.

அதனை பார்த்த அமுதா “என்னடா குட்டி என் பேத்திய இப்பிடி பாக்குற….? உன் பொண்ணு இவ இல்ல, அங்க உன் மஹா அத்தை வயித்துல இருக்கு பாரு உன் மொற பொண்ணு…!”என்று கூறினார்.

அதனை கேட்ட அனைவரும் முகமும் புன்னகையில் மலர அடுத்தடுத்து அந்த இடமே கலகலப்பாக மாறியது.

                                             முற்றும்.

💝கருப்பனின் காரிகையவள்💝💝💝

 

 இன்று வரையிலும் அமைதியாக படித்துக் கொண்டிருந்த சைலன்ட் ரீடர்ஸ் அனைவரும் இன்றாவது கதை குறித்த உங்களின் கருத்துக்களை தவறாமல் பதிவிடுவீர்கள் என்ற நம்பிக்கையில் உங்களிடமிருந்து விடை பெறுவது நான் உங்கள் இதழ்யா இசை💖 

 

4 thoughts on “கருப்பனின் காரிகையவள் 💝 40 (இறுதி அத்தியாயம் )

    • Idhazhya IsaiPost author

      Thank you so much 🙏🏻💖🥰

      Reply
  • Bharthi Nithiyanandham

    ரொம்ப ரொம்ப அருமையாக எழுதி இருக்கீங்க இசை என் மனதை ஆட்கொண்டு விட்டது இந்த கருப்பன் மற்றும் மலர் திடமான நினைவு அந்த கிராமதிற்கு சென்று வந்த உணர்வு எனக்குள் எனது நெஞ்சின் நீங்காத நினைவுகலில் இந்த கருப்பனின் காரிகை இடம் பெற்றுள்ளது நன்றி இசை மா

    Reply
    • Idhazhya IsaiPost author

      Thank you so much 🙏🏻💖🥰

      Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!