Skip to content
Post Views: 327
அத்தியாயம் – 19
புது தில்லி, AIIMS மருத்துவமனை வளாகம்
Advertisement
சில மணி நேரங்கள் கழித்து மயக்க மருந்தின் தாக்கத்திலிருந்து வசுந்தரா கண் விழித்த போது, தலை பாரமாக கனத்தது. கண்களைத் திறக்க முயற்சிக்கும் போதே, அங்கு பணியில் இருந்த செவிலியர் மருத்துவரை அழைத்து விட்டார்.
“ஹௌ ஆர் யூ ஃபீலிங் மேம்?” என்றார் மருத்துவர், அங்கிருந்த உபகரணங்கள் காட்டிய அளவீடுகளை கவனித்துக் கொண்டே.
Advertisement
Advertisement
“ஐ ஆம் ஃபைன், லேசா தலை வலிக்கிற மாதிரி இருக்கு. வேற ஒன்னும் இல்ல” என்றவர், மெல்ல எழுந்து அமர்ந்தார். முன்னிருப்பவை எல்லாம் சற்று மங்கலாகத் தெரிந்தது. ஏதேதோ காட்சிகளின் நினைவு அலைக்கழிக்க, தலையை உலுக்கி சமன்செய்ய முயன்றார்.
“அது செடெஷன் கொடுத்ததால இருக்கும் மேம். நீங்க ரொம்ப டிஸ்டர்ப்டா இருந்தீங்க ஆஃப்டர் அ ட்ராமாடிக் (traumatic) இன்சிடெண்ட். சோ அது கொடுத்தாக வேண்டிய கட்டாயம்” என்க, புரிந்தது என்பது போல் தலையாட்டிய வசுந்தரா,
Advertisement
“எதுவும் பிரச்சனையா? எனக்கு ஏதோ அனீசியா இருக்கு, நான் வீட்டுக்கு போகலாமா?” எனக் கேட்டார்.
மருத்துவரிடம் மெல்லிய தயக்கம். அவரிடம் பதில் வராமல் பார்க்கவும், வசுந்தரா அவரைக் கேள்வியாகப் பார்த்தார்.
“உங்க வைட்டல்ஸ் எல்லாம் ஸ்டேபிள் தான் மேம். சோ மெடிக்கல் இஷ்யூ எதுவும் இல்ல. பட், நாங்க ஒப்பினியன் தான் மேம் சொல்ல முடியும். செக்யூரிட்டி இஷ்யூ இல்லையா, அதுனால NSA அர்ஜுன் சார் தான் க்ளியரன்ஸ் கொடுக்கணும்” என மருத்துவர் விளக்க, வசுந்தராவுக்கு சற்று குழப்பமாக இருந்தது.
நடந்த சம்பவங்களை, நபர்களை முயன்று நினைவூட்டியதும், பதற்றம் ஒட்டிக் கொண்டது அவர் குரலில்.
“அ…அர்ஜுன் வெளிய இருக்காரா? ஐ வான்ட் டு மீட் ஹிம் இமிடியட்லி” என்றார் ஏதோ நினைவு வந்தவராக.
அவர் படபடப்பதைப் பார்த்த மருத்துவர்,
“மேம், ப்ளீஸ் காம் டவுன். நான் இன்பர்மேஷன் கொடுத்துருக்கேன். ஹி இஸ் டீலிங் வித் சம்திங், முடிச்சிட்டு வந்திடுவார் மேம்” என்றதும், வசுந்தராவுக்கு ஏதோ நெருடியது.
அவர் மருத்துவரை யோசனையாகப் பார்க்க,
“பட் யுவர் பேரண்ட்ஸ் அண்ட் ரிலேடிவ்ஸ் ஆர் ஹியர். உங்களைப் பார்க்க ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. நான் அவங்கள முதல்ல வரச் சொல்லட்டுமா மேம்?” என்று கவனத்தை திசை திருப்பினார்.
வசுந்தரா தலையசைத்ததும் அவருக்குத் தனிமை கொடுக்க வேண்டி, மருத்துவர் வெளியில் செல்லும் போது செவிலியரையும் அழைத்துக் கொண்டு சென்றார்.
காத்திருந்த குடும்பத்தினரிடம் வந்தவர்,
“மயக்கம் தெளிஞ்சிடுச்சு…நீங்க போய் பார்க்கலாம். ஆனா எல்லாரும் ஒரே நேரத்துல போகாதீங்க. அது டிஸ்டர்பிங்கா இருக்கும்” என்று அறிவுறுத்தி விட்டுச் செல்ல, சட்டென்று அமைதி அந்த இடத்தில்.
ஆண்கள் மூவருக்கும் யார் முதலில் போவது, வசுந்தராவின் கேள்விகளுக்கு எங்ஙனம் பதிலளிப்பது என்ற தயக்கம் இருக்க, தேவராஜன் சூழலைக் கையில் எடுத்துக் கொண்டு, மனைவியையும், தங்கையையும் அனுப்பி வைத்தார்.
அவர்கள் உள்ளே செல்வதற்கு முன்னர்,
“அம்மணி சாவைத் தொட்டு பொழச்சு வந்திருக்கு. நீங்க அழுது பொலம்பி வெசனப்பட வைக்கக் கூடாது” என தீவிரமாக எச்சரித்தே அனுப்பினார்.
என்ன தான் தேவராஜன் கூறியது நினைவிலிருந்தாலும், மகளைக் கண்டவுடன் அஞ்சலிக்கு பொலபொலவென கண்ணீர் கொட்டத் துவங்க, ராஜி நாத்தனாரின் கைகளை அழுத்த, அஞ்சலி அவரைப் பார்த்தார். ‘அழாதே’ என கண்களாலேயே அஞ்சலியை அடக்கினார் ராஜி. அதில் கொஞ்சம் சுதாரித்து,
“எப்படி இருக்க கண்ணு?” என்றபடி அஞ்சலி மகளை அணைத்துக் கொள்ள,
“ஸ்ஸ்ஸ்” என்ற லேசான முகச்சுருக்கம் வசுந்தராவிடம்.
“என்ன கண்ணு வலிக்குதா?” என்றபடி மகளை ஆராய்ந்தவர், கையில் கட்டுப் போட்டிருந்ததை கவனித்து விட்டு அதை மெல்ல வருடிக் கொடுத்தார்.
“இல்லம்மா, அடிபட்ட இடத்தில உரசினது லேசா எரியுது. வேற ஒன்னும் இல்ல”
என அன்னையிடமும், அத்தையிடமும் பேசிக்கொண்டிருந்தாலும், வசுந்தராவின் பார்வை நொடிக்கொரு தரம் அறை வாயிலை மீண்டு வந்தது. அஞ்சலி அதை கவனிக்காவிட்டாலும், ராஜி கவனித்து விட்டார். சில நிமிடங்களிலேயே அஞ்சலியை அழைத்துக் கொண்டு வெளியேறி விட்டார்.
வசுந்தராவுக்கு ஏதோ சரியில்லை என்ற நெருடல் இருந்தாலும் சரியான நபரிடம் தெளிவுபடுத்திக் கொள்ள காத்திருந்தார்.
அறைக்கு வெளியே வருணனுக்கும், வனதேவனுக்கும் வசுந்தராவை சந்திக்க துளியளவும் தைரியம் இல்லை. இருவரும் அந்த நொடியை கடக்க முடியாமல் திணறினர். தேவராஜன் தான் மகனை ஒரு பார்வை பார்த்து விட்டு, வனதேவனைக் கையில் பிடித்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தார்.
அவ்வளவு நேரம் இதையெல்லாம் ஒரு பார்வையாளராகப் பார்த்திருந்த தாரா தேவி, வருணன் அருகில் வந்து அமர்ந்து அவர் தோளை ஆதரவாகத் தட்டிக் கொடுத்தார்.
“ஸ்டே ஸ்ட்ராங்க் வருண். திஸ் இஸ் ஜஸ்ட் அ பிகினிங்” என்கவும், வருணனுக்கு நெஞ்சடைத்தது.
அவர் மௌனமாகவே இருக்க,
“பேட் நியூஸ் வசுந்தராக உன்கிட்ட இருந்து கேட்கிறது பெட்டர். போ, போய் பார்த்துட்டு வா. சார்ட் இட் அவுட். அர்ஜுன் வந்துட்டாருன்னா, அப்புறம் இட் வில் ஆல் கெட் அஃபிஷியல். நானும் வசுந்தரா கிட்ட பேசணும்” என வருணனை துரிதப்படுத்தினார் தாரா தேவி.
வருணனுக்கோ பெருந்துயரம். முடிந்தால் சொல்ல மாட்டேனா என்ன எனத் தன்னையே நிந்தித்தபடி இருக்க, பெரியவர்கள் இருவரும் வெளியில் வந்து விட்டனர். தாரா தேவியும், தேவராஜனும் வருணனை அழுத்தமாகப் பார்க்க, வருணனோ வனதேவனைப் பார்த்தார்.
அவர் அருகில் வந்த வனதேவன்,
“போய்ப் பேசு வருண்! அவ அந்த டாப்பிக்கே எடுக்கலை. என்னைய ஆராய்ச்சியாப் பார்த்தா. இன்னும் மயக்க மருந்து எஃபெக்ட் இருக்கா தெரியல. எப்டி வந்தீங்க, நீ வந்திருக்கியான்னு தான் கேட்டாளே தவிர சித்தார்த் பத்தி எதுவும் கேட்கலை.” என்றார் மெல்லிய குரலில்.
தடதடக்கும் இதயத்துடன் வசுந்தராவின் அறையை நோக்கி நடந்த வருணனுக்கு, அந்தப் பத்தடி ஏதோ பல நூறு மைல்கள் போல் தெரிந்தது. வசுந்தராவின் கேள்விக் கணைகளை தாங்கும் சக்தி தனக்கிருக்கிறதா என தன்னையே பல முறை கேட்டுக் கொண்டார் வருணன்.
பதில் இல்லையென்றே வர, இரும்புக் குண்டுகள் கட்டப்பட்டு பின்னிழுப்பது போல் கால்கள் நகர மறுத்தது. தன்னை குற்றவாளியாக்கி, தள்ளி நிறுத்தி விட்டால் என்ற பயம் ஆட்டுவிக்க, அறை வாசலில் சில நொடிகள் கண் மூடி நின்று மூச்சை இழுத்து விட்டார். கதவை மெல்ல தட்டியவர் கைகள் நடுங்கியது.
“கம் இன்” என்று வசுந்தராவின் குரல் பலவீனமாக வந்தது.
வருணனைப் பார்த்ததும் முகம் சற்றே தெளிவாக, சோர்வாகப் புன்னகைத்தார்.
“எப்டி இருக்க வசு?” என்றார் அன்பு ததும்ப.
“ம்ம்ம்” என்று தலையசைத்தவர் இருக்கையைக் காட்ட, அதை வசுந்தராவின் படுக்கைக்கு அருகில் இழுந்து அமர்ந்தார் வருணன்.
வசுந்தராவிற்கு கேள்விகள் இருந்தாலும், எதிர்மறையான பதில் வரும் சாத்தியக்கூறுகள் அவரை அமைதி காக்க வைத்தது. வருணனாக ஏதாவது சொல்வார் என்று அவரை எதிர்பார்ப்புடன் பார்க்க, பதில் என்னவோ மௌனம் மட்டுமே.
அறையில் அந்த அசௌகரிய அமைதி சில நிமிடங்கள் நீடிக்க, கடைசியில் வருணன் தான் அதை உடைத்து,
“நேத்து நைட் என்ன நடந்துச்சு வசு?” என்றார்.
சில நிமிடங்கள் கண் மூடி படுக்கையில் சாய்ந்து அமர்ந்த வசுந்தரா, ஒரு நீண்ட பெருமூச்செடுத்து பின்னர் கண்களை திறந்து வருணனைப் பார்த்தார்.
தனக்குத் தானே யோசித்து தலையை உலுக்கியபடி,
“என்ன நடந்துச்சுன்னு எனக்கு சரியா தெரியலை வரு. கண் மூடி திறக்குறதுக்குள்ள எல்லாம் முடிஞ்சுடுச்சு” என்றார்.
வருணன் குறுக்கிடாமல் அவர் பேசுவதைக் கவனித்தார்.
“இந்த ஈரான் வார் பத்தி மீட்டிங்…ரொம்ப லேட்டா தான் முடிஞ்சுது! கேபினட் கமிட்டில எடுத்த முடிவை வைச்சு என்ன ஆக்சன்ஸ் உடனே எடுக்கணும்னு பேசிட்டு இருந்தோம். லலிதா அப்போ தான் கிளம்பினாங்க” என்றவர்,
“நல்ல வேளை கிளம்பினாங்க” என்று கசந்த முறுவலுடன் நிறுத்த, வருணன் ஆமோதிப்பாகத் தலையசைத்தார்.
“ஐ நீடட் ப்ரெஷ் ஏர். சோ ஒரு பத்து நிமிஷம் கார்டன்ல நடக்குறேன்னு சொல்லிட்டு வெளில வந்தேன்” என்றவர் குரல் தழுதழுத்தது. தலை குனிந்து விரல்களை அழுத்திப் பிடித்தவாறு தன்னை சமன்படுத்த முயன்றார்.
அதைத் தாள முடியாமல்,
“வசு வேண்டாம். நீ எதுவும் சொல்ல வேண்டாம். சாரி, நான் இதை கேட்டிருக்கவே கூடாது” என்று வருணன் தன்னையே நொந்து கொண்டார்.
சில நிமிடங்கள் அமைதிக்குப் பிறகு, வருணனை நிமிர்ந்து பார்த்த வசுந்தரா,
“இல்லல்ல… எனக்கும் இதை ப்ராஸஸ் பண்ணனும் தான்” என்று விட்டு,
“நான் வெளில வந்து கொஞ்ச தூரம் தான் நடந்துருப்பேன். சித்தார்த் என்ன நினைச்சாரோ தெரியல, என்கிட்ட ஏதோ கேட்கக் கூப்பிட்டதும் திரும்பினது மட்டும் தான் தெரியும்” என்று தொடர்ந்தவர் கண்கள் கண்ணீரால் நிறைந்தது.
“ம்ப்ச், ப்ளீஸ் வேண்டாம்” என்றார் வருணன் தவிப்பாக.
கண்ணீரைத் துடைத்த வசுந்தரா மூக்கை உறிஞ்சிய படி,
“நீ முன்னாடி என்கிட்ட சொன்னது ஞாபகம் இருக்கா வரு?” எனக் கேட்க, வருணனுக்கு மூளை வேலை நிறுத்தம் செய்து பல மணி நேரங்கள் ஆயிற்றே.
அவர் இல்லையென தலையசைக்க,
“ஹி வில் டை ஃபார் யூன்னு சொன்ன!” என்றார் வசுந்தரா உணர்ச்சி பொங்க. அதைக் கண்ட வருணன் கண்களும் கலங்கியது. உடல் லேசாக நடுங்கியது.
“சித்தார்த்…அதைத் தான் பண்ணார்” என்க, வருணன் அவரை அதிர்ச்சியாகப் பார்த்தார்.
“என்ன சொல்ற வசு?” என்றார் கரகரத்த குரலில். வசுந்தராவுக்கு எப்படித் தெரியும் என குழம்பியபடி அவர் பதிலுக்காகக் காத்திருந்தார்.
“அங்கிருந்த கார்ட் ஒருத்தர் என்னைய சூட் பண்ண வந்தது சித்தார்த் பார்த்திருக்கணும். உடனே அவரைப் பத்தி கொஞ்சமும் யோசிக்காம, என்னையத் தள்ளி விட்டுட்டு ‘ப்ரதாப்’ ன்னு கத்தினார். அதுக்குள்ள ரேண்டமா சூட் பண்ண ஆரம்பிச்சுட்டான் அந்த செக்யூரிட்டி. ப்ரதாப் அண்ட் எஸ்.பி.ஜி டீம் வந்து கண்டெய்ன் பண்றதுக்குள்ள டேமேஜ் இஸ் டன்”
வசுந்தரா கூறியதைக் கேட்ட வருணன் என்ன எதிர்வினையாற்றுவது என தெரியாமல் கற்சிலை போல் அமர்ந்திருந்தார். அதை கவனிக்கும் நிலையில் வசுந்தராவும் இல்லை. அவர் போக்கில்,
“நான் ஒரு பெஞ்ச் பின்னாடி தான் விழுந்தேன். அங்கயே குனிஞ்சு உட்கார்ந்திருந்தேன். சூட்டிங் சத்தம் கேட்டப்புறம் சித்தார்த் என் பக்கத்தில தான் விழுந்தார் வரு” என்று வசுந்தரா தேம்ப, வருண் என்னும் சிலைக்கு உயிர் வந்தது. வசுந்தராவின் கைகளைப் பற்றிய படி,
“வேண்டாம் அம்மணி. நீ இதுக்கு மேல எதுவும் சொல்ல வேண்டாம்” என்றார் வருணன்.
அது வசுந்தரா காதில் விழுந்ததா, இல்லையா என்றே தெரியவில்லை. அழுகையினூடே,
“அந்த நேரத்துல கூட அவர் என்ன பண்ணார் தெரியுமா?” எனக் கேட்டவர், பதிலை எதிர்பார்க்காமல், தனக்கு முன்னிருந்த சுவரை வெறித்து,
“ஒரு முப்பது செகன்ட் தான் அவருக்கு கான்சியஸ் இருந்துருக்கும். என் கையை லேசாத் தட்டி, ‘டேக் கேர்னு’ சொன்னவர் அப்டியே பிடிச்சிட்டு மயங்கிட்டார்” என்றவர் கண்களில் கண்ணீர் கடகடவென வழிந்தோடியது.
அதைத் துடைக்காமல் அமர்ந்திருக்க, வருணன் எழுந்து நின்று, தன் வயிற்றோடு அணைத்துக் கொள்ள, நிமிர்ந்து பார்த்தார் வசுந்தரா. கண்ணீரை வருணன் மென்மையாகத் துடைத்து விட, அந்தக் கண்களில் இப்போது ஒரு பெரும் அலைப்புறுதல்.
வருணனை ஆழ்ந்து பார்த்த வசுந்தரா,
“வ…வரு சித்தார்த்..ந..நல்லா இருக்காரு தானே? அவருக்கு ஒன்னுமில்லைல” எனத் தவிப்புடன் கேட்க, அந்தக் கேள்விக்குப் பதிலளிக்க வருணனுக்கு உலகின் எந்த மொழியும் கைகொடுக்கவில்லை.
“வருண் ப்ளீஸ்” என அவரை உலுக்க, வருணன் மெதுவாக, இல்லையென தலையாட்டினார்.
அவர் கண்ணீர் வசுந்தரா கன்னத்தில் விழுந்தது. வருணனைப் பிடித்திருந்த கைகளை மெதுவாக விடுவித்தார் வசுந்தரா.
ஆதரவாக அவர் தோளில் கை வைத்த வருணன், எதுவும் பேசவில்லை. சட்டென
“இட்ஸ் ஆல் மை ஃபால்ட்” என்று வசுந்தரா இரும்புக்குரலில் கூற, திடுக்கிட்டுப் பார்த்த வருணன்,
“உன்னோட இடத்துல யார் இருந்திருந்தாலும் சிட் இதைத் தான் செஞ்சிருப்பாரு வசு! இதுல உன்னோட தப்பு என்ன இருக்கு?” என்றார் சற்று குழப்பமாக.
அதற்கு பதிலில்லை வசுந்தராவிடம். மண்டியிட்டு அவரது படுக்கைக்கு அருகே அமர்ந்த வருணன், கைகளைப் பற்றி,
“லுக் அட் மீ வசு” என்க, உணர்ச்சிகள் துடைத்த முகத்துடன் அவரைப் பார்த்தார் வசுந்தரா.
“தி இஸ் நாட் அட் ஆல் ஆன் யூ! இட் வாஸ் ஆன் ஆக்சிடென்ட். மே பி சிட் இடத்துல யார் இருந்திருந்தாலும் உன்னைய சேஃப் கார்ட் பண்றது தான் பிரையாரிட்டியா இருந்துருக்கும். அது அந்தப் பதவிக்கான மரியாதை, ரிப்லெக்ஸ் ரியாக்ஷன்!”
மூளைக்குப் புரியும் விடயங்கள் எல்லாம் இதயத்திற்கும் ஏற்புடையதாய் இருக்குமானால் மனிதன் தெய்வமாகி விடுவானே.
“அப்போ நான் பெர்சனலையும், அஃபிசியலையும் கொழப்பிக்கிறேன்னு சொல்றியா?” என்று சீறினார் வசுந்தரா.
“இ…இல்லடாம்மா, அப்டி சொல்லல. நீ உன் மேல தப்புன்னு ஏன் நினைக்கிற? இது வேலையால வந்த பிரச்சனை மட்டும் தான்னு சொல்றேன்” எனப் பொறுமையாக விளக்கியும், அவர் அழுகை நின்றபாடில்லை.
வசுந்தராவின் இந்தப் புதிய அவதாரத்தை சமாளிக்கும் வகை தெரியாமல் தவித்தார் வருணன். ஒரு நிமிடம் கோபம், குற்ற உணர்ச்சி, மறு நிமிடம் அழுகை, என துக்கத்தின் முதல் படியான மறுப்பில் இருப்பவரை, கண்ணாடி போல கையாள வேண்டிய கட்டாயம் இருந்தாலும், வருணனும் அதே சூழ்நிலையில் இருக்க இந்த நிமிடங்கள் அவருக்கு உயிர் வதையே!
ஆனாலும் தன்னை விட வசுந்தராவின் வேதனையும், இழப்பும் பெரிது என உணர்ந்தவராய், சீக்கிரமே அவரை இயல்புக்குத் திருப்ப கெஞ்சலை விட மிஞ்சலே வேலைக்காகும் என முடிவெடுத்து,
“ம்ப்ச், வசு, ஸ்டாப் ப்ளேமிங் யுவர்செல்ஃப், நீ இப்டி ப்ரேக்டவுன் ஆகுறதுக்கா சித்தார்த் உயிரைக் கொடுத்தார்?” என சற்று குரலை உயர்த்தினார்.
வருணனின் அதட்டலை எதிர்பார்க்காதவர் போல் அவரை அதிர்ந்து பார்க்க,
“நடந்தத யோசிக்க இது நேரம் இல்ல” என்றார் அழுத்தமாக.
வருணனை விரக்தியாகப் பார்த்த வசுந்தரா,
“டைம் இல்லன்னு அவரை ரொம்ப படுத்திட்டேன் வருண். ஒரு நல்ல மனுஷனுக்கு இறப்பில கூட நிம்மதியில்லாம பண்ணிட்டேன்” என்று தலையிலடித்துக் கொண்டார்.
“வசு போதும், எல்லாத்தையும் உன் தலைல போட்டுக்காத. ப்ளீஸ்” என அவர் கன்னம் பற்ற, நாசூக்காக அவர் கைகளை விலக்கிய வசுந்தரா,
“தப்பு செஞ்சா தண்டனைய தவிர்க்க முடியாது வருணன்” என்று விட, அந்தக் குரலில் வருணனுக்கு கிலி பிடித்தது.
“வசு, நான் என்ன சொல்ல வர்றேன்னா…” என அவர் முடிப்பதற்குள், வசுந்தரா கை நீட்டி போதுமென்பது போல் தடுத்து விட, அறைக் கதவு தட்டப்பட்டது.
வருணன் வசுந்தராவைப் பார்க்க,
“ஒரு நிமிஷம்” என்ற கரகரத்தவர், முகத்தை அழுந்தத் துடைத்து, உடையை சரிபார்த்து, படுக்கையில் நன்றாக நிமிர்ந்து அமர்ந்தார்.
நீண்ட பெருமூச்சுகள் எடுத்து, முகத்தில் அழுத தடயங்களை விரட்டி, ஒரு கடினத்தன்மையைக் கொண்டு வந்தவர் வருணனைப் பார்க்க, புரிந்ததென தலையாட்டியவர், அறையை விட்டு வெளியேறி, காத்திருந்தவர்களை உள்ளே அனுப்பினார்.
உள்ளே வந்த அர்ஜுனிடம்,
“ப்ரதாப் எப்டி இருக்கார் அர்ஜுன்?” என்றார் வசுந்தரா மீண்டு விட்ட கம்பீரத்துடன்.
“க்ரிடிக்கல் ஸ்டேஜ் தாண்டிட்டார் மேம்”
“சித்தார்த்?” என அடுத்த கேள்வி தாமதில்லாமல் வந்து விழுந்தது. சில நொடிகள் மௌனத்திற்குப் பின்னர்,
“சா..சாரி மேம், சித்தார்த்…இஸ் நோ மோர்” என்றார் அர்ஜுன் சிறிது தயக்கத்துடன்.
தெரிந்த விடயமே என்றாலும், ஒவ்வொரு முறை கேட்கும் போதும் கண்ணீர் பொங்கியது. தனது பதவியின் பொறுப்பை உணர்ந்து, அதை விழுங்கியவர்,
“அ..அவரோட…ஐ மீன் சித்தார்த்தோட பேரண்ட்ஸ் இங்க இருக்காங்களா?” என்றார்.
“எஸ் மேம், மிஸ்டர் மனோகர் ஜோஷி இருக்கார். போஸ்ட் மார்ட்டம் முடிய வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. நியூஸ் கேட்டதும் மிஸஸ் ஜோஷி மயங்கி விழுந்துட்டாங்க. நவ் ஷீ இஸ் அன்டர் அப்சர்வேஷன்”
“நான் அவங்களைப் பார்க்கணுமே? அப்டியே ப்ரதாப் ஃபேமிலியையும்”
“மேம், உடனே வேண்டாமே. இட்ஸ் நாட் அட்வைசபுள், உங்க செக்யூரிட்டி இப்ப டாப் ப்ரையாரிட்டி” என்றார் அர்ஜுன் யோசனையுடன்.
“அர்ஜுன், குட் யூ ப்ளீஸ் டூ வாட் ஐ சே” என தீவிரமாகக் கூற, தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு எந்த சுவற்றில் முட்டிக் கொள்வது என தெரியவில்லை. வேறு வழியில்லாமல் அரைமனதாக தலையாட்ட,
“இப்ப போகலாமா?” எனக் கேட்டார் வசுந்தரா.
“ஒரு டென் மினிட்ஸ் மேம், தாரா மேம் வெளில இருக்காங்க. வீ நீட் டு டேக் க்விக் டிசிசன்ஸ்” என்கவும், வசுந்தரா யோசனையில் முகம் சுருக்கினார்.
“வாட் டிசிசன்ஸ்?”
“அ..அது நீங்க போஸ்ட் கன்டின்யூ பண்ற கேப்பாசிட்டில இருக்கீங்களான்னு…” என இழுக்க,
“வாட்?” என சீறினார் வசுந்தரா.
“ஒன் மினிட் மேம்” என்றவர், தாரா தேவியை அழைத்து வந்து விட,
“ஹவ் ஆர் யூ ஃபீலிங் வசுந்தரா” என்றார் தாரா தேவி, படுக்கைக்கு அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தபடி.
“கெட்டிங் பெட்டர் மேம்” என்றவர், அர்ஜுனை கேள்வியாகப் பார்க்க, அவர் லேசான தடுமாற்றத்துடன் தாரா தேவியைப் பார்க்க,
“வசு, இட்ஸ் ஜஸ்ட் ப்ரோசிஜர். ரெண்டு ஆப்சன் இருக்கு. இஃப் யூ ஆர் நாட் யெட் ரெடி, தற்காலிகமா டெபுடி பி.எம் அப்பாயின்ட் பண்ணி அவங்க லீட் பண்ணுவாங்க” என்று தாரா தேவி பதிலளித்தார்.
“ஆர்?” என்று வசுந்தரா இடையிட,
“ஆர்…நம்ம கட்சிலேர்ந்து வேற ஒரு சீனியர் மினிஸ்டர நான் பி.எம் போஸ்ட்க்கு ரெகமன்ட் பண்ணனும்…நீ விரும்பினா கேபினட் மினிஸ்டரா கன்டின்யூ பண்ணலாம்” என்றார் தாரா தேவி தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் படி.
“ரைட்…இஃப் ஐ மே, இதுக்கெல்லாம் என்ன காரணம்னு தெரிஞ்சிக்கலாமா மேம்?” என்றார் வசுந்தரா இறுகிய குரலில்.
“சொன்னேனே, ப்ரொசிஜரல்னு. என்னோட ஸ்டெண்ட் சொல்லிட்டேன். இட்ஸ் அப் டு யூ. பட் வாட்டெவர் இட் இஸ், ஐ’ல் சப்போர்ட் யுவர் டிசிசன்!”
“தேங்க்ஸ் ஃபார் யுவர் கன்செர்ன் மேம், பட் ஐ ஆம் ஆல்ரைட். இனிஷியல் ஷாக் தான். ரெஸ்ட் கூட எனக்கு தேவையில்ல” என திடமாகக் கூற, தாரா தேவி அர்ஜுனைப் பார்த்தார்.
“நோ இஷ்யூஸ் மேம், நான் டாக்டர் கிட்ட பேசிட்டேன். மெடிக்கல் இஷ்யூ எதுவும் இல்ல. பட் இட்ஸ் அ ட்ராமாடிக் சிச்சுவேஷன். அதுக்கு ஷீ நீட்ஸ் டு டேக் டைம் டு கெட் பேக் டு ரொட்டீன்” என்றார் அர்ஜுன்.
ஒரு பெருமூச்செறிந்த தாரா தேவி,
“அஸ் யூ விஷ் வசுந்தரா! பட் டோண்ட் பீ ஹார்ட் ஆன் யுவர்செல்ஃப்” என்று கையை தட்டிக் கொடுத்து விட்டு விடைபெற்றார்.
தாரா தேவி வெளியேறியதும் அர்ஜுன் வசுந்தராவிடம்,
“மேம், சேல் வீ?” என்றபடி கேள்வியாக அவரைப் பார்க்க,
“கிவ் மீ ஃபைவ் மினிட்ஸ் அர்ஜுன்” என்றதும், அவர் கதவை அடைத்து விட்டு வெளியேற, அறையில் மீண்டும் அமைதி. புத்தி இரும்பாக நிற்கச் சொல்ல, மனமோ இளகித் தவிக்க, நடுங்கிய கைகளை இறுகக் கோர்த்து, கண்களை மூடி ஆழ்ந்த மூச்செடுத்தார் வசுந்தரா.
error: Content is protected !!