Skip to content
Post Views: 102
அத்தியாயம் – 27 (முடிவுரை)
சில வருடங்களுக்குப் பின்…
Advertisement
லகோரி கேட், செங்கோட்டை, பழைய தில்லி.
சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு எல்லாம் தயாராக இருக்க, ‘ராஜ் காட்’டில் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்திய வசுந்தரா, செங்கோட்டைக்கு வந்திறங்கினார்.
Advertisement
பாதுகாப்பு படைகளின் மரியாதை அணிவகுப்பை ஏற்றுக் கொண்டவர், சரியாக 7.30 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றினார். 21 குண்டுகள் முழங்க, தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
Advertisement
மேடைக்கு அருகிலேயே, மிக முக்கிய பிரமுகர்களுக்கான பகுதியில் வருணன் தேவராஜன், தனது 2 வயது மகன் சித்தார்த்தனைத் தூக்கியபடி மனைவியை பெருமை பொங்கப் பார்த்திருந்தார். அவரது கையை லேசாக சுரண்டியபடி, வசுந்தராவை காண்பித்த மகன்,
“பா…ம்மா…” என்றான் பால் பற்கள் தெரிய சிரித்து.
Advertisement
“ஆமாடா, கண்ணா. உங்கம்மா தான்” என்றார், அடுத்து வரப்போகும் வில்லங்கம் தெரிந்தே.
“நேனும்…போனும்…ம்மாட்ட” எனக் காலை உதற ஆரம்பித்து விட்டான் குழந்தை.
அவனும் என்ன செய்வான்? அதிக நேரம் அம்மாவை தொலைக்காட்சிப் பெட்டியில் பார்த்து திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டிய நிலை அவனுக்கு. வெளி நாட்டுக்கு அரசமுறை சுற்றுப் பயணம் முடித்து நேற்று பின்னிரவில் தான் வீடு திரும்பியிருந்தார் வசுந்தரா.
அறைக்குள் நுழையும் போதே,
“ஷ்ஷ்ஷ்..” என வாயில் விரல் வைத்துத் தான் அவரை வரவேற்றார் வருணன்.
“உன் பையன் இவ்ளோ நேரம், உன்னைப் பார்க்கணும்னு ஒரே அழுகை. இப்ப தான் போராடி தூங்க வைச்சிருக்கேன்” என்றார் கிசுகிசுப்பாக.
காய்ந்த கண்ணீர் தடங்கள் கன்னத்திலிருக்க, வாய் பிளந்த படி சீரான மூச்சுடன் உறங்கும் மகனை ஆசை தீரப் பார்த்தார் வசுந்தரா. முன்னுச்சி முடிகள் கண் வரை நீண்டிருக்க, அதை மெதுவாய் ஒதுக்கி விட்டார். அவனருகில் படுக்கையில் அமர்ந்திருக்க, வருணனும் மனைவியைத் தோளோடு அணைத்தபடி அருகில் வந்தமர்ந்தார்.
“டிரிப் எப்டி போச்சு?”
“ம்ஹும், ரஷ்யா சப்போர்ட் கிடைச்ச மாதிரி தான். ஆனா யு.என் செக்யூரிட்டி கவுன்சில்ல நமக்கு பெர்மெனெண்ட் மெம்பர்சிப் வேணும்னா சைனா ஒத்துக்காம நடக்காது”
“ம்ம்ம், பார்க்கலாம்டா. இன்னும் உன் டேர்ம் முடிக்கிறதுக்கு இன்னும் ஆறு மாசம் இருக்கே?”
“ஆறு மாசத்துல இது முடிக்கிறது கஷ்டம் தான் வரு. 4 வருசமா போராடிக்கிட்டு இருக்கோமே. ஆனா நான் நினைச்ச அளவு ப்ராக்ரஸ் இல்ல. ஒருவேளை …சித்தார்த் இருந்திருந்தா நடந்திருக்குமோ என்னவோ…மித்த எல்லா மிஷன்ஸும் நாம நினைச்சத விட நல்லாவே செஞ்சாச்சு.”
“ம்ம்ம்…எல்லா கனவுகளும் நம்ம டைம்ல நடந்தாகணும்னு இல்ல வசு… நீ இன்னொரு டேர்ம் கண்டெஸ்ட் பண்ணப் போறியா?”
“நோ வரு…மத்தவங்களுக்கு ஆப்பர்சூனிட்டி கொடுக்கணும். அது நாம முன்னாடியே முடிவெடுத்தது தானே. ஏன் உன்னோட பவுண்டேஷன்ல எனக்கு ஒரு வேலை கொடுக்க மாட்டியா என்ன?”
“தங்கள் சித்தம் என் பாக்கியம் தேவி!” என்று எழுந்து இடைவரை குனிந்தவர், அப்படியே அலுங்காமல் மனைவியைக் கைகளில் அள்ளிக்கொண்டார்.
கணவனின் கழுத்தைக் கட்டிக் கொண்டவர், கண்களால் மகனை சுட்டிக் காட்டினார்.
“நாம பேசின நேரத்துல சார் டீப் ஸ்லீப் போய்ட்டார். இனி 6 மணிக்குத் தான் அலாரம் வைச்ச மாதிரி எழுந்துப்பார்”
“ம்ஹூம், ரொம்ப பிடிவாதம்ல”
“உன்னைய விடவா?”
கீழே விரிந்திருந்த மெத்தையில் இறக்கவும்,
“எனக்கு என்ன பிடிவாதம்?” என்க, மகனைக் கண்காட்டினார் வருண்.
“ம்ப்ச், மானத்தை வாங்காத வருண்”
“இல்ல…ஏன் டைம் எடுத்தேன்னு கேட்டப்போ பிசிக்கல் இண்டிமசி பத்தி யோசிச்சேன்னு சொன்ன…” என்றதும் மெத்தையில் இருந்த சிறு தலையணை பறந்து வந்தது.
சிரிப்புடன் அதைப் பிடித்துக் கொண்ட வருணன், அருகில் வந்து படுத்தார்.
“பாதி நாள் பாதுகாப்பு…” என்று முடிக்குமுன்னர், வசுந்தராவின் மென்னிதழ்கள் மீதத்தை விழுங்கிக் கொண்டது.
அந்த இரவின் இனிமைகளில் முகம் சற்று சிவக்க, நிகழ்வுகளை அசை போட்டபடி மனைவியைப் பார்த்திருந்தார் வருணன். அந்த வசுந்தராவுக்கும், பிரதமர் வசுந்தரா வனதேவனுக்கும் ஆறில்லை, ஆயிரம் வித்தியாசங்கள். இது போல் நிகழ்வில், அதுவும் மகனைக் கையில் வைத்துக் கொண்டு, வருணனின் எண்ணவோட்டம் பற்றித் தெரிந்தால், அவ்வளவு தான், காதில் ரத்தம் வருமளவு பேசித் தீர்த்து விடுவார். அந்த நினைவில் மென்னகை எட்டிப் பார்த்தது.
அடுத்த நொடியே, அவர் கனவுலகில் இருந்தது பொறுக்காதது போல்,
“ம்மாட்ட…போனும்” என்றான் மகன். இந்த முறை குரல் சற்று உயர்ந்தது.
“கொயட் சித்து. நீ இப்ப சமத்தா இருந்தா தான் மீட்டிங் முடிஞ்சப்பறம் அம்மா உன் கூடவே இருப்பாங்க” என்றதும், அழுகைக்குத் தயாராய் உதடுகள் பிதுங்க ஆரம்பிக்க, அருகில் அமர்ந்திருந்த லலிதா தன்னிடம் வருமாறு அழைத்தார்.
‘போகட்டுமா’ என்பது போல் தந்தையைப் பார்க்க, வருணன் தலையசைக்கவும் அவரிடம் தாவினான். அவனுக்கென்று வைக்கப்பட்டிருந்த பையில் இருந்து ஒரு ‘லெகோ’ பொம்மையை வருணன் எடுத்துக் கொடுக்க, அதைப் பிரித்து திரும்பவும் சேர்க்க ஆரம்பித்தான்.
மகன் கவனம் இங்கில்லை என்றதும், மனைவியின் சுதந்திர தின உரையைக் கேட்க ஆரம்பித்தார் வருணன்.
தனது ஆட்சிக்கால சிறப்புகளையும், சாதனைகளையும் பட்டியலிட்ட வசுந்தரா,
“கடந்த நான்கரை ஆண்டுகளில் எனது அரசு, வாக்களித்த அனைத்துத் திட்டங்களையும் செவ்வனே நிறைவேற்றி இருக்கிறது. உலக அரங்கில் இந்தியா பொருளாதாரத்தில் மேம்பட்ட நாடாக மட்டுமின்றி, பல துறைகளில் தற்சார்பு பெற்று வலிமையான நாடாகவும் உருவாகியிருக்கிறது.
ஐந்து மிஷன்களை முன்னிருத்தி, அவைகளின் செயல் திட்டத்திற்கு வந்த எல்லாத் தடைகளையும் தகர்த்தெறிந்து, கொண்ட குறிக்கோள்களிலிருந்து கிஞ்சித்தும் விலகாமல், அயராப் பணி செய்ததே வெற்றிகளை சாத்தியமாக்கி இருக்கிறது.
எங்கள் பணி இத்துடன் முடிவடையவில்லை! மகளிர் இட ஒதுக்கீடு இல்லாமலே, 50% நாடாளுமன்ற, சட்டசபை உறுப்பினர்கள் பெண்களாக இருப்பதே எனது இலட்சியம். இட ஒதுக்கீடு என்னும் போர்வையில், ஆண்களின் கைப்பாவைகளாக பெண்கள் சுரண்டப்படுவதை ஒழித்து, முழுநேர அரசியலில் இளம் பெண்களும் இயல்பாக பங்கெடுக்க இந்த அந்த அரசு ஆவன செய்யும்.
அதற்கு முதற்கட்ட திட்டமாக, 2017இல் திருத்தப்பட்ட மகப்பேறு நலச்சட்டம், தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை, விரிவுபடுத்தும் வகையில் மறுபரீசலனை செய்யப்படும்.
திறமை அடிப்படையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசியலை முழுநேரத் தொழிலாக முன்னெடுப்பதற்கு பயிற்சிகள் வழங்கப்படும்.
வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் இதற்கான மசோதாக்கள் கொண்டு வரப்படும்.
பெண்கள் நாட்டின் கண்கள் என்ற பாவேந்தர் பாரதிதாசனின் வார்த்தைகளின் படி, அவர்களது கண்ணோட்டங்கள் நமது நாட்டின் எல்லா சட்டதிட்டங்களிலும் பிரதிபலிக்கும் நாட்கள் வெகுதூரத்தில் இல்லை. ஜெய் ஹிந்த்!” என தனது உரையை முடிக்க, கர ஒலி விண்ணைப் பிளந்தது.
அதற்குப் பின்னான சந்திப்புகளை முடித்து வசுந்தரா வீடு திரும்பும் போது மாலையாகியிருந்தது. அவர்களது அறைக்குள் நுழைந்ததுமே, மகன் அன்னையிடம் தாவினான்.
“பட்டுக் குட்டி, அம்மாவைத் தேடுனீங்களா” என உச்சி முகர, மகனோ முத்தங்களால் குளிப்பாட்டினான். மகனை மடியில் வைத்து அங்கிருந்த மெத்திருக்கையில் ஆசுவாசமாய் அமர, வருணன் மனைவியையும், மகனையும் ஆதுரமாய்ப் பார்த்திருந்தார்.
“ஸ்பீச் செம வசு… ஆனா இப்போ ஏன்?”
“ஏன்னா?”
“இல்ல முன்னாடியே பண்ணிருக்கலாமே. ஐ மீன் நீ ப்ரக்னெண்டா இருக்கப்ப அவ்ளோ கஷ்டப்பட்டோம். ஏதோ உதய் அண்ணா டெபுடி பி.எம்னால கொஞ்சம் சமாளிச்சோம். அதுக்கப்பறமும் நீ ஒரு வாரத்துல வேலைக்கு ரிடர்ன் ஆகிட்ட!”
“அது தான் ட்ரிகர் வரு. நல்ல வேள…பெனசிர் புட்டோ மாதிரி காரைப் புடிச்சு ஆஸ்பிட்டல்க்கு ஓடுற நிலைமை இல்ல. அதோட எனக்கு வருணன் தேவராஜன் கூட இருந்தார்! எல்லாருக்கும் அந்த மாதிரி அமையும்னு சொல்ல முடியாதுல”
“அதெல்லாம் சரிமா, முன்னாடியே பண்ணிருந்தா உனக்கு லீகல் எல்லாம் சார்ட் பண்ண டைம் கிடைச்சிருக்குமே. இப்ப 6 மாசத்துல என்ன பண்ண முடியும்?”
“கரெக்ட் தான்…அப்போ பண்ணிருந்தா அது செல்ஃபிஷ்ஷா தெரிஞ்சிருக்கும் வரு. ஒரு சீரியஸ் பிரச்சனை டைமிங்னால டைல்யூட் ஆகிட கூடாதுல்ல அது தான்”
“ஓ ரைட்” என்றவர், மனைவிக்கருகில் வந்து அமர்ந்து தோளில் கை போட்டுக் கொண்டார். அது பொறுக்காத சித்தார்த்தன், அவர் கையைத் தட்டி விட,
“ரொம்ப நல்லவன்டா நீ…எந்த நேரத்துல சித்தார்த்னு பேர் வைச்சன்னு தெரியல. எல்லாம் சிறப்பா செய்ற” என்று வருணன் அலுத்துக் கொள்ள, சத்தமில்லாமல் சிரித்தார் வசுந்தரா.
“உனக்கென்னமா…நல்லா சிரி! நாள் ஃபூரா எங்கூடத்தான் இருக்கான். நீ கண்ல பட்டுட்டா போதும். அப்டியே நான் அவுட் ஆஃப் ஃபோக்கஸ் ஆகிடுவேன். சார் என்னைய உன் பக்கத்துலயே வர விட மாட்டான்!”
“என்ன இவ்ளோ சலிப்பு உனக்கு?”
“இருக்காத பின்ன, நீ வேற சட்டமெல்லாம் கொண்டு வர்ற…அதைக் கொஞ்சம் யூஸ் பண்ணலாம்னு பாத்தா…” என்று முடிக்கும் முன்,
“ஆ…” என கைகளைத் தடவிக் கொடுத்தார் வருணன்.
“ஏன்டி, கல்யாணம் ஆகி இத்தனை வருசம் ஆகிடுச்சி. என்னையக் கிள்ளி வைக்கிறத எப்போ நிறுத்தப் போற?”
“அதையே நானும் சொல்லலாம்!”
“அது சரி” என்று எழுந்தவர், அங்கிருந்த அலமாரியில் எதையோ தேடியபடி,
“தாரா மேம் பேசினாங்க…” என்றார்.
“என்னவாம்?”
“திருப்பி என்னைய ஃபுல் டைம் வரச் சொல்றாங்க…”
“…”
“என்னம்மா?”
“என்னோட கனவுக்காக உன்னோட கேரியரை ஸ்பாயில் பண்ணிட்டேனோ?”
படக்கென மனைவியைத் திரும்பிப் பார்த்தார். வசுந்தராவும் அவரையே கண்ணெடுக்காமல் பார்க்க, அருகில் வந்து மண்டியிட்டவர்,
“சித்துக் கண்ணா, ராஜி பாட்டி உன்னையத் தேடினாங்க. தேவா தாத்தா உனக்கு ஏதோ குட்டிக் கார் வாங்கிருக்காங்களாம். போலாமா?” என்றார்.
சில நொடிகள் அன்னையைப் பார்த்தவன், தந்தையிடம் தாவ, மகனைத் தூக்கிக் கொண்டு எழுந்தவர், மனைவியைப் பார்த்து,
“டயர்டா இருக்க…டின்னர் எடுத்துட்டு வர சொல்லவா?” என்றார்.
“இல்ல…டின்னர் எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம். ஸ்ட்ராங்கா ஜிஞ்சர் டீ?”
‘சரி’ என்ற தலையசைப்புடன் வருணன் வெளியேற, வசுந்தரா குளியலறைக்குள் புகுந்து கொண்டார். மனம் சற்று பாரமாக இருந்தது. என்னதான் இருவரது பெற்றோர்களும் அவ்வப்போது வந்து பார்த்துக் கொண்டாலும், சித்தார்த்தனை முழுநேரப் பொறுப்பாக வளர்த்தது வருணனே.
திருமணத்திற்குப் பின்னர் வசுந்தரா பரிந்துரை செய்தது போல் தாரா தேவியிடம் ஃப்ரீ லான்ஸ் அடிப்படையில் பணியாற்றியவர், தந்தையின் உதவியுடன் சொந்தத் தொழிலையும், அவர் நிறுவிய அரசியல் அறக்கட்டளையையும் கவனிப்பதில் மும்முரமாயிருந்தார்.
வசுந்தரா வார்த்தைகளால் எதுவும் கூறாமலே தன்னிருப்பை அவர் வெகுவாக எதிர்பார்க்கிறார் என உணர்ந்தவர், முடிந்த அளவு வெளியூர் பயணங்களை தவிர்த்தார். அவரது வேலை நேரத்திற்கேற்ற படி தனது அட்டவணையை முற்றிலும் மாற்றிக் கொண்டார்.
குளித்து முடித்து வந்த வசுந்தராவின் கை தன்னைப் போல் அடர் நீல ஜார்ஜெட் புடவையைக் கையில் எடுத்தது. கணவனது எதிர்வினையை நினைத்து சிறு புன்னகை எட்டிப் பார்த்தது.
அதோடு அந்தப் புடவையில் வேறு சில ஞாபகங்களும்…அன்று இதே புடவையில் தன்னைப் பார்த்ததும் கணவன் கண்கள் விரிந்தது பசுமையாக நினைவில் இருந்தது…
“ஏன் வரு, வாட்ஸ் இட் வித் யூ அண்ட் ஜார்ஜெட்?” என்றார் சிரிப்புடன்.
“எனக்கென்னடி தெரியும், ஜார்ஜெட்…ஷிபான் எல்லாம்? நீ தான் இப்டி டார்க் கலர் ப்ளெயின் சாரி கட்டி என்னைய மயக்குற” என்று மனைவியை அணைத்து வாசம் பிடித்தார்.
“உண்மைய சொல்லு…என்னைய கவுக்குறதுக்கு தானே இந்தப் பிளான்?”
“இதெல்லாம் பண்ணி தான் உன்னைய கவுக்கனுமா? நீ எப்ப எழுந்திருச்ச?” – நமட்டுச் சிரிப்பு வசுந்தராவிடம்.
“ம்ம்ம், அதுவும் கரெக்ட் தான். இன்னும் விழுந்தே தான் கெடக்குறேன்! ஆமா எப்டி இது சோர்ஸ் பண்ற? ஷாப்பிங் எல்லாம் உன்னோட அகராதிலயே கெடையாதே”
“அது…அந்தக் கருப்பு ப்ளேய்ன் சேரி எப்பவோ வாங்கினது. கட்டாம அப்டியே வைச்சிருந்தேன். பார்த்ததும் உனக்கு ரொம்ப பிடிச்சுதுல்ல. சோ எல்லாக் கலரும் வாங்கியாச்சு. அத்தையே சரணம்…வேற வழி? அம்மாட்ட சொன்னா பட்டு எடுக்கலாங்கண்ணுன்னு ஆரம்பிப்பாங்க”
“கடைசில என்னோட மம்மி தான் வில்லியா” என்றபடி, மனைவியை மடியில் அமர்த்திக் கொண்டார்.
“வேறென்ன விசேஷம் மேடம், ஃபேஸ் ஒரே டாலடிக்குது”
சில நொடிகள் தயக்கமான மௌனம் வசுந்தராவிடம்.
“என்னடி?
“ஐ திங்க்…வீ ஆர் ப்ரக்னெண்ட்”
லேசான அதிர்ச்சி வருணனிடம்.
“ஸ்யூரா? டெஸ்ட் பண்ணியா?”
“ம்ம்ம், இப்போ தான்” என்று பரிசோதித்ததைக் காட்டினார்.
“சரிடா, நமக்கு பிளான் இல்ல. ஆனா கடவுளா கொடுத்திருக்கார். குட் நியூஸ் தானே. என்ன யோசனை உனக்கு?”
“ம்ப்ச், நான் வயித்த தள்ளிட்டு எப்டி பார்லிமென்ட்ல நிப்பேன். எல்லாரும் சிரிப்பாங்க! அதோட நம்ம கான்ஸ்டிட்டியூசன்ல இதுக்கெல்லாம் ப்ரொவிசனே இல்ல. நான் மெட்டர்னிட்டி லீவ் எல்லாம் எடுக்க முடியாது…”
“…”
“என்ன பண்றது வரு? நா..நாம சேஃபா தானே இருந்தோம்?”
“உனக்குத் தெரியாதா? எதுவும் 100% சேஃப் கெடையாது அதோட…” – லேசான குறும்பு முகம் வருணனிடத்தில்.
.
“அதோடன்னு என்ன சொல்ல வந்த?”
“இல்ல…நீதான் உனக்கு இருக்குற ஒரே ரிலாக்சேஷன்னு சொல்லி…” என்றதும் தோளிலேயே அடி விழுந்தது.
“பீ சிரியஸ் வரு!”
“ஏய், விடுடி. பாத்துக்கலாம். அப்பா – அம்மா ஆகப் போறோம்னு ஒரு ஃபீலிங் அனுபவிக்க விடாம…”
“ம்ப்ச், எனக்கு மட்டும் ஆசையிருக்காதா? எப்டி சமாளிக்கிறதுன்னு தான் தெரியல…”
நன்றாக மடியில் அமர்த்தி நெற்றியில் முத்தமிட்டவர்,
“நீ பெத்து மட்டும் குடு, போதும்! வளக்குறது என்னோட பொறுப்பு. நாளைக்கு டெஸ்ட் எடுக்கலாம். அப்றம் லீகலா எப்டி டீல் பண்றது பார்க்கலாம். எனக்குத் தெரிஞ்சு உதய் அண்ணா இருக்குறதலா பெரிய பிரச்சனை ஆகக் கூடாது” என்றவர், அதற்குப் பின் எங்கும் பின் வாங்கவில்லை.
குழந்தை பிறந்த போதும், வருணன் ஒரு நொடி யோசிக்காமல் ‘சித்தார்த்தன்’ என்று பெயரிட, வசுந்தராவே ஆச்சரியமாகப் பார்த்தார். லலிதா, மனோகர் இருவருமே அவர் சித்தார்த்தனை வளர்க்கும் பாங்கைப் பார்த்து அசந்து விட்டனர்.
அந்த நேரத்தில் மனோகருக்கு தெளிவாகத் தெரிந்தது…இறைவனின் முடிச்சுக்களில் எப்போதும் காரணம் உண்டு. சித்தார்த்தும், வசுந்தராவும் ஒரே மாதிரியான ஆளுமை கொண்டவர்கள். ஒரு உறையில் இரு வாள்கள் சாத்தியம் இல்லையே! வருணனின் ஆளுமையோ முற்றிலும் வேறு. அவர்களது உறவில் யார் வாள், யார் உறை என்று யாருக்கும் தெரியாது. இது போன்ற ஒரு இடத்தில், சித்தார்த்தால் தன்னைக் கண்டிப்பாகப் பொருத்திக் கொள்ள முடியாது என்பதும் புரிந்தது.
குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே தர வேண்டும் என வசுந்தரா பிடிவாதம் பிடிக்க, முடிந்தவரை அவர் போகும் இடமெல்லாம் வருணனும் குழந்தையுடன் போவார். நேரம் பார்த்து, ‘பம்ப்’ செய்து தருவதை, பக்குவமாக சேகரித்து வைத்து, மகனுக்குப் புகட்டுவார். தனது அலுவல்களை வெகுவாகக் குறைத்துக் கொண்டு, வசுந்தராவிற்கும் சேர்த்து மகனுடன் நேரம் செலவழித்தார்.
அதையெல்லாம் அசை போட்டபடி வசுந்தரா புன்னகையுடனே அமர்ந்திருக்க, உள்ளே வந்த வருணன், மனைவியை ஆச்சரியமாய்ப் பார்த்தார்.
“என்ன மேடம் ஒரே சிரிப்பு? சொன்னா நானும் சிரிப்பேன்ல?” என்றபடி தேநீர் குவளையைக் கையில் கொடுத்தார்.
“ஒன்னும் இல்ல…இந்த சேரி ஃப்ளாஷ்பேக்!”
இப்போது மனைவியை தலை முதல் பாதம் வரை பார்வையால் வருடியவர்,
“இந்த சேரிக்கு பல ஃப்ளாஷ்பேக் இருக்கு! நீ எதை நினைச்ச?” என்க, கணவனை முறைத்தார் வசுந்தரா.
“என்ன அம்மணி முறைக்கிற?”
“இல்ல…எல்லா ஹஸ்பண்டும் வைஃப் என்ன சேரி கட்டிருக்காங்கன்னு கூட ஞாபகத்தில வைச்சிக்க மாட்டாங்க. நீ என்னடான்னா பல ஃப்ளாஷ்பேக் இருக்குன்னு எல்லாம் ஞாபகம் வைச்சிருக்க. அப்போ நான் எப்டி ஸ்கோர் பண்றது?”
“ஹா…ஹா. இப்ப இது தான் உனக்கு தலை போற பிரச்சனையா?”
“ம்ம்ம்…இதுவும் தான்” நொடித்தார் மனைவி.
மனைவியிடம் குவளையை வாங்கி நீரில் அலசி வைத்தவர், படுக்கையில் கால்களை நீட்டி நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டு, கைகளை விரிக்கவும், வசுந்தரா அதில் பாந்தமாக அடங்கினார்.
“நீ சம்பந்தப்பட்ட எதுவும் எனக்கு மறக்காது வசு”
“அது தெரியுது! ஆனா ஏன் இப்டி இருக்கன்னு தான் தெரியல?”
“எப்டி?”
“கொஞ்சம் கூட மேல் ஈகோ இல்லாம…?”
“உன்கிட்ட என்னடி ஈகோ எனக்கு. நாம ரெண்டு பேரும் வேற வேறன்னு நினைச்சா தான் ஈகோ வரும்!”
“…”
“என்னடி, இந்தத் தலைக்குள்ள இன்னும் என்ன ஓடுது?”
“உன் கேரியர்…?”
“என் கேரியருக்கு என்ன” என்று நிறுத்தியவர்,
“லிசன் வசு. ஒன்ஸ் ஃபார் ஆல் இது பேசி முடிச்சிடலாம். எனக்கு என்ன செய்யணுமோ அது செஞ்சிட்டு தான் இருக்கேன். தாரா மேம் கேட்டாங்கன்னு உன்கிட்ட இன்பர்மேஷன் தான் ஷேர் பண்ணேன். உன்னோட டேர்ம் முடியட்டும் அப்றம் பாத்துக்கலாம். அது வரை நோ தான் சொல்லப் போறேன்!” என்றார் தீவிரமான குரலில்.
“அதுக்குள்ள எலெக்ஷன் வந்துடுமே?”
“அதெல்லாம் நான் பாத்துக்குறேன்”
“நீ கண்டெஸ்ட் பண்ணனும்னு உனக்கு தோனுனதே இல்லயா வரு?”
பதிலில்லாமல் போக ‘என்ன?’ என்பது போல் கணவனைப் பார்க்க, வருணன் ‘ஒன்றுமில்லை’ என்பது போல் தலையசைத்தவர்,
“நமக்கு லைம்லைட்ல இருக்குறது எல்லாம் செட் ஆகாது மேடம். ஐ ஆம் ஹேப்பி அஸ் அ கிங் மேக்கர் தேன் அ கிங்!” என்றார்.
“பட், தாரா மேம் அவ்ளோ ஈசியா விட மாட்டாங்க வரு?
“ஹா ஹா, அவங்க என்ன என்னைய விட்றது? இப்ப நான் தான் அவங்கள பிடிச்சி வைச்சிருக்கேன்! எவ்ளோ நாள் எனக்கு SPP வொர்க் ஆகும்னு தோனுதோ அது வரைக்கும் போகட்டும்.
இங்க நீயும், நானும் மட்டும் தான் நிரந்தரம் வசு…கட்சியோ, அரசியலோ கெடையாது. இன்னிக்கு நீ உன்னொட ஸ்பீச்ல சொன்ன மாதிரி ஒரு சிச்சுவேஷன் வர்றது தான் நம்மளோட விஷன். அதுக்கு ரெண்டு பேரும் சேர்ந்து உழைக்க வேண்டியது தான்”
அதைக் கேட்ட பின்னரே வசுந்தரா முகமும் தெளிந்தது. கணவனை ஆசையாகப் பார்த்தார்.
“அம்மணி, இந்தப் பார்வை பார்த்தா அப்றம் சேதாரத்துக்கு நான் பொறுப்பில்ல. இன்னும் ஆறு மாசம் உங்களுக்கு பிரதமர் பொறுப்பு இருக்கு” – வார்த்தைகள் வேறு கதை சொன்னாலும், கைகள் தங்களது வேலையை செவ்வனே செய்தது.
“பரவாயில்ல…இந்த டார்க் ப்ளூ ஜார்ஜெட் மெமரிஸ் லிஸ்ட்ல ஒன்னு கூட்டலாம்னு நான் முடிவு பண்ணிட்டேன்”
——————————–வசு – வரு…காவியம் தொடர்கிறது!————————
error: Content is protected !!