Skip to content
Post Views: 398
அத்தியாயம் – 6
மதச்சார்பற்ற மக்கள் கட்சியின் விருந்தினர் மாளிகை, புது தில்லி.
Advertisement
“வருணன் தேவராஜன் ஸ்பீக்கிங், ஹூ இஸ் திஸ்?” என்றார் வருணன் அழைப்பை ஏற்றதுமே.
“சித்தார்த் ஜோஷி! இப்ப என்ன? என் நம்பர் உங்கிட்ட இல்லைன்னு நான் நம்பணுமா வருண்?” என்றார் சித்தார்த் அமர்த்தலாக.
Advertisement
Advertisement
மகன் வரிசையாக முக்கியமான அழைப்புகளை ஏற்பதைப் பார்த்த தேவராஜன், கையால் சைகை செய்து, எதுவும் பிரச்சனையா எனக் கேட்க, ஒன்றுமில்லை என்பதைப் போல் தலையசைத்த வருணன், சித்தார்த்திடம்,
“இது பி. எம். ஓ ஆஃபிஸ் நம்பர்னு தான் சித்தார்த் சேவ் பண்ணிருக்கேன். நீங்கன்னு எனக்கு எப்படி தெரியும். சொல்லுங்க, உலக அதிசயமா இருக்கு எனக்கெல்லாம் கால் பண்ணிருக்கீங்க?” என்றார் சிறிது நக்கல் தொனியிலேயே.
Advertisement
அதற்கும் ‘நீயெல்லாம் எனக்கு ஒரு ஆளா’ என்று சற்றும் அலட்டிக் கொள்ளாத சித்தார்த்,
“டிராப் தி ஆக்ட் வருண்! உனக்கு என்னைய பிடிக்காதுன்னு தெரியும். பட் ஐ டெல் யூ. த ஃபீலிங் இஸ் மியூச்சுவல்! பட் வி ஹாவ் அ காமன் கோல் அண்ட் அ ஜாப் டு டூ. ஷேல் வி ஜஸ்ட் ஃபோக்கஸ் ஆன் தேட்?” என்று குட்டு வைத்து விட்டு,
“பி. எம்மோட ஸ்கெட்யூல் இன்னிக்கு மாத்திருக்கேன். தாரா மேம் கிட்ட பேசுறதுக்கு உங்க கட்சிக்கூட்டத்துக்கு முன்னாடியே வருவாங்க. கேன் யூ சார்ட் அவுட் ஃப்யூ திங்க்ஸ் தேர்?” என்க,
“ஏன் என்னாச்சு? நாங்க முன்னாடியே கேட்டோம், அப்ப பி.எம்.ஒ வேற பிளான் சொன்னாங்க?” என்றார் வருணன் யோசனையுடன்.
“ஃபர்ஸ்ட் கேபினட் மீட்டிங் பத்தி நியூஸ் வந்திருக்கும்னு நினைக்கிறேன். எக்ஸ்பெக்டட் தான் அப்டின்னாலும், விக்ரம் அண்ட் உதயன் நிறைய சேலஞ் பண்ணிருக்காங்க. இதெல்லாம் முளையிலேயே கிள்ளி எறிஞ்சிரணும்”
“சரி தான், அதுக்கு?”
“நான் ஃபாரின் பாலிசி தான் வருண் முதல்ல ஃபோக்கஸ் பண்ண போறேன். தலைக்கு மேல கத்தின்ற நிலைமைல தான் இருக்கோம். அமெரிக்கன் பிரசிடெண்ட் எப்ப என்ன பண்ணுவாருன்னு அவர் ஆஃபிஸ்க்கு கூட தெரியாது போல! டெய்லி ஒரு டேரிஃப் போட்டு சாவடிக்கிறாரு.
ரஷ்யா நம்ம கிட்ட ரைட் ஹாண்ட் குலுக்கிக்கிட்டே லெஃப்ட் சைட்ல பாகிஸ்தானுக்கு ஃபைட்டர் ஜெட்ஸ் சப்ளை பண்றாங்க.
சைனா எப்படா கொளுத்திப் போட சான்ஸ் கிடைக்கும்னு தான் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.” என்று சித்தார்த் பொருமித் தள்ளினார்.
சட்டென்று அவரை தடுத்த வருணன், அலைபேசியை காதை விட்டு சற்று நகர்த்தி,
“ஷப்பா, காதுல ரத்தம் வந்துடும் போல” என்று மெல்லிய முனகலுடன்,
“சித்தார்த், இதெல்லாம் எனக்கும் தெரியும். அன்ட் அதுனால தான் இந்த போஸ்ட்டுக்கே நீங்க வந்துருக்கீங்க அப்டின்றதும் தெரியும். இதுக்கும் இன்னிக்கு கேபினட் மீட்டிங்கும் என்ன சம்பந்தம்? அதை சொல்லுங்க முதல்ல” என்றார்.
“ம்ப்ச், பேசுறப்போ குறுக்க பேசறத நீ இன்னும் விடலையா வருண். இதுல மட்டும் நீயும் மாறலை, உன் பிரெண்டும் மாறலை! சொல்ற ஒரு விஷயத்தையும் காது கொடுத்து கேட்குறது கிடையாது”, என்று சலித்த சித்தார்த்,
“பிரச்சனை என்னன்னா நேஷனல் செக்யூரிட்டி அண்ட் குளோபல் ஸ்டெபிளிட்டி ஒரு மிஷன் மட்டும் தான். பி.எம்மோட மிஷன் ஸ்டேட்மெண்ட் பாத்தியான்னு தெரியல.
மேடம் அவங்க பாட்டுக்கு முழங்கிட்டு வந்துட்டாங்க. திஸ் இஸ் நாட் அ ஈசி டாஸ்க்! என்னால எக்ஸ்டெர்னல் அபெஃர்ஸ் அண்ட் டிஃவென்ஸ் மட்டும் தான் இப்போதைக்கு பிரையாரட்டைஸ் பண்ணி பார்க்க முடியும்.
மீதி நாலு மிஷன்ஸுக்கும், ஷீ நீட்ஸ் மாஸிவ் சப்போர்ட். லோக்கல் நேஷனல் பாலிட்டிக்ஸ் கரைச்சு குடிச்சவங்களா இருக்கணும். இல்லாட்டி இந்த கூட்டணி ஆட்சி ஒன்னும் வேலைக்கு ஆகாது. எல்லாரும் ஆளுக்கு அஜென்டா வச்சுக்கிட்டு ஒவ்வொரு டைரக்ஷன்ல இழுக்குறாங்க.
அண்ட் யூ நோ டூ வெல், வசுந்தரா இஸ் ஸ்டெரெயிட் ஃபார்வேர்ட். ஷீ வோண்ட் டான்ஸ் டு தெயர் ட்யூன்ஸ்! அந்த மாதிரி தான் கேபினட் மீட்டிங்லயே இன்னிக்கு பேசிருக்காங்க. ஸ்டெரெய்ட் அவே ஷீ ஹேஸ் மேட் பிக் அண்ட் பவர்புல் எனிமீஸ்!” என்றார் விளக்கமாக.
“இப்பயும் நீங்க என்ன பிரச்சனைன்னு முழுசா சொல்லல. நான் என்ன பண்ணணும்னும் சொல்லல” என்றார் வருணண் சற்று எரிச்சலாக.
“எல்லாமே நான் தான் ஸ்பெல் பண்ணணும்னா, எஸ்.பி.பி யோட பொலிட்டிக்கல் ஸ்டேரடஜிஸ்ட்னு நீ என்ன மேன் கிழிக்கிற? நீயும், தாரா மேமும் என்ன பண்ணுவீங்களோ தெரியாது, இன்னிக்கு இந்த கூட்டணி கட்சிகளை அடக்கி வைக்க என்ன வழின்னு பாருங்க.
மெயின் கன்செர்ன் லோக்கல் அசெம்பிளி எலெக்ஷன் தான். தமிழ்நாட்டுக்கு கவர்னர் தலைவலி தானே. அதை முதல்ல மாத்தலாம். உதயன் வில் பி கூல்ட் வித் தேட்.
அதே மாதிரி விக்ரம் தேசாய்க்கும் என்ன வேணும்னு பார்த்து, செட்டில் பண்ணனும். எல்லாம் பார்லிமெண்ட் அண்ட் கேபினட்க்கு வெளில தான் நடக்கணும்.
அதுக்கு தாரா மேம் தான் சரியான ஆளு. நீ அவங்களுக்கு கொஞ்சம் பீரிஃப் பண்ணிடு. என்கிட்ட பேசணும்னு சொன்னா நானும் பேசுறேன்.
பட் ஐ ஆம் கவுண்டிங் ஆன் யூ டு சார்ட் அவுட் இண்டெர்னல் இஸ்யூஸ். அப்புறம் ஐ நீட் சம் ஒன் ஃப்ரம் எஸ்.பி.பி கேபினட் ஹூ வசு கேன் டிரஸ்ட் ஃபார் தி அதர் ஃபோர் மிஷன்ஸ். இஸ் தேட் கிளியர்?” என்று படபடவென ஆணைகள் பறந்தது சித்தார்த்திடமிருந்து.
ஆனால் சித்தார்த்தின் பரபரப்பிற்கு எந்த எதிர்வினையும் இல்லாமல்,
“ம்ம்ம் ஆர்டர் எல்லாம் பலமா இருக்கே சித்தார்த்! பட் லெட் மி ரிமைண்ட் யூ ஒன் திங் – ஐ ஆம் நாட் வொர்க்கிங் ஃபார் யூ! அதை கூட விடுங்க. நீங்க சொல்ற இந்த பிளான் எல்லாம் வசுந்தராவுக்கு தெரியுமா?” என்றார் வருணன் கேலியாக.
“ம்ப்ச், அதுக்கெல்லாம் டைம் இல்ல வருண். எனக்கு மீட்டிங்க்கு அப்புறம் பேச சரியான ஆப்பர்சூனிட்டி கிடைக்கல. இன் ஃபாக்ட், ஷீ இஸ் பிராபப்ளி மேட் அட் மீ ஃபார் சேஞ்சிங் ஹெர் ஸ்கெட்யூல். ஐ டோண்ட் கேர் அபவுட் தேட்.
ஒன் மோர் திங். நீ பண்றீயான்னு உன்கிட்ட நான் ஆப்ஷன் கேக்கல. பண்ணுன்னு ஆர்டர் தான் போடுறேன்.
ஐ நோ யூ வில்! சோ வெட்டிக்கு என்னை வெறுப்பேத்துறதா நினைச்சிட்டு சொந்தக் காசில சூனியம் வைச்சிக்காத. உங்க கட்சி மீட்டிங் முடிஞ்சதும் நைட் எத்தனை மணியானாலும் எனக்கு அப்டேட் பண்ணு” என்றார் சித்தார்த் காரியத்தில் கண்ணாக.
“பண்ணித் தொலையுறேன், வேற வழி! உதயன் அண்ணாகிட்ட நான் ஏற்கனவே பேசிட்டேன். சோ அவரைப் பத்தி கொஞ்ச நாள் கவலைப்பட வேண்டாம்” என்றார் வருணன் சற்று இறங்கி வந்து.
“குட். கீப் அட் அப்!”
“சித்தார்த், திஸ் இஸ் டூ மச்”
“என்ன மேன், பாராட்டினாலும் எகிறிட்டு வர்ற?” என்றார் சித்தார்த்தும் இலகுவாக சிரித்தபடி.
“ஐ கேன் சென்ஸ். நீங்க இன்னும் ஜெ.என்.யூ ஸ்டூடண்ட் வருண் மாதிரி தான் பாக்குறீங்கன்னு தெரியுது. ஐ ஹேவ் சேஞ்ச்ட் அ லாட்” என்றார் சற்று ரோஷமாக.
அதில் இன்னும் பெரிதாக சிரித்த சித்தார்த்,
“ஐ நோ! வசுந்தரா பி.எம் போஸ்ட்க்கு வந்ததே உன்னோட மாஸ்டர் பிளான் அப்டின்றதும் தெரியும்.
பட் யூ டூ ஆர் ஆல்வேய்ஸ் மை கிட்டோஸ். குளோஸ் டு மை ஹார்ட். அதை மேடத்துக்கிட்ட சொல்ல முடியாது, உன் கிட்ட சொல்றேன் அவ்ளோ தான்!
பார்த்துக்கோ. உன்னைப் பத்தி தெரிஞ்சதால தான் ஐ கேம் டு யூ அண்ட் நாட் தாரா மேம், கீப் தேட் இன் மைண்ட்” என்றார் சற்று கரகரத்த குரலில்.
“ஹ்ம்ம்ம், ஏதோ சொல்றீங்க. நானும் நம்புறேன்” என்ற வருணன்,
“ஹவ் இஸ் வசு? இஸ் ஷி ஓகே? உங்ககிட்ட எப்படி பேசினாங்க?” என்றார்.
அதில் புருவங்களை நெரித்த சித்தார்த்,
“நேத்திக்கு ஷீ வாஸ் ஓகே. இன்னிக்கி ஷீ வாஸ் விசிபிளி அப்செட். ஏன் கேக்குற?” என்றார் யோசனையுடன்.
அதற்குள் சுதாரித்து விட்ட வருணன்,
“ஒன்னும் இல்ல. பல வருசம் கழிச்சு உங்களைப் பார்த்தாங்கல்ல, அந்த ரியாக்ஷன் தெரிஞ்சுக்க தான் கேட்டேன்” என்றார்.
“என்ன மண்ணாங்கட்டி ரியாக்ஷன்? எப்பவும் போல கடிச்சு துப்புற ரியாக்ஷன் தான். உன் பிரெண்ட் கிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும்?
நான் இந்த போஸ்ட்க்கு வந்ததப் பத்தி ஒரே கேள்வி மழை. வேற ஒன்னும் இல்ல” என்று ஒரு நீண்ட பெருமூச்சு விட்ட சித்தார்த், அதற்கு மேல் அதைப் பற்றி பேச விரும்பாமல்,
“சரி நீ வேலையப் பாரு வருண். ஐ’ல் வெயிட் பார் யுவர் கால்” என்று அழைப்பைத் துண்டித்தார்.
‘எல்லாரும் எனக்கு கால் பண்ணி நல்லா ஆர்டர் போடுறாங்க. ஏதோ மேடம் நான் சொல்றத கேட்டு நடக்குற மாதிரி தான்’ என்று புலம்பியபடியே அடுத்த கட்ட வேலைகளுக்குத் தயாரானார் வருணன்.
மகன் அருகே வந்த தேவராஜன்,
“என்ன கண்ணு? எதுவும் பிரச்சனையா?” என்றார் வருணனிடம்.
“இல்லீங்கப்பா. நாம நினைச்சது தான். வசு இன்னிக்கு மீட்டிங்ல நம்ம எஸ்.பி.பி எலெக்ஷன் மேனிஃபெஸ்டோல சொல்லி இருந்தத வைச்சு கவர்ன்மெண்ட் என்ன மிஷன்ஸ் டெலிவர் பண்ண போறாங்கன்னு அனௌன்ஸ் பண்ணிருக்கா.
அது கொஞ்சம் பேக் ஃபயர் ஆகிடுச்சு போல. சமரும், உதயனும் பிரச்சனை பண்ணிருக்காங்க. சித்தார்த் தாரா மேம் கிட்ட பேசி இந்தக் கூட்டணி கட்சி இன்ட்டேர்னல் பாலிட்டிக்ஸ் எல்லாம் சரி பண்ண சொன்னாரு. வேற ஒன்னும் இல்ல”
“ம்ம்ம். இது தலைவலியா தான் போகப் போகுது. ஆட்சி அமைச்சாச்சுன்னு ஒரு பொழுது அக்கடான்னு உட்கார முடியாது கண்ணு. நான் வேணும்னா மணிவாசகம் அண்ணாட்ட ஒரு வார்த்தை பேசட்டுமா?”
“இப்ப வேண்டாம்ப்பா. உதயன் அண்ணா எனக்கு கூப்பிட்டாங்க. அவங்ககிட்ட லேசா கோடு போட்டு காட்டிருக்கேன். பாத்துக்கலாம். நீங்க தாரா மேம் கிட்ட விக்ரம் தேசாய் வாயை அடைக்கிறதுக்கு என்ன வழின்னு பாருங்க”
“ஏன் நீ கூட்டத்துக்கு வரலையா? தாராம்மாட்ட நீயே பேச வேண்டியது தானே?” என்றார் கேள்வியாக.
error: Content is protected !!