Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

58. Shahiabi - தென்றலாய் என் காதல்

தென்றலாய் என் காதல் -19

தென்றல் – 19

“பாவம் தம்பி அந்த பொண்ணு. எதுக்கு அந்த பொண்ணு மேல இப்படி எரிஞ்சு விழறிங்கனு எனக்கு தெரியல”. “ஹ்ம்ம்….என்று பெருமூச்சு விட்டு அந்த பொண்ணு முகம் எப்படி வாடி போச்சு பார்த்தீங்களா?”

“பாவம் மனசு உடைஞ்சு போய்ட்டா” என்று அறையை விட்டு வெளியேறினார் கீதா.



Advertisement

கீதாவின் வார்த்தையிலும் நியாயம் இருப்பதை உணர்ந்தான் விக்ரம்.

“இப்ச்…ஆமாம் நான் ஏன் இப்படி அவளை ஹார்ட் பண்றேன். அவளை பிடிக்கலங்கற ஒரே காரணத்துக்காக இப்படி அந்த பொண்ணு கிட்ட நடந்துக்கறது ரொம்ப தப்பு” என்று அவன் மனசாட்சி அவனை சாடியது.

“போ விக்ரம் போ…நீ அவ கிட்ட போய் மன்னிப்பு கேளு. என்ன தான் இருந்தாலும் அவ ஒரு பொண்ணு.

Advertisement

இப்படி தான் பொண்ணுங்க கிட்ட ஹார்ட்ஸ்சா நடந்துப்பாங்களா?”

Advertisement

“ஒரு சாரி கேட்டா போதும்” என்று விக்ரமை தூண்டியது அவன் மனம்.

தன் மனம் சொல்வதும் சரி தான் என்று ஒத்துக்கொண்டவன் அவளைத் தேடிச் சென்றான்.

“கீதா அந்த பொண்ணு எங்கே” என்று விசாரிதான்.

Advertisement

“பின்னாடி தோட்டத்துக்கு போச்சு தம்பி” என்றார் கீதா.

அடுத்த நொடி அவளைத் தேடிச் சென்றான்.

அமைதியான அந்த மாலை பொழுதில் சூரியன் மறைய காத்துக்கொண்டு இருந்தான்.

அவள் கிழக்கு முகம் கொண்டு திரும்பி இருந்தாள்.

அவளை பார்த்த விக்ரம், அவளிடம் மன்னிப்பு கேட்பதற்காக அவளை நெருங்கினான்.

அவன் காலடி ஓசைக் கேட்டு சற்றே பயத்துடன் திரும்பினாள் சிந்து.

அவள் கூந்தல் காற்றில் பறந்து அடங்கியது.

மேற்கில் மறையும் சூரியனோ அவன் பொன் நிறக் கதிரை அவள் மீது தெளிக்க, மஞ்சள் தேகம் அது தங்கம் என ஜொலித்தது.

அவள் திரும்புவாள் என்று எதிர்ப்பார்க்காத விக்ரம் வியப்பில் ஆழ்ந்தான்.

அவள் பெரிய நீண்ட கண்கள் சுழலும் காந்தங்களாய் அவனை ஈர்த்தது.

அவன் கால்கள் அப்படியே அசைவின்றி நின்றது. அவன் விழிகளோ அவளை விட்டு விழக மறந்தது.

அவன் பார்வையில் தன்னை நாணிக்கொண்டவள் வேறுப்புறம் திரும்பிக்கொண்டாள்.

தன் நிலை தப்பியவன், சாரி…. என்றான்.

சிந்து இதை எதிர்ப்பார்க்கவேயில்லை.

அவள் கண்கள் விரிய, இதற்கு எப்படி வினைப் புரிவது என்று புரியாமல் தவித்து நின்றாள்.

“என்ன?”

“ என்னடா இவன் திட்றதை எல்லாம் திட்டிட்டு இப்போ வந்து சாரி கேக்குறானே நினைக்குறியா?”

“இங்க பார்…உன்ன எனக்கு பிடிக்காது தான். ஆனா அதுக்காக ஒரு பொண்ண கேவலப்படுத்துற அளவுக்கு நான் ஒன்னும் கெட்டவன் இல்ல”.

“ஏதோ உன் மீது கோபம். அதுவும் உன் செயல், திமிர், உன் கர்வம் எனக்கு பிடிக்காததால் தான். மற்றபடி உன் மீது எனக்கு தனிப்பட்ட கோபம் இல்லை”.

“இப்போ நீ பண்ணது தப்பு தான். ஆனா நீ இதைத் தெரியாம பண்ணி இருக்கலாம்.

சோ அதை நான் மன்னிச்சிட்டேன். உன்ன ஹார்ட் பண்ணி இருந்தா சாரி….”

சிறு புன்னகையுடன் “அதுக்காக உன்ன எனக்கு பிடிக்கும்னு எல்லாம் நினைக்காத.

எப்பவும் உன்ன எனக்கு பிடிக்காது. இப்போ மட்டும் இல்ல ஏழு ஏழு ஜென்மம் ஆனாலும் உன்ன எனக்கு பிடிக்காது” என்றான்.

அவள் வலி நிறைந்த புன்னகையை புரிந்தாள். அதை விக்ரம் பார்த்து இருக்க வாய்ப்பு இல்லை. அவள் தான் புறம் திரும்பி நிற்கிறாளே.

அவள் எதுவும் கூறவில்லை என்றதும் அவனுக்கு மேலும் அவள் மீது கோபம் தான் வந்தது.

எவ்ளோ அட்டியூட் பாரு.

இதுக்கு தான் சிட் என்றவன் கோபமாக அங்கிருந்து சென்றான். அவன் காலணி ஓசை தடக் தடக்கென ஒலிக்க மெதுவாய் திரும்பி அவன் செல்வதை கவலையுடன் பார்த்தாள் சிந்து.

“கீதா…ரஞ்சி” எங்க என்றான் விக்ரம்.

அவங்க என்று வார்த்தையை மென்று விழுங்கினார்.

என்ன “கீதா…. அவங்க எங்க” என்றான் சற்றே கடுமையாக.

“அது வந்து…. ரஞ்சிக்கு திடீருனு தலை வலி அதான் இந்த பொண்ண பார்க்க சொல்லிட்டு வீட்டுக்கு போய் இருக்காங்க” என்று கூறி சமாளித்தார் கீதா.

“ஹ்ம்ம்…சரி. நாளைக்கு ரஞ்சிதா வந்ததும் அவங்களை இங்கே வந்து தங்கிவிட சொல்லிவிடுங்கள்.

சும்மா சும்மா அம்மா அடம் பிடிக்குற நேரம் எல்லாம் அவசரத்துக்கு அழைக்க முடியாது” என்றான்.

“ஹ்ம்ம்…சரிங்க தம்பி” என்றார் கீதா.

“அப்புறம் அந்த பொண்ணு பேர் என்ன சித்ராவா, அவங்க மேல ஒரு கண்ணு இருக்கட்டும் யாரையும் இந்த காலத்துல நம்ப முடியல” என்று விட்டு தன் அறைக்கு சென்றான் விக்ரம்.

அவள் காதில் இந்த வார்த்தையும் கேட்டுத் தொலைத்து விட்டது.

ஏற்கனவே அவள் மனம் புண்பட்டு இருந்தது.

இதில் மேலும் ஒரு காயம்…. பாவம் மனதளவில் துடித்து விட்டாள்.

இன்னும் இந்த வாழ்க்கை என்னை எங்கே கொண்டு போய் நிறுத்தப்போகிறது.

அவள் அலைபேசி அச்சமயம் ஒலிக்க சிந்துவின் தங்கை தான் அழைத்து இருந்தாள். “நினைவின்றி ஹலோ சொல்லு துளசி” என்றாள் சிந்து.

“ச்ச…”என்று தலையில் அடித்துக்கொண்டவள் அங்கிருந்து மறைந்தாள்.

விக்ரமின் செவிகளுக்கு சிந்துவின் குரல் ஒலிக்க

“ரஞ்சி வீட்டுக்கு போய்ட்டதா கீதா சொன்னாங்க.

ஆனா அவங்க வாய்ஸ் எப்படி” என்று அறைக்குள் இருந்து சந்தேகத்துடன் வெளியே வந்தான்.

மாடியில் இருந்து எட்டிப்பார்த்து அங்கு யாரும் இல்லாததால் “கீதா…. கீதா….” என்று அவரை அழைத்தான்.

“ஹான்…சொல்லுங்க தம்பி”.

“ரஞ்சிதா வந்தாங்களா” என்றான்.

“இல்லையே தம்பி”. யாரும் வரலையே என்றார் கீதா.

“ஓ….சரி சரி…இல்ல ரஞ்சிதா வாய்ஸ் மாதிரி கேட்டுச்சு சோ அதனால தான் கேட்டேன், நீங்க வேலையை தொடருங்கள்” என்றவன் மீண்டும் திரும்பி சரி “ரஞ்சிதா பிரண்ட் இருந்தாங்களே அந்தப்பொண்ணு போய்ட்டாங்களா என்றான்.

“ஹ்ம்ம்…அவங்க அப்போதே போய்ட்டாங்க தம்பி” என்றார் கீதா “ஹ்ம்ம்…ஓகே” என்று விட்டு மீண்டும் தன்னறைப் புகுந்து கதவடைத்துக்கொண்டான்.

மூச்சு வாங்க அலமாரியின் பின் மறைந்து இருந்த சிந்து வெளியே வந்து பெருமூச்சு விட்டாள். சைகையாலே நான் சென்று வருகிறேன் என்று விடைப்பெற்றாள்.

கீதாவும் கண்களால் சரி என்று வழியனுப்பினார்.

சிந்துவின் சிந்தனை நிலைக்குழைந்து இருந்தது.

அவள் தைரியம், கம்பீரம் எல்லாம் தகர்ந்து இருந்தது.

படப்படப்பான பேச்சுகள் எங்கே?

அவள் நேர்க்கொண்ட பார்வை எங்கே?

அவள் பெண்ணியம் தான் எங்கே?

எல்லாம் அவனை காணும் வரையில் தான்.

விக்ரமின் வருகைக்குப் பின்னால் எல்லாம் மாறிப்போனது.

விக்ரம் திட்டியத்தையும், அவள் மீது நம்பிக்கை இல்லாமல் பேசியதையும் நினைவில் சுமந்தப்படி சாலையில் சென்றுக்கொண்டு இருந்தாள்.

ஒரு கார் வேகமாக அவளை மோத வர ஒரு கரம் அவளைப் பற்றி இழுத்து காத்தது.

“ஆ…..” என்றவள் சுதாரித்து ஆதவ் நீங்க என்றாள்.

என்ன ஆச்சு சிந்து உங்களுக்கு. கார் எதிரே நேருக்கு நேராக வருது, நீங்க என்னடானா கவனிக்காம அதை நோக்கியே போறீங்க, நான் மட்டும் வரவில்லை என்றால் என்ன ஆகியிருக்கும் என்றான் ஆதவ்.

அவன் பேச்சிலே அவன் எந்த அளவிற்கு கோபமாக இருக்கிறான் என்று தெரிந்தது.வலி நிறைந்த புன்னகையாய்” ஹும்….”

“என்ன ஆயிருக்கும் நான் நிம்மதியா செத்துருப்பேன்” என்றாள்.

“சிந்து ஏன் இப்படி எல்லாம் பேசறீங்க?”

“படிச்சவங்க தானே நீங்க” என்றான்.

“ஹ்ம்ம்….(விரக்தியாய்) படிச்சு இருந்தா அவங்களுக்கு எல்லாம் மனசு வலிக்காத ஆதவ். இல்லை அவங்களுக்கு மனசே இருக்கக்கூடாதா” என்றாள்.

“சிந்து என்ன நடந்துச்சு என்று எனக்கு தெரியல ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன் எல்லாம் சீக்கிரம் சரியாகும்”.

“அதுவரைக்கும் உங்களுக்கு பக்கத்துணையாய் நான் இருப்பேன் என்ன நம்புங்க சிந்து” என்றான் ஆதவ்.

“ஹா…. ஹா…ஹா…வென்று கைத்தட்டி சத்தமாக சிரித்தாள்.

அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இப்போது இவள் எதற்கு சிரிக்கிறாள்?”

“அப்படி என்ன இப்போது நான் நகைச்சுவை பேசிவிட்டேன் என்று மனதிற்குள் ஆலோசித்தான்.

சிந்து ஏன் இப்படி சிரிக்கிறீங்க” என்றான்.

“ஆம்பள…ஆம்பள புத்தி” என்றவள் அங்கிருந்து நகர அவள் கையை பிடித்து தடுத்தான்.

நில்லுங்க சிந்து என்றவனை முறைத்து கையை விடுங்கள் ஆதவ்” என்றாள். “இங்க பாருங்க சிந்து உங்க லைஃப்ல நீங்க சந்திச்ச ஆண்கள் எப்படினு எல்லாம் எனக்கு தெரியாது. ஆனா நான் பெண்களை மதிக்கிறவன். எனக்கு ஒரு வாய்ப்புக்கொடுங்கள் “என்றான்.

அவள் மௌனமாய் சிறிது ஆலோசித்தாள்.

“சிந்து ப்ளீஸ். உங்க கூட தள்ளி நடக்க ஒரு வாய்ப்பு கொண்டுங்க போதும்.

உங்கள் நிழலை கூட நான் தீண்ட மாட்டேன். ஆனால் உங்கள் நிழலையும் யாரும் தீண்ட நான் அனுமதிக்கவும் மாட்டேன்”.

“ஒரு நல்ல ஃபிரண்ட்டா நான் இருப்பேன். எல்லா ஆண்களும் தப்பானவங்க கிடையாது சிந்து என்ன நம்புங்க” என்றான்.

அவள் இறுக்கம் சற்று குறைந்தது. அதை உணர்ந்தவன் அவள் கையை விட்டான்.

அவள் மெல்ல காலடி எடுத்து வைக்க மென்மையாய் புன்னகைத்து விட்டு அவனும் அவளைப் பின்தொடர்ந்தான்.

“சிந்து இப்போ உங்களை விட்டு தள்ளி நடக்குறேன். ஆனா கண்டிப்பா ஒருநாள் இல்லை ஒருநாள் உங்கள் கை கோர்த்துக்கொண்டு இதே வீதியில் உன் கணவனாய் வலம் வருவேன்னடி” என்று எண்ணி புன்னகைத்தான்.

“அதை கவனித்துவிட்டவள் ஏன் சிரிக்கிறீங்க” என்றாள்.

“இப்ச்..ஒன்னும் இல்ல” என்றான்.

இருள் நன்கு சூழ்ந்து கொண்டது. அவ்விரவில் தெருவிலக்குகளின் வெளிச்சத்தில் இருவரின் நடை பயணம் காலத்திற்கும் நினைவில் நிற்கும்.

“தென்றலாய் உன் தேகம் தொட்ட என் காதல்.

நீ அறியாமல் உன் உடல் சிலிர்த்ததே நீ அறிவாயோ?

என்றோ ஒரு நாள் தனிமையில் நீ செல்லவே உன் பின்னே தொடர்ந்த என் காதல்.

உயிரில் உணர்ந்த நீ திரும்பி பார்க்கையில்

யாரும் இல்லை என்று எண்ணி நகர்ந்தாயே,

இன்னும் ஒருமுறை ஆழ்ந்து பார்த்து இருந்தாள்

என் காதலின் சுவடுகள் உன் கண்களுக்கு தெரிந்து இருக்கும்.

நெஞ்சம் எல்லாம் வழிந்தோடும் இந்த பொல்லாத காதல் இன்னும் என்னை என்ன செய்யுமோ?

இன்னும் என்னை என்ன செய்யுமோ..

தென்றலாய் உன் தேகம் தொட்ட என் காதல்…. உன் உயிரில் என்றேனும் கலந்தே தீரும்.

அவன் இதயம் பாடி முடிக்க வீடு வந்தது.

தேங்க்ஸ் ஆதவ் என்றவள் ஒரு சிறு புன்னகையை புரிந்து படி ஏறினாள்.

அவன் மனது எந்த அளவிற்கு சந்தோசம் அடைந்தது என்று அவனாய் பிறந்து இருந்தாள் தான் தெரியும்.

தென்றல் மீண்டும் வீசும்….

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!