தென்றலாய் என் காதல் – 32
தென்றல் – 32
“டேய் பிடிங்கடா அவள என்றதும் நால்வரும் அவளை ” துரத்திக்கொண்டு ஓடினர்.
பாவம் இருட்டு, மழை வேறு பொழிய துவங்கியது.
Advertisement
“யாராச்சும் காப்பாத்துங்க…ப்ளீஸ்…. என்ன காப்பாத்துங்க” என்று கத்திக்கொண்டே ஓடினாள் சிந்து.
மழையின் வேகம் அதிகரிக்க தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
அவளால் வெகு தூரம் ஓட முடியவில்லை.
Advertisement
அவளை ஒருத்தன் எட்டி பிடித்தான்.
Advertisement
அவள் முடியை கையோடு சுருட்டி இழுக்க “என்னை விட்டுருங்க டா,உங்க வீட்டுலையும் அக்கா, தங்கச்சிங்க இருக்காங்கல்ல
நீங்க எல்லாம் ஒரு மனுசங்களா சீ”என்று அவன் முகத்தில் காரி துப்பினாள்.
“ஏய்…. உனக்கு எவ்ளோ திமிர்”என்று அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.
Advertisement
ஆ…. வென்று சுழன்று சேற்றில் விழுந்தாள்.
“ஏய்…என்னங்கடா பண்ணிட்டு இருக்கீங்க நடுரோட்ல…
இப்ச்…யாராச்சும் வந்துர போறானுங்க சீக்கரம் அவளைத் தூக்குங்கடா” என்று ஒருவன் பல்லை கடித்துக்கொண்டு கூற, மற்ற மூவரும் அவளை கையை கால்களை பிடித்து தூக்கினர்.
அவள் திமிறினாள். “விடுங்கடா…. காப்பாத்துங்க..!!”என்று கத்த தூரத்தில் ஒரு கார் ஒன்று வந்தது.
“ஏய்…அங்க பாருங்கடா சீக்கிரம் அவளை விடுங்கடா…”என்றதும் அவளை அங்கேயே போட்டு விட்டு ஓடி சென்று இருட்டில் ஒழிந்துக்கொண்டனர்.
அவளுக்கு முகம் கை கால்கள் எல்லாம் அடிபட்டு இருந்தது. அவளால் எழுந்து உதவிக் கேக்க முடியவில்லை.
இருப்பினும் அவள் தட்டு தடுமாறி எழுந்தாள்.
காரை வழி மாறித்தாள்.
(மழை பெய்து கொண்டு தான் இருந்தது )சரியாக முகம் தெரியவில்லை. எங்கும் இருட்டு…”காப்பாத்துங்க.. என்ன என்ன நாலு பேர்…தூரத்துறாங்க. ப்ளீஸ்” என்று கை எடுத்துக் கும்பிட்டாள்.
“சார்” என்றான் டிரைவர்.
“இப்ச்…இங்க பாரு இதெல்லாம் காசு பறிக்க நடத்துற நாடகம். இது மாதிரி நான் எத்தனை பேரைப் பார்த்து இருப்பேன்.நீ வண்டியை எடு” என்றான்.
“சார்…பாவம் சார். அந்த பொண்ண பார்த்தா நல்லப் பொண்ணு மாதிரி தெரியுது. ஒரு வேளை அந்த பொண்ணு சொல்றது உண்மையா இருந்தா, பாவம் சார் அந்த பொண்ணையும் கூட்டிட்டு போய்டலாம்.”என்றார்.
“எனக்கு எல்லாம் தெரியும் நீ வண்டியை எடு”என்று கட்டளையிட சோகம் தோய்ந்த முகத்துடன் “என்ன மன்னிச்சுடு மா” என்று வண்டியை எடுத்தார்.
“அண்ணா…ப்ளீஸ். உதவுங்கள்…”. என்று போகும் காரை பின் நின்று நோக்கியப்படியே கை எடுத்துக்கும்பிட்டு அழுது கரைந்தாள்.
கார்…. சற்று தூரம் சென்றதும் “டேய் வாங்கடா” என்று மீண்டும் அவள் முடியை பற்றி இழுக்க, அவள் பார்வை முழுவதும் தனக்கு உதவாமல் போன அந்த காரின் மீது தான் இருந்தது.
கார் கண்ணாடியை கூட இறக்கி தன் மன்றாடலை கேட்க முடியாத இந்த சமூகத்தை நினைத்து வருந்தினாள்.
மழையில் அவள் கண்ணீரும் கரைந்தது. அவளை தூக்கி தோளில் போட்டு கொண்டு செல்ல அவள் கண்களை மெல்ல மூடினாள்.
மூன்று நாட்களுக்கு பின்….
இருளே நிறைந்து இருந்த இடத்தில் ஒரு புள்ளி வெளிச்சம் தெரிந்ததை போல் அவளுக்கு நினைவு தெளிந்தது.
கண்களைத் மெல்ல திறந்தாள்.
வலி உயிர் போனது.
“ஆ….. அம்மா” என்று கத்தினாள். அருகில் கவலையுடன் அமர்ந்து இருந்த ரஞ்சி பார்த்தவித்து எழுந்து “சிந்து ஒன்னும் இல்ல காம்டௌன்…”என்றாள்.
“என்ன விட்டுருங்க…விட்டுருங்க”என்று என்று கத்தினாள்.
சிந்துஉ…
என்று அவளை கட்டிக்கொண்டு நாங்க இருக்கோம் பயப்படாத, பயப்படாத என்று அவள் தலையை கோதி “ரிளேக்ஸ்…. ரிளேக்ஸ்…”என்று அவளை சற்று சாந்தம் அடையச் செய்தாள் ரஞ்சி.
அவள் கால்களின் ஊடாக உதிரம் வழிந்தது.
“டாக்டர்…திரும்பவும் சிந்துவிற்கு”என்று கத்த, இரண்டு மூன்று செவிலியர்கள் மற்றும் மருத்துவரும் விரைந்து வந்து அவளுக்கு சிகிச்சை அளித்தனர்.
ஆம்…சிந்து அந்த நால்வரால் கற்பழிக்கபட்டிருக்கிறாள்.
சிறிது நேரத்துக்கு பின் சுவற்றை வெறித்து ஆலோசித்தபடி அமர்ந்து இருந்தாள் சிந்து.அங்கு வந்த ரஞ்சி அவள் சிரஞ்சீ ஏற்றப்பட்ட கையை பற்றி அழுத்தினாள்.
“ரஞ்சி” என்று அவள் தோளில் சாய்ந்துக்கொண்டாள்.
“சிந்து…. உனக்கு ஏதாவது நியாபகம் இருக்கா” என்றாள்.
கண்களை இறுக்கி மூடினாள். முன்னாள் வந்தது…அந்த கருப்பு வண்ண மாருதி…அதன் ஒளிரும் சிகப்பு நிற பின் பக்க விலகுகள்.
அவள் “காப்பாத்துங்க”என்று கதறிய காட்சி.
மழை துளிகளின் இடைவெளியில் அவள் அறை மயக்கத்தில் இருக்க, மங்களாக தெரிந்தவன் முகம் மீண்டும் அவள் நினைவில் தோன்றி மறைந்தது.
“ஏய்…. செத்துருவா போல இருக்குடா. போதும்டா விட்ரலாம்.” நன்கு பழக்கப்பட்ட குரல் அது.
“டேய்…மச்சான் இது மாதிரி சான்ஸ் திரும்ப கிடைக்குமா. இவ சூப்பர் ஃபிகர் மச்சான். யாருக்கும் மசியமாட்டா. மத்த ஃபிகருங்க மாதிரி இல்லைடா. பணத்தை காட்டியோ, இல்லை மத்த விஷயத்தை காட்டியோ இவளை மடக்க முடியாது. அதனால தான் இவ கூட நட்பா பழகி இவ நம்பிக்கையை சாம்பாரிச்சேன்.
உங்களுக்கு போதும்னா தள்ளுங்கடா நான் பார்த்துக்கறேன்” என்று மீண்டும் அவள் மீது படற அவள் மிகுந்த போராட்டத்துடன் அவன் முகத்தில் கட்டியிருந்த துணியை பிடித்து இழுத்து விலக்கினாள்.
அவள் கண்கள் விரிந்தது.
“விஷ்வா….”என்று கண்களை மூடி மீண்டும் மூர்ச்சையானாள்.
“என்ன சொல்ற சிந்து நம்ம விஷ்வாவா இதை செஞ்சது என்னால நம்பவே முடியல.”
“ஹ்ம்ம்…. அவனும் அவன் பிரண்ட்ஸ் ராகுல், தேவா, தருண் இவங்க மூனு பேரும் சேர்ந்து” எனும் போதே கதறி அழுதாள்.
“ப்ளீஸ்…அழாத சிந்து. இப்போ உன் உடல் நிலை ரொம்ப மோசமான நிலையில் இருக்கு.இப்போ நீ தான் ரொம்ப ஸ்ட்ரோங்கா இருக்கனும்.உன்ன நம்பி உன் அம்மா தங்கச்சி இருக்காங்க. இங்க பாரு இந்த விஷயத்தை அப்படியே விட்டரலாம்.
இது வெளிய தெரிய வந்த உன் வாழ்க்கையே போய்டும்”என்றாள் ரஞ்சி.
“என்ன ரஞ்சி சொல்ற இவனுங்கல அப்டியே விட சொல்றியா?
இப்போ நான் இவனுங்கள விட்டுட்டா இதே மாதிரி எத்தனையோ பெண்கள் வாழ்க்கையை கெடுத்துருவானுங்க. நான் சும்மா விட மாட்டேன். அவனுங்க மேல கேஸ் போடுவேன்” என்றாள் சிந்து.
“சிந்து அறிவு கெட்ட தனமா பேசாத. ஏதோ நடந்தது நடந்துருச்சு எல்லாத்தையும் கெட்டக் கனவா நினச்சு மறந்துரு.
இதுல இருந்து மீண்டுவா என்றாள் ரஞ்சி. முடியாது ரஞ்சி நான் அவர்களுக்கான தண்டனையை வாங்கி கொடுக்காம விட மாட்டேன்” என்றாள்.
அங்கு விசாரணைக்கு வந்த காவல் அதிகாரியிடம் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினாள்.
ரஞ்சியோ பின் நின்று கையால் வேண்டாம் சொல்வதை கேள் என்று சைகை செய்துகொண்டு இருந்தாள்.
அவள் எங்கே கேட்டாள். அனைத்தையும் ஒப்பித்தாள்.
“சரிமா…. அவனுங்க பேருல நாங்க எஃப். ஐ.ஆர் ஃபைல் பண்றோம். நீங்க விசாரணைக்கு வந்துருங்க”என்று அவர் செல்ல, ஏய் “சிந்து என்னடி நீ எவ்ளோ சொல்லியும் கேக்காம இப்படி பண்ணிட்டியே?
இனி என்ன என்ன நடக்கப்போகுதோ” என்று பயந்தாள் ரஞ்சி.
“என்ன நடந்தாலும் பரவாயில்லை. நியாயம் என் பக்கம் இருக்கு. கண்டிப்பா அது ஜெயிக்கும்” என்று நம்பிக்கையோடு கூறினாள்.
இரவு நல்ல உறக்கத்தில் ரஞ்சிதா இருக்க, யாரோ அனத்துவத்தைப் போல் உணர மெல்ல கண்களைத் திறந்தாள்.
“ஏய்…யாருடா நீங்க…அவளை விடுங்கடா…”என்று அவர்களை தடுக்க ரஞ்சிதாவை தள்ளி விட்டனர்.
சிந்துவின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்திக் கொண்டு இருக்க…ரஞ்சி கூச்சலிட்டாள்.
“யாராச்சும் வாங்க, நர்ஸ்…வாட்ச் மென்…”என்றதும் அங்கிருந்த சிலர் எழுந்து வந்தனர்.
“டேய்…யாருடா நீங்க…எல்லாம் அந்த பொண்ண என்னடா பண்றிங்க என்றதும்” அவளை விட்டு விட்டு ஓடினர்.
சிந்து மூச்சு திணற எழுந்து அமர “அவளைக் கட்டி கொண்டு எத்தனை வாட்டி சொன்னேன் கேட்டியா சிந்து. இங்க பொண்ணுங்க எதையும் எதிர்த்து கேள்வி கேக்க கூடாது.அவனுங்க நம்மை அடிப்பாங்க வாங்கிக்கணும் ஏன்னா நாம பொண்ணு, அவனுங்க க*பழிச்சா ஏத்துக்கணும் ஏன்னா நாம பொண்ணுங்க, அவங்க கொலை பண்ணா சாகனும் ஏன்னா நாம பொண்ணுங்க” என்று ரஞ்சி கதறி அழுதாள்.
“பொண்ணா பொறந்து தொலைஞ்ச பாவத்துக்கு இன்னும் என்ன என்ன எல்லாம் நம்ம வாழ்க்கையில் அனுபவிக்கணுமோ.
விட்டு விடு சிந்து…விட்டுவிடு…எல்லாம் போதும்” என்றாள் ரஞ்சி.
“இல்லை ரஞ்சி நான் சட்டத்தை நம்புறேன். சட்டம் எனக்கான நீதியை வாங்கித்தரும் என்ற நம்பிக்கை இருக்கு நான் இப்போ ஸ்டேஷன்க்கு போகணும் கூட்டிட்டுப்போ” என்றாள்.
“இவ்ளோ சொல்லியும் நீ கேட்கமாட்ட அப்படி தானே. போ போய் உன் நியாயத்தை சொல். உனக்கு நீதி கிடைக்குமான்னு பாக்குறேன். நீ நியாயம் நீதினு நம்புறதால அதெல்லாம் உண்மையாகிறாது.
இங்க அதர்மம் தான் என்னைக்கும் ஜெயிக்கும். நியாயத்துக்கு எல்லாம் இங்க மதிப்பே கிடையாது. போ போய் பாரு ஆனா நான் வரல”என்று திரும்பி அமர்ந்துக்கொண்டாள்.
அப்போதாவது அவள் தன் பேச்சை கேட்ப்பாள் என்ற நம்பிக்கையில்.ஆனால் அவள் எப்போதோ புகார் கொடுக்க ஸ்டேஷன் சென்று இருந்தாள்.
“சொல்லுங்கமா…. என்ன பிரச்சனை.”
“சார்…இந்த பொண்ணு யாருனு தெரியுதா. நம்ம எம்.எல்.ஏ தம்பி விஷ்வா விசயத்துல சம்மந்தப்பட்ட பொண்ணு” என்று வார்த்தையை நீட்டிக்க…
இன்ஸ்பெக்டர்…”ஓ…நீதானாமா அந்த பொண்ணு” என்று அவளை ஏற இறங்கப் பார்த்தான்.
“சும்மா சொல்லக்கூடாது பார்க்க சும்மா பால்கோவா மாதிரி தளத்தனனு தான் இருக்க என்றான்.
அவளுக்கு என்னவோப் போலானது.
சார் இன்னைக்கு அவங்க ஹாஸ்பிடல் வரை வந்து என்ன கொலப்பண்ண பார்த்தாங்க, எப்படியோ நான் தப்பிச்சிட்டேன்”என்றாள் சிந்து.
“ஹ்ம்ம்….”என்று சிரித்துக்கொண்டே வேற என்னமா செய்ய சொல்ற, நீ இப்படி முரண்டு பிடிச்சா பாவம் அவங்களும் என்னத்தான் பண்ணுவாங்க.
இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல இந்த கேஸை வாப்பாஸ் வாங்கு உன் வழியில் கூட குறுக்க வர மாட்டாங்க” என்றான் அந்த காவல் அதிகாரி.
ஏய்…. என்று கோபத்தோடு எழுந்தாள். “நீயெல்லாம் ஒரு மனுசனா இதுவே உன் குடும்பத்துல இருக்குற பொண்ணுக்கு நடந்து இருந்தா சும்மா விடுவியா”என்றாள் சிந்து.
“என் வீட்டு பொண்ணுங்க எதுக்கு அவனுங்க இருக்க இடத்துக்கு போக போறாங்க. …. “என்று சிரித்தான்.
“சீ…”என்று முகத்தை திருப்பிக்கொண்டு நான் எங்க போகணுமா அங்க போறேன். உங்க எல்லார் பதவியையும் தூக்கறேன் என்றவள் நாலடி நடக்க,
கைத்தட்டினான் அந்த இன்ஸ்பெக்டர்.
அவள் திரும்ப…”போடி போ…எங்க போவ கலைக்ட்டர் கிட்டையா? இல்லை சி எம் கிட்டையா?இல்லா நேரா ஜட்ஜ் கிட்டையா?நீ எங்கே போனாலும் சரி உனக்கு நியாயம் கிடைக்காது.
அப்பறம் போற இடதுல மட்டும் உன் மேல கை வைக்க மாட்டாங்களா? பார்க்க அழகா இருக்குறது உன் தப்பு, ஏதோ பையன் ஆசைப்பட்டு தொட்டுட்டான், அதுக்கு இப்போ என்ன பண்றது. உனக்கும் அது எஸ்சைட்மெண்டா தானே இருந்து இருக்கும். அதான் உன்ன கொல்லாம விட்டு இருக்கான் தம்பிக்கு ரொம்ப இலக்குன மனசு சும்மா போவியா…”என்று கூற ஏய் என்று ஆத்திரத்தில் அவனை அடிக்க கை ஓங்க அவளை பிடித்து தள்ளிவிட்டான் இன்ஸ்பெக்டர்.
ஆ…வென்று சென்று விழ அவளை தாங்கி பிடித்தாள் ரஞ்சிதா.
சார் என்ன நடக்குது இங்க, இப்படி தான் ஒரு பொண்ணு கிட்ட நடந்துப்பாங்களா? என்று ஆவேசத்துடன் கத்தினாள்.
அவசரமாக உள்ளே வந்த வழக்கறிஞர்… “சார் இந்தாங்க நாங்க வழக்கை வாப்பஸ் வாங்கிக்கறோம்” என்று கையில் இருந்த மனுவை நீட்டினார்.
அதை வாங்கி படித்தவன் ஏளனமாய் புன்னகைத்தான்.
“போங்க சார்…போய் அந்த பொண்ணுக்கு சட்டம்னா என்னனு சொல்லிக்கொடுங்க. இல்லைனா நியாயம், நீதி, தர்மம்னு உயிரை விட்டுரும்” என்று கூற அவனை முறைந்தப்படி சென்றாள் ரஞ்சி.
என்னடி முறைக்குற அப்பறம் உனக்கும் அதே நிலைமைதான் என்றான்.
“எத்தனை வாட்டி சொன்னேன் சிந்து உன் கிட்ட கொஞ்சம் கூட புரிஞ்சுக்கவே மாட்டேங்குற” என்றாள்.
“இல்லை நான் அவனை விடமாட்டேன்” என்று மீண்டும் ஸ்டேஷன்குள் செல்ல ஓங்கி கன்னத்தில் அறைந்தாள் ரஞ்சி.
“சொல்றேன் உனக்கு புரியாதா. இங்க சட்டம், நியாயம் எல்லாம் அரசியல்வாதிங்க கைலயும் பணக்காரவங்க கைலயும் தான், நாம ஆஃப்ட்ரால் சாதாரண பொண்ணுங்க நம்மளால எல்லாம் இவ்ளோ பெரிய ஆளுமைகளை எதிரித்து சண்டைப் போட முடியாது புரியுதா” என்று அதட்டினாள்.
சிந்துவின் நிலைக்கண்டு பின் கதறி அழுதாள்.
வா…. சிந்து என்று அழைத்து செல்ல பிரம்மை பிடித்ததை போல் இருந்தாள் சிந்து.
தென்றல் மீண்டும் வீசும்….

