தென்றலாய் என் காதல் – 35
தென்றல் – 35
“என்ன ஆச்சு? ஏன் எல்லாரும் வெளிய இப்படி கூட்டமா நிக்குறிங்க? ஏதாவது பிரச்சனையா?”என்று கேட்டான் விக்ரம்.
யாரும் வாயைத் திறந்து பேசவில்லை. தலை கவிழ்ந்து நின்று இருந்தனர். அவன் மனதில் மேலும் பதஸ்டம் தொற்றிக்கொண்டது.
Advertisement
“ஐயோ…விக்ரம் தம்பி” என்று ஓடி வந்தார் கீதா.
“என்ன ஆச்சு கீதா.ஏன் இப்படி பயந்து இருக்கீங்க. என்ன ஆச்சு” என்று கேட்டான்.
“தம்பி அம்மா…அம்மா…”என்று மறுவினார்.
Advertisement
“அம்மா…. க்கு” என்று அவரை தள்ளிவிட்டு ஓடினான் விக்ரம்.
Advertisement
அங்கே மூர்ச்சையாக கட்டிலில் தலையில் கட்டுடன் படுத்து இருந்தார் சுசிலா அம்மா.
“அம்மா…”என்று அழைத்து அருகில் சென்று அமர்ந்து அவரை தூக்கி மடியில் வைத்து “அம்மா உங்களுக்கு என்ன ஆச்சு யாரு என்ன பண்ணா நான் உங்களை பத்திரமா பார்த்துக்கொள்ள தானே சொல்லிவிட்டு சென்றேன்” என்றான்.
“ஆமாம் தம்பி நானும் ரொம்ப கவனமா தான் இருந்தேன்.
Advertisement
அம்மா நல்லா தூங்கிக்கிட்டு தான் இருந்தாங்க திடீருனு என்ன ஆச்சுன்னு தெரியல, என்ன நடந்துச்சுனே புரியல தம்பி அம்மா மாடியில் இருந்து உருண்டு விழுந்துட்டாங்க”என்றார் கீதா.
“வாட்…மாடியில் படியில் இருந்தா?
ஆனா அம்மா எதுக்காக இந்த நேரத்துல வெளியே வரணும். அது தான் எங்களுக்கும் ஒன்னும் புரியல தம்பி”என்றார் கீதா.
“இது தான் நீங்க அவங்களை பார்த்துக்குற லக்ஷனமா”என்று அவ்விடமே அதிர கத்தினான்.
மயக்கத்தில் இருந்த எழுந்த சிந்து கண் விழித்து பார்க்க விக்ரம் வீட்டு முற்றத்தில் காரில் தான் அமர்ந்து இருப்பதை உணர்ந்தாள்.
சீட் பெல்ட்டைக் கழட்டி காரை விட்டு வெளியே இறங்கினாள் சிந்து.
ஆழ்ந்த யோசனையுடன் அனைவரையும் பார்த்தவள் உள்ளே செல்ல அங்கு சுசிலாவின் நிலையைக்கண்டு துடித்து போனாள்.
“ஐயோ…அம்மா உங்களுக்கு என்ன ஆச்சு. நான்…நான்…போற வரைக்கும் நல்லாத்தானே இருந்தாங்க இப்போ.. இப்போ…எப்படி”என்று கதறினாள்.
“கீதா அக்கா என்ன நடந்தது சொல்லுங்க. அம்மா தனியா வெளிய வர சான்ஸ்சே இல்லை. ஏன்னா அவங்களுக்கு இருட்டுனா பயம். எப்படி இது நடந்துச்சு” என்று குரலை உயர்த்தினாள்.
விக்ரம் அவளை பெருமிதத்துடன் பார்த்தான். “யார் இவள், என் அன்னைக்காக இவள் ஏன் இப்படி உருக வேண்டும்.என்னவள் என்பதாலா.
என்ன அக்கா நான் பாட்டுக்கு கேட்டுகிட்டே இருக்கேன். நீங்க என்னடானா இப்படி பொறுப்பே இல்லாம இருக்கீங்க.
இல்லை சிந்து நான்… நான் ரொம்ப கவனதோடு தான் இருந்தேன்.
ஆனா எப்படினு தான் தெரியல” என்று தலையை தொங்கபோட்டுக்கொண்டாள் கீதா.
“எனக்கு என்னவோ டவுட்டா இருக்கு, இங்க தான் சிசிடிவி புட்டேஜ் இருக்குமே. வாங்க போய் பார்க்கலாம்” என்றாள். “எஸ் இதை நானே மறந்துட்டேன்” என்று தன் கைபேசியை எடுத்து அதில் இருக்கும் காணொளியை முன்னோக்கி பார்த்தான்.
அவன் போன பிந்தைய நேரத்தை பார்க்க, “விக்ரம் அங்க பாருங்க சுசிலா அம்மா எழுந்து வராங்க”என்றாள். ஹ்ம்ம்…ஆமாம் சிந்து.
“ஆனா ஏன்?”
“ அம்மா தூங்கினா அவ்ளோ சீக்கிரம் எழுந்திரிக்க மாட்டாங்க. பட் எப்படி அவங்க எழுந்து நடக்குறாங்க”என்றான் விக்ரம்.
“ஹ்ம்ம்…எனக்கும் அதே டவுட் இருக்கு.
இதுக்கு முன்னால்ல பத்து நிமிஷம் முன்னாள் ரெவைண்ட் பண்ணுங்க” என்றாள் சிந்து.
“ஹ்ம்ம்…”என்று அவள் சொன்னதை போல் பத்து நிமிடங்கள் முன்னே செல்ல “ஹே…அங்க பாருங்க யாரோ ஒருத்தன் முகம் மூடிக்கொண்டு அம்மாவின் படுக்கை அருகில் நிற்கிறான்” என்றார் கீதா. அதை நன்கு ஜூம் செய்து பார்க்கையில் உறங்கி கொண்டு இருந்த சுசிலாவை வேண்டும் என்றே எழுப்பி விட்டு இருக்கினான்.
பின் அவரை பின் தொடர்ந்து அவர் செல்லும் பாதையில் கூடவே சென்று அவரை பின்னிருந்து தள்ளி விட்டும் இருக்கிறான்.
அதைக் கண்டவள் இரத்தம் கொதித்தது.
“யாரு விக்ரம் சார் இது. வீட்டுக்குள்ள வந்து கொலை முயற்சி பண்ற அளவுக்கு அம்மாக்கு எதிரி இருக்காங்களா?
ஆனா ஏன்?”என்று நோக்கினாள் கேள்வியாக.
“தெரியல சிந்து. பட் சீக்கிரம் கண்டு பிடிச்சுருவேன்”.
“தம்பி உங்க தொழில்ல எதுவும் போட்டியா காரணமா இப்படி பண்றாங்களோ” என்றார் கீதா.
“ச்ச…ச்ச…இருக்காது. நான் தொழில்ல போட்டியே வச்சுக்கறது இல்லை. என்னா அதுல நான் கிங். மத்த கம்பனிகளுக்கு என்னால என்ன பண்ண முடியுமோ அதை செய்கிறேன்.
சொல்ல போனாள் பல பெரிய பெரிய டீல்ஸ்களை எல்லாம் நான் விட்டு கொடுத்து என் தொழிலில் ஒரு நட்பு வட்டாரத்தை உருவாக்கி இருக்கிறேன். சோ கண்டிப்பா இது தொழில் போட்டியால் செய்தது கிடையாது.”
“எனக்கு ஒருவர் மீது தான் சந்தேகம்.” என்றான் விக்ரம்.
“யாரு தம்பி அது?”
“சிந்து யோசனையாய் யாரு விக்ரம்” என்றாள்.
“இப்போ அதை நீங்க தெரிஞ்சுக்க வேண்டாம்.
நேரம் வரும்போது நானே சொல்கிறேன்” என்றான் விக்ரம்.
“சரி டாக்டர் என்ன சொன்னாரு.”
“பயப்படறதுக்கு ஒன்னும் இல்லை. சின்ன காயம் தான். சீக்கிரம் குணமாகிவிடும்.
எதற்கும் ஒரு முறை ஸ்கேன் செய்து பார்த்துக்கொள்வது நல்லது” என்றார் தம்பி.
“ஹ்ம்ம்…சரி அம்மாவை இனி பத்திரமா பார்த்துக்கொள்ளுங்கள். இது இரண்டாம் முறை. நம் அஜாக்கரதையாக இருக்க கூடாது” என்றான் விக்ரம்.
“ஹ்ம்ம்…”என்று இருவரும் ஒரு சேர கூற, “சிந்து இனி இனி இங்க தான் அம்மாக்கு துணையாக அம்மா ரூம்லயே இருக்கனும்”என்றான்.
“என்னால முடியாது சார். நான் வேலையை ரிசைன் பண்றேன்” என்றாள்.
“ஹ்ம்ம்…நானும் சொல்லனும் நினச்சேன். நீ வேலையை ரிசைன் பண்ணிரு ஏன்னா சொந்த மாமியாரை பார்த்துக்க வேலையில் தான் இருக்கனும் எந்த அவசியம் இல்லை” என்றான் விக்ரம்.
“இப்ச்…என்ன சார் ஜோக்கா” என்றாள்.
“நான் ஏன் ஜோக்கடிக்கப் போறேன்” என்றான்.
“அவள் கையை பற்றினான். சிந்து ப்ளீஸ் இந்த மாதிரி நேரத்துல ஏன் இப்படி பண்ற?”
“என் மேல உனக்கு கோபம் இருக்கலாம். அது நியாயம் தான். ஏன்னா நான் உன் கிட்ட அப்படி நடந்து இருக்கேன்.
ஆனா அது ஏதோ அறியாமையில் செய்துட்டேன். உன் குரலை நேசித்த எனக்கு உன் செயல் கொஞ்சம் அபத்தமாக தெரிந்தது. அதனால் தான் அப்படி எல்லாம் நடந்துக்குட்டேன்.
அதனால நீ அதுக்கு என்ன இப்போ பழிவாங்காதே சிந்து”.
“என் அம்மாவை உன்ன விட யாரால் நன்கு பார்த்துக்கொள்ள முடியும்” என்று மனம் உருக பேசினான்.
சிந்து யோசனையாய் நின்றாள்.
“என்ன சிந்து இன்னும் யோசிக்கிற, இதுக்கு மேலையும் உன்னால முடியாதுனா நீ தாராளமா போகலாம். கீதா நீங்க வேலைக்கு வேற ஆளப் பாருங்க. விருப்பம் இல்லாத யாரையும் நாம் கட்டாயப்படுத்தக் கூடாது” என்று சிந்துவின் முகத்தை பாராது தன் அறைக்கு விரைந்தான்.
“என்ன ரஞ்சிதா நீங்க உங்களுக்கு என்ன ஆச்சு. திடீருனு என்ன லவ் பண்றேன்னு சொல்றிங்க. என்ன என் காதல் தோற்றுவிட்டதுங்கற அனுதாபமோ” என்றான் ஆதவ்.அவள் இதழ் மெல்லிதாய் விரிந்தது.
“ஆதவ்…உங்க மேல நான் ஏன் அனுதாபம் காட்டணும். எனக்கு உங்களை ஆரம்பத்தில் இருந்தே பிடித்து இருந்தது. நீங்களும் என்னை விரும்புகிறீர்கள் என்ற தப்பு கணக்கைப் போட்டு மனதில் உங்களை என் கணவனாக்கி வாழ்ந்து கொண்டு இருந்தேன் ஆதவ்.”
“ஆனா நீங்க தான், சிந்துவை காதலிப்பதாய் சொல்லி என் மனதை சுக்கு நூறாக உடைத்து விட்டீர்கள்”என்றாள் ரஞ்சிதா.
“ரஞ்சி ஐ அம் வெரி சாரி.என்னால உங்க காதலை ஏற்றுக்கொள்ள முடியாது. என்னால சிந்துவை மறக்கவும் முடியாது” என்றான்.
“ஹ்ம்ம்…. சரி. உங்களை யாரு சிந்துவை மறக்க சொன்னா. நீங்க சிந்துவை காதலியுங்க, நான் உங்களை காதலிக்கிறேன். இங்கு யாரிடமும் சம்மதம் கேட்டு காதல் பிறப்பதில்லையே.
சிந்து கிட்ட அனுமதி கேட்டா நீங்க அவங்களை நேசிச்சீங்க இல்லையே. அப்பறம் நான் மட்டும் என்ன விதி விழக்கா” என்றாள் ரஞ்சி.
“ரஞ்சி தேவை இல்லாம நீங்க எதுக்கு வைட் பண்ணனும். என் மனசு எப்போதும் மாறாது.
நீங்க வேற யாரயாவது பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க”என்றான்.
“அதை சொல்ல உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை ஆதவ். உங்க கூட சேர்ந்து வாழ தான் கல்யாணமே தவிர உங்கள் நினைவுகளோடு வாழ என் காதலே போதுமானது. எனக்கு இந்த ஜென்மத்துல உங்க காதல்…. இல்லை இல்லை…நினைவுகள் போதும். அதை என்னிடமிருந்து பறித்துக்கொள்ள உங்களுக்கு எந்த உரிமையுமில்ல ஆதவ்…எந்த உரிமையுமில்ல” என்று அங்கிருந்து அழுதபடி ஓடினாள்.
ஆதவ்…. செய்வதரியாது திகைத்தான்.
“என்ன சோதனை இது.நான் நேசிக்கும் பெண்ணை என்னால் மறக்கவும் இயலவில்லை. என்னை நேசிக்கும் பெண்ணை என்னால் ஏற்கவும் முடியவில்லை.
இரண்டுக்கும் மத்தியில் போராடும் என் வாழ்வு இனி எங்கு சென்று அடையும்” என்று காயும் நிலவை வெறித்தான்.
காலை அனைவருக்கும் இனிய பொழுதாகவே விடிந்தது.
பரபரப்பாக வேலைகள் யாவும் முடிக்கப்பட்டு கொண்டு இருந்தது.
தூக்கத்தில் இருந்து துயில் எழுந்தான் விக்ரம்.
நேற்று இரவு நடந்த அனைத்தும் அவன் நினைவுகளில் ஒரு முறை தோன்றி மறைய அவன் இதழ் தானாக மலர்ந்தது. சிந்து…. என்று தன்னவள் பேரை சொல்லி மகிழ்ந்தான்.
தன்னவள் செவ்விதழ் தந்த சுகத்தையும் உணர்வையும் மனதில் எண்ணி சந்தோசித்தான்.
அவன் கன்னம் வெக்கத்தால் சிவந்தது.
“ஐயோ…. என்ன நான் வெக்கம் எல்லாம் படறேன். யாருக்காச்சும் தெரிஞ்சா என் ரேப்பிடேசன் என்ன ஆகுறது.
எல்லாம் அந்த தேவதையால் தான்.அவளை என் வாழ்நாளில் இழந்துவிடவேக் கூடாது.ஆனா அவளுக்கு என் மேல துளி காதல் என்ன கருணைக்கூட இல்லை” என்று சோர்ந்தான்.
“அப்படி என் மேல அவளுக்கு விருப்பம் இருந்து இருந்தா,அட்லீஸ்ட் இரக்கமாச்சும் இருந்திருந்தா இப்படி நான் சொல்வதை கூட கேட்காமல் போய் இருப்பாளா? என் அம்மாவைக் கூட அவள் என்னால வெறுத்துட்டா. ஹ்ம்ம்…ஆனாலும் எப்படியாவது அவளை என் காதலுக்கு சொந்தக்காரி ஆக்குவேன்” என்று எழுந்து சோகம் தோய்ந்த முகத்தோடு கீழே சென்றான்.
“கீதா அக்கா…. அம்மாக்கு நான் செய்ய சொன்னதை எல்லாம் செய்துவிடுங்கள்” என்றாள் சிந்து.
அவள் குரலை கேட்டவன் மகிழ்ச்சியோடு ஓடினான்.
“சிந்து…நீ போகலையா?” என்று மூச்சு இறைக்க நின்றான்.
அவனை பார்த்து முறைந்தவள் “அக்கா நான் ஒன்னும் அவர்க்காக இங்க இருக்கல சுசிலா அம்மாவை பார்த்துக்கணும் அதுக்காகத் தான்” என்று அவனை கடந்து சென்றாள் சிந்து.
தென்றல் மீண்டும் வீசும்…..

