Skip to content
Post Views: 5,453
“ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை
மு.வ விளக்க உரை: பேதை பெருஞ் செல்வம் அடைந்த போது (அவனோடு தொடர்பில்லாத) அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் வருந்துவர்.”
தேவ ரஞ்சனா முதலில் தயாராகி கீழேச் சென்றிருக்க நினைத்தது போல் கயல்விழியும் காயத்ரியும் அவளை படுத்தி எடுத்திருந்தனர்.
மணமக்களை அழைத்துக் கொண்டு குலதெய்வ கோவில் செல்ல வேண்டும் என காத்யாயினி தான் மகள்களை மிரட்டி தேவாவைத் தப்பிக்க வைத்தார்.
Advertisement
தேவா அறைக்குள் வந்த நேரம் அதிரன் வேட்டி சட்டையில் தயாராகி தலை வாரிக் கொண்டிருக்க கண்ணாடி வழி தன் பின் நின்றவளைத் தான் பார்த்திருந்தான்.
மெலிதான மைசூர் சில்க் புடவைக்குள் பாந்தமாய் இருந்தவளை நோக்கி பின்புறம் கரத்தை நீட்ட அதைப் பற்றி அவன் முன் வந்து நின்றவளின் முகம் மகிழ்ச்சியிலும் பூரிப்பிலும் பிரகாசித்தது.
சந்தனத்தை எடுத்தவன் தானும் வைத்துக் கொண்டு அவளுக்கும் சிறு கீற்றாய் இட்டு விட்டான்.
Advertisement
“என்ன அமைதி ரஞ்சு?”, என்றதில் அவன் அருகில் நெருங்கி நின்றவளாய் சட்டை காலரைப் பிடித்து லேசாய் அவனது முகத்தை தன்புறம் இழுத்தாள்.
Advertisement
அதிரன் புன்னகையோடு ஒன்றும் செய்யாமல் அப்படியே அவளைப் பார்த்த படி நின்றிருக்க நெற்றி முட்டியவளின் பார்வை கணவனை உள்ளுக்குள் இழுத்து பத்திரப் படுத்திக் கொள்வதாய்.
என்னவோ அதிரனை இத்தனை நாட்களை விட பலமடங்கு இப்போது பிடித்தது. கணவன் என்றாலும் அவளது சௌகரியங்களுக்கும் எண்ணங்களுக்கும் மரியாதை கொடுத்து தன்னைப் பெற்றுக் கொண்டான் என்பது அடி மனதில் பதிந்து போயிருந்தது அவளுக்கு.
பெரியவர்கள் பார்த்து நிச்சயிக்கும் திருமணங்களின் முதல் கூடல் பெரும்பாலும் உடல் தேவைக்கானதாக மட்டும் இருப்பது தானே இயற்கை.
Advertisement
புரிதல் அன்பு துணையின் தேவை என்பதெல்லாம் படிப்படியாய் நிகழும் விஷயங்கள் தானே.
ஆனால் அவனின் வேகத்திற்கு தேவாவிற்கு எவ்விதத்திலும் அசௌகரியம் நேராமல் பார்த்துக் கொண்டதோடு அவள் மீதான பித்தை மொத்தமாய் வெளிப்படுத்தியிருந்தான் அதிரன்.
காதலில்லா காமும் காமமில்லா காதலும் எங்கனம் முழுமையடையும்.
அவனின் காதலை நேற்று முழுப்படுத்தியிருந்தான் என்றே தோன்றியது தேவாவிற்கு.
“என்னாச்சு டி?”
“என் கழுத்து மச்சத்தை கூட மிச்சம் வைக்காம காதலிச்சுருக்கீங்க இல்ல?”
“பரவால்ல நைட் தான் மூளை வேலை செய்யாம இருந்தது போல. இப்போ தெளிஞ்சுட்டியா?”
“…”
“அப்போ எல்லாத்தையும் நியாபகப் படுத்தி பார்த்துருக்க?”
“ஐயோ.. ஷ்.. இப்படியா பேசுவாங்க…”
“உன்கிட்ட பேசுறதில் என்ன வரைமுறை? என் அயோக்கியத்தனம் மொத்தமும் தெரிஞ்ச ஒருத்திகிட்ட எதை மறைக்கணும் நான்?”
“சின்னதா ஒரு பாட்டு கேட்கலாமா?”, என்றதில் புருவமுயர்த்தி விழி விரித்தவனாய்,
“ஆர் யூ ஷுவர்?”
“அதி.. டேன்ஸ் மட்டும் தான் நான் சொன்னேன்.”, என்றதில் அதிரன் சிரிக்க அவன் அசந்த நேரமாய் அவனது இதழ்களைக் களவாடிக் கொண்டாள் தேவா.
சில நொடிகளில் விலகியவள் மூச்சு வாங்கி நிற்க அவள் கேட்டதற்காக பாடலை ஒலிக்கவிட்டவன் தேவாவிற்காக கரம் நீட்ட கை வளைவிற்குள் அவளை வைத்த வண்ணம் மெலிதாய் இங்குமங்கும் நகர்ந்த படி இருவருமாய் பாடலில் லயித்திருந்தனர்.
தொடங்கினால் கூசும் இடங்களா
நகங்களே கீறும் படங்களா
தேகம் என்பதென்ன ஓர் ஆடை கோபுரம்
ஆடை நழுவும்போது ஓர் காமன் போர்வரும்
குறும்புகள் குறையாது
தழும்புகள் தெரியாது
கைகள் மேயுது மேயுது ரேகைகள் தேயுது”
“இந்த பாட்டெல்லாம் அந்தளவு நான் கவனிச்சதே இல்ல..”
“இதெல்லாம் பிடிக்கும் ஆனா ரொம்ப கேட்டதில்ல பட் நிச்சயதார்த்தத்துக்கு அப்பறம் எடுத்து வைச்சேன்.
ஆல்வேஸ் டான்ஸ் கம்பேனியன் இருந்தா நல்லாயிருக்கும்னு நினைப்பேன்.
காலேஜோட ஸ்டேஜில் ஆடுற பழக்கமெல்லாம் போச்சு. வரப் போற வைஃப் என்னோட வேவ்லென்த்க்கு இருந்தா நல்லாயிருக்கும்னு தோணும்.
பட் நீ தான்னு டிசைட் பண்ண அப்பறம் இந்த மொமெண்ட் எல்லாம் கண்டிப்பா மிஸ் பண்ணவே கூடாதுனு முடிவு பண்ணிட்டேன்.”
“..”
“பை த வே ஓரளவு தான் ஆடுவனு சொன்ன. பட் நாட் பேட்..”
“நான் எங்கே ஆடினேன். நீங்க இழுத்த இழுப்புக்கு வந்துட்டு இருக்கேன்.”, என்றவள் புன்னகைக்க,
“அது அவ்வளவு ஈசி இல்ல டி திமிரழகி..”
“அப்படியா ஏன்?”
“பார்ட்னரோட ஒரு கனெக்ட் இல்லாம நான் என்ன பண்ணுவேன்னு உனக்கு எப்படி புரியும். நீ முழு மனசோட ஏத்துக்குறதில் தான் அந்த கனெக்ட் கிடைக்கும்.”
“அப்பா அம்மாக்கு அப்பறம் எனக்குனு ஒரு வாழ்க்கை இருக்கும்னு ஒரு சதவிகித நம்பிக்கை தான் எனக்கு இருந்துச்சு அதி..”
“நீங்க எங்கே இருந்து வந்தீங்க. வாழ்க்கையை இப்படி கலர்புல்லா மாத்திருக்கீங்க.
இதுக்கெல்லாம் பதிலுக்கு நான் என்ன செய்ய முடியும்? அன்பை வாங்குற இடத்தில் இருக்குறது ரொம்ப ரொம்ப மூச்சடைக்க வைக்குது அதி.”
“உனக்கு அன்பை கொடுக்குற இடத்தில் நான் இருக்கேன் தான்.
ஆனா பல நேரத்துல அளவுக்கு அதிகமான அன்பெல்லாம் மதிக்கப் படாம தான் போகும்.
ஏன்னால் அந்த அன்பை புரிஞ்சுக்கவே அவங்களுக்கு நேரமெடுக்கும். ஆனால் நீ ஒரு துளி அன்பை கூட இதுவரை வீணாக்கலை மை கேர்ள்.
உன்னைத் தவிர என்னை யாராலேயும் இந்தளவு புரிஞ்சுக்க முடியும்ங்கிறது சந்தேகம் தான்.
இந்த கண்ணு இந்த கை எனக்கு கொடுக்குற உணர்வுக்காக வாழ்க்கை மொத்தமும் நீ போதும் போதும்னு சொல்ற அளவுக்கு காதலிக்க நான் தயாரா இருக்கேன்.”
“ஆனால் எனக்கு போதும்னு தோணவே போறதில்லங்க..”, என்ற நேரம் அறைக் கதவு தட்டப்பட்ட அவசரமாய் விலகியவளை இழுத்து கன்னத்தில் இதழ் பதித்தே அனுப்பினான் அதிரன்.
அனைவருமாய் அமர்ந்து காலை உணவை முடித்து கோவிலுக்கு கிளம்பியிருந்தனர்.
கயல் காயத்ரியின் மாமியார் எதையாவது வேணேடுமென்றே பேசிய படி வருவதைக் கண்டும் காணாமல் இருந்தாள் தேவா.
கோவிலில் தரிசனத்தை முடித்தவர்கள் வீட்டிற்கு வந்த போதே மதியமாகியிருக்க மாலை வரவேற்பிற்கு தயாராக வேண்டிய பரபரப்பு தொற்றிக் கொண்டது அனைவருக்கும்.
தேவா ஒரு அறையில் தயாராகிக் கொண்டிருக்க தனது கோர்ட் சூட்டில் தயாரான அதிரன் தங்களறைக்கு வந்திருந்தான்.
முகூர்த்தப் புடவையைப் போலவே இந்த புடவையையும் அவன் தான் தேர்வு செய்திருந்தான்.
அவன் கருப்பு நிற ப்ளேசரில் இருக்க தேவாவிற்கு இரத்த சிவப்பு நிற டிசைனர் புடவையை எடுத்திருந்தான்.
கதவு திறக்கும் ஓசையில் கை கடிகாரத்தைக் கட்டிய படி திரும்பியவன் தேவாவைப் பார்த்து முகம் மலர்ந்தான்.
அந்த டிசைனர் புடவைக்கு ஏற்ற மாதிரியான தலை அலங்காரமும் நகைகளும் என அவளை மொத்தமாய் மாற்றியிருந்தனர் அழகு நிலைய பெண்கள்.
அவளை அப்படியே நிற்க வைத்து தனது கைப்பேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டவன் அதை திரையின் படமாகவும் வைத்து விட்டு தான் அவளோடு வெளியேறியிருந்தான்.
அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல் மொத்தமும் அதிரனின் குடும்பப் பொறுப்பில் இருப்பது போன்ற நிலை.
வரவேற்பிற்கு வந்தக் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் ஹோட்டல் ஊழியர்கள் திணறித் தான் போயினர்.
தொழில் அரசியல் சொந்த பந்தம் என பெரும் விருந்தனர் கூட்டத்தைப் பார்த்து தேவா அயர்ந்து விட்டாள்.
அதிரன் தொழில் வட்டம் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அனைவரையும் வரவேற்று இரண்டொரு வார்த்தை பேசி புகைப்படம் எடுத்து கீழேயனுப்பிய படி இருக்க ஒரு கட்டத்தில் தேவா வெகுவாய் சோர்ந்து விட்டிருந்தாள்.
அவளிடம் ஒன்றும் கேட்க முடியாத அளவிற்கு கூட்டம் இருக்க சாருகேஷிடம் அவளுக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுக்குமாறு கூறி அனுப்பினான்.
ஒரு வழியாய் வரவேற்பை நல்ல படியாய் முடித்து இருவரும் உணவு உண்ண அமர்ந்த நேரம் ஒரு நிம்மதி பெருமூச்சு தேவாவின் இடத்தில்.
வீட்டிற்கு வந்து தங்கள் அறையை அடைந்த போது பெரும் ஆசுவாசம் இருவருக்கும். தேவா வேண்டா வெறுப்பாக தனது ஒப்பனைகளை களையத் தொடங்க அதிரன் அவளுக்கு உதவி செய்ய ஆரம்பித்திருந்தான்.
சிகை அலங்காகரத்தை கலைத்து முடித்ததே ஏதோ போருக்குச் சென்று வந்தது போன்று இருந்தது அவளுக்கு.
“உன் செலெக்ஷனில் ஒரு பாட்டோட தூங்க போலாம்னு பார்த்தா என்ன டி இப்படி டயர்டா ஆகிட்ட? மெடிசின் எதுவும் போட்டுக்குறியா?”
“வேண்டாம்ங்க. தூங்கி எழுந்தா சரி ஆகிருவேன்.”
“சரி போ புடவையை மாத்திட்டு வந்து படு ரொம்பவே லேட் ஆகிடுச்சு..”, என்றதில் சென்று உடை மாற்றி வந்து படுத்தவளுக்கு உடம்பின் ஒவ்வொரு அங்கமும் வலியெடுத்திருந்தது.
அதிரன் தனதிடத்தில் படுக்க தேவா ஏதோ கூற வருவதற்குள் அவளைத் தன்புறம் இழுத்து அணைத்துக் கொண்டான்.
“எல்லாத்தையும் காலையில் பேசலாம் தூங்கு ரஞ்சு.”, என்றவனின் நெற்றி முத்தத்தில் புன்னகைத்தவள் அவனின் கன்னத்தில் இதழ் பதித்த படி தனது கைப்பேசியை கையில் எடுக்க,
“தூங்க சொன்னால் என்ன பண்ற நீ..”, என்றதில் அவனது வாயில் விரல் வைத்து அமைதிப் படுத்தியவள் பாடலை ஓட விட்டு இன்னுமாய் அவன் மீது சாய்ந்து விழி மூடியிருந்தாள்.
“வெளித் தோற்றம் தரும் காதல் யாவும்
சில நாளே வரும் மாயம் ஆகும்
அடி நெஞ்சில் சென்று குடி ஏறும்
குணம் தானே பல யுகம் வாழும்
நீயாய் எனை இழுப்பதை அணைப்பதை
மனசுக்குள் மனசுக்குள் ரசிப்பேன்”
“உன் வாயால சொல்ல முடியாததுக்கு எல்லாம் பாட்டு ரெடி பண்ணி வைச்சுருக்க நீ?”
“ம்ம்..”
“அப்போ கடைசி வரியும் உண்மை தான்?”
“ஆமா என் கையை ஒவ்வொரு தடவை நீங்க பிடிக்குறதையும்.”, என்றவள் அரைத் தூக்கத்தில் உளர அவளது கரத்தை எடுத்து எப்போதும் போல் மென்மையாய் வருடி அழுத்திக் கொடுத்து புன்னகைத்திருந்தவன் பாடல் முடிந்ததும் கைப்பேசியை அணைத்து விட்டு விழி மூடியிருந்தான்.
மறுநாள் காலை தேவா கீழே செல்லும் போதே கயலின் மாமியார் காத்யாயினியிடம் பேசுவது காதில் விழுந்தது.
“எங்க ஜானு எல்லாம் சரியா ஆறு மணிக்கு முழிச்சு முடிஞ்ச வேலை எல்லாம் பாக்குறாளாம் அண்ணி. புதுசா கல்யாணம் ஆனாலும் நம்ம வே.லையில் நாம சரியா இருக்கணும்ல.”
“..”
“ஆனாலும் உங்க மருமகப் பொண்ணு கொஞ்சம் கர்வம் பிடிச்ச மாதிரி தான் இருக்கா அண்ணி. நேத்து வரவேற்புலயும் பெருசா சிரிக்கவே இல்ல.
நம்ம அதிரன் மாப்பிள்ளை ஏதோ கேட்டதுக்கு கூட வேணுமோ வேண்டாமோனு பதில் சொன்னா..”
“அப்போ நீங்க முழு நேர வேலையா என்னை தான் பர்த்துட்டு இருந்துருக்கீங்க.”, என்றபடி மாமியாரின் அருகில் வந்து அமர்ந்தாள் தேவா.
error: Content is protected !!