Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

46. ஸ்ரீ - பிரியங்களின் நிழலில்

நிழல்-29

பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்

மு.வ விளக்க உரை:
பேதையிரிடமிருந்து பிரிவு நேர்ந்த போது, அப்பிரிவு துன்பம் ஒன்றும் தருவதில்லை, ஆகையால் பேதையரிடம் கொள்ளும் நட்பு மிக இனியதாகும்.

அதிரன் காரை இயக்கிக் கொண்டிருக்க அமைதியாய் அவனது இடக்கரத்தைப் பற்றிய படி அமர்ந்திருந்தாள் தேவா.

அன்று ஒரு நாள் மட்டும் வால்பாறையில் தங்கி வருவதாய் கூறியிருந்தான் அதிரன்.



Advertisement

“நம்ம கெஸ்ட் ஹவுஸ்க்கு நீ கண்டிப்பா வரணும்னு தோணிச்சு ரஞ்சு. அதனால தான் வேற ப்ளான் எதுவும் பண்ணலை.”

“எனக்கு உங்க கூட எங்கே இருந்தாலும் ஓகே தான்.”

“எப்படியும் கயல் காயூ கிளம்பின அப்பறம் நம்ம வீடே கெஸ்ட் ஹவுஸ் மாதிரி தான் இருக்கும்.”, என்றவன் கண்சிமிட்ட தேவா அவன் கூறுவது புரிந்து முகம் சிவந்தாள்.

Advertisement

“என்னோட சின்ன வயசு மெமரீஸ் நிறைய இங்கே தான். அப்பா முதல் முதல்ல வாங்கின ப்ராப்பர்டி.

Advertisement

எல்லா லீவுக்கும் எங்கேயும் போக வேண்டாம் இங்கே போனால் போதும்னு சொல்லுவேன்.

நான் அப்பா அம்மா.. கயலும் காயூவும் குட்டியா. ரொம்ப நல்லாயிருக்கும்.”

“அப்பாவை ரொம்ப மிஸ் பண்றீங்க தானே அதி?”

Advertisement

“அவர் இல்லைங்கிறதை ஏத்துகிட்டால் தான மிஸ் பண்றதெல்லாம்.

எனக்கென்னவோ அவர் என் கூடவே இருக்குற மாதிரி தான் இருக்கு ரஞ்சு. பொதுவா கடைசி குழந்தைக்கு தான ரொம்ப செல்லம் இருக்கும்.

ஆனால் அப்பாக்கு நான் தான் ரொம்ப செல்லம். ஜாடை குணம் எல்லாமே நான் அப்பா மாதிரி.

சொல்லப் போனால் பொண்டாட்டியை எப்படி நடத்தணும்னு நான் அப்பாகிட்ட இருந்து தான் கத்துகிட்டேன்.

அம்மாவுக்காக அவர் எதுவும் செய்வார். அவங்க சின்னதா முகம் சுழிச்சால் கூட அவருக்குத் தாங்காது.

நான் ரொம்ப சைலெண்ட் வேற சோ நிறைய அப்சர்வ் பண்ணிட்டே இருப்பேன்.
அவங்க இரண்டு பேருக்குமான உலகம் ரொம்ப அழகா இருக்கும்.

அதுக்காக சண்டையே போட்டுக்க மாட்டாங்கனு இல்ல. அப்பாவுக்கு சரிசமமா அம்மாவும் ஆர்க்யூ பண்ணுவாங்க.

ஆனால் அடுத்த கொஞ்ச நேரத்தில் இரண்டு பேருமா சேர்ந்து காபி சாப்பிட்டுட்டு இருப்பாங்க. அதில் இன்னும் ஸ்பெஷல் அந்த காபியை சில நேரம் போட்டுக் கொடுக்குறதே அப்பா தான்.

அவரோட பணக்காரத் தன்மையை அம்மாகிட்ட ஒரு சதவிகிதம் கூட அவர் காட்டினதே இல்ல.

அம்மா உடம்பு இப்படி ஆனதுக்கு பாதி காரணம் கூட அப்பாவுக்கு அப்பறம் அவங்களுக்கு வாழுற ஆசை குறைஞ்சுடுச்சு.”, என்ற நேரம் தேவா அவனது கரத்தை அழுந்தப் பற்றியிருந்தாள்.

“அவங்க சொல்லலைனாலும் அது தான் உண்மை ரஞ்சு.

அப்போ எனக்கு கூட அம்மா மேல கொஞ்சம் கோவம். எங்களை எல்லாம் பத்தி நினைச்சு பார்க்க மட்டாங்களானு நினைச்சுருக்கேன்.

ஆனால் இப்போ புரியுது அந்த உறவை யாரும் ஈடுகட்டவே முடியாதுனு. இப்போ நீ இல்லாத ஒரு லைஃப்னு என்னால யோசிக்க கூட முடியலை. அப்போ அவங்களுக்கு எப்படியிருக்கும்.”

“…”

“ரொம்ப செல்லமா இருந்துட்டு திடீர்னு அப்பா அம்மா இரண்டு பேரோட அரவணைப்பும் இல்லாம போனப்போ பேச்சு மொத்தமா குறைஞ்சு போச்சு.

பேசுவேன் எல்லாருக்கும் தேவையான எல்லாமே பண்ணுவேன். அன்பானவனா நடந்துக்குவேன். ஆனால் நான் நானா எங்கேயுமே இல்ல ரஞ்சு.

உன்னைப் பார்த்த முதல் நாளே எனக்கு பார்த்த பொண்ணா தான் உன்னை எடை போட்டேன். எம்ப்ளாயி எல்லாம் சும்மா என்னை நானே சமாதானப் படுத்திக்க தான்.

உன்னைப் பத்தி முதல்ல எனக்கு தோணின விஷயம் ரொம்ப மெச்சூர்ட் ஆன பொண்ணுங்கிறது தான். அதுவே உன்னை ஓகே பண்றதுக்கு போதுமானதா இருந்தது.

ஆனால் உண்மையா ஒண்ணு சொல்லியே ஆகணும்.”

“..”

“நான் நானா, எனக்குப் பிடிச்ச மாதிரி இருக்குறது உன்னோட தான். வாழ்க்கையில் இதுவரை நான் எடுத்த முடிவில் தி பெஸ்ட் அது நீ தான்.”, என்றவனைப் பார்த்து புன்னகைத்தவள் அவன் தோள் சாய்ந்து கொண்டாள்.

வால்பாறையின் வானிலை சாதாரணமாகவே மக்களின் மனநிலையைச் சட்டென மாற்றி விடும் அப்படியிருக்க மனது முழுக்க காதலில் திளைத்திருக்கும் புதுமண தம்பதிகளைப் பற்றி கேட்கவும் வேண்டுமா?

எந்த வித இறுக்கங்களும் அமைதியும் இல்லாத அதிரனும் அவன் பேசுவதை நாள் மொத்தமும் கூட கேட்கத் தயார் என்ற நிலையில் தேவாவும் என அவர்களுக்கான ஒவ்வொரு நிமிடங்களையும் ரசித்திருந்தனர்.

அந்த வீட்டின் பிரம்மாண்டத்தை சிறிதுபடுத்தும் அளவிற்கு இருந்தது கணவனின் அன்பும் காதலும்.

வாய் ஓயாத பேச்சுகள் அத்தனையும் முடிவிற்கு வந்ததென்னவோ நிலவு மகளின் வருகையில் தான். ஒவ்வொருவருக்கும் ஒரு காதல் மொழிகள் இருக்க வாய்ப்புண்டு.

இவர்களுக்கோ ஸ்பரிசங்கள் மட்டுமே மொழிகளாகிப் போனது.
எல்லாரிடத்தில் இருந்தும் தங்களை தள்ளி நிறுத்திப் பழக்கப்பட்ட இருவரின் நெருக்கங்கள் ஒவ்வொரு நொடியும் மென் ஸ்பரிசங்களைக் கொண்டே முழுமையடைந்தது.

நாள் மொத்தமும் அவனுக்குப் பிடித்த அவளுக்கு பிடித்த பாடல்கள் ஓடிக் கொண்டேயிருக்க இதை விட அருமையான பொழுதுகள் யாருக்கு வாய்க்கும்.

இருவருமாய் சோபாவில் அருகருகில் அமர்ந்த வண்ணம் தனது ஒற்றை கையை தேவாவிற்கு பின்புறம் அதிரன் வைத்திருக்க அவன் தோளில் சாய்ந்த வண்ணம் தேவா பேசிக் கொண்டிருந்தாள்.

தனது இடது காலை கால் மேல் போட்டு எதார்த்தமாய் தேவாவின் புறம் நீட்டியிருந்தான் அதிரன்.

பேசிய படியே தேவா அவனது பாதத்தை வருடிய படி அவள் போக்கில் பேசிக் கொண்டிருக்க அவள் தன் கால் பற்றுவதை தடுக்க நினைத்தவனாய் அதிரன் அவளது கரத்தில் கை வைத்தான்.

அதைக் கண்டு கொள்ளாதவளாய் அவள் போக்கில் மிருதுவாய் தடவி லேசாய் அழுத்திக் கொடுத்து என பேசிக் கொண்டிருக்க அவளது சிறு செயல் அவன் மீதான கண்மூடித்தமான அவளின் அன்பை அவனுக்கு உணர்த்துவதாய் இருந்தது.

பொதுவாய் பெண்களை சடங்கு சம்பிரதாயம் என கணவரின் காலில் விழச் சொன்னாலே பெண்ணியம் கொந்தளிக்கும் காலம் இது. ஆனால் எவ்வித சிந்தனையுமின்றி அவள் வருடும் போது அவள் முகத்தில் இருக்கும் இதம் அவனை வசியப்படுத்தியிருந்தது.

அவளையேப் பார்த்திருந்தாலும் ஒன்றும் அறியாதவனைப் போல் தேவாவிடம்,

“காலில் இருந்து கை எடு ரஞ்சு..”

“என் கை உங்க கால் பக்கத்தில் குட்டியா இருக்கு அதி. இல்ல..”, என்றவள் விரல்களை முன்னும் பின்னுமாய் திருப்பினாள்.

“எப்பவுமே இந்த கண் பாதம் இதெல்லாம் பொண்ணுகளுக்கே மட்டும் ஏன் வர்ணிக்குறாங்க.

கரடு முரடான இந்த பாதம் கூட ஒரு வகை அழகு தான?
அதுவும் உங்க கண்ணை பார்த்து பேசவே முடிஞ்சதில்ல என்னால.

அதிலேயும் கண்ணை நேருக்கு நேரா பார்த்துட்டா உள்ளுக்குள்ளே பைத்தியமே பிடிக்குற மாதிரி இருக்கும்.”

“..”

“ஒரு மாதிரி டீப் லுக் உங்களோடது. அதுவும் என்கிட்ட மட்டும்.”, என்றவள் கண்சிமிட்ட அவளது புருவத்தை மெலிதாய் வருடியவன் அவள் பேச்சால் உள்ளுக்குள் தயாராக இருக்கும் மிருகத்தைக் கட்டுப்படுத்த தவித்துக் கொண்டிருந்தான்.

“Women in love எப்படி இருப்பாங்கனு இப்போ தான் டி பார்க்குறேன்.”, என்றவன் இதழ்களைக் களவாடிக் கொள்ள அவளது இடுப்போடு சேர்த்து தூக்கி தன் மீது அமர்த்திக் கொண்டான்.

முதல் நாள் போல் அல்லாது தேவாவிடம் அவனுக்கு இணையான ஆசையும் வேகமும் இருந்தது. அவளுக்கே அவளுக்கான உரிமைப் பொருளின் மீதான அபரிமிதமான அன்பு வெளிப்படத் தொடங்கியிருந்தது.

எவ்வித போதை வஸ்துக்களுமின்றி அவனுக்கான போதையாய் அவளின் வெட்கமும் அவளுக்கான போதையாய் அவனின் வாசனையும் மாறிப் போயிருந்தது.

தேவாவிற்கோ அவனது அணைப்பில் தன்னவனின் இதயத் துடிப்பை கேட்ட படி அவனது வாசனையை தனக்குள் நுகரும் நொடி அறிவும் மனதும் பெரும் அமைதியை அடைந்ததான உணர்வு.

அன்றைய தினம் தேவாவின் பயத்திற்காகவாவது அதிரனிடத்தில் வெகு சில கட்டுப்பாடுகள் இருந்தன.

இன்றோ அவளின் தெளிந்த முகமும் பார்வையும் இன்னுமின்னும் தன்னவளோடு தன்னைப் பிணைத்துக் கொள்வதாய்.

“அந்தக் கண்ணில் அப்படி என்ன தெரியுது உனக்கு?”

“என்னைப் பார்க்கும் போது அதில் எந்தக் குழப்பமும் இல்லாம இவ தான் உங்களுக்குனு ஒரு தெளிவிருக்கே..”

“ரசனைக்காரி டி நீ.”

“இல்லையா பின்ன ஆயிரம் பேர் உங்களை ரசிச்சாலும் அணு அணுவாய் ரசிக்குற ஒருத்தி நான் மட்டும் தான் எப்பவும்.”

“உன்னோட அடிமையாக்கிருவ போலேயே?”

“காதலிச்சவளுக்கு அடிமை ஆகாம காதல் முழுமையாகாதே அதி. எனக்கும் அது பொருந்தும்.”, என்றவளின் கழுத்து மச்சத்தை மிச்சமின்றி விழுங்கிக் கொண்டான்.

தேவாவும் அதிரனும் இத்தனை நாட்களில் பேசிய வார்த்தைகளை விட ஒருவரையொருவர் ரசித்த நொடிகளே அதிகமாய் இருக்க இப்போது முற்றுமாய் ரசித்து முடித்து விட்டதன் விளைவு காதலின் பித்து நிலையாய் பலவாறான காதல் வார்த்தைகள் ஒருவருக்கொருவரின் முக்கியத்துவத்தை மற்றவருக்கு உணர்த்திக் கொண்டிருந்தது.

பொதுவாகவே ஒரு ஆணுக்குத் தேவைப்படும் அனைத்து நேரங்களிலும் பெண் இருப்பாள். ஆனால் பெண்ணுக்குத் தேவையான எந்த நேரத்திலும் ஆண் அவளுடன் இருப்பதே இல்லை.

ஆனால் அதிரன் அறிந்தோ அறியாமலோ தேவா அவனது வாழ்விற்குள் வந்த நொடியிலிருந்து அவளுக்கான அத்தனை நேரத்திலும் அவளுக்காக இருந்தான்.

பெண்ணுக்கு பேராசை என்பதே தனக்கே தனக்கு மட்டுமான அந்த ஒருவன் தானே!

அன்பிற்கு ஏங்கிக் கிடந்தவளுக்கு இலை மறைத்த விருந்தாய் வந்தவனுக்கு அவனது அத்தனை விருப்பத்தையும் தீர்த்துக் கொள்ள தயக்கங்கள் மறந்து மொத்தமாய் தன்னைக் கொடுத்திருந்தாள்.

“எனக்கே பசிக்குது. வாயைத் திறந்து கேட்க மாட்டியா நீ?”, என்றவன் தனது டீசர்ட்டை அணிந்து கொண்டு சமையலறைக்குச் செல்லத் தயாராக தேவா அவனையேப் பார்த்த படி அப்படியே படுத்திருந்தாள்.

“என்ன டி அப்பப்போ அமைதியாயிடுற?”

“There is a differnce in loving a boy and a man. You are my man அதி..”, என்றவள் இரு கரங்களையும் விரித்திருக்க மலர்ந்த முகமாய் அவளது கைகளுக்குள் தன்னை நுழைத்துக் கொண்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!