Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

46. ஸ்ரீ - பிரியங்களின் நிழலில்

நிழல்-33

உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்

மு.வ விளக்க உரை: உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும், தளர்ச்சி வந்த போது மட்கலத்தை அறுக்கும் கருவி போல் அந்த உட்பகை தவறாமல் அழிவு செய்யும்.

மருத்துவக் கல்லூரியின் பத்திரப் பதிவு முடிந்து அந்த வாரத்தில் ஒரு நாள் கல்லுரியில் அனைவருக்கும் புது மேனேஜ்மெண்டை அறிமுகப் படுத்தும் விதமாக ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

கணவனும் இன்று தன்னோடு இருக்கப் போகிறான் என்ற மகிழ்ச்சியிலேயே தேவா தயாராகிக் கொண்டிருக்க அதிரன் அவளைக் கண்டும் காணாமல் தன் போக்கில் தயாராகிக் கொண்டிருந்தான்.



Advertisement

“ஏங்க எப்படியிருக்கு இந்தப் புடவை?”

“நல்லாயிருக்கு ரஞ்சு”, என்றவன் தனது பெல்டை மாட்டிய படி அவளைப் பார்க்காது பதில் கூற வேகமாய் வந்து அவனது கன்னம் பற்றி தன்னைப் பார்க்க வைத்தவளாய்,

“ஒழுங்கா பார்த்து கூட சொல்ல முடியாதா? அதுக்குள்ளே சலிச்சு போயிட்டேனா?”, என்றதில் அதிர்வாய் மனைவியைப் பார்த்தவன் அடக்க மாட்டாமல் சிரித்திருந்தான்.

Advertisement

“எவ்வளவு கோவம் வருது மேடம்க்கு?”

Advertisement

“பேச்சை மாத்தாதீங்க. உண்மை அது தான? இனி உங்ககிட்ட கேட்டால் பாருங்க..”, என்ற நேரம் அறைக் கதவு தட்டபட்ட அதற்கு மேல் இருவருக்கும் பேச வாய்ப்பு கிடைக்காமல் போயிருந்தது.

காரிலும் அவினாஷ் உடன் வந்ததால் இருவரும் அமைதியாகவே இருந்துக் கொள்ள கிடைக்கும் நேரத்திலெல்லாம் கணவனை முறைத்து வைத்தாள் தேவா.

அதிரனுக்கு இந்த விளையாட்டெல்லாம் அத்தனை பிடித்தது. மனைவியைத் தாஜா செய்ய வழியின்றி வேலைகள் இழுத்துக் கொள்ள கல்லூரி வந்ததும் விழா தொடங்கும் நேரமானதால் நேராக ஆடிடோரியத்திற்குச் சென்றிருந்தனர்.

Advertisement

விழாவைத் தொகுத்து வழங்கிய பெண் அதிரனை குத்து விளக்கு ஏற்றுவதற்காக முதலில் அழைக்க அவன் திரும்பி தேவாவைத் தான் பார்த்தான்.

அவளும் மறுக்காது எழுந்து வந்து விளக்கை ஏற்ற அடுத்ததாய் அதிரன் பேசுவதற்காக மைக்கின் முன் நின்றிருந்தான்.

“ஹாய் கைஸ்.”, என்றவன் மாணவர்களை நோக்கி கையசைக்க பெரும் ஆரவாரம் அவர்களிடத்தில்.

“ப்ரோஃபஸர்ஸ் நான் டீச்சிங் ஸ்டாஃப்ஸ் அண்ட் டியர் ஸ்டுடெண்ட்ஸ் எல்லாருக்கும் வணக்கம். நான் அதிரன் நஞ்சுண்டான் உங்க காலேஜோட புது சேர்மன்.

பொதுவாவே காலேஜ் வைப்ங்கிறது ரொம்ப நல்லாயிருக்கும். அதிலேயும் வருங்கால டாக்டர்ஸை இப்படி ஒரே இடத்தில் பார்க்குறது ரொம்ப சந்தோஷம்.

சோ உங்க யாருக்கும் எதுவும் மாறப் போறதில்ல. இன்னும் சொல்லப் போனால் இதுவரை இருந்ததை விட என்னால முடிஞ்ச எல்லா பெட்டர்மெண்ட்டையும் கண்டிப்பா பண்ண முயற்சி பண்ணுவேன்.

அண்ட் முக்கியமா இந்த பங்ஷன் எதுக்காகனு சொன்னால் நான் பேருக்கு தான் இங்கே சேர்மன்.”, என்றவன் தேவாவின் புறம் திரும்ப அவளோ கண்களாலேயே அவனை மிரட்டினாள்.

“!!”

“இவங்க உங்க வைஸ் சேர்மன் மிஸர்ஸ் தேவ ரஞ்சனா அதிரன்.”, என்றதில் எழுந்தவள் அனைவருக்கும் கை கூப்பி விட்டு கணவனின் அருகில் வந்து நின்றாள்.

“இவங்களுக்கு அபீஷியலா இந்த சேர்மன் பொறுப்பை எடுத்துக்க விருப்பமில்லாத காரணத்தால தான் சேர்மனா நான் இங்கே இருக்க வேண்டிய கட்டாயம்.

மத்த படி எல்லா பொறுப்பும் அவங்களோடது தான். நிச்சயமா அவங்க, நீங்க எல்லாரும் ரீச் பண்ற மாதிரியான ஒரு இடத்தில் இருப்பாங்க. அதே நேரம் கொஞ்சம் ஓவர் ஸ்ட்ரிக்ட் சோ பார்த்து இருந்துக்கோங்க.”, என்றவனின் கண்களில் அத்தனை குறும்பு.

அதைப் பார்த்தவளுக்கு அந்த நொடியே முகம் சிவந்து போகத் தயாராக இடம் கருதி புன்னகையோடு சமாளித்து நின்றாள்.

“வெல்கம் ஆன்போர்ட் மிஸர்ஸ் அதிரன்.”, என்றவனுக்கு அவளை நேர்முகத் தேர்வில் தேர்ந்தெடுத்து இதே வார்த்தையைக் கூறிய நியாபம் வந்தது.

“குட் மார்னிங் ஆல். உங்களை எல்லாம் இங்கே மீட் பண்றதில் எனக்கு ரொம்பவே சந்தோஷம்.

அண்ட் தேங்க் யூ சோ மச் சேர்மன் சார். இந்த பொறுப்பை என்னை நம்பி ஒப்படைச்சதுக்கு.

கண்டிப்பா என்னோட பெஸ்டை கொடுப்பேன்னு ரொம்பவே நம்பிக்கை இருக்கு. அதுக்கு உங்க எல்லாரோட ஒத்துழைப்பும் நிச்சயமா எனக்கு வேணும். தேங்க் யூ.”

விழா முடிந்த பின்பும் கமிட்டி மீட்டிங் மற்றும் தலைமை பொறுப்பு ஆசிரயர்களை எல்லாம் பார்த்து பேசுதல் என பொழுது பறக்க அத்தனை பேரிடமும் தன்னை விட்டுக் கொடுக்காது அதை விட தன்னை ஒரு படி அதிகமாகவே உயர்த்திப் பேசி மகிழ்ந்தவனைத் தான் பார்த்திருந்தாள் தேவா.

உனக்கு ஒண்ணும் தெரியாது. இதை கூட ஒழுங்கா பண்ண மாட்டியா? இப்படியெல்லாம் பேசும் கணவர்களுக்கு மத்தியில் அதிரன் மிக உயர்ந்த இடத்தில் நின்றான் தேவாவின் மனதில்.

அதிரன் மதியத்திற்கு மேல் கிளம்பியிருக்க அவனுக்காக எதாவது வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று ஆசைப் பட்டாள் தேவா.

இதுவரை அவனுக்காக அவள் எதுவுமே வாங்கிக் கொடுத்ததில்லை. எந்த வித மெனக்கெடல்களும் செய்ததில்லை.

அதிரன் அவளிடம் அதை எதிர்பார்க்கவும் இல்லை என்று தான் கூற வேண்டும். ஆனால் இன்று அவனுக்காக எதாவது செய்தே தீர வேண்டும் என்ற யோசனையிலேயே வீட்டிற்கும் வந்திருந்தவள் தனது இரவு உடையை எடுப்பதற்காக கபோர்டைத் திறந்தாள்.

திருமணத்திற்கு வாங்கிய பட்டுப் புடவைகளில் இரண்டு பெட்டியிலேயே இருக்க அந்தக் கருப்பு புடவையின் நினைவு அப்போது தான் தேவாவிற்கு வந்தது.

அதை கையில் வைத்து வருடிக் கொண்டிருந்தவள் அதை வைத்து கணவன் கூற வந்ததை புரிந்து கொள்ள முயற்சிக்க அவனது எண்ணம் புரிந்தலில் புடவையிலேயே முகம் புதைத்து தனக்குத் தானே சிரித்துக் கொண்டாள்.

திருமணத்தன்று இரவு அதை கட்டியிருக்கலாம் அது இல்லை எனினும் அவளாகவே அவனுக்குப் பிடித்த நிறம் என்பதற்காக அந்தப் புடவையை கட்டி வந்திருக்க வேண்டும் என்பது தான் அவன் எதிர்பார்ப்பு என்பது இப்போது தான் புரிந்திருக்க தலையில் தட்டிக் கொண்டாள்.

அதிரன் வருவதற்குள் வேக வேகமாய் குளித்து புடவையை மாற்றிக் கொண்டவள் அவனுக்கான இன்றைய பாடலாய் ஒன்றையும் தேர்ந்தெடுத்திருக்க மனம் எங்கும் ஒரு வித படபடப்பு.

என்னவோ இதெல்லாம் அவளுக்குப் புதிதாய் இருந்தது. அதே நேரம் அவனை ஏதோ மயக்குவதற்கு தன்னைத் தானே தயார் படுத்திக் கொள்வதான எண்ணம்.

புடவையை மாற்றி விடலாமா என்று கூட நினைத்தவள் பின் அவனுக்காக தானே பார்த்துக் கொள்ளலாம் என்று அப்படியே அமர்ந்து விட்டாள்.

அதிரன் வரும் நேரம் நெருங்க நெருங்க ஏதோ முதலிரவிற்கு வந்த புதுப்பெண் என்ற நினைவு தான் அவளுக்கு.

ஒரு வகையில் கணவனை நினைத்து தான் இத்தனை பயம். சாதாரணமாகவே பத்து நாள் பட்டினியில் இருந்தவன் விருந்தைப் பார்த்தது போன்று தான் இருக்கும் அவனின் செயல்கள்.

இதில் தானே இப்போது இதையெல்லாம் செய்தால் நாளை காலை தன் நிலை என்ன என்று எண்ணியவளுக்கு சிரிப்பு வந்திருந்தது.

சரியாய் அந்த நேரம் அதிரன் கதவைத் திறக்க கட்டிலில் அமர்ந்திருந்தவளைப் பார்த்து அப்படியே அறை வாசலில் நின்று விட்டிருந்தான்.

அந்தப் புடவையை பார்த்த நொடியே அதை தேவாவிற்காக எடுக்க வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு.

அவர்களுக்கு மட்டுமான நேரத்தில் எனக்காக அதை கட்டிக் கொள் என்று அவன் நேரடியாகக் கூறவில்லை.

அதை விட உண்மையில் அவன் அந்தப் புடவையைக் கொடுத்ததன் அர்த்தம் அவளுக்குப் புரியாமல் போயிருக்க அதன் பின் அதைப் பற்றி எதையும் பேச விரும்பாமல் விட்டிருந்தான்.

ஆனால் இன்று அவனது எண்ணம் புரிந்தவளாய் அந்தப் புடவையை உடுத்தியிருப்பவளை கைகளில் அள்ளிக் கொள்ள பரபரத்தது.

கதவைத் திறந்த படியே அவன் நின்றதில் தேவாவிற்கு பதட்டம் அதிகரித்து விட்டது.

யாராவது வந்தால் என்ன நினைப்பார்கள் என்று எண்ணியவள் சட்டென அவனை உள்ளே இழுத்து கதவைச் சாற்றியிருந்தாள்.

கதவில் சாய்ந்த படி நின்றவன் மனைவியைத் தன் கை வளைவில் பிடித்து வைத்திருக்க தேவாவோ அவனது கண்களை நிமிர்ந்து பார்க்கவே இல்லை.

“மேடம் காலையிலே என்னவோ சொன்னீங்களே?”

“…”

“சலிச்சுருச்சாவா?”

“..”

“இப்போ அதுக்கு பதில் சொல்லட்டுமா?”

“…”

“உன்னை எப்படி பேச வைக்கணும்னு எனக்குத் தெரியும் டி ரஞ்சு..”

“…”

“ஆக்வேர்டா (Awkward) ஃபீல் பண்ணியா?”, என்றதில் பட்டென தலையை நிமிர்த்தியிருந்தாள்.

“அவ்வளவு தான் நீ உன் புருஷனைப் புரிஞ்சுகிட்டது இல்ல?”, என்றதில் தானாகவே அவனை இன்னுமாய் நெருங்கி நின்றாள்.

“புருஷனோட தேவைக்கு மட்டும் நேரம் காலமே இல்ல. ஆனா பொண்டாட்டிக்கு தேவை இருக்க கூடாதா?”

“அதி..”

“உண்மையா சொல்லணும்னால் இத்தனை நாள் இருந்ததை விட பல மடங்கு இன்னைக்கு தான் நான் சந்தோஷமா இருக்கேன்.

எந்தத் தயக்கமும் இல்லாத ரஞ்சு தான் இப்போ எனக்கு வேணும்.”, என்றதில் அவனது இதழ்களைத் தனதாக்கிக் கொண்டவள் அவனோடு நகர்ந்து கட்டிலில் இருந்த ரிமோட்டை அழுத்தியிருந்தாள்.

கருப்பிலே உடைகள் அணிந்தேன்
இருட்டிலே காத்து கிடந்தேன் யட்சனை
போல நீயும் வந்தாய் சரசங்கள் செய்த
படியே சவுக்கடி கொடுக்கும்
யுவனே வலித்தாலும் சுகம்
தந்து சென்றாய்

நடனமும் பாட்டும் கூடலும் என பின்னிரவில் அயர்ந்து போனவர்களாய் கட்டிலில் விழுந்தவர்களுக்கு மனதளவில் இன்னுமாய் நெருங்கி விட்டதைப் போன்று தோன்றியது.

“ஐ லவ் யூ அதி..”

“நாளைக்கு காலேஜ் போகாத நான் பார்த்துக்குறேன் ரெஸ்ட் எடு திமிரழகி.”, என்றவனின் மார்பில் தலை சாய்த்துக் கொண்டவளாய் அவனையேப் பார்த்திருந்தாள்.

“லவ் யூ சொன்னேன்..”

“நானும் இவ்வளவு நேரம் அதை தான சொன்னேன்.”, என்றதில் புஜத்தில் பட்டென அடித்தாள் தேவா.

“இந்த நாளை மறக்கவே மாட்டேன் டி ரஞ்சு.”

“ஐயோ போதும்..”

“ஆம்பளையா நான் ஜெயிச்சுருக்கேன் டி எப்படி பேசாம இருக்க முடியும்.”

“நீங்க சொன்ன மாதிரி தான் நான் நினைச்சேன். ஏதோ உங்களை நான்..”

“…”

“ஆனால் உங்க பார்வை, என்னோட எண்ணம் எவ்வளவு தப்புனு புரிய வைச்சுருச்சு. இப்போ எனக்கு இதெல்லாம் தப்பா தெரியலை.”

“ஆனால் உங்களை மாதிரி இருக்குறவங்க ரொம்ப கம்மி அதி.. எவ்வளவு ப்ராட் மைண்டா இருந்தாலும் இந்த விஷயத்தில் மனைவியோட ஆசைகளை மதிக்குறவங்களா இருப்பாங்களானு சந்தேகம் தான்.”

“ஒரு ஆம்பளைக்குத் தேவையான எல்லாமும் பொம்பளைக்கும் தேவை தான் அதில் இதுவும் அடக்கம். இது எந்த ஆணுக்கும் தெரிஞ்சுருக்க வேண்டிய அடிப்படை. இதில் வெட்கப் படுறதுக்கு எதுவும் இல்ல டி.”

“..”

“இப்போ சொல்லு நீ எனக்கு சலிச்சு போயிட்டியா?”, என்றவனின் வாயை மூடியவளாய் இன்னுமாய் அவனோடு ஒன்றிக் கொண்டாள்.

இருந்த அசதியில் இருவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க தூக்க கலக்கத்தில் தேவா மெலிதாய் அதிரனின் பேரை உளறிய போது அந்த அயர்ந்த தூக்கத்திலும் அவளைத் தன்னோடு பாதுகாப்பாய் அணைத்துக் கொண்டவனாய் அதிரன் தூங்கியதில் தேவாவின் முகத்தில் அழகான புன்னகை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!