“அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும் செல்வச் செவிலியால் உண்டு மு.வ விளக்க உரை: அன்பினால் பெறப்பட்ட அருள் என்றுக் கூறப்படும் குழந்தை, பொருள் என்றுக் கூறப்படும் செல்வமுள்ள செவிலித் தாயால் வளர்வதாகும்.”
அவர்களது வழக்கமான இடத்தில் அமர இளன் இருவருக்கும் பொதுவாய் தலையசைத்து நகர்ந்திருந்தான்.
மதிய உணவு இடைவேளையில் தான் நீணிதியோடு பேசுவதற்கே முடிந்தது.
எப்பபோதும் போல் அவனது எண்ணைப் பார்த்தவள் மெதுவாய் வெளியே வந்திருந்தாள்.
“சொல்லுங்க..”
“எப்படியிருக்க நித்து?”
“நல்லாயிருக்கேனானு தெரியலை ஆனால் கொஞ்சம் நிம்மதியா இருக்குறதா தான் தோணுது..”
“அத்தை எப்படியிருக்காங்க?”
“ம்ம்..”
“எல்லாம் சீக்கிரமே சரியாயிடும் மா. தைரியமா இரு..”
“நீங்க இருக்கீங்கனு ரொம்பவே தைரியம் இருக்குங்க..”
“..”
“ஹலோ?”
“டேக் கேர் நித்து மா.. வைக்குறேன்.”, என்றவனுக்கு அவன் மீதான அவளது அளவு கடந்த நம்பிக்கை எப்போதும் போல் பல வித உணர்வுகளைக் கொடுத்திருந்தது.
சொல்லப் போனால் இது பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்பதே மறந்து விடும் என்று தோன்றியது.
தான் தான் மாப்பிள்ளை என்றே தெரியாமல் இருந்தவளுக்கு இப்படியான ஒரு நம்பிக்கையை எது கொடுத்தது என்று அவனுக்கு இன்னுமே புரியவில்லை.
அதை விட முந்தைய தினம் வீட்டில் நடந்த உரையாடலும் மனக்கண்ணில் தோன்றி மறைந்தது. சாந்தாவை விட்டு விட்டு வந்த பின் அனைவருமாய் அமர்ந்திருக்க இளன் யோசனையாகவே அமர்ந்திருப்பதை கவனித்தவர்களாய், கோபாலும் ஸ்ரீதரும் அவனருகில் வந்து அமர்ந்தனர்.
“இளா என்ன டா யோசனை?”
“ஒண்ணுமில்ல பெரியப்பா..”
“உன்னைப் பத்தி தெரியாதா எங்களுக்கு?”
“இல்ல பா.. இப்படியெல்லாம் நடக்குதேனு தான் இருக்கு. நம்ம வேலன் கல்யாணத்தில் எல்லாம் சின்ன சண்டை சச்சரவு கூட இல்லாம இருந்துதே. கல்யாண பேச்சை தள்ளி வைச்சுருக்கலாமோனு யோசனை..”
“டேய் என்ன பேசுற நீ? நீ அன்னைக்கு அங்கே போயிருக்கலைனாலும் அந்த ஆளு இந்த கல்யாணத்தை நடத்திருக்க மாட்டாரு இளா.
அதுமட்டுமில்ல அந்த பொண்ணு குணத்துக்கு அவ அப்பாவையே எதிர்த்துட்டு உன்னை நம்பி வந்தது என்ன சாதாரண விஷயமா சொல்லு?”
“..”
“எங்க பிள்ளையை நல்லா வளர்த்துருக்கோம்னு பெருமை பட அது ஒண்ணு போதாதா.
அன்னைக்கு அவ்வளவு பயத்திலேயும் மருமக பொண்ணு சொன்னாளே உன்னைப் பத்தி தெரியும்னு,
அப்போ முடிவு பண்ணேன் டா இந்த கல்யாணத்தை என்ன ஆனாலும் நடத்தியே ஆகணும்னு.”
“..”
“அவங்க அம்மா வராம அந்த புள்ளை மட்டும் உன்னோட வந்துருந்தா கூட யாரைப் பத்தியும் யோசிக்காம நான் நம்மளோட கூட்டிட்டு வந்துருப்பேன் டா.
அடிச்சு சொல்றேன் அந்த பொண்ணு மாதிரி உனக்கு வேற வாழ்க்கை கிடைக்கவே கிடைக்காது.”
“உண்மை தான் ண்ணே.. இளா தேவையில்லாத குழப்பத்தை எல்லாம் தூக்கி போடு. நாங்க தான் இந்த வரனை கொண்டு வந்தோம்.
உனக்கும் அந்த பொண்ணுக்கும் பிடிச்சு போய் 20 நாள்ல கல்யாணம் வரை வந்த பின்னாடி எப்படி முறுக்கிகிட்டு வர முடியும்.”
“அந்தாளு பண்ற பாவத்துக்கு பொண்ணுக்கு தண்டனையா சொல்லு. இதையெல்லாம் உன் தலையில் ஏத்திக்காம சந்தோஷமா கல்யாணத்துக்கு தயாராகு. மத்ததெல்லாம் நாங்க பார்த்துக்குவோம்.”
இப்படியாய் பெரியப்பாவும் அப்பாவும் கூறியதில் இளனால் பதிலுரைக்க கூட முடியவில்லை. இரவு வேலனிடம் இதையெல்லாம் கூறிய போது அவனோ,
“டேய் நம்ம வீடு எப்பவுமே பிள்ளைகளுக்கு தான் முதல் ப்ரையாரிட்டி. நீயோ நானோ யாரையாவது காதலிச்சுட்டு வந்து நின்னுருந்தா கூட இவங்க அதை சாதாரணமா தான் எடுத்துகிட்டு இருப்பாங்க.
அவ்வளவு ஏன் ஆரணி வீட்டில் , பையனைப் பெத்தவங்கனு இதுவரை வரதட்சணைனோ இல்ல இது மட்டும் பண்ணிடுங்க அதை மட்டும் பண்ணிடுங்கனோ எதாவது ஒரு வார்த்தை சொல்லிருப்பாங்களா?”
“..”
“ஆரணியே நிறைய தடவை இதை சொல்லி ஆச்சரியப்படுவா. அவங்க அப்பாவும் அம்மாவும் இதை சொல்லிட்டே இருப்பாங்களாம்.
இளா காசு பணத்துக்கு குறையில்ல யாரை பார்த்தும் போட்டியோ பொறாமையோ இல்ல, யார்கிட்டேயும் நம்மளை நிருபிக்கணும்ங்கிற அவசியம் இல்ல. இதெல்லாம் தான் நம்ம பெத்தவங்களோட வாழ்க்கை.
உண்மையா சொல்லணும்னால் நீயும் நானும் பிறந்து வளர்ந்து படிச்சு வேலைக்கு போனதெல்லாம் பார்த்து சந்தோஷப்பட்ட அவங்க இப்போ நம்மளோட இந்த ஃபேஸ்ஆப் லைப்பை நாம வாழறதை பார்த்து சந்தோஷப்பட நினைக்குறாங்க டா.”
“..”
“இப்படி யோசிக்குறதுனால தான் இப்போ நடக்குற குழப்பம் எல்லாம் அவங்களை வேற மாதிரி யோசிக்க வைக்கலை.
ஈகோவோ கௌரவமோ பார்க்க நினைக்கலை.
அவங்களை சொல்றியே இவங்க எல்லாம் எதாவது வேண்டாம்னு யோசிச்சுருந்தாலும் உன்னை கை காலை கட்டித் தூக்கிட்டு போயாவது இந்த கல்யாணத்தை நடத்தி வைச்சுருப்பேன் டா நானு..”, என்றதில் சத்தமாய் சிரித்திருந்தான் இளன்.
“ஏன் டா இப்படி?”
“பின்ன அந்த ஆளு வேற மாப்பிள்ளை பார்த்தா என்ன அழகுல பார்த்துருப்பான்னு உனக்குத் தெரியாதா? குழந்தை டா நீணிதி.. உன் அண்ணனா உன்னைப் பத்தி தெரிஞ்ச ஒருத்தனா சொல்றேன்.
உன்னைத் தவிர அவளை யாராலேயும் சந்தோஷமா பார்த்துக்க முடியாது.
நாங்க எல்லாரும் உங்க இரண்டு பேருக்கும் இருக்கோம். அதை நினைச்சு சந்தோஷ படாம தேவையில்லாததை எல்லாம் யோசிச்சுகிட்டு..”, என்று தோளைப் பற்றி அழுத்திக் கொடுத்தான் மகிழ் வேலன்.
இத்தனை யோசனைகளில் இளன் இங்கு சிக்கியிருக்க சட்டென அவன் அழைப்பைத் துண்டித்து விட்டதில் நீணிதிக்கு என்னவோ போல் ஆகிவிட்டிருந்தது.
கல்லூரி முடியும் வரை நேரத்தை நெட்டித் தள்ளியவள் பேரூந்தில் ஏறிய அடுத்த நொடி அவளே இளனுக்கு அழைத்திருந்தாள்.
தனதிடத்தில் இருந்து புத்தகங்களை அடுக்கி வைத்து விட்டு கிளம்பத் தயாரானவன் கைப்பேசியில் ஒளிர்ந்த எண்ணைப் பார்த்து விழி விரித்தான்.
“ஹலோ?!”
“இப்போ பேசலாமாங்க?”
“ம்ம்..”
“இல்ல மதியானம்.. எதுவும் மூட் அவுட்ல இருந்தீங்களா?”
“இல்லையே ஏன்?”
“அது.. வந்து இல்ல எனக்கு தான் அப்படி தோணிச்சு போல.. அதுக்கு தான் பண்ணிணேன். வைச்சுரட்டுமா?”
“ஒரு நிமிஷம்..”, என்றவன் அருகிலிருந்த ஆசிரியருக்கு கையசைத்து விட்டு வெளியே வந்த படி,
மூவரும் ஆளுக்கொரு புறம் அமர்ந்திருக்க பேத்தியைப் பார்த்தவர் கை நீட்டி தன் புறம் அழைத்தார்.
“எப்படியிருக்கீங்க அம்மம்மா?”
“..”
“மாமா நல்லாயிருக்கீங்களா?”, என்றதற்கு வெறும் தலையசைப்பு மட்டுமே பதிலாய்.
“நீ சொல்றதெல்லாமே சரி சாந்தா. இப்போ அடுத்து என்ன பண்ணலாம்னு இருக்க?”
“உண்மையை சொல்லணும்னால் உங்களோடயும் அம்மாவோடயும் கொஞ்ச நாள் இருக்கலாம்னு தான் நினைச்சேன் கல்யாணத்தை முடிச்சுட்டு..”
“!!”
“இப்போ அந்த எண்ணம் இல்ல. அப்பா என் பேர்ல எழுதி வைச்ச நிலத்தை விக்குறதுக்கு மட்டும் உதவி பண்ணுணே..”
“அதை வித்துட்டு?”
“அந்த காசை பேங்கில் போட்டு வர்ற வட்டியை வைச்சு காலத்தை ஓட்டிக்குறேன். என் ஒருத்திக்கு என்ன செலவாகிற போகுது..”
“இன்னும் சின்ன பிள்ளை மாதிரி பேசிட்டு இருக்க.. மகளுக்கு கல்யாணம் பண்ணிட்டா பொறுப்பு முடிஞ்சுதா?
அடுத்த ஒரு வருசத்துக்கும் சீர் செய்யணும் பிள்ளை பெத்தா பார்க்கணும் அடுத்து அது பிறந்த நாளு நல்லது கெட்டதுனு ஆயிரம் இருக்கு.”
“எம்மவளுக்கு நான் மட்டும் தான் முடிவான அப்பறம் அதெல்லாம் யோசிக்காம இருப்பேனா. நான் பார்த்துக்குறேன்.”
“நீ அவசரப்படுறியோனு தோணுது சாந்தா..”, என்ற தாயைப் பார்த்தவர்,
“உனக்கு நியாபகம் இருக்கா மா? ஆகாஷ்க்கு மூணு வயசு இருக்கும் போது இவர் அடிச்சதில் தலையில் அடிபட்டு எட்டுத் தையல் போட்டதோட வந்து உன்ட்ட விட்டுட்டு போனாரு.”
“!!”
“அன்னைக்கு உன்கிட்ட என்ன எல்லாம் சொல்லி அழுதேன்னு நியாபகம் இருக்கா? அத்தனை வருசமும் வெட்கம் மானம் பார்த்து அமைதியா இருந்த நானே உன்ட்ட எல்லாத்தையும் சொல்லி அழுதேன்.”
“!!”
“அப்பவும் இதே மாதிரி தான் ஒரு பேச்சுக்கு கூட நாங்க எல்லாம் இருக்கோம் டி நீ இங்கேயே இருனு ஒரு வார்த்தைக்கு கூட நீங்க சொல்லல.”
“சாந்தா!”
“இல்ல நான் யாரையும் தப்பு சொல்லல. நீங்களே சொன்னாலும் இப்போ நான் உங்ககூட இருக்குற எண்ணத்திலேயே இல்ல.
ஒரு ஆறுதலுக்கு ஒரு அரவணைப்புக்கு தான் மனசு கிடந்து ஏங்குது.”
“..”
“நேத்து எம்புள்ள சொல்லிச்சு நீ எங்கேயும் போகாதம்மா நான் உன்னை பார்த்துக்குறேன்னு.”
“ஒத்த பிள்ளையா விடாத டி நாளைக்கு அவனுக்குனு துணையில்லாம போயிடும்னு எல்லாரும் எல்லாருக்கும் சொல்றீங்களே?
“அண்ணே எம்மக கல்யாணத்தை விட்டு கொடுத்துறாத தாய் மாமனா சபையை நிறைச்சு கொடு.
மத்தபடி உன்கிட்ட நான் எந்த உதவியும் எதிர் பார்க்கலை. அதே நேரம் அவரோ ஆகாஷோ உன்ட்டயோ அம்மாகிட்டேயோ மரியாதை இல்லாம நடந்தா நீ என்ன வேணாலும் பண்ணிக்கோ எனக்கும் அவருக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது.”
“..”
“இதை மட்டும் பண்ணுணே..”, என்றதில் தங்கையின் கையைப் பற்றிய படி அவரருகில் அமர்ந்து விட்டிருந்தார்.
தாயுக்கும் அண்ணனுக்கும் நடுவில் அமர்ந்திருந்த தாயை தான் பார்த்திருந்தாள் நீணிதி.
“சாந்தா ஏன் டி இப்படியெல்லாம் பேசுற? நீ தனியா நிக்க கூடாதுனு தான் நாங்க இதெல்லாம் சொல்றோம்.
புருசனோட இருந்தா தான் டி பொம்பளைக்கு மதிப்பு.”
“அதுக்கு விலையா என் நிம்மதி வாழ்க்கை எல்லாத்தையும் கொடுத்துரணுமா மா?”
“!!”
“இந்த இருபத்தி ஆறு வருஷமும் மனசும் உடம்பும் மொத்தமா சோர்ந்து போச்சு மா..
இருபது வயசுல தான் உங்க கௌரவத்தை என் தலையில வைச்சீங்க. இப்பவும் அதையே ஏன் மா பண்றீங்க?”, என்றதில் அவர் அழுதுவிட சாந்தாவோ இனி இழப்பதற்கு எதுவுமில்லை என்பதான முகத்தோடு அமர்ந்திருந்தார்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.