Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Maruvak Kaathal Kondaen

மருவக் காதல் கொண்டேன்-27

முகம் புன்னகையில் மலர்ந்து, மகிழ்ச்சி வாசம் எங்கும் வீச, ஒய்யாராமய் நடந்த வந்த உமையாள், வசீகரனின் அருகில் வந்தவள், தலையை மட்டும் அவனின் தோளில் சாய்ந்து, அமர்ந்து கொண்டாள்.

எப்போதாவது ஆறுதல் தேடும் நேரங்களில், அவள் இப்படி செய்வாள் என்பதால், இன்றைக்கு நடந்த நிகழ்வின் தாக்கம் அவளுக்கு இன்னும் உள்ளது என்று புரிந்து கொண்ட, வசேகரனும் ஆதரவாய் அவளின் தலையில் தடவி கொடுத்தவன்,

“என்னடா பேசிட்டியா, என்ன சொல்றாரு உன்னோட வீ….ட்….டு… கா.…ர…ர்..” என்று கிண்டல் செய்ய, அவன் சொல்லிய விதத்தில் சிரித்தவள்,

“எவ்ளோ சீக்கிரம் இங்க வர முடியுமோ, அவ்ளோ சீக்கிரம் வரேன்னு சொன்னாரு” புன்னகையுடனே சொல்ல, இப்போது பாலா,



Advertisement

“உமா நான் உன் மேல கோவமா இருக்கேன்” என்று முறுக்கி கொள்ள, உமையாளோ சாவகசமாக அவனை பார்த்தவள்,

“ஏன் அண்ணா, ஏன்” என்று கேட்க, அவனோ,

“பின்ன என்ன உமா, உன்னோட லவ் அஹ நீ எங்க யார் கிட்டயுமே சொல்லல இல்ல” என்று சொல்ல, சாய்ந்திருந்த வசீகரனின் உடலும் இறுக, அவனின் கோவமும் புரிய,

Advertisement

“இல்ல அண்ணா, உங்க கிட்ட சொல்லி இருந்தா, நீங்க ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் எனக்காகனு கிருஷ்ணா கிட்ட போய் பேசி இருப்பீங்க, ஆனா எனக்கு அதுல விருப்பம் இல்லை, நான் எப்படி இயல்பா கிருஷ்ணா மீது காதல் வயப்பட்டானோ, அதே மாதிரி தான் கிருஷ்ணாவும் தானா காதலை உணரனும்”

Advertisement

என்று ஒரு தீவிரத்துடன் சொல்ல, அவளின் மனது இருவருக்குமே புரிய பாலா அமைதியாக, வசீகரன் சற்று தளர்வானான்.

ஒரு வேளை தன் பாப்பு, தன்னிடம் அவளின் காதலை சொல்லி இருந்தால், அவள் சொல்லியபடி நிட்சயம், தான் கிருஷ்ணாவிடம் சென்று பேசி இருப்பேன், என்பதும் தெரிந்து தான் இருந்தது வசீகரனுக்கு.

அது மட்டும் இல்லாமல், ஒரு காதலியாக அவளின் எதிர்பார்ப்பும் அவனுக்கு புரிந்தது. தன் கண்களுக்கு இன்னும் குழந்தையாய் தெரியும் தன் பாப்பு, வளர்ந்து குமாரியாகி விட்டாளோ???????

Advertisement

ஒரு தாயின் வாஞ்சையோடு உமையாளை பார்த்தவன், அவளின் புன்னகை முகத்தை பார்த்து, “இறைவா இந்த சந்தோஷம் இவளுக்கு எப்பவும் நிலைக்கனும்” என்று வேண்டி கொள்ளவும் தவறவில்லை அவன்.

சற்று நேரம் மூவரும் அமைதியாக இருக்க, உமையாள் இருக்கையில் இருந்து எழுந்தவள், வசீகரனை பார்த்து,

“கரன் நான் போய் அங்கிள் அஹ பார்க்கிறேன், நர்ஸ் பார்த்துபாங்க தான், இருந்தாலும் அங்கிள் என்ன எதிர் பார்த்து கிட்டு இருப்பாங்க, காலையில் இருந்து இன்னும் அங்க போகவே இல்லை”

என்று சொன்னவள், இருவருக்கும் பொதுவான ஒரு தலையசைப்புடன் விடைபெற்று கிருஷ்ணாவின் வீட்டிற்கு கிளம்ப, வாசலில் மைக் வந்து அவளுடன் சேர்ந்து கொண்டார்.

அதன் பிறகு நேரம் இறக்கை கட்டி பறக்க, அன்று மாலை தன் அப்பா வரும் நேரமும் நெருங்கி விட,
சற்று முன்பு தான் கிருஷ்ணாவின் வீட்டில் இருந்து கிளம்பி வசீகரனின் வீட்டிற்கு வந்து இருந்தாள்.

அவர்கள் வந்ததும், அவர்களிடம் விஷயத்தை சொல்லி, தெளிவாக பேசி, நாளை தான் இவர்களை அழைத்து கொண்டு, ஜெயவர்மரை பார்க்க எண்ணம் கொண்டு இருந்தாள் உமையாள்.

காதல் மட்டும் என்றால் உமையாள் தைரியமாக சொல்லி இருப்பாள். ஆனால் திருமணமே முடிந்து இருக்க, அதை எப்படி எடுத்து கொள்வார்களோ என்ற பயம் தான் அவளுக்கு.

யாருக்கும் மன வருத்தம் இல்லாமல், எல்லாம் நல்ல விதத்தில் நடக்க வேண்டுமே என்ற கவலையோடு, இன்னும் கிருஷ்ணா வரவில்லை என்ற கவலையும் சேர்ந்து கொண்டது அவளுக்கு.

 

 

[the_ad id=”6605″]

 

வசீகரனும், பாலாவும் வரவேற்பறையில் தான் அமர்ந்து இருந்தனர். தனக்கு எதிரில் அமர்ந்திருக்கும் தன் பாப்புவின், அழைப்புறுதலை கவனித்து கொண்டு தான் இருந்தான் வசீகரன்.

வாயிலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்க, இருவரில் ஒருவர் வந்து விட்டனர் என்று வசீகரனுக்கும், உமையாளுக்கும் புரிய, உமையாள் பரபரப்புடன் எழுந்தாள்.

உமையாளின் அருகில் வந்த வசீகரன், அவளை தோளோடு பக்கவாட்டில் அணைத்து,

“எல்லாம் சரியா நடக்கும்” என்று சொல்ல, உமையாளும் ஒரு ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்தவள், தெளிவுடன் வசீகரனை பார்த்து தலையசைத்து விட்டு வெளியே விரைந்தாள்.

அவளை தொடர்ந்து வசீகரனும், பாலாவும் வெளியே செல்ல, காரில் இருந்து இறங்கினர்,
வசீகரனின் பெற்றோர் .

நீண்ட மாதங்கள் கழித்து பார்க்கும், அவர்களை அணைத்து, வசீகரனும், உமையாளும், தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, பாலா வாய் வார்த்தைகளால் வெளிப்படுத்தினான்.

உள்ளே போகும் முன், வசீகரனின் அம்மா,
“இன்னும் ஏன் வாசலில் நிக்குறிங்க, வாங்க உள்ளே போகலாம்” என்று பொதுவாக அழைக்க,
வசீகரனோ,

“இல்லமா மாமா வராரு, அதான்” என்று இழுக்க, உமையாளையும், வசீகரனையும், ஒரு நம்பாத பார்வை பார்த்தவர்,

“என்ன பண்ணி வச்சி இருக்கீங்க, ரெண்டு பேரும்” என்று இடுப்பில் கை வைத்து முறைப்பாக கேட்க, ஒருவரை ஒருவர் பார்த்து கொண்ட இருவரும், ஒரே மாதிரி முழிக்க, ஜெயந்தி அம்மா இன்னும் அவர்களை முறைக்க, வசீகரன் தான்,

“மாதாஜி, எப்போ பாரு எங்களை சந்தேகப்பட வேண்டியது, போங்க போய் பிரஷ்அப் ஆகிட்டு, அப்பாவையும் கூட்டிகிட்டு ஹாலுக்கு வாங்க, கொஞ்சம் பேசணும்”

என்று உரைக்க, இருவரையும் சந்தேகத்துடனே பார்த்து கொண்டே சென்றார் அவர்.

அடுத்த சில நிமிடங்களில் இன்னொரு கார் வந்து நிற்க, அதில் இருந்து இறங்கிய நபர்களை பார்த்து வாயை பிளந்த பாலா, வசீகரனை நெருங்கி,

“என்னடா உன்னோட டிரைவர், உமா அப்பாக்கு பதில் வேற யாரையோ தப்பா கூட்டிகிட்டு வந்துட்டான் போலவே”

என்று இன்னும் அதிர்ச்சியில் இருந்து வெளிவராமல் பேச, அவனை ஒரு பார்வை பார்த்த வசீகரன்,

“இவங்களை கூப்பிட போனது மைக்கேல்” என்று அழுத்தம் திருத்தமாக சொல்ல, அவன் சொல்ல வருவதை புரிந்து கொள்ள முயன்றவாறே பாலா,

“எது அந்த கோத்ரேஜ் பீரோவா, அவரு உமா வீட்டுக்கு பக்கத்து வீடுன்னு தானே சொன்ன, அப்போ அவரு எப்படி தப்பா கூட்டிகிட்டு வந்து இருப்பாரு”

என்று தனக்குத் தானே யோசிப்பவன் போல வாய் விட்டே சொல்லியவன், அப்போது தான் வசீகரன் சொல்ல வருவதை புரிந்து கொண்டு, முன்னினும் அதிக அதிர்ச்சியுடன்,

“டேய் அப்போ…. அப்போ……, இவரு தான் உமா ஓட அப்பாவா” என்று கேட்க, வசீகரனும் ஆமாம் என்னும் விதமாக தலையசைக்க, பாலா அவசரமாக அவர்களை திரும்பி பார்த்தான்.

அங்கோ உமையாள் அவளின் தந்தையை அணைத்தபடி ஏதோ பேச, அவரின் அருகில் அவளின் பாட்டி, வசீகரன் வீட்டை அளவிட்டவாறே நிற்க, மைக்கேலோ சற்று தள்ளி விறைப்பாக நின்று கொண்டிருந்தார்.

உமையாள் அவளின் தந்தையிடம் பேச நேரம் கொடுத்து விட்டு சற்று தள்ளி, பாலாவுடன் நின்று கொண்டிருந்த வசீகரனும், இப்போது அவர்களை நெருங்கி அவர்களுடன் உரையாட ஆரம்பித்து விட்டான்.

உமையாள் அவளின் தந்தையுடன் பாலாவின் அருகில் வந்தவள், இருவருக்கும், அறிமுகப்படுத்தி வைக்க, பாலாவோ “பே பே” என்று முழித்து கொண்டு இருந்தான்.

பாலாவின் அதிர்ச்சியை பார்த்த, உமையாளின் அப்பா, தன் மகளை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு வீட்டிற்கு உள்ளே சென்றார்.

ஒரே நாளில் எத்தனை அதிர்ச்சியை தான் அவனும் தங்குவான். ஒரு முழு வெள்ளைகாரரை தன்னுடைய அப்பா என உமையாள் அறிமுக படுத்தினால் அவனும் தான் என்ன செய்வான்.

 

[the_ad id=”6605″]

 

அதிலும் உமையாளின் வெள்ளைக்கார பாட்டி, கேவலமாக இவனை பார்த்துவிட்டு செல்ல, பாலா அவரை பார்த்து இன்னும் தான் மிரண்டு விட்டான்.

அவர்களுடன் உள்ளே நுழைந்த உமையாள் பாலாவை பார்த்து கொள்ள சொல்லி, வசீகரனுக்கு கண் ஜாடை காட்டி விட்டு சென்றாள்.

அவர்கள் செல்லும் வரை பொறுத்திருந்த பாலா, வசீகரனிடம்,

“ஏன்டா பாவி அன்னைக்கு, உங்க அத்தை லவ் ஸ்டோரி சொன்னியே, உங்க மாமா ஒரு பாரினர்னு சொன்னியா, அதும் அவங்க உங்க அளவுக்கு வசதி இல்லையின்ற மாதிரி சொன்ன, அப்போ இவரு வெளிநாட்டு ஏழையா மச்சான்”

என்று கேட்க, பாலாவின் கேள்வியில் சிரிப்பு பொத்து கொண்டு வர, இப்போது சிரித்தால் பாலா இன்னும் கடுப்பாகி விடுவான் என்பதால், தனது சிரிப்பை உதடுகளுக்குள் பதுக்கியவன்,

“டேய், பாப்பு அப்பா, யூ.எஸ்ல இருக்குற ரொம்ப பழமையான செல்வாக்கான குடும்பத்தை சேர்ந்தவரு, நம்மளை விட பல மடங்கு வசதிடா அவங்க”

என்று சொல்ல, பாலாவோ இன்னைக்கு தனக்கு நெஞ்சு வலி கண்டிப்பா வர போகுது என்னும் எண்ணத்துடன் வசீகரனை பார்க்க, அவனோ தொடர்ந்து,

“அவங்க எங்களை விட பணக்காரங்க, அதனால் தான் சொந்தகாரங்க அத்தையை வச்சு பிளான் பண்ணி இவரை மடக்கிட்டோம்னு தாத்தாவை தப்பு, தப்பா பேச என்னோட அப்பாக்கு, இப்படி எல்லாரும் பேசற மாதிரி வச்சிட்டாங்கன்னு அத்தை மேல கோவம், அதும் இல்லாம பொதுவா பாரினருனாலே நம்ப ஆளுங்களுக்கு நல்ல எண்ணம் இல்லை”

என்று அன்று சொல்லாமல் விட்டது, எல்லாத்தையும் இன்று விளக்கமாக சொன்னான் வசீகரன்.

அன்று உமையாள், அந்த ஸ்டீவுடன் அமெரிக்க ஆங்கிலத்தில் உரையாடியது, “டேட்டிங்” பற்றி விளக்கியது, என்று எல்லாம் நினைவு வந்தது பாலாவுக்கு.

“டேட்டிங்” அவள் அங்கு பார்த்து, வளர்ந்த கலாச்சாரம். அதனால் தான், சாதாரணமாக எடுத்துக்கொண்டு பதில் அளிக்க முடிந்து இருக்கிறது என்பதும் புரிந்தது பாலாவுக்கு.

மைக்கேல் நிழலாய் உமையாளின் பின் தொடர்ந்தன் காரணமும் புரிய, அதை உறுதி செய்து கொள்ளும் விதமாக,

“அப்போ மைக்கல்” என்று இழுக்க, அவனின் எண்ணத்தை உறுதி செய்யும் விதமாக வசீகரனும்,

“ஆமாடா அவரு சின்ன வயசுல இருந்தே பாப்புவோட பாடி கார்ட்” என்று சொல்ல, பாலா கொஞ்சம் வருத்தத்துடன்,

“இதை எல்லாம் ஏன்டா முன்னாடியே சொல்லல” என்று கேட்க, வசீகரனோ,

“பச் இல்ல பாலா, பாப்பு பாட்டி ரொம்ப ஸ்ட்ரிக்ட், ஒரு பெரிய சாம்ராஜ்ஜியத்தையே இவ தான் பார்த்துக்கணும், அதனால் நிக்கிறது, நடக்குறது, பேசுறது, சிரிக்கிறதுனு எல்லாமே இந்த அளவுல தான் இருக்கணும்னு, ஒரு ரோபோ மாதிரி தான் அவளை ட்ரெயின் பண்ணாங்க, அவ இப்படி ஓடி, ஆடி, பேசி சிரிக்கிறது எல்லாமே அங்க அவளோட வீட்டுலையும், இங்க வரப்போ மட்டும் தான், அவளை பத்தி தெரிஞ்சி, நீங்க சரியா பேச மாட்டிங்களோனு அவளுக்கு ஒரு எண்ணம், அதான்டா”

என்று விளக்க, அதை யோசனையுடனே கேட்ட பாலா,

“அப்போ உமா பிமெயில் (female) வெர்ஷன் ஆப் கிருஷ்ணா வாடா” என்று கேட்க, வசீகரன்,

“அப்படி மொத்தமா சொல்லிட முடியாது, பாப்பு அவங்க அம்மா கூட இருக்கும் போது, இங்க இருக்கும் போது அவள் அவளா இருக்கா, ஆபீஸ்ல தான் அவ இறுக்கமா இருக்கிற மாதிரி முகமூடி போட்டுப்பா, ஆனா கிருஷ்ணா எல்லா இடத்திலையும் ஒரே மாதிரி இறுக்கமாவே தான் இருப்பான், அந்த இறுக்கம் அவனோட முகமாவே மாறி போயிடுச்சு”

என்று இருவருக்கும் அவன் அறிந்த வகையில் வித்தியாசத்தை சொல்ல, பேசிக்கொண்டே இருவரும் வரவேற்பறைக்கு வந்து இருக்க, அங்கு உமையாள் மட்டும் தனியாக அமர்ந்து இருந்தாள்.

இவர்களும் சென்று அவளின் அருகில் அமர, மூவருமே வேறு வேறு சிந்தனையில் இருக்க, பேசிக்கொள்ளாமல் அமைதியாய் இருந்தனர்.

சற்று நேரத்தில் ஒவ்வொருவராக வர ஆரம்பிக்க, பெரியவர்கள் அனைவரும் கூடி விட்டனர் வரவேற்பறையில்.

அனைவரையும் உமையாள் முக்கியமாக பேச வேண்டும் என்று மட்டும் சொல்லி அழைத்திருக்க, அனைவரும் யோசனையுடனே வந்து அமர்ந்தனர்.

உமையாள் ஒரு முடிவுடன் பேச எழுந்திருக்க, அப்போது வாசலில் அரவம் கேட்டு, அங்கு பார்க்க, கலைத்து போன தோற்றத்துடன் கிருஷ்ணா நின்று இருந்தான்.

மீண்டும் பார்க்கவே முடியாதோ என்று தவித்த தன் தலைவனை மீண்டும் நேரில் பார்த்ததும், தவிப்பும், மகிழ்ச்சியும் சரி விகிதத்தில் போட்டிபோட, அவனை தான் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தால் உமையாள்.

உணர்ச்சிகளின் பிடியில் இருந்தாலும், அவனின் தலை முதல் கால் வரை பார்வையால் ஆராய்ந்து, அவனுக்கு ஒரு ஆபத்தும் இல்லை என்று உறுதி செய்து கொள்ளவும் தவறவில்லை அவள்.

பேச எழுந்த உமையாளின் பார்வை ஒரு இடத்திலே நிலையாக இருக்க, யோசனையுடன் அனைவரும் அவளின் பார்வை சென்ற திசையை பார்க்க, வசீகரனும், பாலாவும் அடுத்த நிமிடம் கிருஷ்ணாவிடம் விரைந்து இருந்தனர்.

இருவரும் அவனை ஆரத்தழுவி, தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, கிருஷ்ணாவும் அவர்களை தழுவி கொண்டான்.

மற்றவர்கள், அவர்களை புரியாமல் பார்க்க, உமையாளோ கால்கள் வேரோடி இருக்க, நின்ற இடத்தில் இருந்தே அவர்களை ஏக்கத்துடன் பார்த்து கொண்டிருந்தாள்.

ஒருவழியாக நண்பர்கள் மூவரும் உள்ளே வர, வசீகரனும், பாலாவும் இருக்கையில் அமர, கிருஷ்ணா அமராமல், தன் உமையாளின் அருகில் சென்று, அவளின் கைகளோடு தன் கையை கோர்த்து கொண்டான்.

தன்னவளின் தவிப்பை முழுமையாக உணர்ந்தவன், இத்தனை பேர் இருக்கும் போது அணைத்து ஆறுதல் சொல்ல முடியாமல், கையோடு கை கோர்த்து, தன் இருப்பை தன்னவளுக்கு உணர்ந்த முயன்றான்.

அவனின் முயற்சியை புரிந்து கொண்டவளாக உமையாளும், அவனின் கைகளில் ஒரு அழுத்தம் கொடுத்து விட்டு, அவனின் கையை இறுக்கி பிடித்து கொண்டாள்.

 

[the_ad id=”6605″]

 

வசீகரனின் பெற்றோருக்கு கிருஷ்ணாவை தெரியும் என்பதால் அவர்கள், “இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது” எனும் விதமாக பார்த்தனர்.

உமையாளின் அப்பா மற்றும் பாட்டி, இவர்களின் செய்கையில், புரிந்தும், புரியாமல் பார்த்து கொண்டிருந்தனர்.

தன்னை மீட்டெடுத்து கொண்ட உமையாள், அவளின் அப்பா மற்றும், அவரின் பாட்டியை பார்த்து,

“டாட் அண்ட் க்ரானி, திஸ் இஸ் வம்சி கிருஷ்ணா” என்று அறிமுகப்படுத்தியவள், கிருஷ்ணாவிடமும்,

“கிருஷ்ணா இது என்னோட அப்பா, இது பாட்டி” என்று அறிமுகப்படுத்த, கிருஷ்ணா எந்த விதமான முக பாவனையும் காட்டாமல், அவர்களை பார்த்து வணக்கம் சொன்னான்.

பொதுவாக வெளிநாடுகளில் பெற்றோர், பிள்ளைகள் அனைவரும் ஒரே குடும்பம் என்றாலும், ஓவ்வொருவரையும் தனி, தனி மனிதர்களாக தான் பாவிப்பார்கள்.

காதல், கல்யாணம் இதில் எல்லாம் பிள்ளைகளை பெற்றோர் கட்டாயப்படுத்துவதும் கிடையாது.

இருந்தாலும் பெற்றோர் என்ற முறையில், தம் மக்கள் தேர்ந்தெடுத்த துணை அவர்களுக்கு பொருத்தமானவர்களா என்று ஆராய்ந்து, அது தவறு எனும் போது சுட்டி காட்டவும் தவறுவதில்லை.

அதையே பின்பற்றி, உமையாள் சொல்ல போவதை யூகித்து, “இவன் தன் பெண்ணுக்கு பொருத்தமானவனா” என்று உமையாளின் அப்பா, கிருஷ்ணாவை பார்வையாலே அளக்க, அவரின் முகத்தில் ஒரு நிறைவான புன்னகை.

உமையாள் தன் தந்தையை பார்த்து, “டாட் நாங்க ரெண்டு பேரும் லவ் பண்றோம்” என்று நேருக்கு நேராக, எந்த விதமான பூச்சுகளும் இல்லாமல், கிருஷ்ணாவின் மீதான தன் காதலை சொல்லியே விட்டாள்.

உமையாளின் குரலில், அவளின் காதலை உணர்ந்து கொண்ட அவளின் தந்தை, அவள் காதலை சொல்லிய அடுத்த நொடி, இருக்கையில் இருந்து எழுந்தவர், உமையாளை அணைத்து, மகிழ்ச்சி மீதுறும் குரலில்,

“என்னையும், உன்னோட அம்மாவையும் மாதிரி, நீயும் உன்னோட காதலை கண்டுப்பிடித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி”

என்று வாழ்த்தியவர், கிருஷ்ணாவுக்கும் கை கொடுத்து தன் வாழ்த்தை தெரிவித்தார்.

அவர் மீண்டும் சென்று இருக்கையில் அமர, இன்னும் நின்று கொண்டே இருந்த தன் மகளை யோசனையுடன் பார்த்தார்.

இன்னும் ஏதோ இருக்கு என்பது புரிய, அவளின் தயக்கம் அவருக்கு “என்ன வர போகிறதோ” என்ற எண்ணத்தை விதைக்கவும் தவறவில்லை.

வசீகரனின் பெற்றோருக்கு, கிருஷ்ணாவை பற்றி தெரியும் என்பதால், “இது எல்லாம் எப்படி சாத்தியம்” எனும் விதமாக தான், பார்த்து கொண்டிருந்தனர்.

இன்னும் சொல்ல வேண்டிய செய்தி இருப்பதால், அதை எப்படி சொல்ல என்று உமையாள் யோசிக்க, கிருஷ்ணாவே எல்லாரையும் பொதுவாக பார்த்து,

“அப்பாக்கு லாஸ்ட் மன்த் ஹார்ட் அட்டாக், மேஜர் ஆப்ரேஷன், அவங்க ஆப்பேரஷனுக்கு முன்னாடி எங்க மேரேஜ் அஹ பார்க்க விருப்பப் பட்டாங்க, அவங்க ஹெல்த் கண்டிஷனால தவிர்க்க முடியல, நாங்க மேரேஜ் பண்ணிகிட்டோம்”

என்று சொல்ல, அங்கு பெருத்த அமைதி. வசீகரனின் பெற்றோரோ, அவர்களின் காதலையே எப்படி சாத்தியம் என்று யோசித்து கொண்டிருக்க, கல்யாணமே ஆன செய்தி, அவர்களுக்கு பேரதிர்ச்சி தான்.

உமையாளின் தந்தை சற்று நேரம் யோசிக்க செய்தார். தன் மகளின் காதலை அவள் சொல்லிய போதே உணர்ந்து கொண்டாலும், ஒரு தந்தையாக மீண்டும், அதை உறுதி செய்து செய்து கொள்ள விரும்பினார் அவர்.

தன் மகளை அழைத்து, தன் அருகே அமர்த்தி கொண்டவர், அவளிடம்,

“வேற வழி இல்லாம கல்யாணம் நடந்ததால் அவரை விரும்புறேனு சொல்றியா, இல்லை உண்மையாவே அவரை விரும்பினதால், அந்த சூழ்நிலையில் கல்யாணம் பண்ண சம்மதிச்சியா”

 

[the_ad id=”6605″]

 

என்று கேட்க, “வேறு வழி இல்லாமல் இந்த கல்யாணத்தை தன் மகள் அங்கீகரிக்கிறாளோ” என்ற, அவரின் எண்ண போக்கை புரிந்து கொண்ட உமையாள், அவரிடம்,

“கிருஷ்ணா மேல காதல் இருந்ததால் தான், அவர் கட்டுன தாலியை ஏத்துகிட்டேன் டேட், இந்த மேரேஜ் அப்போ நடந்து இருக்கலைனா, நான் உங்க கிட்ட பேசி எங்க மேரேஜ் அஹ நடத்தி வைக்க சொல்லி இருப்பேன் ”

என்று அவர் கேட்க ஆசைப்பட்ட பதிலையே சொல்ல, கொஞ்ச நேரம் யோசித்தவர், ஏதோ பேச வந்த தன் தாயை, பேசவிடாமல், தெளிவான முகத்துடன்,

“ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நடந்தாலும், முழுக்க முழுக்க காதலை அடிப்படையா வச்சி கல்யாணம் நடந்து இருக்கு, அதனால் இந்த கல்யாணத்தை ஏற்று கொள்வதில், எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை, உங்க வீட்டுலயும் பேசி நெஸ்ட் என்ன பண்ணாலும்னு முடிவு பண்ணுவோம்”

என்று அறிவிக்க, உமையாள் சந்தோஷ மிகுதியில், தன் தந்தையை அணைத்து கொண்ட அவளின் பார்வை முழுக்க, தன்னவனின் மீது தான்.

காதல் கொள்வோம்….….…

பி.கு:

அமெரிக்கர் எப்படி தமிழ் பேசினாருன்னு எல்லாம் கேட்கப்பிடாது மக்களே….

கதைக்காக அவரை தமிழ் பேச வச்சாச்சா ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!