உண்மையிலே இந்தக் கதை எனக்கு ரொம்பவும் சேலஞ்சிங்கான ஒன்னு. முதல இந்தக் கதை அவுட்லைன் 25 எபிசோடுக்கு தான் வந்தது. பிறகு அதை எழுத ஆரமித்தபோது 130 அத்தியாயங்களாக மொத்தம் பதிமூன்று மணிநேர வாசிப்பு நேரமாக வரவும் எனக்கு இருந்த மிகப்பெரிய சவாலே இந்த நெடிய கதையை எங்கும் சுவாரசியம் குன்றாமல் சொல்ல வேண்டும் என்பதே. மிக்க நன்றி... என் கதைகளில் ஒன்றிரண்டை தவிர அனைத்தும் underrate செய்யப்பட்டது தான். அதிலும் இந்தக் கதை நான் முதலில் எழுதிய தளத்தில் most underrated story. அதனாலே இதை வேறொரு தளத்தில் பதிப்பிக்க வேண்டும் என்று நினைத்தேன். தற்போது இதை அமேசானில் பதிவேற்ற எண்ணுகிறேன். அதற்கான வேலைகள் சென்றுகொண்டிருக்கிறது.நன்றி??நிறைய கதாப்பாத்திரங்கள்.....
பலதரப்பட்ட வெவ்வேறு வகையான குடும்ப, வேலை, சந்தர்ப்ப சூழ்நிலைகள்......
எல்லாவற்றையும் சேர்த்து ,சுவாரஸ்யம் (ஜிட்டு) குறையாமல் , தெரியாத விசயங்களை சொல்லி எங்களையும் ஒரு நீண்ட பயணம் செய்த திருப்தி படுத்திய ஓர் அழகான பதிவு.....
நிறைய இடங்களில் ,படிக்கும் போதே சிரித்து , ஒரு சில தவிர மற்ற நேரங்களில் புன்னகையுடன் படிக்க வைத்த உங்கள் எழுத்து நடை அருமை...
மென்மேலும் நிறைய எழுத,பேர் பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜி...... ? ? ? ?