தமிழ் நாவல் ரைட்டர்ஸ் போட்டிக் கதை மதுஷாவின் இல்லறம் துறவறமாகுமோ எனது பார்வையில். தணலன் மனைவி கங்கா இறந்து போன பின் மகள் நிறையை தன் அக்கா தேவாவின் உதவியுடன் வளர்த்து வரும் அவனுக்கு ஒரு சூழ்நிலை காரணமாக கங்காவின் தங்கை யமுனாவை திருமணம் செய்து வைக்கிறாள் அவன் அக்கா தேவா. ஆனால் இந்த திருமணத்தை மகள் நிறை எதிர்க்கிறாள். இந்த சூழலில் இரண்டாம் திருமணம் செய்த உடனே தணலனுக்கு உடல் நிலை மோசமாகி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அவனை யமுனா பார்க்க விடாமல் உறவினர்கள் தடுக்கிறார்கள். அதனால் அம்மா வீட்டிற்கு வருகிறாள் யமுனா. யமுனாவின் நிலை தெரிந்து தணலன் மாமியார் வீட்டிற்கு வந்துவிடுகிறான். அப்பாவை பிரிய முடியாமல் மகள் நிறையும் பாட்டி வீட்டிற்கு வந்துவிடுகிறாள். இதற்கிடையில் தணலன் அக்கா தேவா கணவனை பிரிந்து இருப்பதால் அவனுக்கு வேறு திருமணம் செய்ய முயற்சி நடக்கிறது. அதனால் கணவன் உடன் சேர்ந்து வாழ முடிவு செய்கிறாள் தேவா. தணலனும் மகள் நிறையும் யமுனாவை ஏற்றுக் கொண்டார்களா என்பதை விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் தந்திருக்கிறார். சில திருப்பங்களுடன் கதையை நிறைவு செய்திருக்கிறார். வாழ்த்துகள் மா.