Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமிட்ட மையலே - டீஸர்

Advertisement

Anu Jey

Well-known member
Member
ஹாய் நட்பூஸ்🤩🙏

இப்போ கொஞ்சம் பிஸியா இருக்கேன்... கதை இன்னும் எழுதவே ஆரம்பிக்கலை... ஆனால் சீக்கிரமே எழுத ஆரம்பிச்சிடுவேன்...

சரி, கதையில இருந்து ஒரு டீஸர் பார்ப்போமா🤩🤩🤩


டீஸர் 1:

"அம்மா, அம்மா ஐஸ்கிரீம் வேணும்" என்று காரில் அமர்ந்தபடி அடம்பிடித்துக் கொண்டிருந்தாள் நான்கு வயது சுட்டிப் பெண் ஆதிரா.

"ஆது! போன வாரம் தானே ஒரு ஐஸ்கிரீம் சாப்பிட்ட... அடிக்கடி சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது கிடையாது" என்று சற்று கண்டிப்புடன் கூறினாள் அவளின் தாய், நக்ஷத்ரஉமையாள்.

"எனக்கு ஐஸ்கிரீம் வேணும் அம்மா?" என்று அந்த முன் மாலை குளிர் காற்று விசீக்கொண்டிருந்த பொழுதில் அடம்பிடித்தாள் ஆதிரா.

'இவள் இப்படி எல்லாம் அடம் பிடிக்க மாட்டாளே' என்று நக்ஷத்ரா தீவிரமாக யோசிக்க, ஆதிராவோ அடித்த பிள்ளை போல் வீலென்று அழத் தொடங்கினாள்.

"உமையா பாப்பா, அதான் குட்டித் தங்கம் கேட்குதுல... வாங்கித் தா ஆத்தா! எப்படி அழுகுது பாரு" என்று கார் கண்ணாடி வழியாக, பின் சீட்டில் அமர்ந்திருந்த நக்ஷத்ராவைப் பார்த்து அக்கறையுடன்
கூறினார் நேசமணி.

நேசமணி, கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக அவ்வீட்டின் டிரைவராக பணிபுரிகிறார். பின் அறுபதுகளில் இருக்கும் அவரை சிறிய வயதில் இருந்தே தாத்தாவென்று கூறியே பழக்கப்பட்டார்கள் நக்ஷத்ராவும், ரூபாவும்.

சற்று நேரம் யோசித்தவள், "சரிங்க தாத்தா... கடைப் பார்த்து வண்டியை ஓரமா நிறுத்துங்க" என்று முடித்தாள். முன்பெல்லாம் துருதுருவென சுற்றித் திரிந்த சில்வண்டாய் இருந்த நக்ஷத்ரா இப்போதெல்லாம் ரத்தின சுருக்கமாக மட்டுமே பேசுகிறாள். அதுலயும் ஆண்கள் மீது நம்பிக்கை இல்லாதவளின் ஆண்கள் வட்டம் அவளின் தந்தை அருணாச்சலாமும், நேசமணியும் மட்டுமே.

வண்டி நின்றவுடன் கடையைப் பார்த்த சந்தோஷத்தில், "ஐ... ஜாலி ஜாலி ஐஸ்கிரீம்" என்று கூச்சலிட்டபடியே இருக்கையில் குதித்தாள் ஆதிரா.

காரிலிருந்து இறங்கிய நக்ஷத்ரா, வேகமாக மறுப்பக்கம் வந்து கதவைத் திறந்து ஆதிராவை அள்ளிக்கொண்டு தன் தோள்களில் சுமந்தபடி கடை நோக்கி சென்றாள்.

"அம்மா இது வேணும்... சாக்கோபார்" என்று கடைக்காரர் திறந்து காட்டிய குளிர்சாதன பெட்டியை நோக்கி ஆதிரா கைகைட்ட, "ஆது, அம்மா எப்போவுமே கப் ஐஸ் தானே வாங்கி தருவேன்... இந்த ஐஸ்கிரீம் எப்படித் தெரியும்" என்று சந்தேகத்துடன் கேட்டாள் நக்ஷத்ரா.

"சித்தி வாங்கித் தந்தாங்க" என்று தலையைச் சாய்த்து பாட்டு போல் இழுத்து பேசிய மகளிடம் மறுக்க தோன்றாமல் அவள் கிட்ட சாக்கோபாரையே வாங்கிக்கொடுத்த தாயிடமிருந்து கீழே இறங்கினாள் ஆதிரா.

மகளின் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்ட நக்ஷத்ரா, ஐஸ்கிரீம் கவரை பிரிக்க மகளைப் பற்றிருந்த கையை விட்டு,"அம்மா கூடவே இருக்கணும், எங்கேயும் போகக் கூடாது" என்று கூறிவிட்டு அவள் பிரிக்க முயற்சிக்க, 'ஐ... பலூன்' என்று ரோட்டில் அநாமத்தாக கீழே உருண்டோடிக்கொண்டிருந்த பலூனைப் பார்த்தவாறு மனதில் உற்காகமடைந்த குழந்தைக்கு அதை எடுக்க சொல்லி மனம் உந்த, பலுனை நோக்கி ஓடினாள் ஆதிரா.

அதை முதலில் கவனித்த கடைக்காரர் "ஐய்யோ மேடம் பாப்பா ரோட்டுக்கு ஓடுது" என்று கத்த, ஐஸ்கிரீம் கவர் தரமாக இருந்ததால் பிரிக்க முடியாமல் அதனுடன் போராடிக் கொண்டிருந்த நக்ஷத்ராவின் இதயமோ நின்றுவிட்டது தான்...

ஆம், அவளின் உலகமே மகள் மட்டும் தான். இந்த பூமியில் நக்ஷத்ரா ஜணித்ததில் இருந்து இப்போது வரை அவளுடைய அழுகை, கோபம், பிடிவாதம், வீம்பு இப்படிப்பட்ட உணர்வுகளைக் கொண்ட முகத்தை மகளிடம் மட்டுமே காட்டிக்கொண்டிருக்கிறாள்.

கடைக்காரர் கூறிய அடுத்த நொடி, இதயம் நின்று விட்டு இயங்க, "ஆதிரா நில்லு" என்று மகளை கத்தி அழைத்தபடி மின்னல் வேகத்துடன் ஓடினாள் அன்னை.

ஆனால் பிள்ளையோ அதை விட அதி வேகமாய் வாகனங்கள் வேகமாக பயணித்துக் கொண்டிருந்த ரோட்டில் உருண்டோடிக் கொண்டிருந்த பலூனை நெருங்கிப் பற்ற, அப்போது தான் கவனித்த நேசமணியும், "குட்டித் தங்கம்" என்று கத்தியபடி பதற்றத்துடன் ஓடி வர, வேகமாக வந்துக்கொண்டிருந்த ஒரு குட்டி யானை வண்டி தீடிரென்று ஓடி வந்த குழந்தையை உடனே கவனிக்கவில்லை.

ஒரு குட்டி யானை வண்டி தன் மகளை நோக்கி சீறிக்கொண்டு வருவதைப் பார்த்த தாயின் வேகம் மனதில் கொடிய பயத்துடன் மேலும் பெருகி, 'என் மகளுக்கு ஒன்னும் ஆகக் கூடாது, நான் செத்தாலும் பரவாயில்லை அவளுக்கு ஒன்னும் ஆகக் கூடாது கடவுளே' என்று வேண்டியவளோ, குட்டி யானை மகளை அடைவதற்குள் அதிவேகமான பெண் புலி போல் பாய்ந்து தன் மகளைக் கைக்குள் அள்ளி, கணப் பொழுதில் நெருங்கிய நேசமணியிடம் தனக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை என்று தன் பிள்ளையைக் காப்பாற்ற அவரிடம் வேகமாக வீச அவரும் பாதுகாப்பாக பெற்றுக்கொண்டு, "உமையாம்மா" என்று கத்தவும், அவளோ விபத்துக்குள்ளாகப் போகிறோம் என்று பயத்தில் காதுகளைப் பிடித்துக் கொண்டு கண்களை மூடி நிற்க, அடுத்த நொடி ரோட்டில் ஒரு மையான அமைதி. குட்டியானை வண்டி பிரேக்கைப் போட்டுவிட்டது தான். ஆனாலும் கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்த கதை தான் இது. அனைத்தையும் தாமதமாக செய்தான் வண்டி ஓட்டுனர்.


தன்னை ஒரு வலிய கரம் அதிவேகமாக இழுத்துக் கொண்டதைக் கூட அவள் உணரவில்லை. "அம்மா" என்று ஆதிரா கதறி அழுகும் குரல் நக்ஷத்ராவின் செவிகளைத் தாக்க, 'அப்போ எனக்கு எதுவும் ஆகவில்லையா' என்று அதிர்ச்சி கலந்த வியப்புடன் நினைத்தபடி அவள் கண்களை திறக்க முற்படும் போது தான், ஏதோ இரும்பு பிடிக்குள் இருப்பது போன்ற உணர்வு அவளுக்கு உணர்ந்தது. கஷ்டப்பட்டு கண்களை அவள் திறக்கவும் அந்த இரும்புப் பிடி தளரவும் சரியாக இருக்க, ரோட்டில் அனைவரும் முன் ஒரு உயரமான திடகாத்திரமான ஆண்மகனின் அணைப்பிற்குள் கைப்பிடிக்குள் அவள் இருப்பதை உணர்ந்த அந்நொடி அவளின் முகம் கோபத்தால் சிவந்தது அவனின் முகத்தைக் கூட அவள் பார்க்கவில்லை. அவன் அப்போது விலகி இருக்க, மறுகணமே கோபத்தில் அவனின் கன்னத்தை பதம் பார்த்தாள் நக்ஷத்ரா.
 
Last edited:
Nice 🤩🤩🤩
நக்ஷத்திரா எதுக்கு இப்போ அவன அடிச்ச....நீ ஏதோ ஒரு ஆணால் பாதிக்க பட்ருக்க சரி... ஒரு விபத்தை தடுக்கனும்னா தொட்டு அனைக்காமல் எப்படி காப்பாத்த முடியும்னு நினைக்கிற 🙄🙄🙄🥺🥺😥😥
 
ஹீரோ என்ன ஸ்பைடர் மேனா உன்னை தொடாமல் அப்படியே நூல் விட்டு காப்பாத்த 😜😜😜😜😜

காப்பாத்த வந்தவனுக்கே இந்த அடியா 🤣🤣🤣🤣🤣🤨🤣
 
காப்பாத்துனதுக்கு அடிக்கிறதெல்லாம் அதிகப்படி.. 😱

நைஸ் டீஸர்.... 😍😍😍😍

வாழ்த்துக்கள் sis.... 💐💐💐💐
 
Top